‘நடிக்க பிடிக்காத தனுஷ்; ஹீரோ ஆசையில் செல்வராகவன்’ – கஸ்தூரிராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வாசவி பிலிம்ஸ் சார்பில் வி.கே.மாதவன் தயாரித்துள்ள படம் ‘பார்க்க தோணுதே’.

புதுமுகங்கள் நடிப்பில், மணிஸ் இசையில், ஜி.ரமேஷ் ஒளிப்பதிவில் இப்படத்தை ஜெய். செந்தில்குமார் இயக்கியுள்ளார்.

இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா ஆர்.கே.வி ஸ்டுடியோவில் நடைபெற்றது.

விழாவில் கலந்து கொண்டு இயக்குநர் கஸ்துரிராஜா பேசினார். அவர் பேசும் போது பல அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

“இந்த மாதிரி சிறியபடங்கள் ஒடினால்தான் சினிமா நன்றாக இருக்கும்.மேலும் 10 படங்கள் வரும். இதுதான் சினிமா.

எல்லாருமே ஒரு காலத்தில் புதுமுகங்கள்தான் . ஸ்ரீகாந்த்தேவா இங்கே இருக்கிறார்.ஒருகாலத்தில் தேவாவின் இசையில் 5 படங்கள் இயக்கினேன்.ஐந்தும் வெற்றி.

அவர் மகன் இந்த ஸ்ரீகாந்த்தேவா அப்போது கீபோர்டு பிளேயர். சாப்பாடு கூட அவரது ஒலிப்பதிவுக் கூடத்தில்தான். அவர்கள் வீட்டுச் சாப்பாடுதான் சாப்பிடுவேன்.

அவ்வளவு சுதந்திரம் இருக்கும். இளையராஜாவிடம் சுதந்திரமாக இருக்க முடிமா? பேச முடியுமா? மூச்சுக் கூட சத்தமாக விடமுடியாது. அவரை வைத்து பெரிய ஆளானவர்கள் பல பேர்.

நானும் அவரால் வளர்ந்தவன். அவர் என்னிடம் நீ ஆசீர்வதிக்கப் பட்டவன் என்பார். இப்போது காலம் மாறிவிட்டது.

என் மூத்தமகன் செல்வராகவன் என்னை ஏன் ஹீரோவாக்கவில்லை என்கிறான். தனுஷ் என்னை ஏன் நடிக்க விட்டே என்கிறான்.

இங்கு வந்துள்ள நட்டியிடம் நான் ஒரு கதை சொன்னேன். நடிக்க மறுத்துவிட்டார். இது பெரிய கதாநாயகர்கள் செய்யவேண்டிய கதை எனக்குச் சரிப்பட்டு வராது என்றார். அவர் எடுத்த முடிவு சரியானது.

சிலவற்றைச் சொல்ல சில முகம் தேவை. அதுதான் முகப் பொருத்தம் என்பது .அவர் ‘சதுரங்க வேட்டை’யில் நன்றாக நடித்திருப்பார்.அதுதான் அவரது முகப் பொருத்தம்.

நான் முதல்படம் இயக்கியபோது ராஜ்கிரண் பெரிய கதாநாயகர்களிடம் அழைத்துச் சென்றார் . விஜயகாந்திடம் கதை சொன்னேன். மறுத்துவிட்டார்.

அது ‘இரவுப்பூக்கள்’ சமயம் சத்யராஜிடம் கதை சொன்னேன்.மறுத்துவிட்டார். அவர்களுக்கு என்மேல் நம்பிக்கை வரவில்லை.

சத்யராஜ் இதெல்லாம் ஒரு கதையா என்றார். சொன்னால் ஏற்றுக் கொள்வார்களா நான் இப்போதுதான் முழுக்கை சட்டையிலிருந்து அரைக்கைச் சட்டைக்கு வந்திருக்கிறேன் என்றார்.

பாரதிராஜா எடுக்கிறாரே என்றேன் அவர் சொன்னால் ஏற்றுக் கொள்வார்கள். நீங்கள் சொன்னால் ஏற்றுக் கொள்வார்களா? என்றார்.நான் புதுமுகம் என்பதால் யாரும் நம்பவில்லை.

இப்படிப் பலவற்றை கடந்துதான் முதல் படம் எடுத்தேன். எல்லா அறிமுகங்களும் இப்படிப்படட அவமானங்களும் வலிகளும் போராட்டங்களும் கடந்துதான் வந்திருக்கிறார்கள்.

சூப்பர்ஸ்டார் ரஜினியும் கூட இப்படிப்பட்ட அவமானங்களைக் கடந்துதான் உயர்ந்து வந்திருக்கிறார்.

அப்போது எனக்குள் ஈகோ எப்படி அவர்கள் அப்படிச் சொல்லலாம் என்று. ஆனால் அவர்கள் நடிக்காததால் முடிவு நல்லதாகவே முடிந்தது.

இயக்குநர் ஒருவர் கற்பனையில் ஏதேதோ நினைக்கலாம். மற்றவர் வேறு மாதிரி உணரலாம். அதுவே திசையை மாற்றி விடும்.

‘என் ராசாவின் மனசிலே’ வுக்கு நான் நினைத்த கதையில் ‘பெண் மனசு ஆழமுன்னு ‘ என்கிற அந்தப் பாட்டெல்லாம் கிடையாது. காட்சியிலும் இல்லை.

ஆனால் இளையராஜா அந்தப் பாடலைப் போட்டார். காட்சிகள் இல்லை. எடுக்கவில்லை என்றேன். போய் எடு என்றார்.

அப்போது என்னவோ நம் கனவு சிதைக்கப் பட்டதைப் போலத் தெரியும் நம் கனவு மற்றவர்களுக்குத் தெரியவில்லை என்று நினைப்போம்.

அப்படித்தான் அன்றும் நினைத்தேன். ஆனால் அவர் பாடல் பெரிய பலமானது.

தயாரிப்பாளர் அமைவது சிரமம்.இயக்குநர் கப்பல் வருவது போலக் கற்பனை செய்யலாம். கப்பல் கொண்டுவர ஒரு கிறுக்கன் தயாரிப்பாளர் பணத்துடன் வரவேண்டும்.

பெரியபடம் எடுப்பது சுலபம் . இன்று ஒழுங்காக வருகிறவர்களைக்கூட திசைதிருப்பி விடுகிறார்கள். இப்படிக் குழப்பிப் பூஜையோடு நின்று போன படங்கள் எத்தனை ?பாதிப் படத்தோடு நின்று போன படங்கள் எத்தனை ?

‘பார்க்க தோணுதே’ என்கிற இந்தப் படத்தின் தலைப்பைப் பார்க்கும் போது எனக்கு நான் காதலித்த காலம் நினைவுக்கு வருகிறது.

காதலில்லாதவன் கலைஞனே கிடையாது.

சிறுவயதில் தாலாட்டிய அம்மாவைப் பார்க்கத் தோணுது, தோளில் சுமந்த அப்பாவைப் பார்க்கத் தோணுது, பள்ளி நண்பனைப் பார்க்கத் தோணுது, காதலியைப் பார்க்கத் தோணுது.

ஆமாம், காதலியைப் பார்க்கத் தோணுது. சத்தியமாக நான் ஒரே ஒரு பெண்ணைத்தான் காதலித்தேன்.ஆனால் திருமணம் செய்யவில்லை. இது என் மனைவிக்கும் தெரியும்.

மதுரையில் 1974–ல் மெஜுரா கோட்ஸ் நிறுவனத்தில் நாலாயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்த போது இருந்த சுதந்திரமும் மகிழ்ச்சியும் நிம்மதியும் இப்போது இல்லை.

அப்போது முதல்மகன் செல்வா பிறந்தது தனுஷ் பிறந்தது எல்லாமே சுதந்திரமும் மகிழ்ச்சியும் தந்தவை. இப்போது தனுஷை எவனோ ஒருவன் என் மகன் என்கிறான். எனக்கு எவ்வளவு பிரச்சினை பாருங்கள். இன்று வசதிகள் இருந்தும் சுதந்திரமும் இல்லை; மகிழ்ச்சியும் இல்லை.

இன்று சினிமா எங்கேயோ போய்க் கொண்டு இருக்கிறது. இன்று சினிமா சூதாட்டத்தில் சிக்கிக்கொண்டு இருக்கிறது.

‘துள்ளுவதோ இளமை’யில் நடித்தபோது அப்போது . ப்ளஸ் ஒன் படித்த தனுஷுக்கு சினிமாவில் நடிக்க விருப்பமில்லை, ஈடுபாடில்லை.

பைனான்சியர் பணம் கொடுத்துவிட்டு ‘அப்பனும் புள்ளையும் கேமரா வச்சிட்டு விளையாடறாங்க’ என்றார் கிண்டலாக. ‘என் ராசாவின் மனசிலே’ சமயத்தில் கூட என்னையும் ராஜ்கிரணையும் ‘கோடம்பாக்கத்தில் ரெண்டு லூசுங்க சுத்துது’ என்றார்கள்.

இப்படி எல்லாரும் அவமானங்களைத் தாண்டித்தான் வர வேண்டும்.இந்த சிறிய தயாரிப்பாளர் வெற்றிபெற வேண்டும் ” என்று வாழ்த்தினார்.

நிகழ்ச்சியில் ‘ நட்டி’ நட்ராஜ். தயாரிப்பாளர் சங்க (கில்டு) செயலாளர் ஜாக்குவார் தங்கம், இயக்குநர்கள் ஏ வெங்கடேஷ், அப்துல் மஜீத்,பத்திரிகையாளர் சங்கத்தலைவர் டி.எஸ் .ஆர் சுபாஷ், காதல் சுகுமார், பாடகர் வீரமணிதாசன், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, ஆகியோருடன் நாயகன் அர்ஷா, நாயகி தாரா, இயக்குநர் ஜெய் செந்தில் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

படங்கள் வெற்றி… அஜித் வழியில் சிவகார்த்திகேயன்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் அஜித், தனது படங்கள் ரிலீசானதும் திருப்பதி சென்று, ஏழுமலையானை தரிசனம் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

இந்நிலையில் ஓரிரு தினங்களுக்கு முன்பு நடிகர் சிவகார்த்திகேயனும் திருப்பதி சென்று, சாமி தரிசனம் செய்தார்.

இவரின் ரெமோ படம் மாபெரும் வெற்றியடைந்ததால், ஏழுமலையான் கோயிலுக்கு சென்றதாக கூறப்பட்டது.

விஜய் டிரெஸ்ஸை கிண்டல் செய்தவர்களுக்கு சத்யா பதிலடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பரதன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பைரவா படப்பாடல்கள் விரைவில் வெளியாகவுள்ளது.

அதனையடுத்து படமும் வெளியாகவிருப்பதால் படம் தொடர்பான புகைப்படங்களை தற்போது வெளியிட்டு வருகின்றனர்.

இதில் சிவப்பு கலர் கோட் அணிந்த விஜய்யின் படம் ஒன்று வெளியானதை சிலர் கிண்டல் செய்தனர்.

இதுகுறித்த அந்த ஆடையை வடிவமைத்த காஷ்டியூம் டிசைனர் சத்யா கூறியதாவது…

“அந்த சட்டையின் பாக்கெட்டின் கீழ் நிறைய பட்டன்கள் இருக்கும். அது ஒரு புதிய முயற்சி.

கிரே கலர் ரெடிமேட் சட்டையை வாங்கி, அதன் முன்பகுதியை வெட்டி கிரே கலர் துணியைத் தைத்தோம்.

அதன் பின்னர் கிரே கலந்த சிவப்பு நிறப் பேண்ட்டை தனியாக செய்தோம்.

அது மடங்கும் போது நீல நிறம் தெரியும் வகையில் உருவாக்கினோம்.

இதை வடிவமைக்க நிறைய உழைத்துள்ளோம். உங்கள் விமர்சனங்களை வெளியிடலாம்.

ஆனால் இந்த போட்டோவை பார்ப்பதை விட படத்தின் காட்சிகளோடு உடையைப் பார்த்து உங்கள் விமர்சனங்களை தெரிவித்தால் சந்தோஷம்’ என தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 23இல் மோதும் பார்த்திபன்-சசிகுமார்-ஜெயம் ரவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லட்சுமண் இயக்கத்தில் ஜெயம்ரவி, அர்விந்த்சாமி இணைந்து நடித்துள்ள படம் போகன்.

இமான் இசையமைத்துள்ள இதன் பாடல்கள் டிசம்பர் 3ஆம் தேதி வெளியாகிறது.

இதனையடுத்து, பார்த்திபன் இயக்கி தயாரித்து நடித்துள்ள கோடிட்ட இடங்களை நிரப்புக படத்தின் பாடல்கள் டிசம்பர் 4ஆம் தேதி வெளியாகிறது.

இப்படத்திற்கு சத்யா இசையமைத்துள்ளார்.

இவ்விரண்டு படங்களை அடுத்து சசிகுமார் தயாரித்து நடித்துள்ள பலே வெள்ளையத்தேவா படத்தின் பாடல்கள் டிசம்பர் 5ல் வெளியாகிறது.

தர்புகா சிவா இசையமைத்துள்ள இப்படத்தை பிரகாஷ் இயக்கியுள்ளார்.

இந்நிலையில் இந்த 3 படங்களும் டிசம்பர் 23ஆம் தேதி ஒரே நாளில் ரிலீஸ் ஆகிறது.

Bogan, Balle Vellaiyathevaa and Koditta Idangalai Nirappuga movies clash on December 23rd 2016

மீண்டும் ‘டேக் இட் ஊர்வசி’யை கையில் எடுக்கும் ஏஆர். ரஹ்மான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் பிடித்த பாடல்களை பட்டியல் இட்டால் அதற்கு முடிவே இருக்காது.

அந்த பட்டியலில் இடம் பெற தகுதியான பாடல்களில் ஒன்றுதான் டேக் இட் ஊர்வசி பாடல்.

ஷங்கர் இயக்கத்தில் பிரபுதேவா நடித்த காதலன் படத்தில் இப்பாடல் இடம்பெற்றது.

இப்பாடலை மிகப்பிரம்மாண்டமாக படமாக்கி இருந்தார் ஷங்கர்.

இஸ்லாமிய பாடலாக தொடங்கி வேறு ஒரு தளத்திற்கு நம்மை இப்பாடல் எடுத்துச் சென்றது.

இந்நிலையில், தற்போது இப்பாடல் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் தன் இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது…

‘டேக் இட் ஈஸி’ ஊர்வசி பாடலின் சரணத்தை ஒரு கச்சேரிக்காக மாற்றிக்கொண்டிருக்கிறேன்.

நீங்களும் இதற்கு வரிகளை கொடுக்கலாம்.

ஆனால்,  ட்ரம்ப், ரூபாய் நோட்டு, ஹிலரி பிரச்னையெல்லாம் இல்லாமல் வரிகள் இருத்தல் அவசியம்” என கேட்டுள்ளார்.

Dear friends, I’m trying to rearrange ‘Take it Easy Urvasi’ for a performance and wish to update the Charanams.

Feel free to contribute.. Ofcourse please do leave out and avoid any reference to Hilary Clinton, Donald Trump or the currency situation for now and try to come up with something interesting & humorous in the same scaling of the original Tamil version..

ar rahman going to rearrange Take it Easy Urvasi song

More Articles
Follows