விஷால்-லிங்குசாமி-யுவன் கூட்டணியில் ‘சண்டக்கோழி 2’..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சண்டக்கோழி 2 படத்திற்காக இணையவிருந்த விஷால் மற்றும் லிங்குசாமி கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர்.

அதன்பின்னர் இருவரும் சமாதானம் ஆகிவிட்டதை நம் முன்பே பார்த்தோம்.

எனவே சண்டக்கோழி படத்தின் சூட்டிங் விரைவில் தொடங்கப்படவுள்ளது.

தற்போது இவர்களின் கூட்டணியில் இசையமைப்பாளராக இணைந்துள்ளார் யுவன் சங்கர் ராஜா.

லிங்குசாமி இயக்கிய சண்டக்கோழி, பையா, அஞ்சான் ஆகிய படங்களுக்கு யுவன் இசையமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மதி ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். படத்தின் நாயகி உள்ளிட்ட கலைஞர்கள் தேர்வானவுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஹிப் ஹாப் ஆதி… வைரலாகும் வீடியோ..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹிப் ஹாப் பாடல்கள் மூலம் பிரபலமான ஆதி தற்போது திரைப்படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.

இவரின் இசையில் உருவான ஆம்பள, தனி ஒருவன் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

தற்போது ஜல்லிகட்டில் ஒளிந்திருக்கும் சர்வதேச அரசியலை தோலுரிக்கும் வகையில் டக்கரு டக்கரு என்ற வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.

தமிழக அரசும் மக்களும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல்களை எழுப்பி வரும் நிலையில், காளை இனத்தையே அழிக்க பன்னாட்டு அரசியல் என்னவெல்லாம் செய்கிறது என்பதை அப்பட்டமாக காட்டியிருக்கிறார்.

சொந்த நாடாக இருந்தாலும் நம் அடையாளங்களை இழந்துவிட்டால் நாமும் அகதிதான் என்ற குரல் பாடலில் ஒலிக்கிறது.

மேலும் வல்லுனர்கள், விவசாயிகள், மாடு வளர்ப்போரின் கருத்துக்களும் இதில் இடம்பெற்றுள்ளது. 12 நிமிடங்கள் வரை இந்த வீடியோ உள்ளது.

இறுதியாக காளையை காப்போம். ஜல்லிக்கட்டை வளர்ப்போம் என்ற கருத்துடன் இந்த காட்சிகள் முடிகிறது.

ரீமேக் உரிமைக்கு காத்திருக்கும் தனுஷ்-பிரகாஷ்ராஜ்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிரஞ்சீவியின் தம்பி மகள் நிகாரிகா அறிமுகமாகியுள்ள தெலுங்கு படம் ‘ஓக மனசு’. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படம் நேற்று ரிலீஸ் ஆனது. நாக செளரியா, நிகாரிகா நடித்துள்ள இப்படத்தை ராமராஜூ இயக்கி இருக்கிறார்.

இப்படத்தை பார்த்து இம்ப்ரஸ் ஆன தனுஷ், இதன் தமிழ் ரீமேக் உரிமையை பெற விரும்புவதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நடிகர் பிரகாஷ்ராஜ் அவர்களும் ஒரு கன்னட படத்தை ரீமேக் உரிமையை பெற முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.

Godhi Banna Sadharna Mykattu என்ற கன்னட படத்தின் ரீமேக் உரிமையை பெற்று தமிழ் மற்றும் தெலுங்கில் தயாரித்து நடிக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

விரைவில் இந்த இரு படங்களின் ரீமேக் அறிவிப்பு வெளியாகும் என கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

9 முதல் 90 வரை… சிம்புவின் ‘AAA’ சீக்ரெட்ஸ்…!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்பு நடிக்க, ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’ படப்புகழ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் படம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ (AAA).யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வரும் இப்படத்தில் 9 பாடல்கள் இடம் பெறுகிறது.இதில் சிம்பு 3 வேடம் ஏற்கவுள்ளதால் மூன்றையும் வித்தியாசப்படுத்த மெனக்கெட்டு வருகிறாராம்.

இதில் ஒரு கேரக்டருக்காக பெரிய தாடி, மீசையை வளர்த்து வருகிறார்.மேலும் தன்னுடைய உடல் எடையை 90 கிலோவுக்கு மேல் ஏற்றவிருக்கிறார். அதற்கான கடும் பயிற்சியில் தற்போது ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

விரைவில் மைசூரில் இது தொடர்பான காட்சிகளை படமாக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏ.ஆர்.முருகதாஸ் உடன் இணையும் விக்ரம்பிரபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்ரம்பிரபு நடிப்பில் ‘வாகா’ மற்றும் ‘வீரசிவாஜி’ ஆகிய இரண்டு படங்கள் வெளியீட்டுக்கு தயாராகியுள்ன.

இதில் வீரசிவாஜி படத்தை கணேஷ் விநாயக் இயக்கியிருக்கிறார்.

இமான் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் ஷாலினி அஜித்தின் தங்கை ஷாமிலி நாயகியாக நடித்துள்ளார்.

இவர்களுடன் ஜான் விஜய், மொட்டை ராஜேந்திரன், ரோபோ சங்கர், யோகிபாபு, உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

எஸ்.நந்தகோபால் தயாரித்துள்ள இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தமிழகமெங்கும் வெளியிடுகிறது.

இந்நிலையில் இப்படத்தின் டீசரை இன்று இரவு 7 மணிக்கு வெளியிடுகிறார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்.

‘வடசென்னை’க்காக தனுஷ் ஆடும் ஆட்டம்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷின் வுண்டர்பார் மற்றும் லைக்கா நிறுவனம் இணைந்து தயாரிக்கும் படம் வடசென்னை.

மூன்று பாகங்களாக உருவாகவுள்ள இதன் முதல் பாகத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது.

இதற்காக சென்னையில் மிக பிரமாண்டமாக ஜெயில் செட் ஒன்று போடப்பட்டு அங்கு அதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

வெற்றிமாறனின் கனவுப்படம் என கூறப்படும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இதில் தனுஷுடன் சமந்தா, ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இதில் தனுஷ் கேரம் விளையாட்டு ஆடுபவராக நடிக்கிறாராம். இதற்காக கேரம் விளையாட்டு வீரர் உதவியுடன் பயிற்சி எடுத்து வருகிறார்.

வட சென்னை மக்களுக்கும் கேரம் விளையாட்டிற்கும் மிகப்பெரிய தொடர்பு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows