விஜய் 61 படத்திலிருந்து விலக யார் காரணம்.? ஜோதிகா ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திருமணத்திற்கு பிறகு 36 வயதினிலே படத்தில் நடித்தார் நடிகை ஜோதிகா.

இதன் வெற்றிக்கு பின்னர், அவருக்கு வாய்ப்புகள் குவிந்தன.

தற்போது பாலா இயக்கும் நாச்சியார் படத்தில் ஜிவி பிரகாஷ் உடன் நடித்து வருகிறார்.

மேலும் பிரம்மன் இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள மகளிர் மட்டும் படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இதனிடையில் அட்லி இயக்கும் விஜய் 61 படத்திலும் நடிக்க ஒப்புக் கொண்டார்.

ஆனால் அதன்பின்னர் சில காரணங்களால் அதிலிருந்து விலகினார்.

இவர் விலகலுக்கு சிவகுமார் மற்றும் சூர்யாதான் காரணம் என அப்போது சொல்லப்பட்டது.

ஆனால், இதை மறுத்துள்ள ஜோதிகா தன் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளதாவது…

விஜய் 61 படத்திலிருந்து விலக காரணம் என் குடும்பம் அல்ல. அவர்கள் என்னையே முடிவு செய்ய சொன்னார்கள்.

ஆனால் அதற்கான காரணத்தை என்னால் சொல்ல முடியாது.” என்று மட்டும் தெரிவித்துள்ளார்.

Why  Jyothika walked out of Vijay 61

பாகுபலி2 ரிலீஸ் அன்று விஜய் 61 படக்குழுவின் திட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அட்லி இயக்கும் தளபதி 61 படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை விஜய் பிறந்தநாளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

அண்மையில் இதன் சூட்டிங்கில் வடிவேலு கலந்து கொண்டு நடித்திருக்கிறார்.

இந்நிலையில் ஏப்ரல் 28ம் தேதி இப்படக்குழு ஐரோப்பா செல்லவிருப்பதாக கூறப்படுகிறது.

அன்றைய தினத்தில்தான் பாகுபலி படம் நான்கு மொழிகளில் இந்தியாவில் மட்டும் 9,000 தியேட்டர்களில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Vijay 61 team plan on Baahubali 2 release date

கமலைத் தொடர்ந்து மீண்டும் ரஜினி பட டைட்டிலில் சிபிராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சைத்தான் பட இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கும் சத்யா படத்தில் நடித்து வருகிறார் சிபிராஜ்.

இதே தலைப்பில் உருவான படத்தை கமல் நடிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார்.

சத்யா என்று பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தில் வரலட்சுமி மற்றும் சதீஷ் நடிக்கின்றனர்.

சத்யராஜின் குடும்ப நிறுவனமான நாதம்பாள் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில் சிபிராஜ் நடிக்கவுள்ள அடுத்த படத்திற்கு ரங்கா என்ற தலைப்பை வைத்துள்ளனர்.

இது 1982ல் ரஜினி நடிப்பில் வெளிவந்த படத்தின் தலைப்பாகும்.

நாளைய இயக்குனர் புகழ் வினோத் இயக்கவுள்ள இப்படத்தில் நிகிலா விமல் நாயகியாக நடிக்கிறார்.

இதன் சூட்டிங் தற்போது காஷ்மீர் பகுதியில் நடைபெற்று வருகிறது.

ஜீவா, ஹன்சிகாவுடன் சிபிராஜ் நடித்த போக்கிரி ராஜா படத்தலைப்பும் ரஜினி படத்தலைப்பு என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

நலிந்த விவசாயிகளுக்கு ரூ. 2 லட்சம் கொடுத்த பிரசன்னா-சினேகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பெருமைமிகு தமிழர்கள் விழாவில் நலிந்த விவசாயிகள் 1௦ பேருக்கு விஷால் உதவினார்.

இவரைப்போல், விவசாயிகளுக்கு நாங்களும் உதவ வேண்டும் என பிரசன்னா-சினேகா தம்பதிகள் விரும்பினர்.

எனவே, நலிந்த விவசாயிகளின் பட்டியலை வழங்கி அவர்களுக்கு உதவுமாறு கூறி அவர்களுக்கு தகவலளித்தார் விஷால்.

அதன்படி பிரசன்னா மற்றும் சினேகா நலிந்த விவசாயிகள் 1௦ பேருக்கு உதவும் வகையில் ரூ. 2-லட்சம் நிதி வழங்கினர்.

தமிழகத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக அனைவரும் குரல் கொடுத்து வரும் இவ்வேளையில் பிரசன்னா, சினேகா ஆகியோர் செயலில் இறங்கி செய்துள்ள இந்த நற்செயல் பாராட்டுக்கூரிய ஒன்றாகும்.

இந்நிகழ்வு விஷால் அவர்களால் துவக்கிவைக்கப்பட்ட “Friends Of Farmers” எனும் அமைப்பால் ஒருங்கிணைக்கப்பட்டது.

Prasanna and Sneha donates two Lakhs to struggling farmers

அவதார் படத்தின் அடுத்த 4 பாகங்களின் ரிலீஸ் தேதி பட்டியல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2009-ம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உலகமெங்கும் ரிலீஸ் ஆகி வசூலை வாரிக் குவித்த படம் ‘அவதார்’.

இதற்கு முன் வசூல் சாதனை படைத்த `டைட்டானிக்’ சாதனைகளையும் அவதார் முறியடித்ததாக சொல்லப்படுகிறது.

இதன் வெற்றியைத் தொடர்ந்து, அவதார் படத்தின் 4 பாகங்கள் வெளியாகும் என ஜேம்ஸ் கேமரூன் அறிவித்திருந்தார்.

தற்போது அப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

`அவதார் 2′ – டிசம்பர் 18 2020
`அவதார் 3′ – டிசம்பர் 17 2021
`அவதார் 4′ – டிசம்பர் 20 2024
`அவதார் 5′ – டிசம்பர் 19 2025

The Next Four Avatar Movies Release Dates here

கீர்த்தி சுரேஷ் ஜோடியாக சூர்யாவுக்கு பதில் துல்கர் சல்மான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முன்னாள் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு “நடிகையர் திலகம்” என்ற பெயரில் தமிழில் படமாக்கப்பட உள்ளதை பார்த்தோம்.

இப்படம் தெலுங்கில் மகாநடி என்ற பெயரில் உருவாகிறது.

தெலுங்கின் பிரபல இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கவுள்ள இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் சாவித்ரி வேடத்தில் நடிக்கிறார்.

பத்திரிகையாளர் கேரக்டரில் சமந்தா நடிக்க, நடிகை ஜமுனா கேரக்டரில் அனுஷ்கா நடிக்கக்கூடும் என சொல்லப்படுகிறது.

மிக்கி ஜே.மேயர் இசையமைக்கவுள்ள இப்படத்தில் “காதல்மன்னன்” ஜெமினி கணேசன் கேரக்டரில் சூர்யா நடிக்க உள்ளதாக செய்திகள் வந்தன.

ஆனால் அவர் நடிக்கவில்லை என்பது பின்னர் தெரிய வந்தது.

இந்நிலையில் நடிகர் மம்மூட்டியின் மகனும், பிரபல நடிகருமான துல்கர் சல்மான் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறாராம்.

வருகிற மே 8-ஆம் தேதி இப்படம் குறித்த அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Dulquer Salmaan to romance with Keerthy Suresh in Nadigaiyar Thilagam

More Articles
Follows