விக்ரம்-த்ரிஷா-கீர்த்தி இணையும் சாமி2 படத்தலைப்பு மாற்றம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹரி-விக்ரம் கூட்டணியில் உருவான சாமி படம் மாபெரும் வெற்றிப் பெற்றதையடுத்து தற்போது 14 ஆண்டுகளுக்கு பிறகு இதன் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது.

இதன் இரண்டாம் பாகத்தின் தலைப்பு சாமி 2 என்று கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் இதன் தலைப்பை சாமி ஸ்கொயர் என மாற்றியுள்ளனர்.

இப்படத்தையும் ஹரி இயக்க, விக்ரம் ஜோடியாக த்ரிஷா மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர்.

பாபி சிம்ஹா வில்லனாக நடிக்க, முக்கிய வேடத்தில் பிரபு, சூரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்க, ப்ரியன் ஒளிப்பதிவு செய்கிறார்.

மிலன் கலை இயக்குநராகவும், கனல் கண்ணன் சண்டை பயிற்சிகளையும் மேற்கொள்கிறார்.

இந்நிலையில் இன்று சரஸ்வதி பூஜை முன்னிட்டு இதன் சூட்டிங்கை தொடங்கியுள்ளனர்.

இந்த பூஜை படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Vikram Hari combo Saamy2 title has been changed to Saamy Square

இன்று தளபதி விஜய் ரசிகர்களுக்கு மெர்சல் விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மெர்சல் படம் அக்டோபர் 18ஆம் தேதி தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது.

முதன்முறையாக தென்னிந்திய சினிமாவில் இப்படத்திற்கு ட்விட்டரில் எமோஜி உருவாக்கப்பட்டு இருந்தது.

மேலும் இந்த டைட்டிலை யாரும் பயன்படுத்தக்கூடாது என டிரேட்மார்க்கும் பெறப்பட்டுள்ளது.

இதனால் இதன் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இந்நிலையில் இதன் அதிரிந்தி தெலுங்கு டீசரை இன்று மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளனர்.

Mersal telugu version Adhirindhi Teaser release updates

பிரேமம் படத்தின் 3 ஹீரோயின்களையும் விடாத தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாளம் மற்றும் தமிழில் சூப்பர் ஹிட் அடித்த படம் பிரேமம்.

இதில் நிவின்பாலியுடன் சாய்பல்லவி, அனுபமா பரமேஸ்வரன், மடோனா செபாஸ்டியன் என 3 நாயகிகள் நடித்திருந்தனர்.

இதன் நாயகிகள் மூவருமே ரசிகர்களை அதிகளவில் கவர்ந்தனர்.

இந்நிலையில் இப்பட நாயகிகளை தனுஷ் ஒவ்வொருவராக தன் படத்திற்கு புக் செய்து கொண்டு வருகிறார்.

கொடி படத்தில் தனுஷ் உடன் அனுபமா நடிக்க, பவர்பாண்டி படத்தில் மடோனா நடித்திருந்தார்.

தற்போது மாரி 2 படத்திற்காக சாய்பல்லவியை ஒப்பந்தம் செய்துள்ளார் தனுஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

Dhanush is targeting Premam three heroines

காலில் விழுந்தும் தன்ஷிகாவை அசிங்கப்படுத்திய டிஆர்; விழித்திரு குழுவுக்கு விஷால் கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மீரா கதிரவன் இயக்கியுள்ள விழித்திரு படத்தில் டி.ராஜேந்தர், கிருஷ்ணா, விதார்த், வெங்கட்பிரபு, தன்ஷிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படம் அடுத்த வாரம் அக்டோபர் 6ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் இப்படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது தன்ஷிகா பேசும்போது டிராஜேந்தர் பெயரை குறிப்பிட்டு பேசவில்லை.

இதனால் ஆவேசமடைந்த டிஆர். இறுதியாக பேசும்போது தன்ஷிகா அழும் அளவுக்கு தன் அடுக்குமொழியால் திட்டினார்.

அவர் காலில் விழுந்தும் நீ கட்டல சாரி. இப்போ சொல்ற சாரி எனவும் பேசினார்.

இச்சம்பவம் திரையுலகினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

இதுகுறித்து நடிகர் சங்க செயலாளர் விஷால் ஓர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்…

ஒரு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் தன் பெயரை சொல்லவில்லை என்பதற்காக இயக்குநர் டி.ராஜேந்தர் நடிகை தன்ஷிகாவை வன்மையாக கண்டித்ததும் தன்ஷிகா மன்றாடி மன்னிப்பு கேட்டும் கூட டிஆர் அவரை மன்னிக்காமல் தொடர்ந்து காயப்படுத்தியதையும் அறிந்தேன்.

டி.ராஜேந்தர் அவர்கள் ஒரு மூத்த கலைஞர். பன்முக வித்தகர். மேடையில் ஒரு நடிகை பேசும்போது ஒருவரது பெயரை மறப்பது என்பது இயல்பானதே… நானே சில மேடைகளில் அருகில் அமர்ந்திருந்தவர் பெயரை மறந்திருக்கிறேன். டிஆர் அவர்கள் சுட்டிக் காட்டிய பின்னர் சாய்தன்ஷிகா அவரது காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார்.

அப்படி மன்னிப்பு கேட்கும் தன் மகள் வயதையொத்த சாய்தன்ஷிகாவை பெருந்தன்மையாக மன்னித்திருக்கலாம். ஆனால் மென்மேலும் அவரைக் காயப்படுத்திய செயலை டிஆர் போன்ற ஒரு படைப்பாளியிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை.

திரையுலகில் ஒரு பெண் நடிகையாவது எத்தனை சிரமம் என்பது அனைவருக்கும் தெரியும். எனக்கு சாய்தன்ஷிகாவை நன்றாக தெரியும். அவரை அறிந்தவர்கள் அவர் அப்படி வேண்டுமென்றே அவமரியாதை செய்யும் குணம் கொண்டவர் அல்ல என்பதையும் அறிவர்.

அவர் மன்னிப்பு கேட்டும்கூட தொடர்ந்து காயப்படுத்தும் வகையில் வார்த்தைகளை பயன்படுத்திய டிஆர் அவர்களுக்கு நான் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன்.

இன்னொன்றையும் குறிப்பிட விரும்புகிறேன். இது நடிகர்கள் விதார்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோருக்கு… சக நடிகை மீண்டும் மீண்டும் அவமானப்படுத்தப்பட்டபோது எதிர்ப்பு தெரிவிக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை. நாகரீகம் கருதி அதனை கைதட்டி ரசிக்காமலாவது இருந்திருக்கலாம்.

விஷால்
தலைவர் – தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்
பொதுசெயலாளர் – தென்னிந்திய நடிகர் சங்கம்

Vishal condemn T Rajendar for insulting Dhanshika at Vizhithiru Press Meet

 

அட்லி இயக்கத்தில் பாட்ஷா 2; சூப்பர்ஸ்டார் ரியாக்சன் என்ன.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தன் சினிமா கேரியரில் 160 படங்களை கடந்துவிட்டாலும் அவராலும் அவரது ரசிகர்களாலும் மறக்கமுடியாத படம் பாட்ஷா.

சுரேஷ்கிருஷ்ணா இயக்கிய இப்படத்திற்கு தேவா இசையமைக்க, ஆர்.எம்.வீரப்பன் தயாரித்திருந்தார்.

இது ரிலீஸ் ஆகி 22 வருடங்களை கடந்துவிட்டாலும் இன்றும் ஆயுதபூஜைக்கு இப்படத்தில் உள்ள ஆட்டோக்காரன் பாடலை கேட்க முடிகிறது.

இந்நிலையில் மெர்சல் படத்தின் புரோமோசன் நிகழ்ச்சியில் அட்லி கலந்துக் கொண்டு பேசினார்.

அவர் பேசும்போது…

நான் ஷங்கர் சாரிடம் உதவி இயக்குனராக இருந்தபோது கிட்டதட்ட ஒரு வருடம் எந்திரன் சூட்டிங்கில் ரஜினி சாருடன் இருந்தேன்.

இருவருக்கும் நல்ல பழக்கம் ஏற்பட்டது. அன்பாக பழகினோம்.

நான் அவர் படத்தை இயக்கினால் பாட்ஷா 2 படத்தை இயக்க ஆசையாக இருக்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் இதற்கு சம்மதம் தெரிவிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Atlee wish to direct Baasha 2 with SuperStar Rajinikanth

வந்தேமாதரம் ஸ்டைலில் ஏஆர். ரஹ்மானின் மெர்சல் பாடல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிப்பில் அட்லி உருவாகியுள்ள மெர்சல் படம் இந்தாண்டு 2017 தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.

ஏஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தன் 100வது படைப்பாக உருவாக்கியுள்ளது.

தற்போது இப்படத்தின் புரோமோசன் நிகழ்ச்சிகளில் படக்குழுவினர் பங்கேற்று வருகின்றனர்.

இதில் உள்ள ஆளப்போறான் தமிழன் பாடல் உருவாக என்ன காரணம் என இயக்குனர் அட்லி தெரிவித்துள்ளார்.

அதில்… வந்தேமாதரம் போன்ற ஒரு தமிழ் ஆன்தம் பாடல் வேண்டும் என நினைத்தேன். எனவே ஏஆர். ரஹ்மானிடம் ஒரு கோரிக்கை வைத்தேன். அவரும் கொடுத்துவிட்டார்” என்றார்.

Alaporan Tamizhan song created based on Vande Matharam

More Articles
Follows