அரசியலில் விஜய்யுடன் இணைவீர்களா.?விஷால் பதில் என்ன தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஷால் – எஸ் ஜே சூர்யா இணைந்து நடித்துள்ள படம் ‘மார்க் ஆண்டனி’. இந்த படம் செப்டம்பர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படக்குழுவினர் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களுடன் ‘மார்க் ஆண்டனி’ படக்குழுவினர் உரையாடினர்.

அப்போது மாணவர்களின் கேள்விகளுக்கு விஷால் பதில் அளிக்கும் போது..

“அரசியல் களத்தில் விஜய்யுடன் இணைந்து செயல்படுவீர்களா.? என ஒருவர் கேட்டார்.

” அது கடவுளால்தான் நிர்ணயிக்கப்பட வேண்டிய விஷயம்.

என்னை பொறுத்தவரை அரசியல் என்பது சமூகசேவை. இது வியாபாரம் அல்ல.

ஒருவகையில் நாம் எல்லாரும் அரசியல்வாதிகள்தான்.

எல்லாரும் பசியென்று வந்தவர்களுக்கு காசு கொடுத்து இருப்பீர்கள். பசியென்று வருபவர்களுக்கு 50 ரூபாய் கொடுத்தாலே அவர்கள் அரசியல்வாதிதான்’ என்றார் விஷால்.

Will you join with Vijay in politics Here is Vishals reply

யோகி பாபு நடிக்கும் ‘வானவன்’ போஸ்டரை வெளியிட்ட ஜிவி பிரகாஷ் & மடோன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாளத்தில் ‘மாஸ்குரேட்’ என்ற வெப் சீரிஸை இயக்கியவர் சஜின் கே.சுரேந்திரன்.

சஜின் கே.சுரேந்திரன் தற்போது யோகி பாபு, ரமேஷ் திலக், காளி வெங்கட், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, மாஸ்டர் ஷக்தி ரித்விக், ‘லவ் டுடே’ பிராத்தனா நாதன் மற்றும் கல்கி ராஜா ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் கோவிந்த் வசந்த இசையமைத்துள்ளார்.

இப்படத்தை ‘ஈடன் ஃபிளிக்ஸ் புரொடக்ஷன்ஸ்’ தாமஸ் ரென்னி ஜார்ஜ் தயாரித்துள்ளார்.

பவி கே பவன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஃபின் ஜார்ஜ் படத்தொகுப்பு செய்துள்ளார்.

மல்டி ஸ்டாரர் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

யோகிபாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், யோகி பாபு நடிக்கும் இப்படத்திற்கு ‘வானவன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

‘வானவன்’ படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டரை ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் இயக்குனர் மடோன் அஸ்வின் வெளியிட்டுள்ளனர்.

இந்த டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

gv prakash and madonne aswin released yogibabu’s vaanavan movie poster

The Irishman & Avengers படங்களின் டெக்னிக்கை கமலுக்காக பயன்படுத்தும் ஷங்கர்.; ஏன்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் ஷங்கர் தற்போது கமல்ஹாசன் நடிப்பில் ‘இந்தியன் 2’ இயக்கி வருகிறார்.

இப்படத்தில் சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில், ‘இந்தியன் 2’ படத்தின் விஎஃப்எக்ஸ்(VFX) பணிகள் குறித்த அறிவிப்பை இயக்குனர் ஷங்கர் வெளியிட்டுள்ளார்.

இப்படத்தில் லோலா விஎஃப்எக்ஸ்(VFX) பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஷங்கர் தெரிவித்துள்ளார்.

இது கமலின் சிறு வயது கதாப்பாத்திரத்திற்காக பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

மேலும், இந்த விஎஃப்எக்ஸ்(VFX) ஹாலிவுட் படமான ‘தி ஐரிஸ்மேன்'(The Irishman) மற்றும் அவஞ்சர்ஸ் எண்ட் கேம்(Avengers: Endgame) படங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

director Shankar excites fans with the latest update on ‘Indian 2’

விஜய்சேதுபதிக்கு மிரட்டலான அறிமுகம் கொடுத்த ஷாருக்கான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷாருக்கானின் ஆக்சன் திரில்லர் திரைப்படமான ‘ஜவான்’ மீதான எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், படத்தின் வலிமைமிக்க எதிரியின் தோற்றத்தை வெளிப்படுத்துவதன் மூலம் ரசிகர்களின் உற்சாகம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் வெளியிட்ட ஒரு புதிய போஸ்டரில் விஜய் சேதுபதியை, ‘மரணத்தின் வியாபாரி’ என அறிமுகப்படுத்துகிறார்.

இரண்டு வலிமைமிக்க நட்சத்திர கலைஞர்களுக்கு இடையே மறக்க முடியாத மோதல் இருக்கிறது என உறுதி அளிக்கிறார். ‘ஜவான்’ பெரிய திரையில் இந்த இரண்டு நட்சத்திரங்களின் முதல் சந்திப்பை குறிக்கிறது.

அண்மையில் வெளியான அதிரடி மிக்க பிரிவியூவில் ஏற்கனவே உயர்தரமான டைனமிக் விஜய் சேதுபதியின் காந்த பார்வை ரசிகர்களை கவர்ந்தது.

இப்போது வெளியாகி இருக்கும் புதிய போஸ்டர் பயமுறுத்தலுடன் கூடிய கட்டளையிடும் வில்லனாக அவரது கதாபாத்திர சித்தரிப்பை காட்டுகிறது. ஷாருக்கான் மற்றும் விஜய் சேதுபதி இடையேயான காவிய முகத்தை எதிர்பார்த்து… பார்வையாளர்களை அவர்களின் இருக்கைகளின் நுனியில் நிறுத்துகிறது.

ஒவ்வொரு போஸ்டர் வெளியிட்டிலும் ‘ஜவான்’ படத்தை பற்றிய எதிர்பார்ப்பும், உற்சாகமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஷாருக்கானின் வழுக்கை தோற்றம் முதல் நயன்தாராவின் தீவிரமான தோற்றம் வரை… ஒவ்வொரு போஸ்டரும் இந்த அதிரடி களியாட்டத்திற்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

விஜய் சேதுபதியின் மிரட்டலான கதாபாத்திரத்தின் வெளிக்கொணர்வு… படத்தின் மீதான கவர்ச்சியை அதிகப்படுத்தி.. எதிர்பார்ப்பின் மற்றொரு அடுக்கை சேர்த்துள்ளது.

‘ஜவான்’ படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மெண்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார்.

கௌரி கான் தயாரித்துள்ளார். கௌரவ் ஷர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றியிருக்கிறார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

SRK unveils the villain of Jawan Witness Vijay Sethupathi as the Dealer of Death

கதிகலங்க வைக்கும் ‘கங்குவா’ கிளிம்ஸ்.; சூர்யாவுடன் இணைந்த பாலிவுட் நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் “கங்குவா” படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, கே எஸ் ரவிகுமார், ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

‘கங்குவா’ திரைப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை சமீபத்தில் படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது.

இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சூர்யாவின் பிறந்தநாளை நேற்று (23-07-2023) வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் ‘கங்குவா’ படத்தில் பாலிவுட் நடிகர் பாபி டியோல் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

Bollywood actor Bobby Deol joins with suriya in kanguva movie

‘பீட்சா 3’ ரிலீஸ் அப்டேட் : ரசிக்கவும் ருசிக்கவும் ரெடியா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2012-ம் ஆண்டு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘பீட்சா’.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கடந்த 2013-ம் ஆண்டு அசோக் செல்வன் நடிப்பில் ‘பீட்சா 2’ திரைப்படம் வெளியானது.

தற்போது ‘மங்காத்தா’, ‘மேகா’, ‘ஜீரோ’, ‘பொன்னியின் செல்வன்’ படங்களில் நடித்த அஷ்வின் ககுமானு நடிப்பில் ‘பீட்சா 3’ திரைப்படம் உருவாகியுள்ளது.

இயக்குனர் மோகன் கோவிந்த இயக்கும் இப்படத்தை திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தில் காளி வெங்கட், பவித்ரா, கவுரவ் நாராயணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படம் மே 12ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு பின்னர் சில காரணங்களால் இப்படத்தின் வெளியீட்டு தேதி தள்ளிப்போனது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. ‘பீட்சா 3’ படம் ஜூலை 28ம் தேதி வெளியாகவுள்ளதாக வீடியோ வெளியிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Ashwin Kakimanu starrer ‘Pizza 3’ gets a release date

More Articles
Follows