தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
தற்போது இதன் 2ஆம் பாகத்தை தொகுத்து வழங்கவிருக்கிறார்.
தற்போது இவரது பாணியில் நடிகர் விஷாலும் வரவுள்ளதாக தெரிகிறது.
தெலுங்கில் முன்னணி டிவி சேனல் ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி மேது சைத்தம்.
இதனை நடிகை லட்சுமி மஞ்சு தொகுத்து வழங்கி வருகிறார்.
வாழ்க்கையில் போராடி ஜெயித்த மக்களின் கதை நேர்காணலாக ஒளிபரப்பாகும்,
இதில் சினிமா நட்சத்திரங்கள் கலந்து கொள்வார்கள்.
அவர்கள் தங்களது வழக்கமான வேலையை தவிர்த்து சாதரண மக்கள் செய்யும் வேலையை ஒரு நாள் செய்ய வேண்டும்.
அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் ஒரு நாள் மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்தார் பாகுபலி வில்லன் ராணா.
தற்போது இந்த நிகழ்ச்சியை தமிழின் முன்னணி சேனல் தயாரித்து, வழங்கவுள்ளது.
இந்த நிகழ்ச்சியை விஷால் தொகுத்து வழங்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறதாம்.
இந்த பேச்சுவார்த்தை ஆரம்பகட்ட நிலையில்தான் உள்ளதால் இன்னும் முடிவாகவில்லை என விஷால் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
