கல்யாணம் செய்துக் கொள்ள நயன்தாராவிடம் கெஞ்சும் விக்னேஷ்சிவன்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கோலமாவு கோகிலா’.

இப்படத்தில் இடம் பெற்றுள்ள ‘எனக்கு கல்யாண வயசு வந்திடுச்சி டி’ என்ற பாடல் நேற்று வெளியானது.

அனிருத் இசையில் உருவாகியுள்ள இப்பாடலுக்கு சிவகார்த்திகேயன் பாடல் எழுதியுள்ளார்.

இந்த பாடல் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த பாடலை தன் இன்ஸ்ட்ராகிராமில் பதிவிட்டுள்ள நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் ‘எனக்கு கல்யாண வயசு வந்திடுச்சி டி’ என்று பதிவு செய்து, வெய்ட் பண்ணவா என்று கேள்வி கேட்டிருக்கிறார்.

மேலும் இருவரின் பெயர்களின் முதல் எழுத்துடன் கூடிய தொப்பியை அணிந்து கொண்டிருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.

என்னம்மா நயன்தாரா இப்படி கெஞ்சுராரே…? எப்போ கல்யாணம்..?

காலா விஷயத்தில் கடுப்பேற்றும் தனுஷ்; ரஜினி ரசிகர்கள் கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கபாலியை தொடர்ந்து ரஜினி, ரஞ்சித் கூட்டணியில் உருவாகியுள்ள படம் காலா.

தனுஷ் தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இப்படம் ஒரே நேரத்தில் தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிகளில் ஜீன் 7ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

ஆனால் இதன் தமிழ் பதிப்பின் பாடல்கள் மட்டும் சென்னையில் வெளியிடப்பட்டது.

அதற்கு மிகப்பிரம்மாண்டமான விழாவும் நடத்தப்பட்டது.

ஆனால் ரஜினிக்கு உலகமெங்கும் ரசிகர்கள் உள்ளனர். அப்படி இருக்கையில் காலா படத்தின் தெலுங்கு பதிப்புக்கு எந்த விழாவும் நடத்தப்படவில்லை.

இறுதியாக லிங்கா பட இசை வெளியீட்டு விழாவில்தான் ரஜினியை நாங்கள் சந்தித்தோம். அதன்பின்னர் ஆந்திராவில் ரஜினி பட விழா எதுவும் நடக்கவில்லை.

மேலும் தயாரிப்பாளர் தனுஷ் காலா விளம்பர வேலைகளில் சரியாக திட்டமிட்டு செயல்படவில்லை என கூறி வருகின்றனர் தெலுங்கு தேசத்த சேர்ந்த ரஜினி ரசிகர்கள்.

ரஜினியின் காலா ரிலீஸ் தேதியில் மாற்றமா..? தனுஷ் விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ படம் வருகிற ஜூன் 7-ந் தேதி வெளியாகவுள்ளது.

ரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தை தனுஷ் தயாரித்துள்ளார்.

அண்மையில் இதன் பாடல் வெளியீட்டு விழா மிகப்பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.

இந்நிலையில் திடீரென்று காலா படம் அடுத்த மாதம் ரிலீஸ் ஆகாது எனவும் தயாரிப்பு தரப்பு விளம்பரங்களில் ஈடுபடவில்லை என சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.

இதனால் காலாவை எதிர்பார்த்தவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.

இதற்கு விளக்கம் அளித்கும் வகையில் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் “வதந்திகளை நம்ப வேண்டாம். காலா படம் திட்டமிட்டபடி ஜூன் 7-ந் தேதி திரைக்கு வரும்” என தெரிவித்துள்ளார்.

நயனின் சினிமா காதலுக்கே கடுப்பாகும் விக்னேஷ்சிவன்; அஜித்-சிவகார்த்திகேயன் உஷார்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நயன்தாரா நடிப்பில் லைகா தயாரித்துள்ள படம் ‘கோலமாவு கோகிலா’.

நெல்சன் இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, முக்கியி வேடத்தில் யோகி பாபு நடித்துள்ளார்.

இப்படத்தில் இடம் பெற்றுள்ள ‘எனக்கு கல்யாண வயசு வந்திடுச்சி டி’ என்ற பாடலை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார். இந்த பாடல் நேற்று வெளியானது.

இந்த பாடலை தன் ட்விட்டரில் பகிர்ந்துள்ள டைரக்டர் விக்னேஷ் சிவன் அவர்கள் நயன்தாராவை பெயரை குறிப்பிடும்போது காதல் எமோஜியை போட்டு, யோகிபாபு பெயரை பதிவிட்டு குத்து + கோபம் எமோஜிளை பதிவிட்டுள்ளார்.

சினிமாவில் கூட இனி நயன்தாராவிடம் யாரும் காதலை சொல்லக்கூடாது போல… ஹீரோஸ் எல்லாம் எச்சரிக்கையாக இருங்கப்பா..

அஜித்துடன் விஸ்வாசம், சிவகார்த்திகேயன்டன் ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படம் ஆகிய படங்களில் நயன்தாரா நடிக்கவுள்ளார் என்பது இங்கே கவனித்தக்கது.

அனிருத் இசையில், சிவகார்த்திகேயனின் பாடல் வரிகளில் வெளியான இப்பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

100 படத்திற்காக அதர்வா-ஹன்சிகாவை இணைக்கும் டார்லிங் டைரக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்த ‘டார்லிங்’, எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ ஆகிய படங்களை இயக்கிவர் சாம் ஆண்டன்.

இவர் அடுத்து இயக்கவுள்ள படத்தில் முதன்முறையாக அதர்வாவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார்.

இவர்களுடன் ‘எரும சாணி’ புகழ் ஹரிஜா மற்றும் ‘யோகி’ பாபு ஆகியோரும் நடிக்கிறார்கள்.

‘ஆரா சினிமாஸ்’ தயாரிக்கும் இந்த படத்திற்கு சாம்.சி.எஸ்.இசை அமைக்கிறார்.

ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகி வரும் இந்த படத்தில் அதர்வா போலீஸ் ஆக நடிக்கிறார்.

போலீஸுக்கும் 100 என்ற எண்ணுக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது என்பது தாங்கள் அறிந்த விஷயமே.

ஒரு குப்பைக் கதையை மாற்ற சொல்லி அசிங்கப்பட்ட அமீர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பல படங்களுக்கு நடன அமைப்பாளராக பணிபுரிந்து, தேசிய விருதையும் வென்றவர் தினேஷ். இவர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘ஒரு குப்பை கதை’.

கதாநாயகியாக வழக்கு எண் புகழ் மனிஷா நடித்துள்ளார் இயக்குநர் அஸ்லம் தயாரித்திருக்கும் இப்படத்தை அவரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த காளி ரங்கசாமி இயக்கியுள்ளார்.

இந்தப்படத்தை தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் மூலம் வெளியிடுகிறார் உதயநிதி..

மே-25ஆம் தேதி இந்தப்படம் ரிலீசாக உள்ள நிலையில் இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், ஆர்யா, சிவகார்த்திகேயன், ஸ்ரீகாந்த், நாகேந்திர பிரசாத், இயக்குனர்கள் அமீர், பாண்டிராஜ், எழில், சீனு ராமரசாமி, பொன்ராம், சுசீந்திரன் உள்ளிட்ட உள்ளிட்ட பலர் கலந்தகொண்டனர்.

இயக்குனர் அமீர் பேசும்போது, “இந்தப்படத்தின் கதை தயாரிப்பாளர் அஸ்லம் மூலம் என்னிடம் முதலில் வந்தது. கதைகேட்ட பின் இயக்குனர் காளி ரங்கசாமியிடம் சில மாற்றங்கள் செய்தால் நடிக்கலாம் என சொன்னேன்.

ஆனால் அதற்கு அவர் மறுத்துவிட்டதாக அஸ்லம் சொன்னார்..

ஆனால் ஒரு இயக்குனராக அவரது உறுதியான முடிவை பாராட்டுகிறேன். ” என்றார்.

More Articles
Follows