வழக்கறிஞரை அடுத்து மீண்டும் போலீசாகும் அஜித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வினோத் இயக்கிய ‛நேர்கொண்ட பார்வை’ படத்தில் வக்கீலாக நடித்திருந்தார் அஜித்.

இப்படத்தை தொடர்ந்து மீண்டும் வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இது அஜித்தின் 60வது படமாக உருவாகவுள்ளது.

பெரும் ஆக்சன் படமாக உருவாகவுள்ள இப்படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கவிருக்கிறாராம்.

இதில் தலைக்கு டை அடித்து இளமையாக நடிக்கிறார்.

ஏற்கனவே, ‛ஆஞ்சநேயா, மங்காத்தா, என்னை அறிந்தால்’ ஆகிய படங்களில் போலீஸாக நடித்திருந்தார் அஜித்.

தீபாவளி ரேஸில் விஜய்யுடன் இத்தனை ஹீரோக்கள் மோதலா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடித்து வரும் பிகில் படத்தை அட்லி இயக்கி வருகிறார்.

இப்படத்தை இந்தாண்டு 2019 தீபாவளிக்கு வெளியிட உள்ளதாக பல மாதங்களுக்கு முன்பே அறிவித்துவிட்டனர்.

அந்த தேதியில் வேறு எந்த படங்களும் வெளியாகாது என பிகில் டீம் நினைத்திருந்தனர்.

ஆனால் தற்போது கிட்டதட்ட பிகில் படத்துடன் 3 படங்கள் மோதும் எனத் தெரிகிறது.

விஜய்சேதுபதி நடித்துள்ள சங்கத்தமிழன் மற்றும் கார்த்தி நடித்துள்ள கைதி, ஆகிய படங்கள் வெளியாகும் என கூறப்படுகிறது.

இத்துடன் தனுஷ் நடித்துள்ள பட்டாஸ் படமும் வெளியாகும் எனத் தெரிகிறது.

ஆனால் அசுரன் படமும் அக்டோபர் மாதம் வெளியாகும் என்பதால் பட்டாஸ் தள்ளி போக வாய்ப்பு இருக்கலாம்.

3 Kollywood heros may clash with Vijay on Diwali release

Breaking மிஸ் இந்தியா ஆனார் தேசிய விருது நடிகை கீர்த்தி சுரேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாளம், தமிழ், தெலுங்கு சினிமா என தென்னிந்திய சினிமாவை கலக்கி வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

தற்போது அஜய் தேவ்கானுடன் ஒரு ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார் கீர்த்தி.

கடந்தாண்டு இவர் நடிப்பில் வெளியான மகாநடி என்ற தெலுங்கு படம் இவருக்கு தேசிய விருதை பெற்று தந்தது.

இந்த நிலையில் இவரது நடிப்பில் உருவாகி வரும் 20வது படத்திற்கு மிஸ் இந்தியா என்று தலைப்பிட்டுள்ளனர்.

அதன் டைட்டில் டீசர் வீடியோவை தற்போது இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

தமன் இசையமைத்து வரும் இப்படத்தை நரேந்திர நாத் என்பவர் இயக்கி வருகிறார்.

ஈஸ்ட் கோஸ்ட் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

Keerthy Suresh 20th movie titled Miss India

காணாமல் போன மாணவன் கதையை சொல்லும் ‘மயூரன்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

PFS ஃபினாகில் பிலிம் ஸ்டுடியோ என்ற பட நிறுவனம் சார்பில் K.அசோக்குமார்P.ராமன், G.சந்திரசேகரன், M. P. கார்த்திக் ஆகிய நால்வரும் இணைந்து தயாரித்திருக்கும் படம் “மயூரன்“.

மயூரன் என்றால் விரைந்து உன்னை காக்க வருபவன், வெற்றி புனைபவன் என்று பொருள்.

வேலாராமமூர்த்தி, ஆனந்த்சாமி (லென்ஸ்), அமுதவாணன் (தாரை தப்பட்டை), அஸ்மிதா (மிஸ் பெமினா வின்னர்) மற்றும் கைலாஷ், சாஷி, பாலாஜிராதாகிருஷ்ணன், ரமேஷ்குமார், கலை, சிவா ஆகியோர் நடித்துள்ளனர். குணச்சித்திர நடிகர்கள் அனைவரும் கூத்துப்பட்டறையைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒளிப்பதிவு – பரமேஷ்வர் (இவர் சந்தோஷ்சிவனிடம் உதவியாளராக பணியாற்றியவர்)

இசை – ஜுபின் (பழையவண்ணாரப்பேட்டை) மற்றும் ஜெரார்ட் இருவரும்.
பாடல்கள் – குகை மா.புகழேந்தி / எடிட்டிங் – அஸ்வின்
கலை – M.பிரகாஷ் / ஸ்டன்ட் – டான்அசோக்
நடனம் – ஜாய்மதி
தயாரிப்பு – K.அசோக்குமார், P.ராமன், G.சந்திரசேகரன், M. P. கார்த்திக்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – நந்தன் சுப்பராயன் (இவர் இயக்குனர் பாலாவின் நந்தா, பிதாமகன் போன்ற படங்களில் உதவியாளராக பணியாற்றியவர்)

படம் பற்றி இயக்குனர் நந்தன் சுப்பராயன் கூறியது…

சாதாரண குடும்பத்தின் கனவுகளை சுமந்துகொண்டு விடுதியில் தங்கி பொறியியல் உயர்கல்வி படிக்க வரும் மாணவன், ஒரு நள்ளிரவில் காணாமல் போனால் என்னவாகும் என்பதே கதை.

மொத்த குடும்பத்தின் ஒற்றை ஆதாரமான அவனைத் தேடிச் செல்கையில் காணாமல் போனதின் மர்ம முடிச்சுகள் மேலும்,

மேலும் இறுகி, அது சிக்கல்களையும், பிரச்சனைகளையும் உருவாக்குகின்றது. கல்லூரி விடுதிகள் என்பது வெறும் தங்கி போகும் வாடகை சத்திரம் அல்ல அது வாழ்க்கையை செதுக்கும் பட்டறை களம்.

அவர்களது எதிர்காலத்தை நல்ல விதமாகவோ மோசமானதாகவோமாற்றும் ரசவாதக் கூடம்.

நட்பு, அன்பு, நெகிழ்வு, குற்றப் பின்னணி, குரூர மனம், எனும் பல்வேறு மனித இழைகளால் நெய்யப்பட்ட உலகம்தான் கல்லூரி விடுதிகள்.

சாதாரண கூழாங்கற்கள், வைரக்கற்களாகவும் வைரக்கற்கள் கண்ணிமைக்கும் வினாடிகளில் காணாமல் போகவும் வாய்ப்பு உள்ள இடம். அங்கு ஏற்படும் பிரச்சனைகள் ஒரு தனி மனித வாழ்வை எவ்வாறு தலைகுப்புற கவிழ்த்து போடுகிறது என்பதை பற்றி பேசும்

படம் தான் மயூரன். ஒரு அருமையான கதை களத்தை விறுவிறுப்பான திரைக்கதை தேன் தடவி உருவாக்கியிருக்கிறோம்.

வேலாராமமூர்த்தி மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அவரை சுற்றிதான் கதை நகர்கிறது.

தயாரிப்பாளர் H.முரளி படத்தை தமிழகமெங்கும் ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியிடுகிறார்.

Mayuran movie deals with Missing Engineering Student

தனஞ்செயன் தயாரிப்பில் இணையும் சத்யராஜ் & சிபிராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிபிராஜ் தனது சினிமா பயணத்தை வெகு கவனமாக தேர்ந்தெடுத்து வெற்றி பெற்று வருகிறார். இந்நிலையில், வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் தனது அடுத்த படத்தினை அறிவித்துள்ளார்.

தமிழின் முன்னணி நடிகரான சத்யராஜ் தன் மகன் நடிகர் சிபிராஜுடன் இணைந்து ‘ஜாக்சன் துரை’ வெற்றிப்படத்தில் நடித்திருந்தார்.

இப்போது இந்தக் கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளது.

கடந்தாண்டின் கவனிக்கதக்க படைப்பான “சத்யா” படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தியும், நடிகர் சிபிராஜும் புதிய கதைக்களம் கொண்ட ஒரு திரைப்படத்தில் இணைகிறார்கள்.

முற்றிலும் புதுவித திரைக்கதை கொண்ட இப்படத்தினை தயாரிப்பாளர்கள் தனஞ்செயன் மற்றும் லலிதா தனஞ்செயன் தயாரிக்கிறார்.

இப்படத்தில் நடிகர்கள் சிபிராஜ், சத்யராஜ், நாசர் மற்றும் பலர் நடிக்க உள்ளார்கள். சைமன் கே.கிங் இசையமைக்க உள்ளார்.

படத்தின் மற்ற தொழில்நுட்பக்குழு உறுப்பினர்கள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.

இப்படம் படப்பிடிப்பு வரும் நவம்பரில் தொடங்கப்பட்டு ஒரே கட்டமாக ஜனவரியில் முடிக்கப்பட உள்ளது.

கிரியேட்டிவ் எண்டர்டெய்னர் சார்பில் தனஞ்செயன் மற்றும் லலிதா தனஞ்செயன் இப்படத்தினை தயாரிக்க உள்ளார்கள்.

Sathya team is back with Sathyaraj Sibiraj combo

படக்குழு விவரம் :

வகைமை : சஸ்பென்ஸ் திரில்லர்
நடிகர்கள் : சிபிராஜ், சத்யராஜ், நாசர் மற்றும் பலர்.
தயாரிப்பு நிர்வாகம் : சரவணன்.எஸ்.
தயாரிப்பு மேற்பார்வை : CA ஜி.கோகுல்
இசை : சைமன் கே.கிங்
இயக்கம் : பிரதீப் கிருஷ்ணமூர்த்தி
தயாரிப்பாளர்கள் : Dr. ஜி.தனஞ்செயன் மற்றும் லலிதா தனஞ்செயன்
தயாரிப்பு நிறுவனம் : கிரியேட்டிவ் எண்டர்டெயினர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ்.

மக்கள் தொடர்பு : தர்மதுரை.N & ரேகா

ரஜினி பட டைட்டிலுக்காக மோதும் தனுஷ் & ஜிவி. பிரகாஷ்; இதுக்கு என்டே இல்லையா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் சூப்பர் ஹிட் படத்தலைப்புகளை தங்கள் படங்களுக்கு வைப்பதை கோலிவுட் ஹீரோக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.

இதில் முக்கியமாக தனுஷ் மற்றும் ஜிவி. பிரகாஷ் இருவருக்குள்ளே போட்டியே நடக்கிறது எனலாம்.

மாப்பிள்ளை, பொல்லாதவன், தங்கமகன், படிக்காதவன் உள்ளிட்ட பல படத்தலைப்புகளை வைத்துக் கொண்டார் தனுஷ்.

எனக்கு இன்னொரு பேர் இருக்கு (பாட்ஷா பன்ச்), குப்பத்து ராஜா உள்ளிட்ட படத்தலைப்புகளை வைத்துக் கொண்டார் ஜிவி. பிரகாஷ்.

தற்போது எழில் இயக்கத்தில் இவர் நடித்து வரும் படத்திற்கு ஆயிரம் ஜென்மங்கள் என்ற படத்தலைப்பை வைத்துள்ளனர்.

இதுவும் ரஜினி படத்தலைப்பு தான் என்று நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை.

War between Dhanush and GV Prakash for Rajini movie titles

More Articles
Follows