4வது முறையாக இணையவிருந்த ரஜினி-ஷங்கரை பிரித்த எஸ்ஏசி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்கி என்ற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ள டிராஃபிக் ராமசாமி படத்தில் டிராஃபிக் ராமசாமியாக நடித்து வருகிறார் இயக்குனரும் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ. சந்திரசேகர்.

இப்படம் வருகிற ஜீன் 22ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் நேற்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் எஸ்ஏசி.யிடம் உதவி இயக்குனர்களாக பணி புரிந்த ஷங்கர், பொன்ராம், ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

அப்போது ஷங்கர் பேசும்போது…

இயக்குநர் ஷங்கர் பேசும் போது ” இந்த டிராபிக் ராமசாமி என்னையும் பாதித்த மனிதர். அவருக்குள் ஒரு ஹீரோயிசம் இருக்கும். அதைப் பார்த்து நான் மனசுக்குள் கை தட்டியதுண்டு. இவர் கதையைப் படமாக்க நானும் ஆசைப்பட்டேன்.

எனக்கும் அப்படி ஆசை இருந்தது. இவர் கத்தி எடுக்காத இந்தியன். வயசான அந்நியன் அம்பி. இவர் கதையில் ரஜினி சாரை வைத்து எடுக்கக் கூட நினைத்தேன்.

எஸ்.ஏ.சி. சார் நடிக்கிறார் என்று அறிவிப்பு வந்ததும் வட போச்சே என்ற ஏமாற்றம். இருந்தாலும் டிராபிக் ராமசாமி கேரக்டரில் அவரை பார்ப்பதில் ரொம்ப மகிழ்ச்சி. இந்தப் படத்தைப் பார்க்க நான் காத்திருக்கிறேன்.” என்று பேசினார்.

சிவாஜி, எந்திரன், 2.0 ஆகிய 3 படங்களில் ரஜினி ஷங்கர் இணைந்து பணியாற்றினர்.

மீண்டும் ரஜினியை வைத்து 4வது படமாக டிராஃபிக் ராமசாமி படத்தை இயக்க திட்டமிட்டு இருந்த ஷங்கரை எஸ்ஏசி இப்படி பிரித்துவிட்டாரே..

அண்ணா அடிச்சிட்டே இருப்பாரு; அக்கா பாசமா இருப்பாங்க… : கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2D என்டர்டேயின்மென்ட் சூர்யா தயாரிப்பில் , கார்த்தி நடிப்பில் , இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “ கடைக்குட்டி சிங்கம் “. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் சிவகுமார் , படத்தின் தயாரிப்பாளர் நடிகர் சூர்யா , நாயகன் கார்த்தி , 2டி எண்டர்டெயின்மென்ட் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர பாண்டியன் , இயக்குநர் பாண்டிராஜ் , நடிகர்கள் சத்யராஜ் , சூரி , சாயிஷா , ப்ரியா பவானி ஷங்கர் , பானு ப்ரியா , விஜி சந்திரசேகர் , பொன்வண்ணன் , ஸ்ரீமன் ,இளவரசு , சரவணன் , மாரிமுத்து , ஜான் விஜய் , சௌந்தர்ராஜன் , இசையமைப்பாளர் டி.இமான் , ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் , எடிட்டர் ரூபன் , சண்டை பயிற்சியாளர் திலிப் சுப்ராயன் , கலை இயக்குநர் வீரசமர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

விழாவில் கார்த்தி பேசியது :- கடைக்குட்டி சிங்கம் படத்தின் படப்பிடிப்பு அதிகாலை ஆறு மணிக்கு ஆரம்பித்தால் இரவு தாமதமாக தான் முடியும். இயக்குநர் பாண்டிராஜ் எல்லாவற்றையும் ப்ளான் செய்து தான் சரியாக செய்து முடித்தார். இயக்குநர் பாண்டிராஜ் இந்த படத்துக்காக 28 கதாபாத்திரங்களை உருவாக்கியுள்ளார். ஒவ்வொன்றும் தனித்துவமாக இருப்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. பட்டினத்தில் வேலை செய்யும் எல்லோரையும் கிராமத்துக்கு வந்து விவசாயம் செய்ய வைக்கும் ஒரு படமாக கடைக்குட்டி சிங்கம் இருக்கும். நான் முதன் முறையாக இசையமைப்பாளர் இமான் இசையில் நடிக்கிறேன். இப்படத்தில் நல்ல பாடல்கள் உள்ளது. நான் அண்ணன் சூர்யா தயாரிப்பில் நடிப்பேன் என்று நினைத்து கூட பார்த்தது இல்லை. இப்படத்தை அவர் தயாரித்துள்ளார். அவர் தயாரிப்பில் நடித்தது மகிழ்ச்சி. முதன் முறையாக நாங்கள் இணைந்து பணியாற்றியுள்ளோம். சின்ன வயதிலிருந்து எனக்கு அக்கா என்றால் மிகவும் பிடிக்கும். அக்கா தான் நாம் என்ன கேட்டாலும் கொடுப்பார். நாம் வேலை முடிந்து சோர்வாக வீட்டுக்கு வந்தால் நமக்கு காபி போட்டு கொடுப்பார். ஆனால் அண்ணனிடம் அதை எதிர்பார்க்க முடியாது அடிதான் கிடைக்கும் என்றார் கார்த்தி..

விழாவில் சூர்யா பேசியது :- கடைக்குட்டி சிங்கம் படத்தில் கிளிசரின் போடமால் அழுது பல நடிகர்கள் அர்ப்பணிப்போடு நடித்துள்ளனர். ஒருவருக்கு படத்தின் மீதும் அதீத ஈர்ப்பு இருந்தால் மட்டும் தான் இதை போல் சிறப்பாக நடிக்க முடியும். விரைவில் நாங்கள் இருவரும் இணைந்து நடிப்போம் எப்போதும் ஒரு விஷயத்துக்காக நாம் உண்மையாக உழைத்தால் அது கண்டிப்பாக நமக்கு பலனை தரும். அப்படி உண்மையாக உருவான இயக்குநர் பாண்டிராஜின் கதையால் இப்படம் இவ்வளவு நடிகர் பட்டாளத்தோடு சிறப்பாக அமைந்துள்ளது. சத்யராஜ் மாமா நாங்கள் குழந்தையாக இருக்கும் போது அவர் வாங்கிய முதல் சம்பளத்தில் எனக்கும் கார்த்திக்கும் சாப்பிட இனிப்பு வகைகளை வாங்கி தந்தார். இப்போது சத்யராஜ் மாமா நடிக்கும் கார்த்தியுடன் நடிக்கும் படத்தை நாங்கள் தயாரித்துளோம். இது எங்களுக்கு வாழ்கையில் கிடைத்த மிகப்பெரிய பரிசு.

விழாவில் நடிகர் சிவகுமார் பேசியது :- இந்த நாள் என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத ஓர் நாளாக இருக்கும். என்னென்றால் என் பிள்ளைகளின் மாமனான சத்யராஜை வைத்து எங்கள் 2டி நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. அதில் கார்த்தியுடன் அவர் நடித்துள்ளார். சத்யாராஜ் ஜமீன் பரம்பரையை சேர்ந்தவர். அப்படி இருந்தும் அவர் சென்னைக்கு வந்து ரத்தம் சிந்தி கடுமையாக உழைத்து முன்னேறியுள்ளார். ஜமீன் பரம்பரையிலிருந்து வந்து கடுமையாக உழைத்து முன்னேறிய முதல் நபர் சத்யராஜ் தான். சத்யராஜ் காலகட்டத்தில் வந்த நடிகர்களுள் அவர் மட்டும் தான் இன்னும் தொடர்ந்து படங்களில் நடித்துக்கொண்டுயிருக்கிறார். சூர்யாவுக்கும் , கார்த்திக்கும் சத்யராஜ் தன்னுடைய முதல் சம்பளத்தில் இனிப்பு வாங்கி தந்தார். அவரை வைத்து இன்று சூர்யா படம் தயாரிக்கிறார். அதில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார். நிஜமாக இன்று தான் வாழ்கையில் எனக்கு சந்தோஷமான நாள். இதை விட எனக்கு மகிழ்ச்சியான நாள் இருக்க முடியாது என்றார் நடிகர் சிவகுமார்.

கும்கி 2 படத்திற்காக தாய்லாந்தில் குட்டி யானையை பிடித்த பிரபுசாலமன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2012 ம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி பிரபு சாலமன் இயக்கத்தில், லிங்குசாமி தயாரிப்பில், விக்ரம் பிரபு – லஷ்மிமேனன் புதுமுகங்களாக அறிமுகமான “ கும்கி “ படம் வெளியாகி வசூல் சாதனை படைத்தது. தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

ஆறு ஆண்டுகளுக்கு பிறகு பிரபுசாலமன் இயக்கத்தில் உருவாகும் “ கும்கி 2 “ படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு நிறைவுற்றது, மூன்றாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. நிறைய படங்களில் முதல் பாகத்தின் கதை தொடர்ச்சியாகத்தான் இரண்டாம் பாகம் உருவாக்கப் பட்டிருக்கிறது. ஆனால் கும்கி படத்திற்கும், கும்கி 2 படத்திற்கும் கதையளவில் எந்த சம்மந்தமும் இல்லை. யானை சம்மந்தப் பட்ட கதை என்பதால் இதற்கும் கும்கி என்ற தலைப்பை தொடவேண்டி இருக்கிறது என்கிறார் பிரபுசாலமன்.

நாயகனாக மதியழகன் அறிமுகமாகிறார். நாயகி இன்னும் முடிவாக வில்லை. மற்றும் வில்லனாக ஹரிஷ் பெராடி, ஆர்.ஜே.பாலாஜி, சூசன், கோலங்கள் திருச்செல்வம், ஸ்ரீநாத், ஆகாஷ், மாஸ்டர் ரோகன், மாஸ்டர் ஜோஸ்வா, பேபி மானஸ்வி ஆகியோர் நடிக்கிறார்கள்.

டைட்டில் கதாப்பாத்திரமாக உன்னிகிருஷ்ணன் என்ற யானை நடிக்கிறது.

ஒளிப்பதிவு – சுகுமார்

இசை – நிவாஸ் K.பிரசன்னா

எடிட்டிங் – புவன்

கலை – தென்னரசு

ஸ்டன்ட் – ஸ்டன் சிவா

தயாரிப்பு மேற்பார்வை – பிரபாகரன்

தயாரிப்பு – பென் இந்தியா லிமிடெட் திரு ஜெயந்திலால் காடா.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – பிரபுசாலமன்.

படம் பற்றி இயக்குனர் பிரபுசாலமன் கூறியதாவது..

கும்கி 2 பிரமாண்டமான ஒரு படமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. ஒரு குட்டி யானைக்கும், ஒரு சிறுவனுக்கும் உருவான நட்பு, அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகிற வரை நடக்கும் வாழ்வியல் தான் கும்கி 2.

குட்டி யானைக்காக இந்தியா, ஸ்ரீலங்கா, பர்மா, தாய்லாந்து உட்பட ஏராளமான இடங்களில் அலைந்து திரிந்தோம், யானை கிடைத்தால் பர்மிஷன் கிடைக்கல, பர்மிஷன் கிடைத்த இடத்தில் இருந்த யானை ஒத்துழைக்க வில்லை. கடைசியாக தாய்லாந்தில் சரியாக அமைந்து இரண்டு கட்ட படப்பிடிப்பை முடித்து விட்டோம். ஒரு யதார்த்தமான படமாக இந்த கும்கி 2 இருக்கும்.

வழக்கமாக என் படத்தின் பாடல்களுக்கு ரசிகர்களிடையே ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். இந்த படத்திலும் நிவாஸ் K. பிரசன்னா இசையில் பாடல்கள் சிறப்பாக இருக்கும் என்றார் பிரபுசாலமன்.

தயாரிப்பு – பென் இந்தியா லிமிடெட் திரு ஜெயந்திலால் காடா.

இந்த நிறுவனம் தமிழில் மாபெரும் வெற்றி பெற்ற சிங்கம் 3 மெர்க்குரி மற்றும் தயாரிப்பில் இருக்கும் சண்டக்கோழி 2 படதயாரிப்பிலும் பங்கெடுத்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து மிக பிரமாண்டமாக கும்கி 2 படத்தை இந்த நிறுவனம் தயாரிக்கிறது.

காரைக்கால் டூ ஹிமாச்சல்; ஜிப்ஸி பயணத்தை தொடங்கிய ஜீவா-ராஜுமுருகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராஜு முருகனின் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் ‘ஜிப்ஸி’ படத்தின் படபிடிப்பு இன்று காரைக்காலில் தொடங்கியது.

ஒலிம்பியா மூவீஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் S.அம்பேத்குமார் தயாரிக்கும் படம்‘ஜிப்ஸி ’. இதில் ஜீவா நாயகனாக நடிக்கிறார். இதற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ராஜு முருகன்.

குக்கூ, ஜோக்கர் ஆகிய வெற்றிப்படங்களைத் தொடர்ந்து இவர் இயக்கும் ‘ஜிப்ஸி ’படத்தின் படபிடிப்பு இன்று காரைக்காலில் தொடங்கியது. இதில் ஜீவா, இமாசல பிரதேச அழகி நடாசா சிங் நாயகன் நாயகியாக நடிக்கிறார்கள். இதன் முதற்கட்ட படபிடிப்பு காரைக்காலில் இன்று தொடங்கியது. இதில் படக்குழுவினருடன் பாடலாசிரியர் யுகபாரதி கலந்து கொண்டார்.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்திற்கு யுகபாரதி பாடல்களை எழுதுகிறார். எஸ் கே செல்வகுமார் ஒளிப்பதிவை கவனிக்க, ‘அருவி’ படத்தின் எடிட்டரான ரேமண்ட் டெரிக் கிராஸ்டா இதன் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். ‘நாச்சியார்’ படத்தில் கலை இயக்குநராக பணியாற்றிய பாலசந்திரா இப்படத்தின் கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.

கீ, கொரில்லா ஆகிய படங்களைத் தொடர்ந்து ஜீவா நடிப்பில் உருவாகும் ‘ஜிப்ஸி ’ படத்திற்கு படபிடிப்பு தொடங்கிய தருணத்திலேயே பெரிய அளவில் எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது.
இப்படத்திற்கான இரண்டாம் கட்ட படபிடிப்பு இமாசல பிரதேசத்தில் நடைபெறவிருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் எஸ். அம்பேத்குமார் தெரிவித்திருக்கிறார்.

60 மணி நேரம் அசராமல் உழைத்த பீச்சாங்கை கார்த்திக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பீச்சாங்கை வெற்றியை தொடர்ந்து நடிகர் பீச்சாங்கை கார்த்திக் அரை டஜன் படங்களை கைவசம் வைத்துள்ளார்.

அவர் நடிக்கும் படத்திற்கு.

ஷூட்டிங் ஸ்பாட்க்கு சரியான நேரத்திற்கு வராத சில நடிகர்கள் மத்தியில் நடிகர் பீச்சாங்கை கார்த்திக் படப்பிடிப்பு தளத்திலேயே மாரி மாரி நடித்துக்கொண்டிருக்கிறாராம். புதிய இயக்குனர் மிலன் இயக்கும் கமர்ச்சியல் படத்தில் அதிகாலை 6 மணிக்கு படப்பிடிப்பு ஆரம்பித்து இரவு 3 மணி வரைக்கும் படப்பிடிப்பு நடைபெற்றது , அதைத்தொடர்ந்து திருவள்ளூர் சென்று விளம்பர படம் ஓன்றில் இன்று அதிகாலை 6:30 மணிக்கு படப்பிடிப்பு தொடங்கி இரவு 7 மணிக்கு நிறைவடைகிறது. அங்கிருந்து புறப்பட்டு நேசன் மற்றும் சிம்புதேவன் போன்ற பெரிய இயக்குனருடன் உதவி இயக்குனராக பனி புரிந்த டீ.ஆர்.பாலா டுவீலர் பந்தயத்தை மையமாக வைத்து புதிய படம் ஒன்றை இயக்குகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு மறுநாள் அதிகாலை 6 மணி அளவில் தொடங்கி இரவு 8 மணிக்கு நிறைவடைகிறது. மறுபடியும் இயக்குனர் மிலன் படப்பிடிப்பு இரவு 9 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 2 மணிக்கு நிறைவடைகிறது தொடர்ந்து 60 மணி நேரம் இடைவிடாத பட பிடிப்பில் நடித்துள்ளார்..

தொடர்ந்து 60 மணி நேரம் படப்பிடிப்பு நடைபெறுகிறதே உங்களுக்கு சோர்வாக இல்லையா என்று கார்த்தியிடம் கேட்ட போது எனக்கு வேலை பார்ப்பது ரொம்ப பிடிக்கும் எனக்கு இதுவரை சோர்வாகவில்லை என்று கூறினார்

பீச்சாங்கை கார்த்திக்கை வைத்து படம் எடுத்தால் ஹீரோ ஷூட்டிங் ஸ்போட்க்கு லேட்டா வர பிரச்சனையே இருக்காது படப்பிடிப்பும் விரைவில் முடியும் தயாரிப்பாளருக்கும் எந்த வித நஷ்டமும் ஆகாது. சினிமாவில் இப்படிப்பட்ட ஹீரோ இருப்பது ஆச்சரியம்தான்.

வெல்வெட் நகரம் பட பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நயன்தாரா, த்ரிஷா, அனுஷ்கா ஆகியோரைப் போல் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் வரலட்சுமி.

தற்போது விஜய்யுடன் தளபதி 62, தனுஷின் ‘மாரி-2’, ‘கன்னிராசி’, ‘பாம்பன்’, ‘ நீயா-2’, ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’, ‘மிஸ்டர் சந்திரமௌலி’, ‘ சண்டக்கோழி-2’ ‘வெல்வெட் நகரம்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இதில் வெல்வெட் நகரம் என்ற படத்தை அறிமுக இயக்குனர் மனோஜ் இயக்கி வருகிறார்.

சில வருடங்களுக்கு முன் கொடைக்கானலில் நடந்த ஒரு நிஜ சம்பத்தை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கி வருகிறார்.

இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி இன்று வெளியிட்டுள்ளார்.

இந்த போஸ்டர் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளதால் பலரது கவனத்தையும் ஈர்க்கும் என எதிர்பார்க்கலாம்.

More Articles
Follows