கருணாகரனுக்கு வித்தியாச பிறந்தநாள் பரிசளித்த விஷ்ணு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காமெடி நடிகர் கருணாகரன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

இந்நிலையில் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார் நடிகர் விஷ்ணு விஷால்.

அத்துடன் நான் நடிக்கவுள்ள இரண்டு படங்களில் நீங்கள் என்னுடன் நடிப்பீர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

இவர்கள் இருவரும் மாபெரும் வெற்றிப் பெற்ற இன்று நேற்று நாளை படத்தில் இணைந்து நடித்திருந்தனர் குறிப்பிடத்தக்கது.

Vishnu Vishals Birthday gift to Actor Karunakaran

vishnu vishaal ‏@iamvishnuvishal 5m5 minutes ago
Happy bday to my dear buddy @actorkaruna ..excited announce that we wil b doin nxt 2 movies together  fun times ahead

அமிதாப்பச்சன், சிரஞ்சீவி வரிசையில் இணைந்த சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராணா, டாப்ஸி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் தி காஸி அட்டாக்.

அடுத்த மாதம் பிப்ரவரியில் வெளியாகவுள்ள இப்படத்தில் வாய்ஸ் ஓவர் (பின்னணி குரல்) ஒன்று தேவைப்பட்டுள்ளது.

இதற்கு பிரபல நட்சத்திரம் ஒருவர் வாய்ஸ் கொடுத்தால் கூடுதல் பலம் இருக்கும் என இயக்குனர் தன் ஆசையை தெரிவித்தாராம்.

அதன்படி 3 மொழி பிரபலங்களை நாட அவர்கள் சம்மதித்துவிட்டார்களாம்.

இந்தியில் அமிதாப் பேச, தெலுங்கில் சிரஞ்சீவி பேச, தமிழில் சூர்யா பேசவிருக்கிறாராம்.

Suriya lends his voice over for The Ghazi Attack movie

சிங்கம் 3 படத்தை பார்த்தவர்கள் ரியாக்ஷன் என்ன?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹரி இயக்கி, சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சி3 படம் பிப்ரவரி 9ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இப்படத்திற்கு நிறைய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளதால் அதிக தியேட்டர்கள் ஒதுக்கப்பட உள்ளது.

இந்நிலையில் இதன் சிறப்பு காட்சியை முக்கியமான பிரபலங்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் பார்த்துள்ளனர்.

படத்தை பார்த்த அனைவரும் சந்தோஷப்பட்டார்களாம்.

மேலும் சூர்யாவுக்கும் சிங்கத்திற்கும் எப்பவும் ராசி உண்டு என்று அவர்கள் சொன்னதும் குறிப்பிடத்தக்கது.

Si3 movie special show audience report

விஜய்யை தொடர்ந்து அஜித்துடன் இணையும் வடிவேலு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடித்த ராஜா படத்தில் வடிவேலு இணைந்து நடித்திருந்தார்.

ஆனால் சில காரணங்களால் அதன்பின்னர் இருவரும் தொடர்ந்து நடிக்கவில்லை.

இதனையடுத்து வடிவேலு ஹீரோவாகி விட்டதால், இவர்கள் இணைய வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது.

தற்போது மீண்டும் காமெடி வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு வருகிறார்.

விஷாலுடன் கத்தி சண்டை படத்தில் நடித்தார்.

அட்லி இயக்கும் விஜய் 61 படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் சங்கத்தில் மௌன போராட்டம் நடைபெற்றது.

இதில் அஜித்தும் வடிவேலுவும் சந்தித்துள்ளனர்.

அப்போது விரைவில் இணைந்து நடிப்போம் என்று வடிவேலுவிடம் உறுதியளித்தாராம் அஜித்.

எனவே அஜித் 58 படத்தில் வடிவேலு நடிக்கக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Vadivelu may join with ajith in Thala 58

ரஜினி-ஷங்கரின் ‘2.0’ படத்தின் லேட்டஸ்ட் தகவல்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய்குமார், எமி ஜாக்சன் நடிக்கும் 2.0 படத்தை மிகப்பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது லைக்கா நிறுவனம்.

சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி இணையங்களில் ட்ரெண்ட் ஆனது.

இப்படத்தின் மீதமுள்ள காட்சிகளை ஜனவரி 30 தேதி முதல் படமாக்க இருக்கிறாராம் ஷங்கர்.

மார்ச் மாதம் முடிவடைவதற்குள் இதன் ஒட்டுமொத்த சூட்டிங்கையும் முடிக்க திட்டமிட்டு இருக்கிறது படக்குழு.

இதனையடுத்து கிட்டதட்ட 6 மாதங்களுக்கு போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற உள்ளது.

2017 அக்டோபர் 19ஆம் தேதி தீபாவளி வெளியீடாக படம் திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

2point0 movie post production updates

கீர்த்தி சுரேஷால் ஸ்ரீ திவ்யாவுக்கு வந்த நிலைமை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களுடன் டூயட் பாடியுள்ளார் கீர்த்தி சுரேஷ்.

இதனையடுத்து விரைவில் சூர்யாவுடன் டூயட் பாடவிருக்கிறார்.

மேலும் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

கிளாமரே காட்டாமல், தன் அழகான நடிப்பால் ரசிகர்களையும் கவர்ந்து வருகிறார்.

இவரது வளர்ச்சி ஸ்ரீதிவ்யாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

எனவே கிளாமர் ரூட்டுக்கு மாறலாமா என யோசித்து வருகிறாராம் ஸ்ரீ திவ்யா.

More Articles
Follows