காலா-வை திரையிட பாதுகாப்பு கொடுங்கள்; கர்நாடக அரசுக்கு விஷால் கோரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காலா படத்தை கர்நாடக மாநிலத்தில் திரையிட அந்த மாநில அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவு போட்டு இருந்தது.

இதுகுறித்து விஷால் தலைமையிலான தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது…

ரஜினிகாந்த் நடித்துள்ள காலா பட பிரச்னையில் கர்நாடகா உயர் நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு திரைத்துறைக்கே ஆரோக்கியமான ஒன்று.

சினிமா வேறு. அரசியல் வேறு. இரண்டையும் தொடர்பு படுத்த கூடாது என்பதை தெளிவாக விளக்கி இருக்கிறது கர்நாடக உயர் நீதிமன்றம்.

பலதரப்பட்ட மக்களை ஒன்றிணைக்கும் பாலம் தான் சினிமா. அப்படி இயங்கிவரும் சினிமா துறையின் மீது அரசியல் சாயம் பூசுவது நியாயமற்றது.

ஒரு திரைப்படம் வெளியாவதில் அரசியல்புகக்கூடாது.இந்த தீர்ப்பு அனைத்து திரைத்துறையினரும் வரவேற்கப்பட வேண்டிய தீர்ப்பு. இதன் மூலம் இரு மாநில மக்களுமே மகிழ்ச்சி அடைவார்கள்.

கர்நாடகவில் முதல்வராக பதவியேற்றுள்ள மாண்புமிகு முதல்வர் திரு.குமாரசாமி அவர்களுக்கு வணக்கத்துடன், வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

காலா திரைப்படத்திற்கு தொடர்ந்துவரும் பிரச்னைகளுக்கு ஒரு முற்றுபுள்ளி வைப்பீர்கள் என்று எங்களுக்கு அபார நம்பிக்கை உள்ளது.

கர்நாடக அரசு காலா திரைப்படம் வெளியாவதை உறுதி செய்வதோடு படத்தை வெளியிடும் திரையரங்குகளுக்கும் காண வரும் ரசிகர்களுக்கும் பாதுகாப்பு வழங்கும் என்று நம்புகிறோம்.

இதனை ஒரு கோரிக்கையாகவே கர்நாடக அரசிடம் வைக்கிறோம்.

மாண்புமிகு முதலமைச்சர் தாங்கள் எடுக்கும் சுமூகமான முடிவினால் இரு மாநில பிரச்சனைகளுக்கும் ஒரு தீர்வாக அமையும். இரு மாநிலத்திற்கும் நட்புக்கும் இது எதிர்கால பயனை அளிக்கும்.

தலைவர்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்

Vishal request Karnataka Govt to give protection to Kaala screening theatres

காலா ஸ்பெஷல் ஷோக்களுக்கு தமிழக அரசு அனுமதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் இன்று வியாழக்கிழமை ஜீன் 7ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு உள்ளதால் சிறப்பு காட்சிகள் முன்பதிவுகள் அனைத்தும் பதிவுசெய்யப்பட்டு விட்டன.

எனவே ரசிகர்களின் மற்றும் விநியோகஸ்தர், தியேட்டர் உரிமையாளர்களின் கோரிக்கைப் படி காலா தயாரிப்பு தரப்பு தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.

அதன்படி காலா சிறப்பு காட்சிகளுக்கு முதல் நான்கு நாட்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

அதாவது வரும் 10ம் தேதி வரை லைசென்ஸ் உள்ள திரையரங்குகளில் காலை 4 மணிக்கு முதல் காட்சிகளை திரையிட சிறப்பு அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே ரஜினி ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

TN Govt gave permission for Kaala movie special shows at early morning

காலா காய்ச்சல்…: மண் சோறு சாப்பிட்டு நேர்த்தி கடன் செய்த ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நாளை ஜீன் 7ல் ரஜினிகாந்த நடித்துள்ள காலா திரைப்படம் வெளியாகிறது.

இப்படம் உலகம் முழுவதும் 10000 தியேட்டர்களில் வெளியாகவுள்ளது.

பல பிரச்சினைகளை தாண்டி இப்படம் வெளியாகவுள்ளதால் கிட்டத்தட்ட திருவிழா போல படத்தை பேனர் வைத்து போஸ்டர் வைத்து கொண்டாடி வருகின்றனர்.

தமிழகத்தில் 500க்கும் மேற்பட்ட தியேட்டர்களிலும் கேரளாவில் 300க்கும் மேற்பட்ட தியேட்டர்களிலும் கர்நாடகாவில் 130க்கும் மேற்ப்பட்ட தியேட்டர்களில் வெளியாகிறது.

மற்ற மாநிலங்களில் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாகவுள்ளது.

இப்படம் ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு பின்னர் ரிலீஸ் ஆகிறது என்பதால் இப்படமும் அவரின் ஆன்மிக அரசியலும் வெற்றி பெற வேண்டும் என்பதால் ரசிகர்கள் பல கோயில்களில் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

மதுரையில் உள்ள ரசிகர்கள் கடவுளை வேண்டி மண் சோறு சாப்பிட்டு அவர்களின் நேர்த்தி கடனை செலுத்தி வருகின்றனர்.

நாளை காலா திரைப்பட விமர்சனத்துடன் உங்களை சந்திக்கிறோம்…

இன்னும் ரிலீஸாகாத தனுஷ் பட நாயகி ரஜினியுடன் இணைகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு பக்க கதை என்ற படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார் நடிகை மேகா ஆகாஷ். இது இன்னும் வெளியாகவில்லை.

இதன்பின்னர் தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடித்தார்.

கவுதம் மேனன் இயக்கி வரும் இப்படம் இன்னும் முடிவடையாத நிலையில் உள்ளது.

இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜனி நடிக்க இருக்கும் படத்தில் மேகா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இப்படத்தில் ரஜினியின் மகன்களாக பாபி சிம்ஹாவும், சனந்த் ஷெட்டியும் நடிக்கிறார்கள்.

இதில் ரஜினி மகன்களில் ஒருவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிப்பார் என கூறப்படுகிறது.

கார்த்திக் சுப்பராஜ் படத்துக்காக சமூக போராளியாக மாறும் *யங்” ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் நாளை ரிலீஸாகிறது.

இதற்கு முன்பே தயாரான 2.0 படம் கிராபிக்ஸ் காரணங்களால் இன்னும் வெளியாகவில்லை.

அதற்குள் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்பராஜ் படத்தில் நடிக்க தயாராகிவிட்டார் ரஜினி.

அதற்காக இன்று காலை ரஜினிகாந்த் டெக்ராடூன் செல்கிறார்.

அங்கு செய்தியாளர்களை சந்தித்து கர்நாடகாவில் காலா ரிலீஸ் குறித்து பேட்டியளித்தார்.

கபாலி மற்றும் காலா படத்திற்காக வெண் தாடியில் ரஜினிகாந்த் இருந்தார்.

அதே கெட்டப் அப்புடன் வெளியுலகிலும் வலம் வந்தார்.

ஆனால் சில தினங்களாக கருப்பு தாடி மற்றும் கருப்பு தலைமுடியுடன் வலம் வருகிறார்.

இது கார்த்திக் சுப்பராஜ் படத்திற்காகத்தான் என தெளிவாக தெரிகிறது.

மேலும் இந்த படத்தில் இளமையான தோற்றத்துக்கு மாறவுள்ளாராம் ரஜினி.

முக்கியமாக, முந்தைய படங்களின் சாயல் இல்லாத ஒரு கெட்டப்புக்கு ரஜினி மாறவுள்ளார் என கூறப்படுகிறது.

இந்த படத்தில் நம் சமுதாயத்திற்காக போராடும் ஒரு சமூக போராளியாக நடிப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

ரஜினி மாதிரி வரனும்னு ஆசைப்படுவது தப்பா..? தனுஷுக்கு சிம்பு பதிலடி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தியாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழி பேசும் திரைப்படங்கள் உள்ளன.

எனவே ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு சூப்பர் ஸ்டார் இருந்து வருகிறார்.

ஆனால் இந்த சூப்பர் ஸ்டார்கள் எல்லாம் 10 வருடங்கள் அல்லது 20 வருடங்கள் மட்டுமே சூப்பர் ஸ்டார்களாக இருந்துள்ளனர்.

ஆனால் தமிழகத்தில் மட்டுமே கடந்த 40 வருடங்களாக ரஜினிகாந்த் மட்டுமே சூப்பர் ஸ்டார் என்று திரையுலகினரால் அழைக்கப்படுகிறார்.

ரஜினி என்ற அந்த ‘சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டத்திற்கு இன்று பலரும் ஆசைப்படுகிறார்கள் என சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த ‘காலா’ பத்திரிகையாளர் சந்திப்பில் தனுஷ் பேசியிருந்தார்.

அந்த பேசி 2 நாட்கள் ஆகியுள்ள நிலையில் சிம்பு ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் 20 நிமிடங்கள் பேசியுள்ளார். அதில் 10 நிமிடங்களுக்கு மேலாக ரஜினிகாந்த் பற்றியே பேசியுள்ளார்.

எனவே இது தனுஷுக்கு பதிலடி என பலரும் பேசி வருகின்றனர்.

அந்த வீடியோவின் முக்கிய அம்சங்கள்…

எனக்கும் ரஜினி சார் மாதிரி வரணும்கற ஆசை இருந்தது. ஆனால், அதற்காக நான் ரஜினியாக மாற ஆசை இல்லை. அந்த மாதிரி ஆகணும்கற ஆசை இருந்ததாலதான் நான் இப்ப இப்படி வந்திருக்கேன்.

என்னை ரொம்ப டீமோடிவேட் பண்ணாங்க. ஒவ்வொருத்தருக்கும் ஒரு ஆசை இருக்கும்.

எல்லாரும் தப்பான ஒரு விஷயத்தைக் கொண்டு போய் சேர்க்கிறாங்க. தியாகராஜ பாகவதர் இருந்தாரு, எம்ஜிஆர் இருந்தாரு, ரஜினி சார் இருந்தாரு, ஒவ்வொரு கால கட்டங்கள்ல ஒருத்தர் இருந்தாங்க. ஆனால், ரஜினி மாதிரி யாரும் வரக் கூடாதுன்னு யாரும் சொல்லக் கூடாது.

இப்படி யார் தெரியுமா சொல்வாங்க, தான்தான் ரஜினின்னு நினைக்கிறவங்கதான் சொல்வாங்க. அப்படி பேசறவங்களுக்கு ஒண்ணு புரியலை.

தியாகராஜ பாகவதர் மாறி வரணும்னு நினைச்சதால எம்ஜிஆர் வந்தாரு. எம்ஜிஆர் மாதிரி வரணும்னு நினைச்சதால ரஜினி வந்தாரு. ரஜினி மாதிரி வரணும்னு நினைச்சதால அஜித், விஜய் வந்திருக்காங்க.

இவங்கள மாதிரி வரணும்னு நினைச்சதாலதான் நான் வந்திருக்கிறனான்னு தெரியலை. இருந்தும் எனக்கும் ஒரு இடம் கிடைச்சிருக்கு.

நான்தான் ரஜினின்னு நினைக்கிறவங்கதான் இதை மாதிரி பேசறாங்க. ஆனால், ரஜினி மாதிரி வரணும்னு நினைக்கிறன்னு நாம பேசும் போது அதை தப்பாவே வெளிய பேச வைக்கிறாங்க,” என்கிறார் சிம்பு.

தன்னையே ரஜினியா நினைக்கிறவங்கதான் இப்படி பேசறாங்க என சிம்பு பேசியிருப்பதால் இது ரஜினியின் மருமகன் தனுஷை பற்றி இருக்கலாம் என கிசுகிசுக்கப்படுகிறது.

ஆனால் தனுஷோ ரஜினி ஒருவர்தான் அவர் மட்டுமே என பலமுறை சொல்லிவிட்டார்.

More Articles
Follows