என்னை எப்படி பாக்கனுமுன்னு நீயே முடிவு பண்ணு..; தர்பாரில் ரஜினி பன்ச்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் தலைவர் 167 படத்திற்கு தர்பார் என தலைப்பிட்டு சற்றுமுன் அதன் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர்.

தர்பார் என்றால் அது அரசரின் சபை என பொருள்படும். அதாவது அரசர் சபை என்றும் கூறலாம்.

அங்கு அரசரை சந்திக்க மந்திரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் கூடுவர்.

இந்த தர்பார் படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் ஐபிஎஸ் ஆக நடிக்கிறார் என்பதை போஸ்டரில் தெளிவுப்படுத்தியுள்ளனர்.

மேலும் மும்பை என்ற வார்த்தை (எழுத்துக்கள்) அதில் தலை கீழாக உள்ளது. எனவே மும்பையை புரட்டிப்போடும் ஒரு கொலை சம்பவம் நடைபெறுவதாக கதை அமைக்கப்பட்டு இருக்கலாம்.

அதை துப்பறிய நாய் மற்றும் அதிகாரிகளுடன் ரஜினி ஈடுபடலாம் எனத் தெரிகிறது.

முக்கியமாக “You decide whether you want me to be good bad or worse” என்ற வாசகம் அதில் உள்ளது.

அதாவது நான் நல்லவனா கெட்டவனா இல்ல மோசமானவனா… எப்படி இருக்கமுன்னு நீயே முடிவு பண்ணிக்கோ என்ற அர்த்தம் அதில் உள்ளது.

எனவே இப்படம் முழுக்க முழுக்க ஆக்சன் கதைக்களத்தில் இருக்கும் எனத் தெரிகிறது.

இந்த தர்பார் பட சூட்டிங் நாளை முதல் மும்பையில் தொடங்கி தொடர்ந்து நடைபெறவுள்ளது.

லைகா தயாரிக்கும் இப்படத்தை ஏஆர். முருகதாஸ் இயக்க, அனிருத் இசையமைக்கிறார்.

நயன்தாரா நாயகியாக நடிக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். அடுத்த ஆண்டு 2020 பொங்கலுக்கு இப்படத்தை ரிலீஸ் செய்யவுள்ளனர்.

You decide whether you want me to be good bad or worse Rajini punch in Darbar

ரஜினியை என் பாதி வயதில்தான் தெரியும்.. – ‘அரசியல்வாதி’ கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வருகிற ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் நடைபெறவுள்ளது.

இதில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடுகிறது.

ரஜினி இன்னும் கட்சி ஆரம்பிக்கவில்லை என்பதால் அவர் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை.

அதேவேளையில் எந்தக் கட்சிக்கும் எனது ஆதரவும் இல்லை என்பதை கூறியிருந்தார். தமிழகத்தின் தண்ணீர் பிரச்னையை யார் தீர்த்து வைப்பார்களோ அவர்களுக்கு வாக்களியுங்கள் என ரஜினி தெரிவித்து இருந்தார்.

இதனிடையில் தன் கட்சிக்கு நண்பர் ரஜினிகாந்த் ஆதரவளிப்பார் என சில தினங்களுக்கு முன் கமல் தெரிவித்து இருந்தார்.

ஆனால் இதுவரை ரஜினி இதுகுறித்து எதுவும் பேசவில்லை.

இந்நிலையில் பிரபல தனியார் டிவிக்கு அளித்துள்ள பேட்டியில் கமல் பேசியதாவது…

“என்னை ஆதரிப்பதை ரஜினி தான் வெளிப்படுத்த வேண்டும். நான் திரும்ப திரும்ப கேட்க முடியாது. வருகிறேன் என்றார் ரஜினி. ஆனால் இன்னும் வரவில்லை.

ரஜினியை என் பாதி வயதில் தான் தெரியும். ஆனால் மக்களை 4 வயதிலிருந்தே தெரியும்.

மக்கள் வருகிறார்கள் அதுபோதும். யார் ஆதரித்தாலும் மகிழ்ச்சி. ரஜினி ஆதரவளித்திருந்தால் இன்னும் மகிழ்ச்சி அடைந்திருப்பேன்” என கமல் பேசியுள்ளார்.

Kamals statement about Rajinis support to his Makkal Needhi Maiam party

தாய்குலங்களை கவர்ந்து விட்டான் ‘குடிமகன்’..; பாக்யராஜ் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜீவமலர் சத்தீஷ்வரன் மூவிஸ் தயாரிப்பில் சத்தீஷ்வரன் இயக்கத்தில் வெளியான படம் ‘குடிமகன்’.

“குடிப்பவர்கள் நிம்மதியாக உறங்கி விடுகிறார்கள். குடும்பத்தில் உள்ளவர்களுக்குத் தான் உறக்கம் போய்விடுகிறது” என்ற கருத்தினை மையமாக வைத்து இப்படத்தை இயக்குனர் இயக்கி இருந்தார்.

இதில் ஜெய்குமார் நாயகனாகவும், ‘ஈரநிலம்’ ஜெனிபர் நாயகியாகவும் நடித்திருந்தார்கள்.

இவர்களுடன் மாஸ்டர் ஆகாஷ், பவா செல்லதுரை, வீரசமர், கிருஷ்ணமூர்த்தி, கிரண், பாலாசிங், பாவா லெட்சுமணன் ஆகியோர் முக்கியமான கதபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.

இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், இப்படத்தை பார்த்த இயக்குனர் பாக்யராஜ், படத்தையும் படக்குழுவினரையும் வெகுவாக பாராட்டியுள்ளார்.

அவர் கூறியதாவது, ‘குடிமகன்’ திரைப்படம் மூன்று வெற்றி அடைந்திருக்கிறது. பிரபலங்கள் இல்லாமல் ஒரு படத்தை ரிலீஸ் வரைக்கும் கொண்டு வந்தது முதல் வெற்றி.

படம் ரிலீசுக்குப் பிறகு தியேட்டர்கள் அதிகரித்திருப்பது இரண்டாவது வெற்றி. பெண்கள், தாய்குலங்களை கவர்ந்திருப்பது மூன்றாவது வெற்றி.

குடிபழக்கத்திற்கு ஆளானவருக்கு என்ன பிரச்சனை வரும் என்று குடும்பத்தை வைத்து சொல்லியிருக்கிறார். இயக்குனர் சத்தீஷ்வரன் ஸ்கிரிப்ட் மேல் வைத்திருந்த நம்பிக்கையை வைத்துதான் இப்படத்தை இயக்கி இருக்கிறார்.

நம்பிக்கைக்கு ஏற்றார்போல் படம் வெளியாகி, எதிர்பார்த்ததை விட நிறைய தியேட்டர்களில் படம் ஓடிக்கொண்டிருக்கிறது. மீண்டும் நல்ல வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்’ என்றார்.

Bhagyaraj praises Kudimagan script and movie

நல்ல கதைக்காக காத்திருக்கும் ‘கருவாப்பையா’ கார்த்திகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தூத்துக்குடி படத்தில் நாயகியாக நடித்து “ கருவாப்பையா கருவாப்பையா “என்ற பாடல் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்தவர் நடிகை கார்த்திகா.

தொடர்ந்து பிறப்பு, ராமன் தேடிய சீதை, தைரியம், மதுரைசம்பவம், 365 காதல் கடிதம், வைதேகி, நாளைய பொழுதும் உன்னோடு போன்ற படங்களில் நடித்த கார்த்திகா தனது தங்கையின் படிப்பிற்காக சிறிது காலம் மும்பையில் இருந்தார்.

தங்கையின் படிப்பு முடிந்து சென்னை திரும்பிய கார்த்திகா வடபழனியில் உள்ள பிரபல மால் திரையரங்கிற்கு படம் பார்க்க சென்றுளார்.

அங்கு அவரை அடையாளம் தெரிந்துகொண்ட ரசிகர்கள் கருவாப்பையா கார்த்திகா என்று சூழ்ந்துகொண்டனர்.

தன்னை மறக்காத ரசிகர்களை கண்டு மகிழ்ச்சியடைந்த கார்த்திகா மீண்டு திரைப்படங்களில் நடிக்க தயாராகிவிட்டார்.

பிரபல தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க அழைப்பு வந்தது. திரைப்படங்களில் தான் நடிப்பேன் என்று உறுதியாக இருக்கும் கார்த்திகாவை படங்களில் நடிக்க வைக்க சில இயக்குனர்களும் பேசி வருகிறார்கள்.

நல்ல கதையம்சம் கொண்ட, தனக்கு நல்ல கதாபாத்திரங்கள் நிறைந்த படங்கள் என்றால் நடிக்க தயாராக உள்ளதாக கூறுகிறார் கார்த்திகா.

Thoothukudi movie Karuva paiya fame Karthiga waiting for good script

நான் ஹீரோவா நடிச்ச படத்தை கமல் நாசமாக்கிட்டார்.. – விவேக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அமெரிக்காவில் உள்ள ஐடி கம்பெனிகளில் பணிபுரியும் தமிழர்கள் இணைந்து உருவாக்கியுள்ள படம் வெள்ளைப் பூக்கள்.

இப்படத்தில் விவேக், சார்லி, பூஜா தேவாரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படம் வரும் ஏப்ரல் 19ம் தேதி ரிலீசாகவுள்ள நிலையில் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது விவேக் பேசியதாவது…

” மறைந்த இயக்குனர் மகேந்திரனின் உதிரிப்பூக்கள் எப்படி டிரெண்ட்டாக அமைந்ததோ, அதேபோல் தான் வெள்ளைப் பூக்களும் டிரெண்ட் செட்டராக அமையும்.

இப்படத்தின் இயக்குனர் விவேக் இளங்கோவனுக்கு சினிமாவில் ஒரு நல்ல எதிர்காலம் உள்ளது.

நிறைய படங்களில் காமெடி செய்துள்ளேன். சில படங்கள் என் காமெடிக்காக ஓடி இருக்கிறது. ஆனால் நான் ஹீரோவாக நடித்த படங்கள் ஓடவில்லை.

நான் நாயகனாக நடித்த ‘நான் தான் பாலா’ ஒரு நல்ல படம். அது நன்றாக ஓடும் என நினைத்தேன். ஆனால் அப்போது கமலின் பாபநாசம் திடீரென வந்து என் படத்தை நாசம் செய்துவிட்டது.

உடனே நான் கமலுக்கு எதிராக பேசுகிறேன் என நினைக்க வேண்டாம். இப்போது அவர் அரசியலில் இருக்கிறார்.

எனவே இதை தவறான செய்தியாக போட வேண்டாம். அவருக்கு ஒரு கும்பிடு போட்டு விடுகிறேன்.” என விவேக் பேசினார்.

Kamalhassans movie release made my movie flop says Vivek

Breaking 2020 பொங்கலுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி அமைக்கும் ‘தர்பார்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த நடிப்பில் உருவாகும் தலைவர் 167 படத்தை ஏஆர். முருகதாஸ் இயக்கவுள்ளார்.

இப்படத்திற்கு தர்பார் என தலைப்பிட்டு அதன் பர்ஸ்ட் லுக்கை சற்றுமுன் வெளியிட்டுள்ளனர்.

இத்துடன் ரிலீஸ் தேதியையும் திட்டமிட்டு அறிவித்துள்ளனர்.

அடுத்த வருடம் 2020 ஜனவரியில் பொங்கல் தினத்தில் இப்படத்தை வெளியிடவுள்ளனர்.

இப்படத்தை லைகா தயாரிக்க அனிருத் இசையமைக்கவுள்ளார்.

சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் செய்கிறார்.

இதில் நாயகியாக நயன்தாரா நடிக்கவுள்ளார்.

இதில் ரஜினிகாந்த் ஐபிஎஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

அவர் போலீஸாக நடிப்பதால் அந்த போஸ்டரில் போலீஸ் தொப்பி, போலீஸ் பெல்ட், யுனிபார்ம் முதல் போலீஸ் நாய் வரை டிசைன் செய்துள்ளனர்.

நீண்ட வருடங்களுக்கு பிறகு ரஜினி போலீஸாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Rajini plays IPS officer in Darbar Movie release on Pongal 2020

More Articles
Follows