ஆன்லைன் வர்த்தக மோசடிகளுக்கு ஆப்பு வைக்கும் விஷால்; விரைவில் ‘சக்ரா’ டீஸர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஷால் நடித்து வரும் ‘சக்ரா’ படத்தின் டீஸர் தயாராகிவருகிரது. விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிந்துவிட்டது.

முழுதாக முடிக்கும் நேரத்தில் கொரோனா கால பொதுமுடக்கம் வந்து விட்டது. எனவே ஒரு வாரம் படப்பிடிப்பு நடைபெறாமல் தடைபட்டுவிட்டது. அனுமதி கிடைத்ததும் படபிடிப்பு நடைபெறும்.

இப்போது படத்தின் டீஸர்
விரைவில் வெளியாக இருக்கிறது.

விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரிக்கும் படத்தை இயக்குபவர் எம்.எஸ். ஆனந்தன். இவர், இயக்குநர் எழிலிடம் உதவியாளராகப் பணிபுரிந்தவர்.

‘சக்ரா ‘ – ஆன்லைன் வர்த்தக மோசடிகள் பற்றிய பின்னணியுள்ள கதையாக உருவாகி வருகிறது.

இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ரெஜினா கசண்ட்ரே நடிக்கிறார்.

இவர்களுடன் ரோபோ ஷங்கர், கே.ஆர்.விஜயா, ஸ்ருஷ்டி டாங்கே, மனோபாலா, விஜய்பாபு மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, மதன் கார்க்கி பாடல்களை எழுதியிருக்கிறார். ஒளிப்பதிவு பாலசுப்பிரமணியெம், படத்தொகுப்பு சமீர் முகமது, கலை எஸ்.கண்ணன், சண்டைக்காட்சி அனல் அரசு, PRO ஜான்சன்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் கோயம்புத்தூர் பகுதிகளில் நடத்தப்பட்டது.
இப்படம் விஷால் ரசிகர்களுக்கு மட்டுமல்லாது, அனைவரின் கண்களுக்கும் விருந்தாக அமையும்.

படத்தின் டீஸர் விரைவில் வெளிவரும்.

மின்சார வாரியத்தின் ‘ஷாக்’ ஸ்டேட்மெண்ட்..; பின் வாங்கினார் பிரசன்னா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஓரிரு தினங்களுக்கு முன்பு கொரோனா ஊரடங்கு காலத்திலும் தமிழ்நாடு மின்சார வாரியம் கட்டண கொள்ளையடிப்பதாக நடிகர் பிரசன்னா தெரிவித்திருந்தார்.

இந்த செய்தியை நம் தளத்தில் பார்த்தோம்.

பிரசன்னாவின் இந்த ட்வீட்டர் பதிவு பெரும் விவாதத்தை உண்டாக்கியது.

இது தொடர்பாக மின்சார வாரியம் இன்று விளக்கமளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அதில் மார்ச் மாதத்துக்கான கட்டணத்தை பிரசன்னா கட்டவில்லை என்றும், மின் கட்டணம் ஏன் அதிகமானது என்பதற்கான காரணத்தையும் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், மின்சார வாரியத்தைக் குறை சொல்வதோ, குற்றம்‌ சாட்டுவதோ என்‌ நோக்கமல்ல என்று கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,

உண்மைதான்‌! ரீடிங்‌ எடுப்பதிலிருந்து 10 நாட்களுக்குள்‌ பொதுவாக கட்டணம்‌ செலுத்தும்‌ பழக்கமுள்ள நான்‌, மார்ச்‌ மாதம்‌ ரீடிங்‌ எடுக்காததால்‌ கட்டணம்‌ செலுத்த தவறியது உண்மைதான்‌. அதே அளவு இதற்குமுன்‌ காலதாமதமின்றி தவறாமல்‌ கட்டணம்‌ செலுத்தி வருகிறேன்‌ என்பதும்‌ உண்மை. வாரியம்‌ சொல்வது போல்‌ நான்கு மாத கணக்கீட்டாலும்‌, மார்ச்‌ மாத கட்டணம்‌ சேர்த்தும்‌ எனக்கு தனிப்பட்ட கட்டணம்‌ கூடுதலாக வந்திருக்கலாம்‌. என்‌ தனிப்பட்ட பிரச்சினையாக இதை நான்‌ எழுப்பவில்லை. அதிக தொகை கட்டணமாக வந்திருப்பதாக எவ்வளவு பேர்‌ நினைக்கிறார்களென்று அறிந்துகொள்ளவே என்‌ ட்வீட்‌.

மின்வாரியத்தைக் குறை சொல்வதோ, குற்றம்‌ சாட்டுவதோ என்‌ நோக்கமல்ல. பொதுவாக எல்லோருக்கும்‌ வந்திருப்பதாக சொல்லப்படும்‌ அதிக கட்டணம்‌ குறித்த கவன ஈர்ப்பும்‌ , அதன்மூலம்‌ வாரியமோ அரசோ இந்த இக்கட்டான சூழலில்‌ ஏதாவது முறையில்‌ இப் பிரச்சினையில்‌ மக்களுக்கு ஒரு தளர்வோ கட்டணம்‌ செலுத்த தவணை அல்லது கால அவகாசமோ தருமாயின்‌ மிக்க உதவியாக இருக்கும்‌ என்பதே என்‌ வேண்டுகோள்‌.

நேற்றைய தொலைக்காட்சி உரையாடலிலும்‌ அதையே நான்‌ குறிப்பிட்டிருக்கிறேன்‌. ஊரடங்கு காலங்களில்‌ மருத்துவ, காவல்‌, சுகாதார துறைகள்‌ போலவே மின்வாரிய ஊழியர்களும்‌, அதிகாரிகளும்‌ அயராது பணியாற்றியிருக்கிறார்கள்‌ என்பதை நன்றியோடு பாராட்டவும்‌ நான்‌ மறக்கவில்லை.

மற்றபடி வாரியத்தையோ அரசையோ குறைகூறுவதற்கான உள்நோக்கமில்லை. உள்நோக்கமில்லாத போதும்‌ என்‌ வார்த்தை மின்வாரிய ஊழியர்கள்‌, அதிகாரிகள்‌ மனநோகச்‌ செய்திருப்பின்‌ அதற்காக வருந்துகிறேன்‌. மக்கள்‌ மீது விழுந்திருக்கும்‌ இந்த எதிர்பாரா சுமையை வாரியமும்‌ அரசும்‌ இறக்கி வைக்குமென எதிர்பார்க்கிறேன்‌.

பிகு: என்‌ வீட்டிற்கு நிர்ணயிக்கப்பட்ட முழு தொகையும்‌ எந்த நிலுவையுமின்றி நான்‌ செலுத்திவிட்டேன்‌”.

இவ்வாறு அந்த பதிவில் நடிகர் பிரசன்னா குறிப்பிட்டுள்ளார்

நிம்மதியாக மூச்சு விடும் போது ‘மூக்குத்தி அம்மன்’ தரிசனம் – RJ பாலாஜி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எல்கேஜி படத்தை அடுத்து மீண்டும் அடுத்த படத்திலும் ஹீரோவாகியுள்ளார் ஆர். ஜே. பாலாஜி. இந்த படத்தை இவரே இணைந்து இயக்கியும் வருகிறார்.

இயக்குனர் என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கி உள்ளார்.

நயன்தாரா கதையின் நாயகியாக நடித்து வருகிறார்.

காமெடி படமாக உருவாகி வரும் இப்படத்திற்காக நயன்தாரா, 48 நாட்கள் அம்மனுக்கு விரதம் இருந்து நடித்திருக்கிறாராம்.

இவர்களுடன் ஊர்வசி, மவுலி, ஸ்மிருதி வெங்கட் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே.கணேஷ் தயாரித்துள்ளார்.

கடந்த மாதம் மே 1-ந் தேதி படத்தை வெளியிடயிட இருந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக படம் ரிலீஸ் தள்ளிபோனது.

இந்நிலையில், ‘மூக்குத்தி அம்மன்’ பட ரிலீஸ் குறித்து ஆர்.ஜே.பாலாஜி சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அதில்… கொரோனா அச்சுறுத்தல் தணிந்து மக்கள் அனைவரும் பயமின்றி எப்போது குடும்பத்தோடு திரையரங்குக்கு வருகிறார்களோ அப்போது தான் மூக்குத்தி அம்மன் ரிலீசாகும்.

இதை நானும் தயாரிப்பாளரும் பேசி முடிவு செய்துள்ளோம்” என தெரிவித்துள்ளார்.

விக்ரமுடன் இணைத்து துருவை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி நடித்த பேட்ட படத்தை அடுத்து தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படத்தை இயக்கியுள்ளார் கார்த்திக் சுப்பராஜ்.

இந்த படம் கொரோனா லாக் டவுனுக்கு பிறகு வெளியாகவுள்ளது.

இந்த படத்தை அடுத்து விக்ரம் நடிக்கவுள்ள படத்தை இயக்கவிருக்கிறார் கார்த்திக் சுப்பராஜ்.

இதில் விக்ரம் மகன் துருவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

தன் முதல் படமாக ஆதித்ய வர்மா படத்திலேயே தன் சிறந்த நடிப்பை கொடுத்தவர் துருவ்.

தற்போது தந்தையுடன் இணைவதால் நிச்சயம் தந்தையுடன் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கலாம்.

கொரோனா லாக்டவுனுக்கு இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம்.

ஜெயலலிதாவின் பயோபிக் ‘தலைவி’ OTT-யில் ரிலீஸ் ஆகிறதா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா பொது முடக்கத்தால் இந்தியா முழுவதும் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன.

இதனால் பல தயாரிப்பாளர்கள் ஆன்லைன் ஓடிடியில் நேரடியாக தங்கள் படத்தை ரிலீஸ் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை படமான தலைவி என்ற படமும் நேரடியாக OTTயில் ரிலீஸ் ஆகவுள்ளதாக தகவல் பரவியது.

தமிழ், ஹிந்தி ஆகிய இரண்டையும் சேர்த்து கிட்டதட்ட ரூ. 55 கோடிக்கு விற்பனையகியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தை ஏ.எல்.விஜய் இயக்கிவருகிறார். கொரோனா பிரச்சினை முடிந்தபின் இன்னும் சில காட்சிகளை எடுக்கவிருக்கிறாராம்.

ஜெயலலிதாவாக வேடத்தில் கங்கனா ரணாவத் மற்றும் எம்ஜிஆர் வேடத்தில் அரவிந்த் சாமி நடித்துள்ளனர்.

இந்த நிலையில் தலைவி படத்தில் ஜெயலலிதாவாக நடித்துள்ள கங்கனா ஓடிடி செய்தியை மறுத்துள்ளார்.

தலைவி படம் OTT தளங்களுக்கு விற்கப்பட்டுள்ளது உண்மைதான். ஆனால் தலைவி தியேட்டர்களில் வெளியாகாமல் நேரடியாக OTTயில் ரிலீஸ் ஆகாது.

பிரம்மாண்டமான படங்கள் தியேட்டர்களுக்காகத்தான் எடுக்கப்படுகிறது. OTT ரிலீஸை விட தியேட்டர் ரிலீஸுக்கு தகுதியான படம் தலைவி என அவர் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா போல தோற்றமளிக்க prosthetic மேக்கப் போடப்படுகிறது. இதற்காக அமெரிக்கா சென்று prosthetic லுக் டெஸ்ட்டையும் எடுத்தாரம் கங்கனா.

ஜேசன் காலின்ஸ் என்ற ஹாலிவுட் புகழ் கலைஞர் தான் கங்கனாவின் தோற்றத்திற்காக இந்த படத்தில் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைவி படத்திற்காக 12 கிலோ எடையை அதிகரித்துள்ளார் கங்கனா.

மேலும் தமிழில் பேச பயிற்சி, பாரதநாட்டியம் ஆகியவையும் கற்றுள்ளார்.

தட்டுல தாளம் போட்டால் சோறு கிடைக்காது; நாமே தீர்வின் முதல் தொண்டனாக கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவையே உலுக்கி வருகிறது.

இதன் பாதிப்பில் தமிழகம் 2ஆம் இடத்தில் உள்ளது. சென்னையை மிக மோசமான விளைவுகளை சந்தித்து வருகிறது.

கொரோனா தாக்குதலில் சென்னையை கட்டுப்படுத்துவது மிகவும் சவாலாக உள்ளதாக தமிழக முதல்வரே அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகரும், மக்கள் நீதி மையம் தலைவருமான கமல்ஹாசன், நாமே தீர்வு என்ற தன்னார்வலர்கள் திட்டத்தைத் தொடங்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோ பதிவில்…

தட்டுல தாளம் போட்டால் சோறு கிடைக்காது என்று சொல்வார்கள். கிட்டத்தட்ட அது உண்மையாகிவிட்டது. நான் தட்டுனது உங்களின் கவன ஈர்ப்புக்காகவே. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கால்கடக்க நடந்து பசியால் சாவதை நாம் பார்த்து கொண்டிருக்கிறோம்.

நாள், கிழமை மறந்து இயங்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், காவல்துறையினர், வீழ்ந்து கொண்டிருக்கும் பொருளாதாரம், சிதையும் வாழ்வாதாரம், அன்றாட காட்சிகள் பசியால் மரணம்… இவை எல்லாமும் நம் எல்லோரின் அலட்சியத்தால் தான். இதை எல்லாம் பார்க்கும் கோபம் வருகிறது.

கொள்ளை நோயை கட்டுப்படுத்துவது தொடர்பாக அரசு மீது விமர்சனம் வைக்க இது நேரம் அல்ல. இது சில்லறை அரசியலுக்கான நேரம் அல்ல.

நாளை என்ன, இன்று நாம் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான, ஆக்கப்பூர்வ செயல்களுக்கான நேரம். இது நாமே தீர்வாகும் நேரம். சென்னையை கொரோனாவுக்கான தலைநகராக நாம் மாற்றி விடக்கூடாது. இதற்கான முயற்சி தான் நாமே தீர்வு எனும் இயக்கம்.

இது தனி மனித இயக்கம் அல்ல, நாம் அனைவரும் பங்கேற்கும் இயக்கம். இனி வரும் நாட்களுக்கு நாள் சாதி, மதம், மொழி, கட்சி பேதங்கள் கடந்து ஒரே கோட்டில் இணைவோம்.

இந்த முயற்சியின் முதல் தொண்டன் நான். இன்னும் நிறைய தொண்டர்கள் தேவை. வாருங்கள் நாமே தீர்வாவோம்.

என கமல் அதில் பேசியுள்ளார்.

இணைந்து மீட்டெடுப்போம் சென்னையை. அழையுங்கள் 63698 11111.

Kamal launches Naame Theervu to help Chennai in fight against Corona

More Articles
Follows