விஜய்-62வது படம்.. இன்னொரு தலைவா..? அடுத்த மெர்சல்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, பழ கருப்பையா உள்ளிட்டோர் நடித்து வரும் தளபதி 62.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

இப்படம் ஒரு அரசியல் படமாக உருவாகி வருவதால், அரசியல் காட்சிகள் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு வருகிறது.

பழ. கருப்பையா மற்றும் ராதாரவி இருவரும் அரசியல்வாதிகளாக நடிக்கிறார்கள்.

எனவே அவர்களின் பேனர்கள், கட் அவுட்கள் அடங்கிய அரசியல் கட்சிகள் இணைப்பு மாநாடு ஒன்று நடக்கும் விதத்தில் அந்த பேனர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஏற்கெனவே விஜய் படங்களில் அதிகம் அரசியல் பேசப்பட்டு வருகிறது.

இதனால்தான் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் தலைவா படத்திற்கு பெரும் பிரச்சினைகள் வந்தது. இப்படம் தோல்வியை சந்தித்தது.

ஆனால் மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களுக்கு எதிர்ப்பு வந்தது. ஆனால் அது எதிர்மறையாகி படத்திற்கு பெரும் விளம்பரம் கிடைக்க, வெற்றி பெற்றது.

இதன் அடைப்படையில் பார்த்தால் விஜய் 62 படம் இன்னொரு தலைவா..? அடுத்த மெர்சலா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தமிழக அரசுக்கு மக்கள் தண்டனை கொடுப்பார்கள்.. கமல் ஆவேசம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தூத்துக்குடி, ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு தொடர்ந்து கண்டனங்களை பதிவு செய்து வருகிறார் கமல்ஹாசன்.

பாதிக்கப்பட்டவர்களை தூத்துக்குடி மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்..

தூத்துக்குடியில் பதற்றம் ஓயவில்லை. மக்களை மிரட்டுவது அரசுக்கு அழகல்ல.

இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று ஆட்சியில் இருப்பவர்கள் பதவி விலக வேண்டும். அதுவே அவர்களுக்கான குறைந்தபட்ச தண்டனையாகவே இருக்கும்.

விரைவில் இதை விட பெரிய தண்டனையை மக்களுக்கு அவர்களுக்கு கொடுப்பார்கள்.” என்றார்.

இதனிடையே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை கமல் சந்தித்து பேசியுள்ளதால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

144 தடை இருக்கும் போது 5 பேருக்கு மேல் மருத்துவமனைக்கு செல்ல கூடாது என்ற நிலையில் கமல் 20 பேருடன் மருத்துவமனைக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா-ன்னு சொன்னவங்க இப்போ கிளம்பலய்யாம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹெவன் எண்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பில் இயக்குநர் ரஜாக் இயக்கியுள்ள படம் *’கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’*

கே பாக்யராஜ், ஆர் சுந்தர்ராஜன், ஆர் வி உதயகுமார், அனு மோகன், ராஜ் கபூர், மன்சூர் அலிகான் மற்றும் பலர் நடிப்பில் உருவான இத்திரைப்படம் மே 25 (நாளை) திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது போதுமான திரையரங்குகள் கிடைக்காத காரணத்தினால் இந்த படத்தின் வெளியீட்டு தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சோகம்; 2.0 டீசரை ஒத்தி வைக்க ரஜினி உத்தரவு..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைகா நிறுவனம் தயாரிப்பில் ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் நடிக்க, 3D தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் படம் 2.0.

ஷங்கர் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இப்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது.

எனவே இப்படத்தின் டீசரை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளனர்.

மும்பையில் இம்மாதம் 27-ஆம் தேதி நடைபெறவுள்ள ஐபில் கிரிக்கெட் இறுதிபோட்டியில் இதன் டீசர் வெளியாகவிருந்தது.

தற்போது தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சோகம் தமிழகத்தில் நிலவிவருவதால் இந்த நேரத்ததில் 2.0 டீசரை வெளியிட வேண்டாம் என ரஜினி தரப்பிலிருந்து லைகா நிறுவனத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

எனவே டீசர் இப்போது வெளியாக வாய்ப்பில்லை.

அராஜக தமிழக அரசை மன்னிக்கவே முடியாது.. – கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், பத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

பலர் காயத்துடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து…

“ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து அமைதி வழியில் போராடிய அப்பாவிப் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி, பத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருப்பது தாங்க முடியாத துயரத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகை, தங்கள் வாழ்வை அழித்துவிடுமோ என்கிற அச்சத்தில் போராடிய மக்களுக்கு, அரசும் அதிகாரிகளும் உறுதுணையாகத்தான் நின்றிருக்க வேண்டும்.

ஆலைக் கழிவால் உயிருக்கு ஆபத்து எனப் போராடிய மக்களின் உயிரை, அரசின் நடவடிக்கையே பறித்திருப்பது எந்த விதத்திலும் நியாமற்றது; நேர்மையற்றது.

எவ்வித அரசியல் தலையீடுகளுக்கும் இடம் கொடுக்காமல், தன்னெழுச்சியாகத் திரண்ட மக்களைக் கொஞ்சமும் ஈவு இரக்கமற்று சுட்டுக் கொன்றிருப்பது, நாம் ஜனநாயக நாட்டில்தான் வாழ்கிறோமா என்கிற கேள்வியை எழுப்பியிருக்கிறது.

மக்களைக் காப்பதுதானே காவல்துறையின் முதல் கடமை. அப்படியிருக்க, காவல்துறையினரே பத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்களைக் குருவி சுடுவதுபோல் சுட்டு வீழ்த்தி இருப்பது எந்த விதத்தில் நியாயம்? மனசாட்சி கொண்ட எவருடைய மனதையும் உலுக்கக்கூடிய கொடூரத்தை அரசே செய்திருப்பது மன்னிக்க முடியாதது.

மண்ணுக்கும் மக்களுக்குமான போராட்டத்தில் உயிர்விட்ட ஒவ்வொருவருக்கும் என் கண்ணீர் அஞ்சலியைச் செலுத்துகிறேன்.

சுற்றுச்சூழலைக் காக்க உயிர்விட்ட அத்தனை பேரையும், அவர்களுடைய தியாகத்தையும் நாளைய வரலாறு கல்வெட்டுக் கணக்காக நினைவில் வைத்திருக்கும். அதேநேரம், நல்ல மூச்சுக் காற்றுக்காகப் போராடிய மக்களின் மூச்சை அரசே நிறுத்தியிருக்கும் கொடூரத்தை, மக்கள் ஒருபோதும் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள். நடந்த பெரும் துயரத்துக்கு, அரசு உடனடியாகப் பொறுப்பேற்க வேண்டும்.

தூத்துக்குடி மாவட்ட மக்களின் துயரங்களுக்குத் தீர்வாக, நிரந்தரமாக ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும். சுட்டுக் கொல்லப்பட்ட அத்தனை பேரின் குடும்பங்களும், அந்தத் துயரில் இருந்து மீளவும், சிக்கலின்றி வாழவும் அரசு உடனடியாக அவர்களின் தேவை அறிந்து ஓடோடிப்போய் உதவ வேண்டும். போராடுவது, மக்களின் அடிப்படை உரிமை. அதனை அடக்கவும் ஒடுக்கவும் காட்டுகிற அக்கறையை, அதற்கான தீர்வுக்கு இனியாவது அரசு காட்ட வேண்டும். ‘மக்கள் போராட்டக் களத்துக்கே வரக்கூடாது’ என அரசு நினைப்பது தவறு.

மக்களின் தேவைகளைத் தீர்த்து வைக்கிற நடவடிக்கைகளைத்தான் மேற்கொள்ள வேண்டுமே தவிர, அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விடுகிற அராஜகங்களை ஒருபோதும் செய்யக்கூடாது” என கார்த்தி தெரிவித்துள்ளார்.

விமர்சகருக்கு பொறுப்பு வேண்டும்; ப்ளு சட்டை மீது காளி டைரக்டர் கிருத்திகா கடுப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் ஆண்டனி நடிப்பில் அண்மையில் வெளியான படம் காளி.

இப்படத்தை பலரும் பல்வேறு விதமாக விமர்சனம் செய்தனர்.

ப்ளு சட்டை மாறன் என்பவரும் வழக்கம்போல விமர்சனம் செய்தார்.

அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இயக்குனர் கிருத்திகா விளக்கம் கொடுத்துள்ளார்.

அவர் கூறுகையில், ஒரு படத்துக்கு விமர்சனம் என்பது முக்கியம் ஆனால் படத்தை நன்கு ஆராய்ந்து இது நல்ல இருந்தது,

இது ஒர்கவுட் ஆகவில்லை என்று சூட்டிக்காட்டினால் தானே எங்களுக்கு தெரியும், காளி படத்தில் மூன்று கதையிலும் ஒரு விஷயத்தை கனெக்ட் செய்கிற மாதிரி வைத்திருப்பேன்.

இதுபற்றி எந்த விமர்சகரும் கூறவில்லை, இடது கை உடையவர் பற்்ற்்றி

சொல்ருப்பேன்,

பார்வதி என்ற ஒரு கதாபாத்திரத்தை பற்றி சொல்லிருப்பேன், டின்ஏ பற்றி சொல்லிருப்பேன் என பல விஷயங்கள் உள்ளது.

விமர்சனம் பண்ணும்போது ஒரு பொறுப்பு வேண்டும்.

உங்கள் விமர்சனம் எல்லாம் ஒரே மாதிரி உள்ளது என்று தனது வருத்தத்தை கிருத்திகா தெரிவித்துள்ளார்.

More Articles
Follows