விஜய் ரசிகர்களை ஏமாற்றிய ஏஆர். ரஹ்மான்-அட்லி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் என்றாலே உடனே நினைவுக்கு வருவது அவரது டான்ஸ்தான்.

அதுபோல் தான் நடிக்கும் படங்களில் பெரும்பாலும் ஒரு பாடலாவது பாடிவிடுவார்.

எனவே, அட்லி இயக்கத்தில்உருவாகிவரும் மெர்சல் படத்தில் நிச்சயம் விஜய் பாடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

காரணம்… மெர்சல் தயாரிப்பாளருக்கு இது 100வது படம்.

மேலும் விஜய்யும் ஏஆர். ரஹ்மானும் சினிமாவில் நுழைந்து தற்போது 25வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளனர்.

இத்தனை சிறப்புமிக்க படத்தில் விஜய் தன் சொந்த குரலில் பாடியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என ரசிகர்கள் காத்திருந்தனர்.

ஆனால் இப்படத்தில் விஜய் பாட வாய்ப்பை எதுவும் ஏஆர் ரஹ்மான் ஏற்படுத்தவில்லையாம்.

எனவே ரஹ்மான் மீது வருத்தத்தில் இருக்கிறார்களாம் விஜய் ரசிகர்கள்.

Vijay doesnot sung any song in Mersal movie

 

ரஜினி-அஜித்துடன் ஓவர்; விஜய்-சிவகார்த்திகேயனுக்காக கருணா வெயிட்டிங்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கலகலப்பு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமானவர் கருணாகரன்.

குறைந்த காலக்கட்டத்திலேயே மளமளவென நிறைய படங்களில் நடித்து விட்டார்.

ரஜினியுடன் லிங்கா, தனுஷ்டன் தொடரி, அஜித்துடன் விவேகம் படங்களில் நடித்துவிட்டார்.

மேலும் உப்பு கருவாடு என்ற படத்தில் ஹீரோவாகவும் நடித்துவிட்டார்.

ஆனால் விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் படங்களில் இதுவரை நடிக்கவில்லை.

இந்நிலையில் ரசிகர் ஒருவர் சிவகார்த்திகேயனுடன் நடிப்பீர்களா? எனக் கேட்டுள்ளார்.

அவருடன் நடிக்க காத்திருக்கிறேன் என ட்விட்டரில் பதிலளித்துள்ளார்.

அதனைக் கண்ட சிவகார்த்திகேயன், அது விரைவில் நடக்கும் என தெரிவித்துள்ளார்.

Karunakaran wish to act with Vijay and Sivakarthikeyan

பிக்பாஸ்ல யாரையும் தப்பா பேசாதே… சதீஷுக்கு சிம்பு அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ்நாட்டில் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்காதவர்களை அல்லது பேசாதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் போலிக்கிறது.

அந்தளவிற்கு நிகழ்ச்சி பாப்புலாராகிவிட்டது.

மக்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை இந்த நிகழ்ச்சி பற்றி தங்களை கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகைகள் ஸ்ரீபிரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகர்கள் ரோபோ சங்கர், நடன இயக்குனர் சதீஷ் ஆகியோர் தொடர்ந்து தங்கள் கருத்துக்களை ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

இதில் நடன இயக்குனரும் நடிகருமான சதீஷ், ஓவியா ஆதரிக்கும் வேளையில் மற்ற போட்டியாளர்களை ஏதாவது சொல்லி கமெண்ட் செய்து வருகிறார்.

முக்கியமாக ஜீலியை திட்டிக் கொண்டே இருக்கிறார்.

இதனை பார்த்த சிம்பு சதீஷுக்கு ஒரு ட்வீட் செய்துள்ளார்.

யாரையும் தவறாக பேச வேண்டாம். நமக்கு யாரை பிடிக்கிறதோ அவர்களுக்கு ஆதரவு கொடுப்போம்.

கண்டிப்பாக தவறுகளை அனைவரும் புரிந்துகொள்வார்கள் என பதிவிட்டுள்ளார்.

Dont scold anybody in Bigg Boss show Simbu advice to Dancer Sathish

மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன படத்திற்கு சர்ட்டிபிகேட் தர மறுக்கும் சென்சார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எக்ஸ்ட்ரா எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் வி. மதியழகன், ஆர். ரம்யா தயாரித்திருக்கும் ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’ படத்திற்கு சென்சார் மறுக்கப்பட்டிருக்கிறது.

இப்படத்தில் ‘திலகர்’ படத்தில் நடித்த துருவா ஹீரோவாகவும், இரண்டு பேர் நாயகிகளாகவும் நடித்துள்ளனர். ஒருவர் ஐஸ்வர்யா தத்தா. இன்னொருவர் அஞ்சனா.

இவர்களுடன் ஜேடி சக்ரவர்த்தி, சரண்யா பொன்வண்ணன், ராதாரவி, நாகிநேடு, மனோபாலா, அருள்தாஸ், ‘மைம்’கோபி, ‘சதுரங்க வேட்டை’ புகழ் வளவன், ‘நான் மகான் அல்ல’ராம் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படம் சென்சார் அதிகாரிகளால் தணிக்கை செய்ய பார்க்கப்பட்டது.

இதுகுறித்து இயக்குநர் ராகேஷ் கூறியதாவது,

‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’ இன்று சமூகத்தில் நடக்கும் சிறுசிறு குற்றங்களை மையப்படுத்திய கதையாகும்.

ஒவ்வொரு நாளும் பெண்களையும், குழந்தைகளையும் அச்சுறுத்தும் சமூக விரோத சம்பவங்கள் நிறைய நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது.

அதை செய்திகளாகப் படிக்கிறோம். தொலைக்காட்சிகளில் சிசிடிவியினால் பதிவு செய்யப்பட்ட வீடியோவாகப் பார்க்கிறோம். சமூக வலைதளங்களில் பரப்பி விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம். அங்கெல்லாம் சென்ஸார் தலையிடுவதில்லை.

அப்போதெல்லாம் அதனால் மக்களின் மனம் பாதிக்கப்படுகிறதா இல்லையா என யாரும் தடை விதிப்பதில்லை.

ஆனால் அதையே மக்களுக்கும் பெண்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாக எடுத்தால் பிரம்பை தூக்கிக்கொண்டு வந்துவிடுகிறது சென்ஸார்.

நான் சொல்லியிருக்கும் கதையை இங்கு நடக்கவில்லையென்றோ, அவை சமூக தளங்களில் வலம் வரவில்லையென்றோ சென்ஸார் அதிகாரிகளால் மறுக்கமுடியவில்லை. ஆனால் எந்த சான்றிதழும் தராமல் மறுக்க மட்டும் முடிந்திருக்கிறது.

இன்ன இன்னதான் படமாக்கப்பட வேண்டும் என்ற வழிகாட்டி முறையாவது சென்ஸார் போர்டால் முன்னாடியே தரப்பட்டிருந்தால் அப்படிப்பட்ட காட்சிகளையோ வசனங்களையோ படமாக்குவதைத் தவிர்க்கலாம். ஆனால் அப்படியொன்று இங்கு இல்லையே.

எடுத்த படத்தையே பார்க்க ஒருமாதம் இழுத்தடிக்கும் இவர்களிடம் ஸ்கிரிப்ட் கொடுத்து படிக்கச் சொல்லி ஓகே வாங்கி படம் பண்ணமுடியுமா? எடுத்த பின் நம் கருத்துச் சுதந்திரம் சிக்கி சின்னாப் பின்னமாகி துண்டு துக்கடாவாகி வெளி வருகிறது.

இப்போது என் படத்திற்கு சென்ஸார் ‘யு/ஏ’ அல்லது ‘ஏ’ சான்றிதழாவது தாங்க என்று வாதாடி, அழுதும் கூட கேட்டுப் பார்த்துவிட்டேன். எந்த சான்றிதழும் தரவில்லை. ரிவைஸிங் கமிட்டிக்கு போங்க என்று சொல்லிவிட்டார்கள்.

பெண்களுக்கான, சிறுவர்களுக்கான விழிப்புணர்வு படம் இது.

சிகரெட் பிடிக்காதீர்கள் என்பதை சிகரெட் பிடிப்பதுபோல் காட்டித்தானே எச்சரிக்கிறார்கள்? அதுபோல சமூக விரோத சம்பவங்களைக் காட்டித்தான் என் படத்தில் எச்சரிக்கை செய்துள்ளேன். அதற்கு ரிவைஸிங் கமிட்டியா?

ஒரு நல்ல படம் இப்படி பாடாய்ப் படணுமா? சமீபத்தில் ‘தரமணி’ படத்திற்கும் இப்படியொரு கொடுமை நடந்திருக்கிறது.

படைப்பாளிகளின் கருத்துச் சுதந்திரம் இந்த சினிமாவில் மட்டும் இவ்வளவு கடுமையாக தாக்கப்படுகிறது. இதற்கு வழிகாட்டும் முறையையாவது உருவாக்கித் தாருங்கள் என மிகுந்த மன வருத்தத்துடன் குறிப்பிட்டார் இயக்குநர் ராகேஷ்.

படத்தின் ஒளிப்பதிவை பிஜி முத்தையா கையாள, இசையை ‘மாலைப்பொழுதின் மயக்கத்திலே’,’உறுமீன்’ படத்தின் இசையமைப்பாளர் அச்சு மேற்கொள்கிறார், எடிட்டிங்கை ஷான் லோகேஷ் கவனிக்க, பாடல்களை பா.விஜய், மீனாட்சி சுந்தரம் எழுத, கலையை ரெம்போன் பால்ராஜ் (பாபநாசம், தனி ஒருவன்) செய்ய, சண்டைப் பயிற்சி செய்துள்ளார் விமல்.

Censor refuse to give certificate for Marainthirunthu Paarkum Marmam Enna

காதலின் தீபம் ஒன்று பட டீசரை வெளியிட்ட இயக்குனர் VZ துரை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2016 ஆம் ஆண்டு ‘ராடம் பிலிம் பெஸ்டிவெல்’ குறும்பட போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்ற சிறந்த குறும்படம் ‘அசரீரி’.

அந்த படத்தை இயக்கிய ஜி.கே என்பவரின் அடுத்த குறும்படமே ‘காதலின் தீபம் ஒன்று ‘.

இயக்குனர் ஜி.கே அதர்வா,ஸ்ரீ திவ்யா, நரேன் நடிக்கும் பரணேஷ் என்பவர் இயக்கத்தில் உருவாகும் ‘ஒத்தைக்கு ஒத்த’ படத்தில் இணை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

பொதுவாகவே காதலில் தோற்ற இளைஞன் வாழ்க்கையில் மிகப்பெரிய இடத்தை பிடித்து பல சாதனைகளை புரிவது போலவும் இதனை நினைத்து முன்னாள் காதலி வருத்தப்படுவது போலவும் கதைக்களம் அமைப்பது வழக்கம். ஆனால் யதார்த்தம் அப்படி மட்டும் இருப்பதில்லை என சொல்லும் படமே இந்த ‘காதலின் தீபம் ஒன்று.

இதில் இந்தியாவை சேர்ந்த ஜப்பான் தொழிலதிபர் சுரேஷ் நல்லுசாமி என்பவர் கதாநாயகனாக நடித்து, தயாரித்துள்ளார்.

கதாநாயகன் சுரேஷ் அவர்களுக்கு இது முதல் படம் என்றாலும் மிக சிறப்பாக நடித்துள்ளார் என பாராட்டுகிறார் இயக்குனர் ஜி.கே.

நடிகர்கள் : சுரேஷ் நல்லுசாமி, ஜனனி ரத்தினம் & தீபா நடராஜன்
இசை : ஆண்டன் ஜெப்ரின்
ஒளிப்பதிவு: பிரவீன் குமார்
பாடல்கள்: நாச்சியம்மை விஜய்
படத்தொகுப்பு: ராகுல்
இயக்கம் : ஜி.கே

இந்த படத்தின் டீசரை இயக்குனர் VZ துரை அவர்கள் வெளியிட்டு படக்குழுவினரை மனதார பாராட்டினார்.

Director VZ Durai launched Kadhalin Dheepam Ondru Teaser

 

80 லட்சத்தை விளம்பரமின்றி விவசாயிகளுக்கு கொடுத்த தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு நாட்டின் முதுகெலும்பு விவசாயம் என்பார்கள். ஆனால் தற்போது நம் நாட்டில் அந்த முதுகெலும்பே வளைந்துள்ளது எனலாம்.

அதிலும் தமிழ்நாட்டு விவசாயிகளின் நிலைமை மிகவும் மோசம்.

கடந்த 4 மாதங்களாக இவர்களின் பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய கோரி வினோதமான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

தினம் ஒரு விவசாயி தற்கொலை என்ற செய்திகளை பார்க்க முடிகிறது.

ஒரு சில பிரபலங்கள் இவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் வறட்சியால் பலியான 125 குடும்பங்களை தேர்ந்தெடுத்து ஒரு குடும்பத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் வீதம் நிதி உதவி செய்துள்ளார் தனுஷ்.

இதற்காக கிட்டதட்ட ரூ. 80லட்சம் முதல் ஒரு கோடி வரை செலவு செய்ய செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தனுஷின் நண்பரும் இயக்குனமான சுப்ரமணிய சிவா மற்றும் தனுஷ் ரசிகர்கள் இதற்கான பணிகளில் ஈடுப்பட்டுள்ளனர்.

இந்த தொகையை யார் மூலமாகவும் கொடுக்காமல், முதல் கட்டமாக 125 குடும்பங்களை நேரில் வரவழைத்து கொடுத்துள்ளார்.

ஊடகங்களுக்கும் இதுகுறித்து தனுஷ் எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்த உதவியை விளம்பரப்படுத்த வேண்டாம் எனவும் தனுஷ் தரப்பில் கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

Dhanush helped 125 farmers family and sponsor Rs 80 lakhs to them

 

More Articles
Follows