‘நல்லதையே எங்கள் பெற்றோர் செய்து காட்டினார்கள்’ – கார்த்தி!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ப்ளஸ் டூ தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களை பாராட்டி தனது அறக்கட்டளை மூலம் கவுரவித்து வருகிறார் சிவகுமார்.

1979 முதல் அதாவது கடந்த 36 வருடங்களாக இந்த சேவையை இவர் செய்து வருகிறார்.

தற்போது சூர்யாவின் அகரம் ஃபவுண்டேஷன் இப்பணியை தொடர்ந்து செய்து வருகிறது.

இந்நிலையில் இந்தாண்டிற்கான ‘சிவகுமார் கல்வி அறக்கட்டளை’யின் 37-ஆம் ஆண்டு நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவில் 20 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10,000 வீதம் மொத்தம் ரூ.2 லட்சம் வழங்கப்பட்டது.

இவ்விழாவில் கார்த்தி தொடக்க உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது….

“இதை எங்கள் குடும்ப விழா என்றே சொல்வேன். எங்கள் அப்பாவும் அம்மாவும் அட்வைஸ் மட்டும் செய்யாமல் நல்ல காரியங்களில் ஈடுப்படுவதை எங்கள் கண் முன்னே செய்து காட்டினார்கள்.

நன்றாக படிக்கும் மாணவர்கள் அவர்களின் படிப்பை சமூகத்திற்கு பயன்படுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன்’ என்று பேசினார்.

‘கபாலி’ இசையை ‘சிவாஜி’ முன்னிலையில் கொண்டாடிய ரசிகர்கள்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘கபாலி’ படத்தின் பாடல்கள் நேற்று முன்தினம் வெளியானது.

எனவே இதனை கொண்டாடும் வகையில் சென்னையிலுள்ள உட்லண்ட்ஸ் தியேட்டரில் நேற்று திருவிழா களை கட்டியது.

பாலாபிஷேகம், கையில் கற்பூரம் ஏந்தி ஆரத்தி, 1008 தேங்காய்கள் உடைத்தல் என ஆர்ப்பாட்டத்திற்கு பஞ்சம் இல்லை.

மேலும் இவ்விழாவில் ரஜினி ரசிகர் ஒருவர் கபாலி கெட்டப்பில் வந்திருந்தார். அவரை ஜீனியர் கபாலி என்றே அனைவரும் அழைத்தனர்.

இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ‘சிவாஜி’ படம் திரையிடப்பட்டது. படம் தொடங்குவதற்கும் முன்பும், இடைவேளையிலும் ‘கபாலி’ படத்தின் டீசர் திரை யிடப்பட்டது.

சைதாப்பேட்டை ரசிகர்கள் ஏற்பாடு செய்திருந்த இந்த கொண்டாட்டத்தில் அனைத்து ரசிகர் மன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

இனிமே கட் கிடையாது… சென்சாரின் கையை கட்டிப் போட்ட கோர்ட்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு திரைப்படத்தின் தரத்தை சென்சார் வழங்கும் சான்றிதழை வைத்து கணிக்க முடியும்.

இதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு மத்திய அரசு அதிகாரியும், மத்திய அரசால் நியமிக்கப்படும் பிரநிதிகளும் சென்சார் குழுவில் இருப்பார்கள்.

மேலும் சர்ட்டிபிகேட் கொடுப்பதற்காக படங்களின் நிறைய காட்சிகளை வெட்டி எறிவார்கள்.

இந்நிலையில், ‘உட்தா பஞ்சாப்’ என்ற இந்திப் படம் சென்சாருக்கு சென்றபோது கிட்டதட்ட 90 காட்சிகளை குழுவினர் வெட்டி எறிந்தனர்.

எனவே இதனை எதிர்த்து, இந்தி நட்சத்திரங்கள் ஒன்றிணைந்து, மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதனையடுத்து… “சென்சார் இனி சர்ட்டிபிகேட் மட்டுமே வழங்க வேண்டும் காட்சிகளை கட் செய்ய அவர்களுக்கு அதிகாரம் இல்லை” என்று கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து… சென்சார் போர்டு வாரிய சீரமைப்பு குழு உறுப்பினர் கவுதம் கோஷ் கூறியுள்ளதாவது…

“படத்தின் காட்சிகளை வெட்டாமல் இனி சர்ட்டிபிகேட் கொடுக்கப்படும்.

தற்போது ‘யூ’, ‘ஏ’, ‘யூஏ’ என 3 வகையான சர்ட்டிபிகேட் உள்ளது. இனி கூடுதல் வகையான சர்ட்டிபிகேட் வழங்கப்படும்.” என்றார்.

ரஜினி சொன்னதை செயலில் காட்டும் விக்ரம் பிரபு..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்ரம் பிரபு நடிப்பில் வளர்ந்துள்ள வாகா படம் விரைவில் வெளியாகவுள்ளது.

ராணுவ வீரரின் கேரக்டரை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை குமாரவேலன் இயக்கியுள்ளார்.

இதனை தொடர்ந்து விக்ரம் பிரபு நடிப்பில், ‘வீர சிவாஜி’ படமும் இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது.

இதனையடுத்து, எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில், ‘முடிசூடா மன்னன்’ படத்தில் நடித்து வருகிறார்.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வரும் இப்படத்தில் மஞ்சிமா மோகன் நாயகியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளில் 10 படங்களை நெருங்கியது குறித்து கேட்டதற்கு….

“செலக்ட்டிவ்வாக வருஷத்துக்கு ஒரு படம்னு பண்ணாதீங்க. இதுதான் சரியான வயசு, நேரம் எல்லாம்.

எனவே வருஷத்துக்கு ரெண்டு, மூணு படங்கள் பண்ணுங்கன்னு ரஜினி சார் சொன்னார். அவர் சொன்னப்படி செய்து வருகிறேன்.” என்றார்.

கபாலி ரிலீசாகும் தியேட்டர்களில் ரசிகர்களுடன் ரஜினி செல்ஃபி.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள கபாலி படத்தின் பாடல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனைத் தொடர்ந்து, இப்படம் அடுத்த ஜீலை மாதம் வெளியாகவுள்ளது.

எனவே வெளியீட்டிற்கான ஏற்பாடுகளை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு விறுவிறுப்பாக செய்து வருகிறார்.

இந்நிலையில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியளிக்க முடிவு செய்திருக்கிறாராம் தாணு.

எனவே பல லட்சம் ரூபாய் செலவில் சூப்பர் ஸ்டாரின் மெழுகு சிலை ஒன்றை வடிவமைத்திருக்கிறார்.

கபாலி ரிலீசாகும் தியேட்டர்களுக்கு இச்சிலையை அனுப்பி வைத்து ரசிகர்களை உற்சாகப்படுத்த இருக்கிறார்களாம்.

மேலும் ரசிகர்கள் அந்த மெழுகு சிலை ரஜினியுடன் செல்ஃபி எடுத்துக் கொள்ளலாம் எனவும் தெரிய வந்துள்ளது.

ரஜினி-கமலை அடுத்து மீண்டும் விஜய்யுடன் பிரபல நிறுவனம்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பரதன் இயக்கத்தில் தனது 60வது படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

இதில் விஜய்யுடன் முதன்முறையாக கீர்த்தி சுரேஷ் மற்றும் அபர்ணா வினோத் இருவரும் நடித்து வருகின்றனர்.
தற்போது இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது.

அடுத்த கட்டப் படப்பிடிப்புக்காக விரைவில் வெளிநாடுகளுக்கு செல்லவிருக்கின்றனர்.

இப்படத்தை முடித்துவிட்டு, சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் படத்தில் விஜய் நடிக்கக்கூடும் என செய்திகள் வந்தன.

ஆனால் விஜய் 61 படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

விஜய்யின் கத்தி படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருந்தது.

தற்போது ரஜினியின் 2.ஓ மற்றும் கமலின் சபாஷ் நாயுடு படங்களை லைகா தயாரித்து வருவது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

More Articles
Follows