ஹாலிவுட்டில் கலக்கும் தமிழ் இசையமைப்பாளர் பிரித்விக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுவீடனில் ரோபோடிக்ஸில் மேற்கலை பட்டப்படிப்பை முடித்த பிரித்விக் இசையின் வசீகரத்திற்கு உள்ளாகி இசையமைப்பாளராக உருவெடுத்திருக்கிறார்.

தனிப்பட்ட பாடல்களின் மூலம் தனது இசை பயணத்தை அவரது நண்பர் ௮க்‌ஷயுடன் கல்லூரி நாட்களில் தொடங்கிய பிரித்விக், இப்பயணத்தை தொடர்ந்து, தனித்துவமான தனது இசையால் பலரை கவர்ந்துவருகிறார். அக்‌ஷய் இப்போது ஒரு சார்ட்டர்ட் அக்கௌடண்ட் .

சமையல் மந்திரம் (தமிழ் இணையதள படம்), சுவீடிஷ் மொழி படம், அமெரிக்க வெப் சீரியஸ் என பிசியாக இருக்கும் ப்ரித்விக் “ஓன் 23” எனும் ஹாலிவுட் டாக்குமென்ட்ரி படத்திற்கு சமீபத்தில் இசையமைத்துள்ளார்.

ஏப்ரல் 4, 2018 வெளியான இந்த டாக்குமென்ட்ரியின் ஒரிஜினல் சவுண்ட் டிராக் பலரின் பாராட்டை பெற்று வருகிறது. அமெரிக்கா , ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்ற 30 திரைப்பட விழாக்களில் இந்த படமும், படத்தின் இசையும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெர்லினில் நடைபெற்ற அரவுண்ட் தி வேர்ல்ட் பிலிம் பெஸ்டிவல் விழாவில் சிறந்த டாக்குமென்ட்ரி படத்திற்கான விருதுக்கு பரிந்துரை ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரபல பின்னணி பாடகர்கள் கார்த்திக், ஹரிசரண்,ஆலப் ராஜு மற்றும் புதிய இளம் பாடகர்கள் ஸ்ருதிலயா, தீ தேவன் ஆகியோர் பாடிய இசை ஆல்பத்தை விரைவில் பிரபல இசை கம்பெனியின் மூலம் வெளியிடவுள்ளார். ப்ரித்விக்கும் பாடியுள்ளார் .

இவர் முறையே கர்நாடக சங்கீதம் Dr.ஹரீஷ்யிடம், மேற்கத்திய இசை தியரி திரு . அகஸ்டின் பால், பியானோ, ம்யூசி ம்யூசிக்கல்ஸ் திரு.கிரீஷிடமும் பயில்கிறார்.

சென்னையில் பிறந்து வளர்ந்த பிரித்விக் உலக அளிவில் மேன்மேலும் பல உயர்தர இசையை மக்களுக்கு அளித்து இசைக்கும், தனது நாட்டிற்கும் பெருமை சேர்ப்பேன் என்கிறார்.

Young Tamil Music Composer Prithvik enters in Hollywood

சூர்யாவின் என்ஜிகே படத்தில் தேசிய விருது பெற்ற எடிட்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் ‘என்ஜிகே’ படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இதில் சூர்யாவுடன் சாய் பல்லவி, ரகுல் பிரீத்திசிங் என இரண்டு நாயகிகள் நடிக்கின்றனர்.

தெலுங்கு நடிகர் ஜெகபதிபாபு வில்லனாக நடிக்கிறார். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இப்படத்தில் ஒப்பந்தமாகியிருந்த எடிட்டர் ஜி.கே.பிரசன்னாவுக்கு பதிலாக தேசிய விருது பிரபலம் பிரவீன்.கே.எல் அவர்களை தற்போது படக்குழுவில் இணைத்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

என்ஜிகே படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்யவுள்ளதாக படக்குழுவினர் முன்பே அறிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Editor Praveen KL joins with Suriya for NGK movie

காவல்துறையின் அராஜக செயலை கண்டித்து இயக்குநர் சங்கம் அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் பலியாகினர்.

இது தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தூத்துக்குடியில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் செல்போன் இணைய சேவையும் முடக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்க தலைவர் விக்ரமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

‘‘தூத்துக்குடியில் நடந்த கலவரத்தில் 13 அப்பாவி மக்கள் உயிர்களை இழந்ததற்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதோடு துப்பாக்கி சூட்டிற்கு காரணமான காவல்துறையின் அராஜக செயலை வன்மையாக கண்டிக்கிறோம்.

தூத்துக்குடி நகர மக்கள் 20 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலையை மூடிவிடுங்கள் என்று போராடுகிறார்கள். இதுவரை அதற்கு சரியான தீர்வு இல்லை.

பேரிடர்களும், உயிரிழப்புகளும் நடக்க கூடாது என்றுதான் ஜெயலலிதா முதல்–அமைச்சராக இருந்தபோது ஆலையை மூடுவதற்கும், அந்த ஆலைக்கு வழங்கப்படும் மின் இணைப்பை துண்டிக்கவும் உத்தரவிட்டார்.

ஆனால் ஆலை நிர்வாகம் கோர்ட்டில் தடை உத்தரவு பெற்றது. ஆலையை நடத்த நிரந்தரமாக தடை போட்டு இருந்தால் இன்று 13 உயிர்களை இழந்து இருக்க மாட்டோம்.

இந்த பிரச்சினைக்கு உடனே தீர்வு காண ஸ்டெர்லைட் ஆலையை மூடிவிட வேண்டும். அதற்கான வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசை இயக்குனர்கள் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.’’

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Directors Union condemns Police shoot at Tuticorin Sterlite protest

சூப்பர் ஸ்டாருடன் விஜய்சேதுபதி இணையும் படம் ரூ.150 கோடிக்கு விற்பனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுதந்திர போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்ம ரெட்டி வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி வரும் படத்திற்கு ‘சயீரா நரசிம்மரெட்டி’ எனத் தலைப்பிட்டுள்ளனர்.

இந்த படத்தில் நாயகனாக தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கிறார்.

இவருடன் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, கன்னட சூப்பர் ஸ்டார் சுதீப் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

மற்றொரு முக்கிய கேரக்டரில் விஜய்சேதுபதி நடித்து வருகிறார்.

சுரேந்தர் ரெட்டி இயக்கும் இப்படத்தின் ஆந்திரா, தெலுங்கானா வெளியீட்டு உரிமை ரூ.150 கோடிக்கு விலைபோயுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமைகளையும் பெரிய தொகைக்கு விற்றுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் ரூ.150 கோடி செலவில் உருவாகும் இந்த படத்தை சிரஞ்சீவி மகன் ராம்சரண் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த ஆண்டு ‘சயீரா நரசிம்மரெட்டி’ வெளியாகும் என கூறப்படுகிறது.

Vijay Sethupathis Sye Raa Narasimha Reddy trade updates

ஜிவி.பிரகாஷுக்கு ஜோடியாகும் எங்க வீட்டு மாப்பிள்ளை புகழ் அபர்ணதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அங்காடித்தெரு, வெயில், அரவான், காவியத்தலைவன் படங்களை இயக்கிய வசந்தபாலன், அடுத்து ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார்.

இதன் படப்பிடிப்பு சென்னை ஓல்டு மகாபலிபுரம் சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு அரங்கமைப்பில் பூஜையுடன் நாளை காலை ஆரம்பமாகிறது.

இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் ‘பள்ளிப்பருவத்திலே’ நாயகன் நந்தன் ராம், ‘பசங்க’ நாயகன் பாண்டி, ஆர்யாவுடன் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமான அபர்ணதி கதாநாயகியாக நடிக்கிறார்.

முக்கிய கதாபாத்திரத்தில் ராதிகா நடிக்கிறார். இவர்களுடன் ஜெனிஃபர், மணிமேகலை, பாகுபலி வில்லன் பிரபாகர் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இசை -ஜி.வி.பிரகாஷ், ஒளிப்பதிவு-கணேஷ் சந்திரா, சண்டை-அன்பு அறிவு, வசனம்- G.ராமகிருஷ்ணன், பாக்கியம் சங்கர், எடிட்டிங்-ரேமண்ட், பாடல்கள்-கபிலன், கருணாகரன். கதை,திரைக்கதை, இயக்கம்-வசந்தபாலன்,

எக்ஸிகியூட்டிவ் புரொடியூசர் பி.டி.செல்வகுமார். தயாரிப்பு- கிரிகேஷ் சினி கிரியேஷன்ஸ் ஸ்ரீதரன் மரியதாசன்.

இவர் விஷால் நடித்த இரும்பு திரை, மிஷ்கினின் சவரக்கத்தி படங்களை வெளியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Enga Veetu Mappillai fame Aparnathi romance with GV Prakash

தங்கை தாராவுக்கு தமிழ் கற்றுக் கொடுக்கும் அக்கா இனியா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வாகை சூடவா, அம்மாவின் கைபேசி, மவுன குரு, யுத்தம் செய், சென்னையில் ஒரு நாள், உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை இனியா.

அவர் நடித்துள்ள பொட்டு படம் வெளிவர இருக்கிறது.

இந்த நிலையில் இனியாவின் தங்கை தாராவும் நடிக்க வந்திருக்கிறார்.

விரைவில் வெளியாகவுள்ள கிளம்பிட்டாங்கய்யா… கிளம்பிட்டாங்கய்யா… என்ற படத்தில் ஆதிவாசி பெண்ணாக நடித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

தமிழை முறையாக கற்றுக்கொள்ள வேண்டும். அப்போது தான் தமிழ் சினிமாவில் சிறப்பான அங்கீகாரம் கிடைக்கும். என்று அக்கா இனியா அறிவுரை கூறியிருக்கிறார்.

அவரைப்போல நானும் சினிமாவில் ஜெயிப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.” என்கிறார் தாரா.

More Articles
Follows