அஜித்-சிவகார்த்திகேயனுடன் மோத தேதி குறித்த விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கத்தி சண்டை படத்தை தொடர்ந்து விஷால் நடிப்பில் இரு படங்கள் வெளியீட்டுக்கு தயாராகவுள்ளன.

விஷால் நடித்துள்ள துப்பறிவாளன் மற்றும் இரும்பு திரை ஆகிய இரண்டு படங்கள் அஜித் மற்றும் சிவகார்த்திகேயன் படங்களுடன் மோதவுள்ளது.

மிஷ்கின் இயக்கியுள்ள துப்பறிவாளன் படத்தை ஆகஸ்ட் மாதம் 10ஆம் வெளியிடவுள்ளனர்.

இதே நாளில்தான் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விவேகம் படம் ரிலீஸ் ஆகவுள்ளதாக சொல்லப்படுகிறது.

அதுபோல், விஷாலின் மற்றொரு படமான இரும்பு திரை படத்தை செப்டம்பர் 29ஆம்தேதி வெளியிடவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதே நாளில்தான் சிவகார்த்திகேயன் நடித்துள்ள வேலைக்காரன் படம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Vishal clash with Ajith and Sivakarthikeyan

தனுஷ் படத்தின் Mr.X இசையமைப்பாளர் இவர்தானா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அண்மைகாலமாக படத்தின் தலைப்பை அறிவிக்காமல் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.

அஜித், விஜய் உள்ளிட்ட நடிகர்கள் இதை ஒரு டிரெண்ட்டாகவே செய்து வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க, தனுஷ் நடித்துவரும் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் இசையமைப்பாளர் யார்?

என்று அறிவிக்காமலே படத்தின் பாடல்களை வெளியிட்டுள்ளார் இயக்குனர் கௌதம் மேனன்.

இசையமைப்பாளர் யார் என்று கேட்டதற்கு? மிஸ்டர் எக்ஸ் என்றே கூறிவந்தார்.

இந்நிலையில் இப்படத்தின் பாடல்களுக்கு இசை அமைத்திருப்பவர் கௌதம் மேனன்தான் என்று சொல்லப்படுகிறது.

பின்னணி இசையை மட்டும், ராஜதந்திரம் படப் புகழ் நடிகரும், கிடாரி படத்தின் இசையமைப்பாளருமான தர்புகா சிவா இசையமைத்திருக்கிறார் என்கிறார்கள்.

Enai Noki Paayum Thota music composer name is revealed

இந்திய சினிமா வரலாற்றில் ‘பாகுபலி 2’ படைக்க போகும் சாதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தியாவில் சினிமா தோன்றி 100 ஆண்டுகளை கடந்துவிட்டது. ஆனால் இதுவரை எந்த படமும் செய்யாத சாதனையை முதன்முறையாக பாகுபலி2 நிகழ்த்த போகிறது.

ராஜமௌலி இயக்கிய இப்படம் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி ரிலீஸ் ஆனது.

நான்கு நாட்களை கடந்துள்ள நிலையில் ரூ. 600 கோடியை உலகம் முழுவதும் வசூலித்துள்ளது.

தற்போது கோடை விடுமுறை காலம் என்பதால், இன்னும் திரையரங்குகளில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.

எனவே இன்னும் ஓரிரு தினங்களில் இப்படம் ரூ. 1000 கோடியை வசூலித்துவிடும்.

இந்திய சினிமா வரலாற்றில் எந்த ஒரு படமும் இத்தனை கோடிகளை வசூலிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அவதார், டைட்டானிக், லார்ட் ஆஃப் ரிங்ஸ், ஹாரி பார்ட்டர், ஸ்பைடர் மேன், பாஸ்ட் அண்ட் பியூரியஸ் போன்ற ஹாலிவுட் படங்களே இதுபோன்ற சாதனைகளை படைத்துள்ளது.

இப்படம் ஆயிரம் கோடி வசூலிக்கும் பட்சத்தில் விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர்காரர்கள் பங்கு தொகை போக எப்படியிருந்தாலும் ரூ. 600 கோடி வரை தயாரிப்பாளருக்கு கிடைக்கும் என்கிறார்கள்.

இதன் பட்ஜெட் ரூ. 320 கோடி என்றாலும், மீதியுள்ள ரூ. 280 கோடி நிகரலாபமாக தயாரிப்பாளருக்கு கிடைக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் வசூல் மேலும் மேலும் அதிகரிக்க தயாரிப்பாளர் காட்டில் வசூல் மழை பொழிய போகிறது என்பது மட்டும் நிச்சயம்.

Baahubali 2 going to make record in 100 years of Indian Cinema

அசத்திட்டே…. சுரேஷ் காமாட்சி .! – பாரதிராஜா பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வசிஷ்டர் வாயால் வாழ்த்துப் பெற்றதற்கு இணையான மகிழ்ச்சியில் இருக்கிறார் தயாரிப்பாளரும் இயக்குநருமான சுரேஷ் காமாட்சி.

அவர் இயக்கியுள்ள மிக மிக அவசரம் படத்தின் ட்ரைலரை சமீபத்தில் பார்த்துள்ளார் இயக்குநர் இமயம் பாரதிராஜா. பார்த்ததுமே அவருக்கு மிகப் பிடித்துவிட்டதாம்.

அதை விட, ‘சுரேஷ் காமாட்சி…. அற்புதம். இதை உங்கிட்டருந்து நான் எதிர்ப்பார்க்கவே இல்ல. நல்லா பண்ணியிருக்க,” என்று பாராட்டியுள்ளார்.

இதைப் பார்த்ததுமே, படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட சம்மதித்துள்ளார். மோஷன் போஸ்டர் வெளியீட்டு நிகழ்வில், உடனிருந்த இயக்குநர் ஈ ராமதாஸ் மற்றும் தயாரிப்பாளர் ஜேஎஸ்கே எனும் ஜே சதீஷ்குமாரிடம் பாரதிராஜா மிக இயல்பாக இப்படிக் கூறினார்:

“என்னால நம்பவே முடியலய்யா… இப்படி தயாரிப்பாளர்களெல்லாம் டைரக்ட் பண்ண ஆரம்பிச்சிட்டா, நாங்கள்லாம் என்னய்யா ஆகிறது.. …,” என்றார் கிண்டலாக..

பாரதிராஜாவின் பாராட்டை ஒன்றுக்கு இருமுறைப் பெற்றுள்ள சுரேஷ் காமாட்சி கூறுகையில், “தமிழ் சினிமாவின் பிதாமகன் இயக்குநர் இமயம் பாரதிராஜா. அவரிடமிருந்து தன்னெழுச்சியாக வந்து விழுந்த வார்த்தைகள் அவை. அவரது பாராட்டுகள் மூலம் நான் சினிமாவுக்கு வந்ததன் பலனை அனுபவித்துவிட்டேன்.

அவரது இந்த நல் வார்த்தைகளுக்கு பங்கம் வராத அளவுக்கு தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் என் படைப்புகள் அமையும்…” என்றார்.

ஸ்ரீப்ரியங்கா நாயகியாகவும், ஹரீஷ் ஹீரோவாகவும் நடித்துள்ள “மிக மிக அவசரம்” படம் ஜூன் மாத வெளியீடாக வரவிருக்கிறது.

Miga Miga Avasaram movie Trailer launch updates

பாகுபலியால் மிரண்டு போன பைரஸி; ராஜமெளலியின் அடுத்த யோசனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திருட்டு விசிடியால் சினிமா அழிந்துவிடும் நிலையில் உள்ளது. இணையங்களில் புதிய படங்கள் திருட்டுத்தனமாக வெளியாகிவிட்டது. இந்த வார்த்தைகளை நாம் தினம் தினம் கேட்டு வருகிறோம்.

பாகுபலி 2 வெளியான நாள் அன்று கூட முதல் காட்சிக்கு முன்பே இணையங்களில் இப்படம் வெளியானது.

ஆனால் எத்தனை இடையூறுகள் வந்தாலும் பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பி வருகிறது.

இந்திய சினிமாவே இதன் வசூல் சாதனையை ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறது.

திருட்டு விசிடியில் வெளியிட்டவர்களே இதை கனவிலும் எதிர்பார்த்து இருக்கமாட்டார்கள்.

இந்நிலையில் பைரஸி குறித்து தன் அண்மை பேட்டியில் ராஜமௌலி கூறியுள்ளதாவது…

உலக சினிமாவுக்கே பைரஸிதான் பெரும் பிரச்சினை.

தியேட்டர் வெளியீட்டுக்கும், தொலைக்காட்சிக்கும் எனத் தனியாக வியாபாரம் செய்து வருகிறோம்.

ஆனால், இணையத்தில் வியாபாரம் செய்ய தவறிவிட்டோம்.

இதை பைரஸியில் ஈடுபடுபவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

தியேட்டர், டிவி, கம்ப்யூட்டரை போன்று சிலருக்கு மொபைல் போன்களில் படம் பார்ப்பது பிடித்துள்ளது.

எனவே அவர்களுக்கு ஏற்றவாறு, நல்ல தரத்தில் படத்தை கொடுத்து, பிரிண்ட் நன்றாக இருக்கும் வகையில் இணையத்தில் வெளியிட வேண்டும்.

அப்போது பணம் கொடுத்து அவர்களும் படம் பார்ப்பார்கள். பைரஸியை தேடிச் செல்ல மாட்டார்கள்” என்று யோசனை தெரிவித்துள்ளார் ராஜமெளலி.

Baahubali Director SS Rajamoulis idea to destroy Piracy

மூன்று நாட்களில் ரூ. 540 கோடியை தாண்டி பாகுபலி சாதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் இரு வேடங்களில் நடித்துள்ள படம் பாகுபலி 2.

இப்படத்தில் சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர், அனுஷ்கா, ராணா, தமன்னா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் இந்திய சினிமா வசூலில் பெரும் சாதனைகளை படைத்து வருகிறது.

இந்தியாவில் மட்டும் ரூ. 335 கோடிகளையும், வெளிநாட்டில் ரூ. 125 கோடிகளையும் வசூலித்துள்ளது.

ஆக மொத்தம் மூன்று நாட்களில் உலகம் முழுவதும் ரூ. 540 கோடியை வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

Baahubali 2 collected Rs 540 crores in Worldwide within 3 days

More Articles
Follows