தனுஷ் பாடலுக்கு மாணவர்களுடன் ஆட்டம் போட்ட விக்ரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ், நடிகர் விக்ரம் உள்ளிட்டோர் ஏற்காடு மான்போர்ட் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் படித்தனர்.

இப்பள்ளியின் நூற்றாண்டு விழா நேற்று முதல் கொண்டாடப்படுகிறது.

இதற்காக இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டது.

எனவே பழைய மாணவர்களும் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.

இவ்விழாவின் கொண்டாட்டமாக விக்ரம், இன்றைய மாணவர்களுடன் நடனம் ஆட விரும்பினார்.

அதன்படி தனுஷ் நடித்த மாரி படத்தில் ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்டாராம்.

நிறைவு விழாவில் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளது.

முதல் நாள் வசூல்: மற்ற படங்களை காலி செய்த ‘கபாலி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த்-கலைப்புலி தாணு கூட்டணியில் உருவான கபாலி நேற்று உலகம் முழுவதும் வெளியானது.

ரஞ்சித் இயக்கிய இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.

இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை சந்தித்து வந்தாலும் படத்தின் வசூலில் எந்த விதமான பாதிப்பும் இல்லை என கூறப்படுகின்றது.

இப்படம் சென்னையில் மட்டும் ரூ 2 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகம் முழுவதும் ரூ. 20-24 கோடி வரை வசூலித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் மற்ற மாநிலங்கள் விவரம்…

  • ஆந்திரா+தெலுங்கானாவில் ரூ 10 கோடி
  • கேரளாவில் ரூ 4 கோடி
  • கர்நாடகாவில் ரூ 6 கோடி
  • மற்ற மாநிலங்கள் அனைத்து சேர்த்து ரூ 5 கோடி
  • இந்தியாவில் மட்டும் ரூ. 49-50 கோடி வரை வசூலித்துள்ளதாம்.

இவையில்லாமல் வெளிநாடுகளில்…

  • அமெரிக்காவில் ரூ 16 கோடி
  • மலேசியா, துபாய், சிங்கப்பூரில் ரூ 12 கோடி
  • மற்ற நாடுகள் ரூ 21-26 கோடி வரை
  • ஆக மொத்தம் உலக முழுவதும் ரூ. 104 கோடி வரை வசூல் செய்துள்ளது.

இதன் மூலம் இந்திய படங்களிலேயே முதல் நாளில் பாக்ஸ் ஆபிஸ் வட்டாரத்தில் பெரும் சாதனை படைத்துள்ளதாம்.

மேலும் வசூலில் பல சாதனைகளை படைக்கும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

‘கபாலி மாஸ் படம் அல்ல; கிளாஸ் படம்..’ குவியும் பாராட்டுக்கள்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவையே ஆச்சரியப்படுத்தும் வகையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் கபாலிதான்.

எதிர்ப்பார்ப்பு இருந்தளவு படத்திற்கு எதிர்மறை விமர்சனங்களும் வந்துள்ளன.

நேற்று படம் வெளியானதால் முற்றிலும் ரஜினி ரசிகர்களே பார்த்தனர்.

நாம் எதிர்பார்த்து வந்த ரஜினி படம் இது இல்லை என அதிருப்தி அடைந்துள்ளதாக தெரிவித்தனர். ஆனால் சிலர் ரஜினியை அவருக்கு ஏற்ற வயதில் பார்க்க முடிந்துது.

காளி, முள்ளும் மலரும் படத்தில் பார்த்த ரஜினியை இதில் நாங்கள் பார்த்தோம் என்றனர்.

இன்று மற்ற தரப்பு ரசிகர்களும் குடும்பங்களும் கூட்டம் கூட்டமாக வந்து கபாலியை பார்த்து வருகின்றனர்.

ரஜினிக்கு வயதாகி விட்டது. அவர் அமிதாப்பை போல வேடங்களை ஏற்பது நல்லது என்று கூறியவர்களுக்கு இப்படம் மிகவும் பிடித்துள்ளதாம்.

இதுவரை நாம் பார்க்காத ரஜினியை இதில் பார்க்க முடிகிறது. ஜெயிலில் இருந்து விடுதலை ஆகும் ஒரு நபர் மிகவும் பக்குவப்பட்டு நிதானமாகதான் செயல்படுவார்.

அதுமட்டுமில்லாமல் மனைவி, மகளை இழந்த ஒருவர் அதற்கான மன உளைச்சலில்தான் இருப்பார். எனவே அப்படியான ஒரு கேரக்டரைதான் ரஜினிகாந்த் இப்படத்தில் செய்து இருக்கிறார்.

அதை மிக இயல்பாக செய்து காட்டியிருக்கிறார். ரசிகர்கள் எதிர்பார்க்கும் மாஸ் படம் இல்லை. கபாலி ஒரு கிளாஸ் படம். இப்படத்தை பார்க்க பார்க்கதான் உங்களுக்கு பிடிக்கும்.

மேலும் முதல் காட்சி பரபரப்பு, எதிர்மறை விமர்சனங்கள் இவை ஓய்ந்தபின் படத்தை பார்த்தால் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என பாராட்டுக்கள் தெரிவிக்கின்றன.

பிறந்த நாளில் ரசிகர்களுக்கு சூர்யா சொன்ன செய்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சூர்யா இன்று தன் பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

எனவே இதனை முன்னிட்டு நேற்று தன் ரசிகர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

இந்நிகழ்வு சென்னையில் உள்ள ஸ்ரீ வாரி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில் தமிழகம், கேரளம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் மும்பையில் இருந்து வந்து சுமார் 10,000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் சூர்யா பேசியதாவது..

“என்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு இரண்டு வருட இடைவேளைக்கு பின் ரசிகர்களாகிய உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.

ரசிகர்கள் சிறப்பான முறையில் நற்பணிகளை செய்து வருவது எனக்கு பெருமையையும், சந்தோஷத்தையும் அளிக்கிறது.

ஆனால் எல்லோரும் முதலில் உங்கள் தாய், தந்தை, குடும்பம் மற்றும் நீங்கள் செய்யும் தொழிலுக்கு தான் முதலில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

அதன் பின்னர் நீங்கள் நற்பணி மன்ற பணிகளில் ஈடுபட்டால் போதும்.

இதுவரை 20,000 பேர் சூர்யா அரசு இரத்ததான வங்கிக்கு இரத்தம் வழங்கி உள்ளீர்கள். இது மிகப்பெரிய சாதனை ஆகும்.

இதனை பாராட்டி சென்னை அரசு மருத்துவமனையில் இருந்து நமக்கு வழங்கப்பட்டுள்ள சான்றிதழை பார்த்தேன்.

நிஜமாகவே இது பெருமைக்குரிய ஒன்றாகும்.

இந்த முறையும் நீங்கள் என்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு இரத்ததானம், அன்னதானம் மரக்கன்று நடுதல், கோவிலில் சிறப்பு பூஜை ஆகிய நற்பணிகளில் ஈடுப்பட்டு வருகிறீர்கள். எல்லோருக்கும் நன்றி.

இதே போல் நீங்கள் அனைவரும் குழந்தைகளின் கல்விக்கு உதவ வேண்டும்.

கல்வியால் ஒரு குடும்பம் மட்டும் அல்ல ஒரு நாடே பயனடையும்.” என்றார்.

விழாவிற்கு வந்த ரசிகர்கள் அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

சூர்யா வந்திருந்த ரசிகர்கள் அனைவரிடமும் புகைப்படம் எடுத்து கொண்டார். விழாவில் ராஜசேகர பாண்டியன் , ஞானவேல் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மீண்டும் விக்ரமுடன் இணையும் சிவகார்த்திகேயன்-நிவின் பாலி!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள இருமுகன் படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா ஆகஸ்ட் 2ஆம் தேதி நடைபெறுகிறது.

நயன்தாரா மற்றும் நித்யா மேனன் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ள இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

ஆனந்த் சங்கர் இயக்கியுள்ள இப்படத்தை ஷிபு தமீன்ஸ் தயாரித்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், நிவின்பாலி மற்றும் ராம் சரண் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ளவுள்ளனர்.

விக்ரம் இயக்கிய ‘ஸ்பிரிட் ஆப் சென்னை’ என்ற சென்னை மழை வெள்ளம் பற்றிய பாடலுக்கு சிவகார்த்திகேயன் மற்றும் நிவின்பாலி ஆகியோர் இணைந்தது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

‘கபாலி படம் ரஜினி ரசிகர்களை ஏமாற்றியது…’ – மனோ பாலா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய சினிமா ரசிகர்களைப் போல சினிமா நட்சத்திரங்களும் கபாலி படத்தை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.

லதா ரஜினிகாந்த், தனுஷ், சௌந்தர்யா ரஜினி உள்ளிட்டோர் ஆலபர்ட் தியேட்டரிலும், சித்தார்த், சிவகார்த்திகேயன், அனிருத், விக்னேஷ் சிவன் உள்ளிட்டோர் வெற்றி தியேட்டரிலும் இப்படத்தின் முதல் காட்சியை பார்த்தனர்.

இந்நிலையில் இப்படத்தை பார்த்த இயக்குனரும் நடிகருமான மனோபாலா தன் ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது..

“நீண்ட நாட்களுக்கு பிறகு ரஜினி சாரின் அழகான நடிப்பை பார்த்தேன். இப்படம் ரஜினி ரசிகர்களுக்கு திருப்தியில்லாமல் இருக்கலாம். ஏன் என்றால் இது ரஞ்சித் படம்” என பதிவிட்டுள்ளார்.

More Articles
Follows