தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
நடிகர்கள் : டாக்டர் பரத் ரெட்டி, விஷாகா சிங், மீனாட்சி தீட்சித், ஊர்வசி, சிங்கம் புலி, மதுமிதா, யோகி பாபு மற்றும் பலர்.
இசை : ஒய் ஆர் பிரசாத்
ஒளிப்பதிவு : ஆண்ட்ரு
படத்தொகுப்பு : தாஸ் டேனியல்
இயக்கம் : மணி ஷர்மா
பிஆர்ஓ : சுரேஷ் சந்திரா
தயாரிப்பாளர் : துரை மற்றும் சண்முகம்
கதைக்களம்…
இதன் டைட்டிலே இப்படத்தின் கதையை சொல்லிவிடும். பயம் என்றால் பேய்தான்.
தன் சாவுக்கு காரணமான நபர்களை பழிவாங்கும் வழக்கமான பேய் கதைதான்.
ஆனால் இதில் சம்பந்தமில்லாத பத்திரிகை போட்டோ கிராபரான பரத் ரெட்டியையும் பழிவாங்க துடிக்கிறது பேய்.
அது ஏன்? என்பதற்கு இப்படத்தின் க்ளைமாக்ஸ் கதை சொல்லும்.
கதாபாத்திரங்கள்…
கமலின் உன்னை போல் ஒருவன் மற்றும் பயணம் ஆகிய படங்களில் சிறு வேடங்களில் நடித்த பரத் ரெட்டி இதில் நாயகனாக நடித்துள்ளார்.
ஆள் ஸ்மார்ட்டராக உயரமாக இருக்கிறார். பேயை பார்த்து பயப்படும் காட்சிகளில் நடித்திருக்கிறார்.
இவருக்கு ஆக்ஷன் நன்றாக வரும் என்றாலும் இதில் ஆக்ஷன் காட்சிகள் இல்லை.
விஷாகா சிங் பேயாக வருகிறார். ஆனால், பழிவாங்க வேண்டிய நபர் அருகில் இருக்கும் போது அவரை சைட் அடித்து விட்டு செல்வதுதான் ஏன் என்று தெரியவில்லை. (இது மரண பேய் சைட் போலும்)
தான் குடிக்காமல் இருந்தாலும் குடிகாரர்கள் கூட்டத்தில் இருந்தால் சில சமயம் பிரச்சினைகள் வரும் என்பதை இவரது பாத்திரம் அப்பட்டமாக சொல்லியிருக்கிறது.
பரத்தின் மனைவியாக வரும் மீனாட்சி திக்ஷித் ஏனோ வந்து போகிறார். பேபி அனுவின் செயல்கள் செயற்கைத் தனமாக தெரிகிறது.
இவர்களுடன் ஊர்வசி, யோகி பாபு, சிங்கம் புலி, லொள்ளு சபா மனோகர், மதுமிதா மற்றும் கிங் காங் ஆகியோர் இருந்தும் யாருக்கும் சொல்லும் படியான காட்சிகள் இல்லை.
நம் கலாச்சாரத்தை அழிக்கும் நவீன இளைஞர்களை பழிவாங்கும் கும்பல் தலைவனாக வருகிறார் ஜான் விஜய்.
தோற்றத்தில் டெரர் காட்டியிருக்கிறார். ஆனால் அவர்களை கொடுமைப்படுத்தும் விதத்தை பார்த்தால் இனி கலாச்சார சீர்கேடு வராது என்றே தோன்றுகிறது.
பேய் படம் என்றாலே கேமரோமேன் மற்றும் மியூசிக் டைரக்டர்கள்தான் அதிகம் பேசப்படுவார்கள். பாடல்களைவிட பின்னணி இசை கைகொடுக்கிறது.
ப்ரிட்ஜில் இருந்து ரத்தம் வரும் காட்சிகள். அந்த பேய் வீடு என அனைத்தும் பயமுறுத்துகின்றன.
இயக்குனர் மணிஷர்மா ஒரு வித்தியாசமான களத்தை எடுத்திருக்கிறார். ஆனால் அதை சுவாரஸ்யமாக பரிமாற கொஞ்சம் தடுமாறியிருக்கிறார்.
பயம் ஒரு பயணம்… ப்ரேக் டவுன்