தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் நாளை செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகியுள்ள நிலையில் இன்று பட குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
சென்னையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நடிகர்கள் விக்ரம் ஜெயம் ரவி பார்த்திபன் விக்ரம் பிரபு நடிகைகள் திரிஷா ஐஸ்வர்யா லட்சுமி, சோஃபிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் நடிகர் விக்ரம் பிரபு பேசும்போது…
“ஒரு குழந்தையை நாங்கள் பெற்றெடுத்துள்ளோம் அந்த குழந்தையை மக்களிடம் நாளை தரவிருக்கிறோம் .
அந்த குழந்தைக்கு கண்ணழகு.. காது அழகு.. மூக்கு அழகு என ஒவ்வொரு பகுதிகளாக பார்த்து சொல்வது போல இந்த படம் அமைந்துள்ளது. படத்தை பார்த்து அனைவரும் ஆதரவு தாருங்கள்” என பேசினார் விக்ரம் பிரபு.
பார்த்திபன் பேசும்போது…
” நானே வருவேன்.. நானே வருவேன்.. என அடம் பிடித்து தான் இன்று வந்தேன். இந்த படத்தை காண தஞ்சாவூர் செல்லலாம் என இருந்தேன்.
எனவே இன்றே தஞ்சாவூர் செல்ல நினைத்திருந்தேன். ஆனால் படக்குழு அழைத்த போது நானே வருவேன் என அடம்பிடித்து வந்தேன்.” என அவரது பாணியில் கலகலப்பாக பேசினார் பார்த்திபன்.
நடிகை திரிஷா பேசும்போது…
” நாங்கள் பொன்னின் செல்வன் படத்திற்காக பயணம் செய்த போது என் காஸ்ட்யூம் அழகாய் இருந்ததற்கு காரணம் என்னுடைய காஸ்டியூமர் தான். கண்டிப்பாக இந்த தருணத்தில் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்.
இந்த படத்திற்காக மணிரத்னம் அவர்கள் என்னை அனுகியதற்காக அவருக்கு நன்றி. முதன்முறையாக இத்தனை நட்சத்திரங்களுடன் ஒரு பிரம்மாண்டமான படத்தின் நடித்திருக்கிறேன். நீங்கள் இந்த படத்திற்கு ஆதரவு தர வேண்டும்” என பேசினார் த்ரிஷா.
சென்னை லீலா பேலஸில் நடைபெற்ற இந்த விழாவில் மணிரத்னம் சரத்குமார் கார்த்தி உள்ளிட்டார் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
