அடிமுறை Vs கிக் பாக்ஸிங்… பட்டாஸ் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

துரை செந்தில்குமார் இயக்கிய கொடி படத்தில்தான் முதன்முறையாக 2 வேடங்களில் நடித்திருந்தார் தனுஷ். தற்போது மீண்டும் அதே கூட்டணி 2வது முறையாக 2 வேடத்தை கொடுத்துள்ளது.

கதை என்ன?

திருட்டு வேலைகளை செய்யும் தனுஷ் (சக்தி) இவருக்கு பட்டாஸ் என்ற பட்டப்பெயரும் உண்டு. இவரும் இவரது நண்பரும் தங்கள் கைவரிசையை காட்டாத இடமில்லை.

ஒரு நாள் அந்த ஏரியாவில் பந்தா காட்டும் ஹீரோயினின் கிக் பாக்ஸிங் கிளப்பில் தங்கள் கைவரிசையை காட்ட செல்கின்றனர்.

மற்றொரு முறை அதே நாயகிக்காக அங்கு உதவ செல்கிறார் தனுஷ். அப்போது எதிர்பாரா விதமாக சிறையில் இருந்து வெளியான சினேகாவும் அங்கு வருகிறார்.

கிக் பாக்ஸிங் கிளப்பின் உரிமையாளர் நவீன் சந்திராவை கொல்ல அங்கு சினேகா வர அவர் தனுஷை பார்த்து இன்ப அதிர்ச்சியடைகிறார்.

நவீனை சினேகா கொல்ல வரக் காரணம் என்ன? தனுஷ் யார்? சினேகா யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரள கரையோரத்தில் தனுஷ்; மீண்டும் மலையாள நடிகையுடன் ஜோடி

கேரக்டர்கள்..

க்ளீன் ஷேவ் மற்றும் தாடி வைத்த தனுஷ் என இரு வேடத்திலும் தனுஷ் நல்ல வித்தியாசம் காட்டியுள்ளார். புள்ளிங்கோ ஸ்டைலிலும் அடிமுறை கலையிலும் வெளுத்து கட்டியிருக்கிறார்.

படத்தில் நாயகி சிநேகா தான். ஆக்சன் எமோசன் என பிரத்து மேய்ந்துள்ளார். சண்டைக் காட்சியிலும் அவர் அழகுதான்.

மற்றொரு நாயகியாக வரும் மெஹ்ரின் பிர்சாடா வழக்கமான நாயகி.

முனிஸ்காந்த் மற்றும் தனுஷின் நண்பராக வருபவரின் காமெடி சூப்பர்.

நாசர் அசத்தல். வில்லத்தனத்தில் நவீன் சந்திரா மிரட்டல்.

தனுஷை இயக்க ஆசைப்படும் பேட்ட வில்லனின் ப்ரதர்

தொழில்நுட்ப கலைஞர்கள்…

விவேக் மெர்வின் இசையில் பாடல்களில் சில் ப்ரோ பாடல் பட்டைய கிளப்பியுள்ளது.

அதுபோல ஓம் பிரகாஷின் ஒளிப்பதில் காட்சிகள் கலர்புல்லாக உள்ளது.

தமிழர்கள் மறந்துபோன அடிமுறை என்னும் தற்காப்பு கலையை மையமாக வைத்து இந்த படத்தை இயக்கியுள்ள துரை செந்தில் குமாரை பாராட்டியே ஆக வேண்டும்.

முதன்முறையாக ரூ. 100 கோடி கிளப்பில் இணைந்த அசுரன் தனுஷ்

பொதுவாக வர்மக்கலை என்றால் கேரளா என்பதை நாம் கேட்டு அறிந்திருக்கிறோம். ஆனால் இதில் தமிழர்களின் பெருமையை சொல்லியிருப்பது பாராட்டுக்குரியது.

இதுபோன்ற கலையை உடனடியாக கற்கமுடியாது. அதற்கு குறைந்த பட்சம் 1 வருடம் கொடுத்திருக்கலாம். 3 மாதம் குறைவான காலம். அதை சரியாக செய்திருக்கலாம் டைரக்டர். அதுபோல படம் முடியும் என்று நினைத்தால் அதன்பின்னர் ஒரு கையில் அடிப்பட்டு மற்றொரு கையால் சண்டை போடும் காட்சிகள் நீள்கிறது.

ஆக… பட்டாஸ் அடிமுறை Vs கிக் பாக்ஸிங்

First on Net ரஜினி தர்பார்டா.. ச்சும்மா கிழி.. தர்பார் விமர்சனம் 4/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்…
ரஜினிகாந்த், நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகிபாபு, சுனில் ஷெட்டி, ஸ்ரீமன் மற்றும் பலர்.

இசை அனிருத்

ஒளிப்பதிவு சந்தோஷ் சிவன்

எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்

தயாரிப்பு லைகா

பிஆர்ஓ… ரியாஸ் அஹ்மது மற்றும் டைமண்ட் பாபு

கதைக்களம்…

மும்பையில் போலீஸ் கமிஷ்னராக பணிபுரிகிறார் ஆதித்யா அருணாச்சலம் (ரஜினி). அவருக்கு மனதளவில் சில பிரச்சினைகள் உள்ளது.

இருந்தபோதிலும் என்கௌன்டர் பெயரில் கொலைகளை நடத்துகிறார். இதனால் மனித உரிமை விசாரணையிலும் சிக்குகிறார்.

போதை கும்பல் தலைவன் மும்பை டான் சுனில் செய்யும் போதை அராஜகத்தில் இளைஞர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே ரஜினி தன் அதிகாரத்தை அடக்குமுறையை எந்த விதிமுறையும் இல்லாமல் பட்டைய கிளப்புகிறார்.

இதனால் இவரின் போலீஸ் துறையில் பிரச்சினை வருகிறது. அதாவது போலீசுக்கு மரண பயத்தை உண்டாக்குகிறார் வில்லன்..

இறுதியாக என்ன செய்தார்? ரஜினி என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

ரஜினி ரஜினி ரஜினி… வேற லெவல் யா தலைவா… ஸ்டைலிஷ் ரஜினியை மீண்டும் பார்க்கலாம்… நயன்தாராவுடன் ரொமான்ஸிலும் பின்னி எடுத்திருக்கிறார்… ஆக்சன் & காமெடியில் கிங் என மீண்டும் நிரூபித்துள்ளார்.

ரஜினி கவுண்டமணி காமெடி போல யோகிபாபு உடன் செம கெமிஸ்ட்ரி.. உன்ன வச்சிகிறேன் டைமிங் காமெடி சூப்பர்.. கோலமாவு கோகிலா காமெடியையும் கிண்டலடித்துள்ளனர்.

நிவேதா தாமஸ் அழகான மகளாக சிறப்பான நடிப்பு..

ஜன்னல் ஜாக்கெட் போட்ட நயன்தாரா கொள்ளை அழகு.. ஆனால் பெரிதாக ஸ்கோப் இல்லை.

வில்லன் சுனில் ஷெட்டி கேரக்டரை டெவலப் செய்திருக்கலாம். ஸ்ரீமன் கேரக்டர் வலுவில்லை.

தொழில்நுட்ப கலைஞர்கள்..

அனிருத் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் சரி.. அதிரடி. அசத்தல். ரஜினி ரசிகர்கள் செம மியூசிக்கல் ட்ரீட் கொடுத்துள்ளார். ஆனால் நிறைய தேவா மியூசிக்கை பார்க்க கேட்க முடிகிறது.

டும்..டும்.. பாட்டு குடும்பத்தினருக்கு பிடிக்கும் என்றால் கண்னுல திமிரு மற்றும் சும்மா கிழி பாடல் நம்மை எழுந்து ஆட வைக்கும். வெறித்தனம் காட்டியிருக்கிறார்.

ரஜினியின் ஸ்டைலுக்கு ஏற்ப பாடலும் சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவும் வேற லெவல். படத்தை கலர்புல்லாக கொடுத்துள்ளார். இவரையும் ஒரு டயலாக்கில் கலாய்த்துள்ளார் யோகி பாபு.

திருநங்கை & டான்ஸ் பைட் மரண மாஸ்..

பைட் மாஸ்டர்கள் ராம் லட்சுமன் மற்றும் பீட்டர் ஹெயின் தெறிக்க விட்டுள்ளனர்.

நீண்ட நாட்களுக்கு பிறகு அனல் பறக்கும் சண்டையில் அதகளம் செய்துள்ளார் சூப்பர் ஸ்டார். க்ளைமாக்ஸ் பைட் ஃபயர் பத்தல..

இது ரஜினிக்கான கதையா? அல்லது கதைக்காக ரஜினியா? என தெரியாத அளவுக்கு இரண்டையும் கலந்துக் கொடுத்துள்ளார் முருகதாஸ்.

இவருக்கே உரிய பாணியில் கதை மற்றும் சமூக கருத்து ஆகியவற்றை சிறப்பாக செய்துள்ளார்.

முக்கியமாக இடைவேளை வரை ரஜினி டச்.. அதன் பின்னர் முருகதாஸ் சென்டிமெண்ட் டச்… இதுதான் படத்தின் வேகத்தை குறைக்கிறது..

இதுபோன்ற வெறித்தனமான போலீஸ் இருந்தால் நாட்டில் குற்றம் செய்யவே எவனாயிருந்தாலும் பயம் வரும்..

இடைவேளை & க்ளைமாக்ஸ் சீன்ஸ் ரஜினி டச் பத்தல..

இடைவேளை பின்னர் மகள் & பாச சென்டிமெண்ட் குடும்பங்களை கவரும்.

ஆக ரஜினி ஸ்டைலில் சொன்னால் போலீஸை ரைட்ல வச்சுக்கோ.. லெப்ட்ல வச்சுக்கோ.. ஸ்டிரைட்டா வச்சுக்காத…

ஆக மொத்தம். தர்பார்.. பொங்கல் சமயத்தில் தீபாவளி விருந்து

Rajinis Darbar review rating

கல்வியின்றி வாழ்வேது..?. பிழை விமர்சனம் 3.25/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

சார்லி, மைம்கோபி, மரியம் ஜார்ஜ் மூவரும் கல் உடைக்கும் தொழிலை செய்து வருகின்றனர்.

இவர்கள் தங்கள் மகன்களை நன்றாக படிக்க வைக்க கடுமையாக உழைக்கின்றனர். ஆனால் இவர்களின் பிள்ளைகளோ சுட்டித்தனம் செய்வது ஊர் மக்களிடம் பிரச்சினை என இவர்களுக்கு தொந்தரவாக உள்ளனர்.

ஒரு நாள் விளையாட்டுத்தனமாக தங்களை விட நன்றாக படிக்கும் மாணவனை பாதாள கிணற்றில் தள்ளி விடுகின்றனர்.

அவன் உயிர் பிழைத்தாலும் அந்த பகுதியில் இது பிரச்சினையாக தந்தையர்கள் மூவரும் இவர்களை அடி உதை கொடுத்து பின்னி எடுக்கின்றனர்.

எனவே வீட்டை வீட்டு சென்னைக்கு ஓடி விடுகின்றனர். அங்கு செலவுக்கு பணமில்லாமல் அலையும் போது தெரியாமல் ஒரு தாதாவிடம் சிக்கி விடுகின்றனர்.

அவன் இவர்களை குழந்தை தொழிலாளர் என்பதால் யாருக்கும் தெரியாமல் மிரட்டி வேலை வாங்குகிறார்.

அதன் பின்னர் என்ன ஆனது? அவனிடம் இருந்து எப்படி தப்பினார்கள்? குடும்பத்துடன் சேர்ந்தார்களா? என்பதே பட க்ளைமாக்ஸ்.

கேரக்டர்கள்..

காக்கா முட்டை படத்தில் பெரிய பையனாக நடித்த ரமேஷ், அப்பா படத்தில் நடித்த நஷாத் மற்றும் கோகுல் ஆகிய மூவரும் நல்ல நடிப்பை கொடுத்துள்ளனர்.

ஊர் மக்களிடம் இவர்கள் செய்யும் பிரச்சினைகளை கூட ரசிக்க வைக்கிறது. ரமேஷ், நஷாத் இருவரும் பட்டைய கிளப்பியுள்னர்.

சென்னை ஓட்டலில் இவர்கள் கஷ்டங்களை பார்த்தால் நமக்கே இவர்கள் மீது அனுதாபம் வரும்.

சார்லி, மைம்கோபி, மரியம் ஜார்ஜ் ஆகிய மூவரும் ஏழை தந்தைகளாக சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர். தங்கள் கேரக்டரில் சூப்பர்.

இவர்களுடன் தர்ஷினி, நாகவேந்திரா சிரஞ்சீவி, பிருந்தா, அரவிந்த் காந்த், வினோத், அபிராமி ஆகியோரும் அசத்தல்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஒளிப்பதிவில் எந்த குறையும் வைக்காமல் செய்துவிட்டார் பாக்கி. இசை பணிகளை பைசல் என்பவர் செய்துள்ளார். பாராட்டுக்குரியவர் தான்.

இந்த படத்தை எழுதி இயக்கியிருப்பவர் ராஜவேல் கிருஷ்ணா. பெற்றோர் பேச்சை கேட்காத வாழ்க்கையில் உருப்படாது.

அதுபோல் கற்க வேண்டிய வயதில் கல்வியை கற்காவிட்டால் வாழ்க்கை நரமாகிவிடும் என்பதையும் ஆணித்தரமாக சொன்ன இயக்குனர் ராஜவேல் கிருஷ்ணாவை வெகுவாக பாராட்டலாம்.

படத்தில் 2 விதமான காதலர்களை காட்டியுள்ளார். கிராமத்து காதலர்கள் காட்சிகள் முழுமையாக இல்லை. அதை டைரக்டர் கவனித்திருக்கலாம்.

சென்னை சிட்டி காதலில் சாதியை சாடியிருப்பது சிறப்பு. அதுபோல் உண்மையான காதல் எதையும் பார்ப்பதில்லை என்ற கருத்து ஓகே தான். ஆனால் அந்த காதலை சொன்ன விதம் சரியாக படவில்லை. இந்த இரண்டு காதல்களையும் படத்தில் இருந்து கட் செய்திருந்தாலும் தப்பில்லை. இதனால் படத்திற்கு எந்த பலனும் இல்லை.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் பார்க்க வேண்டிய படம் தான் இந்த பிழை.

Pizhai movie review rating

அவனே சிறப்பு போலீஸ்… அவனே ஸ்ரீமன் நாராயணா விமர்சனம் 3.5/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

ஆந்திரா மாநிலத்தில் உள்ள அமராவதி நகரில் படத்தின் மொத்த காட்சிகளை படமாக்கியுள்ளனர். ஆனால் 1960களில் நடக்கும் கதை என்பதால் போட்டோ ஷாப்பில் நாம் பயன்படுத்தும் செபியா டோனை படம் முழுக்க பயன்படுத்தியுள்ளார்.

அமராவதி நகரில் ஒரு நாடகம் குழு உள்ளது. அவர்களில் 6 பேர் ஒரு பெரிய புதையலை கொள்ளையடிக்கிறார்கள். இதனையறிந்த ஒரு டான் அவர்களை கொன்று விடுகிறார். ஆனால் அவருக்கு புதையல் இருக்கும் ரகசியம் தெரியவில்லை.

இவருக்கு இரு மகன்கள் உள்ளனர். ஒருவர் இவரின் மனைவிக்கு பிறந்தவர். மற்றொரு மகன் வேலைக்காரிக்கு பிறந்தவர்.

இதனால் இரு மகன்களுக்கும் ஒருவருக்கொருவர் ஆகாது.

இதனையறிந்த மதுசூதனன் ராவ் (டான்) மரணிக்கும் போது தன் சொந்த மகனிடம் எந்த காலத்திலும் இன்னொரு மகனை கொன்றுவிட கூடாது என சத்தியம் வாங்கி இறக்கிறார்.

அவரின் மரணத்திற்கு பிறகு இருவரும் அரியணை பதவியில் ஏற துடீக்கிறார்கள். அதே சமயம புதையரை தேடும் முயற்சியிலும் ஈடுபடுகின்றனர்.

இந்த நிலையில் கிட்டதட்ட 15 வருடங்களுக்கு பிறகு அமராவதி போலீஸ் ஸ்டேஷனுக்கு இன்ஸ்பெக்டராக வருகிறார் ரக்‌ஷித் ஷெட்டி பார்ப்பதற்கு கம்பீரமாக இருந்தாலும் நிறைய வெத்து காமெடி செய்கிறார்.

இவர் வந்தது முதலே புதையலை தேடுதல் வேட்டையில் இறங்குகிறார்.
புதையல் யாருக்கு கிடைத்தது? அதிர்ஷ்டசாலி யார்? ரக்‌ஷித் ஷெட்டிக்கும் புதையலுக்கு என்ன தொடர்பு? படத்தில் நாயகி இருக்கிறாரா? அவரின் வேலை என்ன என்பதே படக்கதை.

கேரக்டர்கள்…

கன்னட நடிகர் ரக்‌ஷித் ஷெட்டி படத்தின் திரைக்கதை முதல் தயாரிப்பு வரை என அனைத்திலும் கவனம் செலுத்தியுள்ளார்.

இவர் நாயகியை லட்சுமி அவர்களே லட்சுமி அவர்களே என அழைக்கும் ஸ்டைலே தனியழகு. அதாவது மரியாதையாக சொல்லி அழைக்கிறார். இனி நாமும் இதே போல் பெண்களை சொல்லி அழைத்தாலும் தவறில்லை.

காமெடி, ஆக்‌ஷன் என கலந்துக் தன் ஸ்டைலில் புகுந்து விளையாடியிருக்கிறார். சுருட்டு பிடித்துக் கொண்டும் அவன் யார் தெரியுமா? அவனே ஸ்ரீமன் நாராயணன் என கெத்து காட்டும்போது நம்மை ரசிக்க வைக்கிறார்.

படத்தில் நாயகி உட்பட எல்லாரும் 1960 உடைகளில் இருக்க இவர் மட்டும் செம ஸ்டைலாக இன்றைய ட்ரெண்ட்டுக்கு பிட் ஆக போலீஸ் உடை அணிந்திருக்கிறார். அதற்கான எந்த காரணமும் படத்தில் இல்லை என்பதுதான் வருத்தம்.

ஒரு சர்போர்ட்டிக் கேரக்டர் போல நாயகி ஷான்வி நடித்துள்ளார். அதே சமயம் அழகு அண்ட் அமைதி இவரது ப்ளஸ் பாய்ண்ட்.
மற்றொரு போலீசாக வரும் அச்யுத் குமார் (ரஜினி முருகன் படத்தில் கீர்த்தியின் அப்பா) நிறைய காட்சிகளில் நாம் சிரிக்க உதவியுள்ளார்.

இவர்களுடன் பாலாஜி மனோகர், பிரமோத் ஷெட்டி, மதுசூதன் ராவ், கோபால கிருஷ்ண தேஷ்பாண்டே ஆகியோரும் அசத்தல்.

தொழில்நுட்ப கலைஞர்கள்..

உல்லாஹ் ஹைதூரின் கலை பணிகளை பாராட்டாமல் இந்த படத்தை நாம் ரசிக்கவே முடியாது. அப்படியொரு அழகை விருந்தளித்துள்ளார்.

அதுபோல் கரம் சாவ்லாவின் ஒளிப்பதிவில் அமராவதி அருமை.

பின்னணி இசையில் அஜனீஷ் லோக்நாத், சரண்ராஜின் இருவரும் கச்சிதம். பாடல்களும் ரசிக்க வைக்கின்றன.

கன்னட படத்தை பார்த்த உணர்வு இல்லாமல் நேரடி தமிழ் பட டப்பிங் அருமை. ரக்‌ஷித் ஷெட்டியும் திரைக்கதை எழுதியிருக்கிறார்.

வசனங்களை எழுதியுள்ள விஜயகுமாருக்கும் பாராட்டுக்கள்.

ஆக மொத்தம் அவனே ஸ்ரீமன் நாராயணா… அவனே சிறப்பு போலீஸ்

Avane Srimannarayana review rating

பவர் கட் லவ்… பச்சை விளக்கு விமர்சனம் 2.25/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

பொதுவாக போலீஸ் படம் என்றால் சிவில் அண்ட் லா போலீஸ் பற்றித்தான் படம் இருக்கும். ஆனால் இதில் போக்குவரத்து போலீசார் பற்றி பாடம் எடுத்திருக்கிறார்கள்.

முக்கியமாக அதற்கான படிப்பை தன் நிஜ வாழ்க்கையில் படித்து அதை படமாக்கி இருக்கிறார் டாக்டர் மாறன்.

போக்குவரத்து விதிகள் பட்டயப்படிப்பு படித்திருக்கும் மாறன், டிராபிக் வார்டன் இருக்கிறார். இந்த வார்த்தையே பலருக்கு புதியாகதாக இருக்கும்.

இவர் ஆசிரியராக வேலை பார்த்துக் கொண்டே போக்குவரத்து நெரிசலின் போது போலீஸ் துறைக்கு உதவுகிறார்.

அப்போது ஹெல்மேட் அணியாமல் வரும் நாயகி தீஷா கண்டிக்கிறார். எனவே மாறனை பழி வாங்க நினைக்கிறார்.

மோதலில் உருவான இவர்களின் சாலை சந்திப்பு பின்பு காதல் சந்திப்பாக மாறுகிறது.

இந்த கட்டத்தில் தன் தங்கை தாராவுக்கு ஒரு பிரச்சினை என திடீரென ஊருக்கு கிளம்புகிறார் தீஷா.

அங்கு தன் தங்கை ஆபாச படம் எடுக்கும் கும்பலிடம் சிக்கிய விவரம் இவருக்கு தெரிய வருகிறது.

தன் காதலியை தேடி வரும் மாறனுக்கு இந்த விவரம் தெரிய வருகிறது.

அதன் பின்னர் மாறன் என்ன செய்தார்? தீஷா எப்படி திருமணம் செய்தார்? தாராவை எந்த வழியில் காப்பாற்றினார்? அந்த கும்பலின் நோக்கம் என்ன? என்பதுதான் க்ளைமாக்ஸ்.

கேரக்டர்கள்..

விதி மீறிய பயணமும் விதி மீறிய காதலும் ஊர் போய் சேராது என்ற கருத்தை மையப்படுத்தி இந்த பச்சை விளக்கி இயக்கி நடித்துள்ளார் மாறன்.

போக்குவரத்து விதிகள் பற்றி ஒரு விரிவான பாடமே எடுத்துள்ளார். மேலும் ஒரு பாடலையும் அதற்கேற்ப கொடுத்துள்ளார்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி ஹீரோவாக நடித்துள்ளார். இத்தனை செய்ய நினைத்து நடிப்பில் கோட்டை விட்டுள்ளார். கொஞ்சமாவது நடிப்பு பயிற்சி செய்திருக்கலாம்.

பாடம் எடுப்பதை போலவே நடித்துள்ளார். பேச்சிலும் சரி முகபாவனையிலும் சரி நம்மால் படத்தை ரசிக்க முடியவில்லை.

போக்குவரத்து விதிகள், டிராபிக் வார்டன் மற்றும் MSM என்ற புது விதிமுறைகளை சொன்னதற்காக மாறனை பாராட்டலாம்.

காதலியை காணவில்லை என்ற காட்சியில் இவர் அழுகிறார். ஆனால் நம்மால் சிரிப்பை அடக்க முடியாது.

முதல் பாதியில் இவரை வைத்தை கதையை நகர்த்தியுள்ளார். இரண்டாம் பாதியில் தாராவின் காதலை சொல்லி மற்றொரு ஹீரோவை நடிக்க வைத்துள்ளார்.

இளம் பெண்களை லவ் டார்கெட் செய்து பணம் பறிக்கும் கும்பலை பற்றி சொல்லியுள்ளார். அதில் போஸ்டர் நந்த குமார் அப்பாவாக நடித்துள்ளார். இதுபோன்ற கும்பலை அடையாளம் காட்டியதற்கு நன்றி.

ஆனால் ஏதோ ஒரு நாடகத்தை இயக்கியது போல படத்தை கொண்டு சென்றுள்ளார்.

டிராபிக் போலீசாக வரும் இமான் அண்ணாச்சி அறிவுரை போலீசாக மாறிவிடுகிறார். ஒரே ஆறுதல் இவர் லஞ்சம் வாங்கவில்லை. நல்ல போலீசாக நடித்துள்ளார்.

தீஷா மற்றும் தாரா 2 நாயகிகள் உள்ளனர். இருவரும் கொடுத்த வேலையை சிறப்பாக தர முயற்சித்துள்ளனர்.

இவர்களுடன் மனோபாலா, நெல்லை சிவா, நந்தகுமார், நாஞ்சில் விஜயன் ஆகியோரும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

வேதம் புதிது தேவேந்திரனின் இசையில் பாடல்களில் கருத்து உள்ளது. ஆனால் காட்சியும் இசையும் ரசிக்கும்படி இல்லை.

பாலாஜி ஒளிப்பதிவில் காட்சிகள் ஓகே.

இயக்குனரே ஹீரோவாக நடித்துள்ளார். எதையாவது ஒன்றை செய்திருக்கலாம். நடித்தும் இயக்கியும் நம்மை வெறுப்பேத்திவிட்டுள்ளார்.
ஆக இந்த பச்சை விளக்கு.. பவர் கட் லவ்

Pachai Vilakku Movie review rating

திசை மாறிய காதல்… தொட்டு விடும் தூரம் விமர்சனம் 3/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

அப்பா இல்லாத பையன் ஹீரோ விவேக்ராஜ். இவரின் அம்மா சீதா.

நல்ல வேலைக்கு முயற்சித்து செய்துக் கொண்டிருக்கிறார். கிடைக்கம் நேரங்களில் உடல் உறுப்பு தானம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

அப்போது இவரின் ஊருக்கு ஒரு என்எஸ்எஸ் முகாம் குழு வருகிறது. லிவிஸ்டன் தலைமையில் மாணவி மோனிகாவும் வருகிறார்.

சில தினங்களில் விவேக்கும் மோனிகாவும் காதலிக்க தொடங்குகின்றனர்.

பின்னர் என்எஸ்எஸ் கேம்ப் முடிந்து சென்னை செல்லும் நாயகி சில பிரச்சினையால் தன் செல்போனை தொலைத்து விடுகிறார்.

அதுபோல் தன் நண்பன் உதவியுடன் சென்னை செல்லும் ஹீரோ தன் செல்போன் மற்றும் பேக்கை பறி கொடுக்கிறார். இதனால் நாயகியுடன் எந்த தொடர்பும் இல்லாமல் இருக்கிறார்.

நாயகி தொட்டு விடும் தூரத்தில் இருந்தும் இவர்களால் சந்திக் முடியவில்லை.

சந்திக்க வாய்ப்பும் கிடைத்தும் இவர்களின் காதலை அறிந்த ஒருவன் தடுத்து விடுகிறான். அவன் யார்? ஏன் தடுத்தார்? காதலர்கள் சேர்ந்தார்களா? என்பதுதான் க்ளைமாக்ஸ்.

கேரக்டர்கள்…

ஜஸ்ட் ஒரு கிராமத்து பையனாக வருகிறார் விவேக் ராஜ். காதல், சென்டிமெண்ட் காட்சிகளில் ஸ்கோர் செய்ய முயற்சித்துள்ளார்.

தோழர் வெங்கடேசன், ஜீவி உள்ளிட்ட படங்களில் நடித்த மோனிகா தான் இதில் நாயகி. நல்ல குடும்ப பெண்ணாக வாழ்ந்திருக்கிறார்.

ஒரு பாடல் காட்சியில் சேலையில் கவர்ச்சி காட்டி நம்மை மோசம் செய்து விட்டார் இந்த மோனிகா.

அன்பான அமைதியான அம்மாவாக சீதா நடிப்பு சிறப்பு.

மற்றபடி சிங்கம்புலி, பால சரவணன், லிவிங்ஸ்டன், கிரேன் மனோகர் படத்தில் இருந்தும் ஊறுகாய் அளவு கூட காமெடியில்லை. படத்தை ஓட்ட உதவியிருக்கிறார்கள்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

நோகா பிரவீன் இமானுவேலின் பின்னணி இசை ரசிக்க வைக்கிறது.

ராம் குமாரின் ஒளிப்பதிவில் காதலர்களின் டூயட் பாடல் செம ஹாட் மச்சி. மோனிகாவின் மேனியில் தன் கேமரா கண்களை வைத்துவிட்டார் ஒளிப்பதிவாளர்.

அடடா… இவ்வளவு கிட்ட வந்த காதலர்கள் சேரமாட்டார்களா? என ரசிகனை தவிக்க விட்டுள்ளார் இயக்குனர் வி.பி.நாகேஸ்வரன்.

கிளைமாக்ஸ் முடிவு ஒரு சோகமான முடிவை கொடுத்தாலும் யாரும் எதிர்பாராத ஒன்று. அதில் சொல்லப்பட்ட கருத்தை நிச்சயம் பாராட்டலாம்.

செல்போன் பேசி கொண்டே பைக் ஓட்டினால் என்ன ஆகும்? என்பதையும் நாசூக்காக சொல்லியுள்ளார்.

அதன்பின்னர் உடல் உறுப்பு தானம் உள்ளிட்டவைகளை சொன்ன விதம் அருமை.

திசை மாறிய காதல்…. “தொட்டு விடும் தூரம்”

Thottu Vidum Thooram review rating

More Articles
Follows