தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
நடிகர்கள்: விஷ்ணு விஷால், ரெஜினா, கருணாகரன், யோகி பாபு, ஆனந்த ராஜ், மன்சூர் அலிகான், ஓவியா, சிங்கமுத்து, சௌந்தர் ராஜா, வடிவுக்கரசி, மாரிமுத்து, லிவிங்ஸ்டன் மற்றும் பலர்
இயக்கம் – செல்ல அய்யாவு
ஒளிப்பதிவு – ஜே. லட்சுமண்
இசை – லியோன் ஜேம்ஸ்
எடிட்டர் – ரூபன்
தயாரிப்பு – விஷ்ணு விஷால்
பிஆர்ஓ – நிகில் முருகன்
கதைக்களம்…
வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற காமெடி ஹிட் படத்தை தொடர்ந்து சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தையும் தயாரித்து நடித்துள்ளார் விஷ்ணு விஷால்.
அந்த சிரிப்பு கெமிஸ்ட்ரி இதிலும் ஒர்க் அவுட் ஆகியுள்ளது.
வடிவுக்கரசியின் பேரன் விஷ்ணு விஷால். தன் பேரன் ஒரு போலீஸ் என்றாலும் அவன் ஒரு வீரனாக இருக்க வேண்டும் என விரும்புகிறார்.
ஆனால் விஷ்ணுவோ சரியான பயந்தாங்கொள்ளி. ரவுடிகளை பார்த்தால் கையை கட்டிக் கொண்டு இருப்பாரே தவித கைது செய்ய மாட்டார்.
உயர் அதிகாரிகளுக்கு டிபன், சாப்பாடு வாங்கி கொடுப்பது அந்த கேப்பில் தான் விரும்பும் ஆபாயிலை ருசித்து பார்ப்பது இதுதான் இவரது வேலை.
ஒரு முறை போலீசாரால் தேடப்படும் (மாறுவேடத்தில் வந்திருக்கும்) ரவுடியை ஆபாயில் பிரச்சினைக்காக அறைந்து அவரை சிறையில் அடைத்து விடுகிறார்.
இதனால் ஹீரோ சந்திக்கும் பிரச்சினைகளை காமெடியாக சொல்லி படத்தை நிறைவு செய்திருக்கிறார் டைரக்டர் செல்லா அய்யாவு.
கேரக்டர்கள்…
ராட்சசன் படத்தில் கம்பீரமாக மிரட்டிய விஷ்ணு விஷால் இதில் காமெடியில் சிக்ஸர் அடித்திருக்கிறார்.
இவருடன் கருணாகரன், யோகிபாபு, ஆனந்த் ராஜ், மன்சூர் அலிகான், சிங்கமுத்து, சௌந்தர் ராஜா என அனைவரும் நம்மை சிரிக்க வைத்தே நம்மை ஒரு வழியாக்கிவிடுவார்கள்.
யோகிபாபு தக்காளி சாதம் வாங்கி கொடுக்கும் அந்த சீன் முதலே பட்டைய கிளப்புகிறார். இவருக்கு போட்டியாக ஆனந்த் ராஜ், சிங்க முத்து கலக்கியிருக்கிறார்கள்.
இறுதியாக பாம்பே டான் பாட்ஷா ரஜினியுடன் படத்தை முடித்து ரஜினி ரசிகர்களையும் சந்தோஷப்படுத்திவிட்டார்கள்.
காமெடிக்கு இந்த கூட்டிணி ஃபுல் கியாரண்டி என்றால் கவர்ச்சிக்கு நாங்க இருக்கோம்ல என ரெஜினா, ஓவியா இருவரும் ஸ்கோர் செய்கிறார்கள்.
நமக்கு இப்படியொரு அழகான டீச்சர் இல்லையே என ஏங்க வைக்கிறார் ரெஜினா.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியா இந்த படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார். வெறும் குத்தாட்டம் என்று நினைத்தாலும் சில காட்சிகளிலும் வந்து ரசிகர்களை அதே பிக்பாஸ் மேஜிக் உடன் ஈர்க்கிறார்.
தொழில்நுட்ப கலைஞர்கள்..
லியோன் ஜேம்ஸ் இசையில் 3 பாடல்கள் நம் கவனம் ஈர்க்கின்றன. ஜே. லட்சுமண் கச்சிதமான ஒளிப்பதிவை கொடுத்துள்ளார்.
வாழ்க்கை, வேலை ரொம்ப போரடிக்குது. ஜாலியாக ஒரு படம் பார்க்கனும் என நீங்கள் நினைத்தால் இந்த சிலுக்குவார்பட்டி சிங்கத்தை நிச்சயம் சிரித்து சிரித்து ரசிக்கலாம் என கியாரண்டி தந்திருக்கிறார் டைரக்டர் செல்ல அய்யாவு.
சிலுக்குவார்பட்டி சிங்கம் … சிரிக்க சிரிக்க சிறப்பு…