‘விஜய்யை எப்படி பார்க்கனும் ஆசைப்பட்டேனோ அப்படியொரு படம் தளபதி 61’ – அட்லி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் தன் 61வது படத்தை இயக்கும் வாய்ப்பை அட்லிக்கு கொடுத்தார் விஜய்.

தற்போது இதன் சூட்டிங் சென்னை மீனம்பாக்கம் அருகே நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் விஜய் மற்றும் அட்லி இருவரும் ஒரு தனியார் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர்.

அப்போது அட்லி பேசும்போது…

“நான் விஜய்யின் மிகப்பெரிய ரசிகன். சினிமாவில் நுழையும்போதே அவருடன் இணைந்து பணி புரிய வேண்டும் என ஆசைப்பட்டேன்.

நான் அவரை எப்படி எல்லாம் பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டேனோ அப்படி ஒரு படத்தைதான் (தளபதி61) தற்போது இயக்கி வருகிறேன்” என தெரிவித்தார்.

Atlee open talk about Vijay and his Thalapathy 61 movie

படிப்பை பாதியில் விட்டதால் இன்றும் வருந்தும் ரஜினிகாந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சோளிங்கர் நகரில் உள்ள அரசு பள்ளிகளில் 2016-2017ம் ஆண்டு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 10ம் மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு ஊக்கத்தொகையும், நினைவுபரிசும் வேலூர் மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக சோளிங்கர் என்.ரவி அவர்கள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாணவர்களுடன் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் நடைபெற்ற சில நிகழ்வுகள்.

இது போன்ற நிகழ்ச்சிகளில் மாணவர்கள் நின்று கொண்டும், பரிசு வழங்குபவர்கள் அமர்ந்து கொண்டும் இருப்பார்கள்.

ஆனால் இந்த நிகழ்ச்சியில் மாணவர்களை அமர வைத்து அவர்கள் மத்தியில் நின்று மகிழ்ந்தார்.

விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வயது வித்தியாசமின்றி இருகரம் கூப்பி வணங்கி வரவேற்று மகிழ்ந்தார்.

பின்னர் என்.ரவி அவர்கள் பேசியதாவது…

தலைவர் ரஜினிகாந்த் அவர்கள் மாணவர்கள் மீது மிகுந்த பற்றுக் கொண்டுள்ளார்.

அவர் நன்றாக படிக்கவில்லையே என்று அடிக்கடி ஏங்குவதுண்டு.

தன்னைப் போல ஒரு நாளும் இனி வரும் தலைமுறையினர் வருந்தக் கூடாது என்று நினைப்பவர் தலைவர் ரஜினி.” என்று பேசினார்.

Till today SuperStar Rajinikanth feel sad about his discontinued Education

ரம்ஜானுக்கு முன்பே ரசிகர்களுக்கு சிம்பு தரும் விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்பு 3 வேடங்களில் நடித்துள்ள அன்பானவன் அசராதவன் அடங்காதவன் வருகிற ஜீன் 23ஆம் தேதி ரம்ஜான் ஸ்பெஷலாக ரிலீஸ் ஆகிறது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் தமன்னா, ஸ்ரேயா, சனாகான், நீதுசந்திரா, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரித்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் இடம் பெற்றுள்ள ரத்தம் என் ரத்தம் என்ற பாடல் வீடியோவை வருகிற ஜீன் 17ஆம் தேதியே வெளியிடவிருக்கிறார்களாம்.

Ratham en Ratham single from AAA movie release on 17th June 2017

முதல்வரை சந்தித்து வரலட்சுமி வைத்த கோரிக்கைகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

போடா போடி மற்றும் தாரை தப்பட்டை படங்களில் நாயகியாக நடித்தவர் வரலட்சுமி சரத்குமார்.

இவர் கடந்த மார்ச் 8ஆம் தேதி மகளிர் தினத்தன்று, ஷேவ் சக்தி என்ற பெண்கள் பாதுகாப்பு அமைப்பை தொடங்கினார்.

இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை இன்று காலை சந்தித்தார் வரலட்சுமி.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது….

பாலியல் வன்கொடுமைகளால் பெண்கள் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர்.

இதனால் மாவட்டம் தோறும் மகளிர் நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றேன்.
மேலும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் 6 மாதத்தில் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்” என்றும் முதல்வரிடம் தெரிவித்தேன்.

varu sarathkumar‏Verified account @varusarath
Met the Honourable CM n handed over #SaveShakti petition.He has promised to look into the matter immediately n do the needful #WomensRights

Varalakshmi meet Tamilnadu CM regarding Sexual Harassment on Women

கேஃபினோ சார்பாக விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்கிய நாசர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நண்பர்களுடன் சேர்ந்து சிறப்பான பொழுதுபோக்கு, விளையாட்டுகளுடன் கூடிய உணவகம் அல்லது காபி ஷாப் போகவேண்டும் என்று விரும்பினால், உங்களது தேர்வு நிச்சயம் சாலிகிராமத்தில் உள்ள ‘கேஃபினோ’வாகத் தான் இருக்கமுடியும்.

சென்னை சாலிகிராமத்தில் ‘கேஃபினோ’ தி கேம் யார்டு’ என்கிற பொழுதுபோக்கு மையம் கடந்த மாதம் துவங்கப்பட்டது.. இதனை இயக்குநர் மீரா கதிரவன், நடிகர் அபி சரவணன், நடிகை அதிதி ஆகியோர் கலந்துகொண்டு திறந்து வைத்தனர்.

அந்த சமயத்தில் நடிகர் அபிசரவணன் விவசாயிகளுக்கான போராட்டங்களில் முன்னின்று பங்கேற்று வந்தார். அவர்களுக்கு திரையுலக பிரபலங்கள் மூலமாக சிறுசிறு உதவிகளையும் செய்து கொடுத்து வந்தார்.

அதனால் இந்த ‘கேஃபினோ’ திறப்பு விழா நிகழ்விலும் விவசாயிகள் பற்றி பேசிய அபிசரவணன், இந்த ‘கேஃபினோ’வின் ஒரு மாத லாபத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை விவசாயிகளுக்கு அளித்தால் நன்றாக இருக்கும் என ஒரு கோரிக்கையையும் பேச்சுவாக்கில் வைத்துவிட்டு சென்றார்.

ஆனால் ‘கேஃபினோ’ தி கேம் யார்டு’ உரிமையாளர்களோ அபிசரவணனின் இந்த கோரிக்கையை சீரியஸாகவே எடுத்துக்கொண்டார்கள்.

இந்த ‘கேஃபினோ’ தி கேம் யார்டு’ மையம் ஆரம்பித்து கிட்டத்தட்ட ஒரு மாதம் முடிந்தநிலையில் இந்த ஒரு மாதத்தில் வந்த லாபத்தை மட்டுமல்ல, ஒருமாத மொத்த வருமானமான ரூ.58 ஆயிரத்தையும் டில்லியில் போராடிய விவசாயிகளுக்கு வழங்கி ஆச்சர்யப்படுத்தியுள்ளனர்.

நேற்று மாலை இந்த தொகையை விவசாயிகளிடம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்வில் நடிகர்சங்க தலைவர் நாசர் கலந்துகொண்டு ‘கேஃபினோ’ தி கேம் யார்டு’ சார்பாக அந்த உதவித்தொகைக்கான காசோலையை டில்லி போராட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகளின் பிரதிநிதிகளிடம் வழங்கினார்.

விழாவில் பேசிய அபிசரவணன், “நான் பெரிய நடிகர் எல்லாம் இல்லை.. விவசாயிகள் டெல்லியில் போராடியதை ஒரு வீடியோவில் பார்த்துதான் நானும் டெல்லிக்கு கிளம்பினேன்.

நான் நடிகர்சங்கத்தின் உறுப்பினர் என்பதால் இங்கிருந்து கிளம்பியது முதல் அங்கே நடக்கும் நிகழ்வுகளை அவ்வப்போது நடிகர்சங்க செயலாளர் விஷால் சாரிடம் தெரிவித்தவாறே இருந்தேன்.

விஷால், பிரகாஷ்ராஜ் சார் அவர்கள் டெல்லி வந்ததும் தான் விவசாயிகளின் போராட்டத்துக்கே மீடியா வெளிச்சம் கிடைத்தது:” என கூறினார்.

அடுத்ததாக பேசிய நாசர், “அபிசரவணன் விவசாயிகளுக்கு உதவும் ஒரு நல்ல முயற்சியை மேற்கொண்டதாலேயே, வரலாற்றில் உனக்கும் ஒரு முக்கிய இடம் உண்டு.

இது ஒரு நல்ல நிகழ்வு.. பணம் பொருள் கொடுத்து உதவிசெய்ய முடிந்தவர்கள் ஒருபக்கம் செய்யட்டும்.. ஆனால் ஓவ்வொரு கிராமத்திலும் சிறு நகரத்திலும் உள்ள குளம், குட்டைகளை தூர்வாரி, ஏரிகளை சுத்தமாக்கி மழைபெய்யும் சமயங்களில் அவற்றில் நீர் தேங்க அங்கிருக்கும் இளைஞர்களும் தன்னார்வலர்களும் உதவினாலே அது விவசாயிகளுக்கு நாம் செய்யும் பேருதவியாக இருக்கும்.. அவர்களுக்கு தேவையானதும் அவர்களது முக்கிய பிரச்சனையும் நீர் தான்” என பேசினார்.

இந்த நிகழ்வில் நடிகைகள் அதிதி, அதுல்யா, மீரா மிதுன், நடிகர்கள் சௌந்தர்ராஜா, ஹரீஷ், நாசரின் மகன் லுத்புதீன், இசையமைப்பாளர் சாம் டி.ராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு உதவும் விதமான இதுபோன்ற விஷயங்களை ஊக்கப்படுத்தும் விதமாக பேசினார்கள்.

விழாவில் கலந்துகொண்ட விவசாய சங்க பிரதிநிதிகள் நாசருக்கும் நடிகர்சங்கத்திற்கும் இந்த தொகையை வழங்கிய கேபினோ மையத்திற்கும் இதற்கான முயற்சியை செய்த அனைவருக்கும் தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டார்கள்.

CAFINO The Game Yard donates its one months revenue to farmers

ரயிலில் கேட்ட ஆச்சரிய கதையை படமாக இயக்கிய விஜய் கே.மோகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாளத்தில் ‘நளசரிதம் நாலாம் திவசம்’,’வேனல் மரம் ‘என இரு வெற்றிப் படங்களை இயக்கியவர் விஜய் கே.மோகன்.

தற்போது இமை என்ற படத்தின் முமூலம் தமிழுக்கு வருகிறார்.இவர் ஏற்கெனவே

இப்படத்தை ஜே அண்ட் பி புரொடக்ஷன்ஸ் சார்பில் ஹார்பிக் வி. டோரி தயாரித்துள்ளார்.

நாயகனாக சரிஷ் நடிக்க, நாயகியாக அட்சய பிரியா நடித்துள்ளார். இவர் ஏற்கெனவே தமிழில் நடித்து இரண்டு படங்கள் வெளியாகவுள்ளன.

பிரகாஷ் ராஜின் மைத்துனரும் டிஸ்கோ சாந்தியின் சகோதரருமான அருண் திருமொழி வர்மன் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இயக்குநர் விஜய் கே. மோகன் தான் இயக்கும் முதல் படம் பற்றிப் பேசும்போது…

“திறமைகளுக்கும் புதுமைகளுக்கும் என்றும் தமிழில் வரவேற்பு கிடைக்கும் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு.

அந்தத் தைரியத்தில் தான் தமிழில் படம் இயக்கியுள்ளேன் ” என்கிறார் இயக்குநர்.

” ஒரு நாள் ரயிலில் கேட்ட ஒருவரது ஆச்சரியமான உண்மைக்கதையையே ‘இமை’ படமாக உருவாக்கியிருக்கிறேன்.” என்கிறார்.

சென்னை, பாண்டிச்சேரி, பொள்ளாச்சி, ஊட்டி, கேரளாவிலுள்ள கோவிந்தபுரம் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

ஐம்பது நாட்களில் பம்பரமாகச் சுழன்று படத்தை முடித்திருக்கிறது படக்குழு.

நல்லதொரு விஷூவல் ட்ரீட்டாக இருக்கும் படி ஒளிப்பதிவு செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் வி.கே.பிரதீப். இவர் ஏராளமான விளம்பரப் படங்களில் பணியாற்றியவர்.

இசையமைப்பாளர்கள் மிக்கு காவில் மற்றும் ஆதி ஃப் என இருவர் இணைந்து இசையமைத்துள்ளனர்.

பாடல்கள்- யுகபாரதி , நடனம் _ தீனா, ஸ்டண்ட் – டேஞ்சர் மணி , ஒப்பனை மிட்டா ஆண்டனி.

அடுத்த மாதம் ஜூலையில் ‘இமை’ படம் வெளியாகவுள்ளது.

A real incident crude love script is mold as a film Imai

More Articles
Follows