விஜய் பிறந்தநாளை தவிர்த்து மற்ற வியாழனில் ‘விவேகம்’ இசை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை.

இப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக்கை விஜய் பிறந்தநாளில் (ஜீன் 22, வியாழக்கிழமை) வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் அனிருத் இசையமைத்துள்ள விவேகம் படத்தின் பாடல்களை ஜீன் மாதத்தில் வெளியிடவிருக்கிறார்களாம்.

அஜித்தின் வியாழக்கிழமை சென்டிமெண்டை பார்க்கும் பட்சத்தில் ஜீன் மாதம் ஐந்து வியாழக்கிழமைகள் (1, 8, 15, 22, 29 தேதிகள்) வருகிறது.

அதில் விஜய் பிறந்தநாளை தவிர்த்து மற்ற வியாழக்கிழமைகளில் ஏதேனும் ஒரு தினத்தை தேர்ந்தெடுத்து அன்று வெளியிட உள்ளதாக சொல்லப்படுகிறது.

Vijay 61 first look and Vivegam audio launch release date updates

தனுஷ் தயாரிப்பது ரஜினியின் 161வது படமல்ல… எஸ்பி. முத்துராமன் தகவல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த நாட்களில் ஷங்கர் இயக்கியுள்ள 2.0 படத்தின் டப்பிங் பணிகளில் ரஜினி கலந்து கொண்டார்.

இதனையடுத்து விரைவில் பா. ரஞ்சித் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இப்படத்தை தன் வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பாக தனுஷ் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இப்படத்தின் தொடர்பாக தகவல்களை பகிரும்போது இது ரஜினியின் 161வது படம் என பரவலாக பேசப்பட்டது.

இந்நிலையில் இன்று ரஜினி ரசிகர்கள் போட்டோ எடுக்கும் நிகழ்வு சென்னையில் நடைபெற்று வருகிறது.

இதில் கலந்துக் கொண்ட இயக்குனர் எஸ்.பி. முத்துராமன் பேசும்போது…

அடுத்து ரஜினி நடிப்பில் உருவாகவுள்ள படம் தலைவர் 164. அதில் 161வது படமல்ல.

அவர் மென்மேலும் படங்களில் நடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றார்.

ரஜினி நடித்த 25 படங்களை இயக்கியவர் எஸ்பி முத்துராமன் என்பது குறிப்பிடத்தக்கது.

Rajini Dhanush Ranjith combo is not Thalaivar 161 movie says SP Muthuraman

‘அந்த சூழ்நிலையில் மட்டும் முன்வைத்த காலை பின் வைப்பேன்..’ ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த சில வருடங்களாகவே ரஜினியை சந்தித்து அவருடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

அதன்படி 12 வருடங்களுக்கு பிறகு இன்றுமுதல் (மே 15, 2017) 5 நாட்களை வரை ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் தனித்தனியாக போட்டோ எடுத்துக் கொள்கிறார் சூப்பர் ஸ்டார்.

இதற்கான நிகழ்வில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு தற்போது பேசி வருகிறார்.

அவர் பேசியதாவது…

முன்பெல்லாம் படத்தின் வெற்றி விழாவில் ரசிகர்களாகிய உங்களை சந்திப்பேன்.

அண்மைகாலமாக அது முடியாமல் போய்விட்டது. கோச்சடையான் படம் சரியாக போகவில்லை.

கபாலி படம் நன்றாக ஓடியது. ஆனால் சில காரணங்களால், வெற்றி விழா நடத்த கூடிய சூழ்நிலை அப்போது இல்லை.

2.0 டப்பிங் பணிகள் தற்போது நடக்கிறது. வருகிற மே 28ஆம் தேதி அடுத்த படத்தின் சூட்டிங் தொடங்குகிறது.

சில நாட்களுக்கு முன்பு உங்களை சந்திக்கவிருந்தேன். அதன்பின் அது ரத்தானது.

அதன்பின்னர் இலங்கை பயணம் ரத்தானது.

உடனே ரஜினிகாந்த் எப்போதும் இப்படிதான். எந்தவொரு முடிவையும் சரியாக எடுக்க மாட்டார். மனசை மாத்திக்கிட்டே இருப்பார். பின் வாங்குவார். பயப்படுவார் என்றார்கள்.
நான் ஒரு விஷயத்தை முடிவு செய்ய நிறைய யோசிப்பேன். முடிவு எடுத்த பிறகு சில பிரச்சினைகள் வரலாம்.

ஒரு குளத்தில் காலை வைத்துவிட்டேன். அதன்பின்னர்தான் அங்கு முதலைகள் உள்ளது என்று தெரிய வந்தது.

அதற்காக முன் வைத்த காலை பின் வைக்க மாட்டேன் என்று முரட்டு தைரியம் அங்கே கூடாது.

வைத்த காலை அந்த குளத்தில் இருந்து எடுக்கத்தான் வேண்டும்.

நம்மள பத்தி பேசுறவங்க பேசிக்கிட்டுதான் இருப்பாங்க” என்றார்.

I will keep my steps backward only on critical situations says Rajinikanth in Fans meeting

‘படம் ரிலீஸின் போது பரபரப்பு ஏற்படுத்த அவசியம் எனக்கில்லை..’ ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மே 15 ஆம் தேதி இன்றுமுதல் ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார் ரஜினிகாந்த்.

இச்சந்திப்பு தற்போது ராகவேந்திரா மண்டபத்தில் நடைபெற்று வருகிறது.

போட்டோ எடுப்பதற்கு முன் ரஜினிகாந்த் பேசினார். அப்போது அவர் கூறியதாவது…

என் உடன் பிறவா சகோதரர். என் மற்றொரு அண்ணன் எஸ்பி முத்துராமன் அவர்களிடம் இருந்துதான் நான் ஒழுக்கத்தை கற்றுக் கொண்டேன்.

அவர் இயக்கிய ஆறிலிருந்து அறுபதுவரை படத்தில்தான் முதன்முறையாக ஹீரோவாக நடித்தேன்.

அப்போது நான் சூட்டிங்கு லேட்டாக செல்வேன். ஒரு நாள் என்னை கூப்பிட்டு, நீ இப்போ ஹீரோ.

நீ லேட்டா வந்தால், எல்லாரும் லேட்டாக வருவார்கள். நீ முதலில் வரவேண்டும் என்றார்.

அன்றுமுதல் இன்றுவரை சூட்டிங் ஸ்பாட்டுக்கு முதல் ஆளாக நான் செல்கிறேன்.

என்னுடைய படங்கள் ரிலீஸ் ஆகும் சமயத்தில் நான் பரபரப்புக்காக ஒன்றை செய்கியேன் என்கிறார்கள்.

அப்படி செய்ய வேண்டிய அவசியம் எனக்கில்லை.
என்னுடைய ரசிகர்கள், என்னை வாழவைக்கும் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது.

என் படத்தை நம்பி நீங்கள் வருவீர்கள். முடிந்தவரை உங்களை ஏமாற்றாமல் நல்ல படங்களை கொடுத்து வருகிறேன்.” என்று கூறினார் ரஜினி.

Superstar Rajini speech at fans meeting Photo shoot

‘அரசியல் பொறுப்பை கடவுள் கொடுத்தால் நேர்மையாக இருப்பேன்..’ ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று (மே 15) ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்.

அதற்கான நிகழ்வு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.

இதற்கான விழாவில் இயக்குனர் எஸ்பி முத்துராமன் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார்.

அப்போது ரசிகர்களிடையே ரஜினிகாந்த் பேசியதாவது….

எஸ்பி முத்துராமனை சந்திக்கும் என் ரசிகர்கள் என்னை சந்திக்க ஆசைப்படுவதை அவரிடம் தெரிவித்துள்ளனர். அதன்படி இப்போது 12 ஆண்டுகளுக்கு பிறகு உங்களை சந்திக்கிறேன்.

நிறைய ரசிகர்கள் எனக்கு கடிதம் எழுதறாங்க. நாம எப்ப முன்னேறுறது? நமக்கு முன்னால பிறந்தவங்கள்லாம் கவுன்சிலர், மினிஸ்டர்னு கார்ல போறாங்களேன்னு பேட்டி கொடுக்கிறாங்க. ஆசைப்படறாங்க.

அவங்க ஆசை தப்பில்லை. அதை அரசியல் பதைவியை வச்சு பணம் சம்பாதிக்கணும்னு நினைக்கிறதை பார்த்தா, வருத்தப்படறதா, கோபப்படறதா, சிரிக்கிறதான்னு தெரியலை.

நான் அப்பவும் சொல்றேன், இப்பவும் சொல்றேன். அந்த ஆண்டவன் கையில்தான் என் வாழ்க்கை இருக்கு.

அவன் கையில நான் ஒரு கருவி. அவன், நடிகனா என்னை பயன்படுத்தறான். நான் நடிச்சுட்டிருக்கேன். நாளைக்கு என்னவாக பயன்படுத்தறானோ, அதுக்கு நியாயமா, உண்மையா இருப்பேன்.

இப்ப மக்களை மகிழ்விக்கணும். பண விஷயங்கள் அப்புறம்தான். அதே போல, என்ன பொறுப்பை கொடுத்தாலும் நியாயமா, சத்தியமா இருப்பேன். அது என்னன்னு எனக்கு தெரியாது. அது கடவுள் கையிலதான் இருக்கு.

அரசியல் ஆசை இருக்கிற என் ரசிகர்களுக்கு இப்பவே சொல்லிக்கிறேன். நான் அரசியலுக்கு வரலைன்னு சொன்னா ஏமாந்திடுவீங்க.

அப்படி அரசியலுக்கு வரவேண்டிய சூழல் ஏற்பட்டால், அந்த மாதிரி ஆட்களை கிட்ட கூட சேர்க்க மாட்டேன். நுழைய கூட விடமாட்டேன். இப்பவே ஒதுங்கிடுங்க. இவ்வாறு ரஜினிகாந்த் பரபரப்பாக பேசினார்.

If God allows me to enter Politics i will be honest says Rajinikanth

‘இறந்தபின் அம்மாவை போற்றுவதில் பலனில்லை…’ ராகவா லாரன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகரும் நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் சென்னை அம்பத்தூர் பகுதியில் ஸ்ரீராகவேந்திரருக்கு கோயில் கட்டியிருக்கிறார்.

தற்போது அந்த கோயிலுக்கு எதிராக, தனது அம்மா கண்மணிக்கும் ஒரு கோயில் கட்டியுள்ளார்.

இந்த உலகத்தில் எவரும் தன் அம்மாவுக்கு இதுவரை கோயில் கட்டியதாக தெரியவில்லை.

அதுவும் தன் தாய் உயிரோடு இருக்கும்போது, கோயில் கட்டிய முதல் நடிகர் இவர் மட்டும்தான்.

அவர் அம்மா கண்மணியின் சிலை 5 அடி உயரத்திலும், காயத்ரி தேவியின் சிலை 13 அடியிலும் நிறுவியுள்ளார்.

இன்று நடந்த கோயில் திறப்பு விழாவில் சூப்பர் சுப்பராயன், தயாரிப்பாளர் டிரைடன்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன், இயக்குனர் சாய்ரமணி, லாரன்சின் தம்பி எட்வின் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த லாரன்ஸ் கூறியதாவது…

அம்மா இருக்கும்போதே அவருக்கு கோயில் கட்டியது மகிழ்ச்சியளிக்கிறது.

அம்மா இறந்தபின் அவரை போற்றுவதில் எந்த பயனும் இல்லை.

இந்த கோயில் உலகத்தில் உள்ள அனைத்து தாய்களுக்கும் சமர்ப்பணம்.

48 நாட்கள் முடிந்த பிறகு சினிமா மற்றும் என் நண்பர்களை அழைத்து ஒரு விழா நடத்தவிருக்கிறேன்.” என தெரிவித்தார்.

Raghava lawrence opened new temple for his mother Kanmani

More Articles
Follows