தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
அட்லி இயக்கிய ‘ராஜா ராணி’ படத்தில் நயன்தாராவின் தோழியாக நடித்தவர் தன்யா பாலகிருஷ்ணன்.
இவர் பெரும்பாலும் பல படங்களில் நாயகியின் தோழியாகவே நடித்து வந்தார்.
விதார்த் நடித்த ‘கார்பன்’ படத்தில் நாயகியாகவும் வித்தியாசமான கேரக்டரில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் இவருக்கும் ‘மாரி’ பட இயக்குனர் பாலாஜி மோகனுக்கும் இந்த ஆண்டு தொடக்கத்தில் திருமண நடைபெற்றதாக தகவல்கள் வந்துள்ளன.
பாலாஜி மோகனுக்கு 2012இல் திருமணமாகி 2013இல் விவாகரத்து ஆனதும் குறிப்பிட்டத்தக்கது.
இந்த வருடத்தின் தொடக்கத்திலேயே பாலாஜி மோகனுக்கும் தன்யாவுக்கும் திருமணம் நடைபெற்று விட்டதாக நடிகை கல்பிகா நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
பாலாஜி & தன்யா தரப்பிலிருந்து இதுவரை இந்த செய்து குறித்து எந்த மறுப்பு தகவலும் வெளியாகவில்லை.
