*விஸ்வாசம்* சூட்டிங் ஓவர்.; க்ளீனிங் சேவிங்கில் அஜித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களை தொடர்ந்து நடிகர் அஜித் – இயக்குனர் சிவா கூட்டணி 4வது முறையாக இணைந்துள்ள படம் விஸ்வாசம்.

இதில் அஜித்துடன் நயன்தாரா, தம்பி ராமைய்யா, ரோபோ சங்கர், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

முதன்முறையாக அஜித் படத்திற்கு இமான் இசையமைக்கிறார். சத்ய ஜோதி பிலிம்ஸ் சார்பில் தியாகராஜன் தயாரிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத், சென்னை போன்ற இடங்களில் நடந்த நிலையில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்தது.

தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக சத்யஜோதி பிலிம்ஸ் டுவிட்டரில் அறிவித்துள்ளது.

இதுநாள் வரை இப்படத்திற்காக நரைத்த தாடி, மீசையுடன் காணப்பட்ட அஜித் தற்போது க்ளீன் சேவிங் செய்துள்ளார்.

படம் 2019 பொங்கலுக்கு திரைக்கு வருகிறது.

Viswasam shoot wrapped up Ajith in clean shave new look

தென்னிந்தியா முழுவதும் விஜய்யின் *சர்கார்* ஆட்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படம் வெளியீட்டிற்கு முன்பே கதை திருட்டில் சிக்கியது.

இதனால் டைரக்டர் முருகதாஸ் கோர்ட் வரை சென்றார்.

அதன்பின்னர் தற்போது சர்காரில் உள்ள காட்சிகளால் அதிகமுவினர் எதிர்ப்பு தெரிவிக்க சில தியேட்டர்களில் காட்சிகள் நிறுத்தப்பட்டன

தற்போது எல்லா பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு தமிழகத்தில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திராவிலும் வெளியானது.

தெலுங்கில் சுமார் 7 கோடி ரூபாய்க்கு இதன் டப்பிங் உரிமை விற்கப்பட்டது.

தற்போது ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் அந்த வசூலை ஈட்டி விட்டதாக கூறப்படுகிறது.

இப்படத்திற்கு போட்டியாக வெளியான தெலுங்கு படமான ‘அதுகோ படமும் ஹிந்திப் படமான ‘தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான்’ ஆகிய படங்களும் எதிர்பார்த்த அளவில் இல்லாமல் போய்விட்டது.

உலகம் முழுவதும் 4 நாட்களில் 150 கோடி வசூலை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

Vijays Sarkar making good collection in South India

தனுஷ் படத்தில் வரலட்சுமியின் *சர்கார்* கேரக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாரி படத்தை தொடர்ந்து மாரி 2 படத்தையும் இயக்கியுள்ளார் பாலாஜி மோகன்.

தனுஷ் தயாரித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார்.

மேலும் வரலட்சுமி, டொவினோ தாமஸ், கிருஷ்ணா, ரோபோ சங்கர் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தை டிசம்பர் 21ஆம் தேதி வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

அதன்படி படத்தில் உள்ள ஒவ்வொரு கேரக்டர் போஸ்டரையும் வெளியிட்டு வருகின்றனர்.

ஆட்டோ ஓட்டும் அராத்து ஆனந்தியாக நடித்துள்ளார் சாய்பல்லவி.

தற்போது வரலட்சுமி நடித்துள்ள விஜயா கேரக்டர் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

இதில் சட்டம் மற்றும் நீதித்துறையின் இணை செயலாளராக அவர் நடித்துள்ளதாக படக்குழுவினர் அந்த போஸ்டரிலேயே தெரிவித்துள்ளனர்.

Maari 2 Varalakshmi character connected with Sarkar movie

தமிழ் ராக்கர்ஸில் 2.0 ரிலீஸ்.?; நாங்க அப்படி சொல்லவே இல்லையே!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகும் அன்றே திருட்டுத்தனமாக தமிழ் ராக்கர்ஸ் என்ற வெப் சைட்டில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

இதனால் தயாரிப்பாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தயாரிப்பாளர் சங்கத் தலைவராக விஷால் பொறுப்பு ஏற்ற பின்னரும் இவர்களை பிடிக்க முடியவில்லை.

இந்த தளத்தை இயக்குபவர் யார்? எங்கிருந்து செயல்படுகிறார்கள்..? என்பதை அறியாமல் திரையுலகமே தவித்து வருகிறது.

சமீபத்தில், விஜய் நடித்து தியேட்டர்களில் வெளியான ‘சர்கார்’ படத்தை அன்றே வெளியிட்டனர்.

அதுபோல் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவுள்ள ‘2.0’ படத்தையும் அன்றே இணையத்தில் வெளியிடுவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் பெயரில் சவால் விடப்பட்டது.

2.0 திரைப்படம் கிட்டதட்ட ரூ. 550 கோடியில் தயாரிக்கப்பட்ட படம் என்பதால்
இது, தமிழ் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தங்கள் பெயரை பயன்படுத்தி சமூகவலைதளங்களில் பரவும் செய்திகளை யாரும் நம்ப வேண்டாம்.

‘‘சமூக வலைதளங்களில் நாங்கள் இல்லை. எங்களின் பெயரை பயன்படுத்தி யாராவது பதிவிட்டால், அது போலியே.” என தெரிவித்துள்ளனர்.

Tamil Rockers refuses that They didnt tweet about 2pointO release

*மெரினா புரட்சி* பட புகழ் எம்.எஸ். ராஜ் இயக்கும் *உறங்காப் புலி*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்த போது தமிழகமே ஏன் உலகமே எதிர்பாராத வகையில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது.

சென்னை மெரினா கடற்கரையில் எந்த ஒரு தலைவனும் இல்லாமல் இளைஞர்கள் தானாகவே முன்வந்து ஜல்லிக்கட்டு புரட்சியை ஒழுக்கமான முறையில் 2 வாரங்கள் நடத்தினர்.

தற்போது இந்த மெரினா புரட்சி பெயரில் ஒரு படம் உருவாகியுள்ளது.

இந்த ‘மெரினா புரட்சி’ திரைப்படம் தடை செய்யப்பட்டிருக்கும் சூழ்நிலையில், இதன் இயக்குநர் எம்.எஸ். ராஜ் இயக்கும் ‘உறங்காப் புலி’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

இப்படத்தை நாச்சியாள் பிலிம்ஸ் மற்றும் சி ஜே பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கிறார்கள்.

Marina Puratchi directors next movie titled Uranga Puli

*செய்* படத்திற்கு தியேட்டர்கள் கிடைக்காமல் செய்த *திமிரு புடிச்சவன்*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வழிக்காட்டலின் படி நவம்பர் 16 ஆம் தேதியன்று வெளியாக அனுமதியளிக்கப்பட்ட ‘செய் ’படத்தை எந்தவித இடையூறும் இல்லாமல் வெளியிட உதவவேண்டும் என்று அப்படக்குழுவினர் திரையுலகினருக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்.

ட்ரிப்பி டர்ட்டில் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் மன்னு தயாரித்திருக்கும் திரைப்படம் செய். இந்த படத்தில் நகுல், அன்ஷால் முன்ஜால், பிரகாஷ்ராஜ், நாசர், அஞ்சலி, ப்ளாரன் பெரைரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்திற்கு கதை திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் ராஜ்பாபு.

‘செய்’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.

இதன் போது, படத்தின் நாயகன் நக்குல், நாயகி அன்ஷால் முன்ஜால், படத்தின் இயக்குநர் ராஜ்பாபு, தயாரிப்பாளர் மன்னு, நடிகர் ப்ளாரன் பெரைரா , நடிகை அஞ்சலி ஆகியோர் கலந்து கொண்டனர்.

படத்தின் நாயகன் நக்குல் பேசுகையில், ‘இந்த படத்தை நவம்பர் 16 ஆம் தேதியன்று வெளியிடலாம் என்று தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் எங்களுக்கு அனுமதி கடிதம் கொடுத்தது. நாங்கள் இந்த படத்தை கேரளாவிலும் வெளியிடுவதால் அங்கு இதற்கான விளம்பரப்படுத்தும் நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தோம்.

அதை முடித்துவிட்டு சென்னைக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தோம். அப்போது, எங்களுக்கு ஒரு குறுஞ்செய்தி கிடைத்தது. அதில் ‘செய் ’திரைப்படம் திட்டமிட்டபடி நவம்பர் 16 ஆம் தேதி வெளியாகும்.

ஆனால் 150 ஸ்கீரின்களுக்கு பதிலாக 60 அல்லது 70 ஸ்கிரீன்களில் தான் வெளியாகும் என்றிருந்தது. இதையறிந்ததும் ஒட்டுமொத்த படக்குழுவினரும் அதிர்ச்சியடைந்தோம்.

நாங்கள் படத்தை மார்ச் மாதத்தில் வெளியிட திட்டமிட்டிருந்தோம். அப்போது திரைத்துறையில் வேலை நிறுத்தம் நடைபெற்றதால் நாங்கள் சரியான தேதிக்காக காத்திருந்தோம்.

அதன் பிறகு தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் ஒழுங்குமுறை குழுவின் அனுமதிக்காக காத்திருந்தோம். நாங்கள் சங்கத்தின் விதிமுறைகளை பின்பற்றுவது என்றும் தீர்மானித்தோம்.

அதன் பிறகு நாங்கள் தயாரிப்பாளர் சங்கத்துடன் பேசி, நவம்பர் 16 ஆம் தேதி ‘செய்’ படம் வெளியாகும் என்றும், தமிழகத்தில் 150 ஸ்கிரீனில் வெளியாகும் என்றும் உறுதியளித்தார்கள்.

நாங்கள் அதனை ஏற்றுக்கொண்டு விளம்பரப்படுத்துவதில் கவனம் செலுத்தி வந்தோம். ஏனெனில் படத்தின் தயாரிப்பாளர் புதிது. இயக்குநரும் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார்.

அதற்காக யாருடைய மனதும் புண்படுத்தவேண்டாம் என்று காத்திருந்து, நவம்பர் 16 ஆம் தேதியை ஒப்புக்கொண்டோம். ஆனால் இன்று எதிர்பாராத வகையில் நவம்பர் 16 ஆம் தேதியன்று படம் வெளியாகும்.

ஆனால் எங்களிடம் ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி 150 சென்டர்களில் படம் வெளியாகாது என்றும், அந்த தேதியில் விஜய் ஆண்டனி நடித்த ‘திமிரு புடிச்சவன் ‘என்ற படமும் வெளியாகும் என்றும் சொன்னார்கள்.

இதனால் நாங்கள் அதிர்ச்சியடைந்திருக்கிறோம். திட்டமிட்டப்படி, செய் 150 ஸ்கிரீனில் வெளியாகுமா? ஆகாதா? என்ற மன உளைச்சலுக்கும் ஆளாகியிருக்கிறோம்.

எங்களுடைய படத்திற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து வெளியீட்டிற்கான அனுமதி கடிதம் அளித்திருக்கிறார்கள்.

ஆனால் அந்த படத்திற்கு இதுவரை வழங்கவில்லை என்று கேள்விப்படுகிறோம்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் அவர்கள் எங்களுடைய படத்திற்கு ஆதரவாக பேசிக் கொண்டிருக்கிறார்.

எங்களுடைய படமான ‘செய் ’படத்தை திட்டமிட்டபடி வெளியிட உதவுங்கள் என்று திரையுலகில் உள்ள அனைவரிடம் அன்பான வேண்டுகோளை முன்வைக்கிறோம்.’ என்றார்.

படத்தின் நாயகி அன்ஷால் முன்ஜால் பேசுகையில்,‘இந்த படம் திரில்லர் ஜேனர் என்றிருந்தாலும் அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் உருவாகியிருக்கிறது. இந்த படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாவதை பெருமிதமாக கருதுகிறேன்.’ என்றார்.

தயாரிப்பாளர் மன்னு பேசுகையில்,‘ நான் தமிழ் திரையுலகிற்கு புதிய தயாரிப்பாளர் என்பதால், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் எனக்கு ஆதரவாக இருக்கிறது.

அவர்களின் இந்த ஒத்துழைப்பிற்காக நாங்கள் எங்களுடைய படக்குழுவினரின் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். ஒட்டுமொத்த திரையுலகினரின் ஆதரவுடன் திட்டமிட்டப்படி ‘செய் ’படம் நவம்பர் 16 ஆம் தேதியன்று வெளியாகும் என்ற உறுதியான நம்பிக்கையுடன் இருக்கிறோம்.’ என்றார்.

Sei movie release introuble because of Thimiru Pudichavan clash

More Articles
Follows