அஜித் படம் அவ்வளவுதான்; தல ரசிகர்களை வியக்க வைத்த வினோத்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹிந்தியில் அமிதாப்பச்சன், டாப்சி நடித்து சூப்பர் ஹிட்டான ‘பிங்க்’ என்ற படத்தை ‘நேர் கொண்ட பார்வை’ என்ற பெயரில் இயக்கி வருகின்றனர்.

அஜித், வித்யாபாலன், ஷரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டோர் நடிக்க வினோத் இயக்கி வருகிறார்.

யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்க, மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்து வருகிறார்.

பெரும்பாலும் இப்பட சூட்டிங் ஐதராபாத்தில் உள்ள பிலிம்சிட்டியில் நடைபெற்றது.

கிட்டதட்ட 42 நாட்களில் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்தி முடித்துவிட்டார்களாம்.

எனவே அடுத்தக்கட்ட பணிகளை தொடங்கி ஆகஸ்ட் 10ம் தேதி படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.

இவ்வளவு சீக்கிரம் அஜித் படத்தை வினோத் முடித்துள்ளதால் தல ரசிகர்கள் ஆச்சரியத்தில் இருக்கிறார்களாம்.

Vinoth completed Ajiths Nerkonda Paarvai shoot within 42 days

ரசிகர்கள் தொல்லையால் பிரச்சினைக்குள்ளாகும் விஜய் படங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சர்கார் படத்தை தொடர்ந்து அட்லி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

இதில் விஜய்யுடன் நயன்தாரா, கதிர், விவேக், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

அண்மையில் வெளிநாட்டில் படிக்கும் தன் மகனைப் பார்க்க விஜய் சென்றதால் அவர் சூட்டிங்கில் கலந்துக் கொள்ளவில்லை.

முக்கியமான காட்சிகளை சென்னையில் படமாக்கி வந்தனர். ஆனால் ரசிகர்களின் அன்புத் தொல்லையால் சூட்டிங்குக்கு நிறைய பிரச்சினைகள் ஏற்படுகிறதாம்.

எனவே பிரம்மாண்ட் செட்டுக்களை ஸ்டூடியோக்களில் அமைத்து வருகிறார்களாம்.

சில தினங்களுக்கு முன்பு சென்னை நேப்பியர் பாலத்தை பிரசாத் ஸ்டுடியோவில் செட்டாக அமைத்திருந்தார்களாம்.

இவ்வாறாக செட்டுகளை அமைத்து வருவதால் படத்தின் பட்ஜெட்டும் ஒரு பக்கம் அதிகரித்து வருகிறதாம்.

விஜய் படங்கள் நன்றாக வசூலித்தாலும் இதுபோன்ற திட்டமிட படாத செலவுகளால் பட்ஜெட் அதிகமாக லாபம் குறைந்து வருகிறதாம்.

Due to fans crowd Vijay movies getting into troubles

மொத்த தொகுதிலயும் ‘ஒத்த செருப்பு’டன் நிற்கும் பார்த்திபன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடைபெறவுள்ள மக்களவை தேர்தல் முடிவுகளை இந்திய தேசமே ஆவலுடன் எதிர் நோக்கி காத்திருக்கிறது.

தேர்தலை முன்னிட்டு பலரும் தங்களுக்கு பிடித்த கட்சிகளுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகரும், இயக்குநருமான பார்த்திபன், “இந்தத் தேர்தலில் நான் ஆதரிக்கப்போகும் சின்னத்தை (தேர்ந்தெடுக்க) வெளியிடுகிறேன்” என தெரிவித்து இருந்தார்.

ஒருவேளை நடிகர் கமல் கட்சிக்கு ஆதரவு கொடுக்கப் போகிறாரா? என அனைவரும் எதிர்பார்த்தனர்.

ஆனால் அவர் அடுத்த இயக்கவுள்ள “ஒத்தசெருப்பு சைஸ் 7” என்ற படம் பற்றிய போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

அதில் “ஒத்த கால் செருப்பு போட்டோவை போட்டு வாக்களிப்பீர், ஒத்த கால்ல நிக்கிறோம்…. மொத்த தொகுதிலயும்! இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் ஒத்த செருப்பு சைஸ் 7” என தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசனுக்கு உதவியாக அரசியல் களத்தில் ஸ்ருதிஹாசன்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் கமல்ஹாசன் தற்போது அரசியல்வாதியாக வலம் வருகிறார்.

மக்களவை தேர்தலில் தன் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் கமலின் மூத்த மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் தன் தந்தையின் அரசியல் பயணம் குறித்து கூறியதாவது…

என் தந்தை மக்களுக்காக உண்மையாக உழைக்கக் கூடியவர்.

நான் நேரடி அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை. ஆனால் என் தந்தைக்கு தேவையான உதவிகளை செய்வேன்” என கூறியுள்ளார்.

அமிதாப்பச்சனுக்கு ஜோடியாகும் ரம்யா கிருஷ்ணன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அழகு, திறமை, இளமை என ஒருங்கிணைந்த நடிகைகளில் ஒருவர் ரம்யா கிருஷ்ணன். கிளாமர், ஹோம்லி, வில்லி, நாயகி என எந்த கேரக்டர் என்றாலும் தன் திறமையை நிரூபித்து வந்துள்ளவர் இவர்.

அதனால்தான் கிட்டதட்ட 35 வருடங்களாக சினிமாவில் நிற்கிறார்.

இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. இதில் மாறுபட்ட ஒரு கேரக்டரில் நடித்திருந்தார்.

இந்நிலையில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுக்கு ஜோடியாக ‘உயர்ந்த மனிதன்’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.

தமிழ்வாணன் இயக்கும் இப்படத்தில் எஸ்.எஜே.சூர்யாவும், அமிதாப்பச்சனும் நாயகர்களாக நடிக்கின்றனர்.

தமிழ், ஹிந்தி மொழிகளில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ரஜினியின் 2.0 படத்தில் டப்பிங் பேசினாரா மகேந்திரன்.? ரகசியம் சொன்ன ஷங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காலத்தால் அழிக்க முடியாத உதிரிப்பூக்கள், ஜானி, முள்ளும் மலரும் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகேந்திரன் இன்று (ஏப்ரல் 2) உடல் நலக்குறைவால் காலமானார்.

அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ஷங்கர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது…

இயக்குநர் மகேந்திரன் சாருடைய படங்கள் என்றும் நம் மனதில் நிறைந்திருக்கும். நல்ல மனிதர். அவர் இல்லாதது ரொம்பக் கஷ்டமாக இருக்கிறது.

‘2.0’ படத்தில் அக்‌ஷய்குமார் கேரக்டருக்காக டப்பிங் பேச வேண்டும் என்று கேட்டேன். யோசிக்கவே இல்லை, ‘நான் பண்ணித் தருகிறேன்’ என்று உடனே வந்தார். ஆனால், பயன்படுத்த முடியாமல் போய்விட்டது.

இவ்வாறு பேசினார் ஷங்கர்.

பின்குறிப்பு… அக்‌ஷய்குமார் கேரக்டருக்கு ஜெயப்பிரகாஷ் வாய்ஸ் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Shankar reveals that Director Mahendran done dubbing in 2pointO movie

More Articles
Follows