இந்தியாவை தோனி வழிநடத்தனும்; விக்னேஷ் சிவனின் விபரீத ஆசை..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர் மகேந்திர சிங் தோனி.

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் இவருக்கு, தமிழகத்தில் அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர்.

இந்த ரசிகர்கள் பட்டாளத்தில் டைரக்டர் விக்னேஷ் சிவனும் ஒருவர்.

அவர் தோனியை சந்தித்து புகைப்படம் எடுத்து அதை ட்விட்டரில் பதிவிட்டு தன் கருத்தை பதிவு செய்துள்ளார்.

“எனது வாழ்வின் மிகவும் சந்தோஷமான மன நிறைவான நாள். தோனியை சந்திப்பது எனது வாழ்நாள் கனவு.

இதற்கு காரணமான கடவுளுக்கும் உலகத்திற்கும் நன்றி. ஒருநாள் இவர் நம் நாட்டை வழி நடத்துவதைப் பார்க்க காத்திருக்கிறேன். இது என்னுடைய கனவு’ என பதிவிட்டுள்ளார்.

எனவே தோனியை இவர் அரசியலுக்கு வரவேற்கிறாரா? என பலரும் கேட்கின்றனர்.

அண்மையில் பாகிஸ்தானில் நடைபெற்ற தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீர்ர் இம்ரான்கான் வெற்றி பெற்று 22வது பிரதமராக பதவியேற்றார் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

வாக்கை விற்று வாழ்க்கையை அடகு வைக்காதீர்கள்… கமல்ஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கிய பின்னர் தமிழகம் முழுவதும் அரசியல் சுற்றுப்பயணம் செய்து வருகிறார் கமல்ஹாசன்.

அண்மையில் அரூரில் மக்கள் மத்தியில் பேசினார் கமல். அவர் பேசியதாவது…

ஓட்டு பேரம் பேச நான் இங்கு வரவில்லை. மக்களுக்கு இலவசங்களை தருவேன் என்று வாக்குறுதியும் தர வரவில்லை.

மக்களுக்குத் தேவையானவற்றை மக்களே பெற்றுக் கொள்ளும் வகையில் ஓர் அரசு அமைந்திட எங்கள் கட்சி உழைத்திடும்.

ஓட்டிற்காக ஒரு நாள் பணத்தை பெற்றுக் கொண்டு ஐந்து ஆண்டுகளுக்கு உங்கள் வாழ்க்கையை அடமானம் வைத்து விடாதீர்கள்.

சில ஆயிரம் ரூபாய்களுக்கு ஆசைப்பட்டு உங்களுக்கு சொந்தமான கோடிக்கணக்கான பணத்தை விற்று விடாதீர்கள்.

மக்களின் முழு அதிகாரத்தையும் மக்களிடமே கொடுக்கும் கிராம சபைகளில் மறக்காமல் கலந்து கொள்ளுங்கள்.” என்று பேசினார்.

த்ரிஷாவை இயக்கும் விஷால்..; 5 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் ஜோடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தன் தந்தை ஒரு தயாரிப்பாளராக இருந்தாலும் ஒரு டைரக்டர் ஆக வேண்டும் என சினிமா துறைக்கு வந்தவர் விஷால்.

எனவேதான் நடிகர் அர்ஜீனிடம் உதவி இயக்குனராக சேர்ந்தார்.

ஆனால் அர்ஜீன் சிபாரிசின் பேரில் நடிகராக மாறினார்.

பின்னர் நடிப்பு, தயாரிப்பாளர் என பயணிக்க ஆரம்பித்த இவரின் 25வது படம் சண்டக்கோழி2.

தற்போது தெலுங்கு டெம்பர் படத்தின் தமிழ் ரீமேக்கான அயோக்யா என்ற படத்தில் நடித்து வருகிறார் விஷால்.

இதனையடுத்து 25 படங்களை நடிகராக முடித்துவிட்டு முதன்முறையாக ஒரு படத்தை இயக்கவுள்ளார் என்பதை பார்த்தோம்.

இதில் த்ரிஷாவை நாயகியாக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இப்படம் முழுக்க விலங்குகளை மையப்படுத்தை எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

சமர் என்ற படத்தில் விஷாலுடன் இணைந்து நடித்தவர் த்ரிஷா. தற்போது 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மிக்ஸி கிரைண்டருடன் *சர்கார்* சக்ஸஸ் பார்ட்டி; வம்பிழுக்கும் விஜய்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பு, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கம், விஜய் நடிப்பு என பெரும் எதிர்பார்ப்பில் உருவான சர்கார் திரைப்படம் கடந்த 6ஆம் தேதி தீபாவளி தினத்தில் வெளியானது.

இதில் அரசியல் தொடர்பான வார்த்தைகளும், அரசு கொடுக்கும் இலவச பொருட்களான டிவி, மிக்ஸி, கிரைண்டர் ஆகியவற்றை விமர்சிக்கும் விதமாகவும் காட்சிகள் இருந்தன.

எனவே ஆளும் கட்சி அதிமுக.வினர் எதிர்ப்பு தெரிவிக்க பிரச்சினை பெரிதானது.

பின்னர் அந்த காட்சிகளை நீக்கிவிட்டு படத்தை திரையிட்டு வருகின்றனர்.

இப்படம் 6 நாட்களில் உலகமெங்கும் ரூ.200 கோடியை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் படம் வெளியாகி 6 நாட்கள் ஆன நிலையில் படக்குழுவினர் வெற்றி விழாவை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

இதில் நடிகர் விஜய், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், ஏ.ஆர்.ரஹ்மான், நடிகைகள் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, பாடலாசிரியர் விவேக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அந்த கேக்கில் மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்டவைகளை டிசைன் செய்து கேக் வடிவில் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

படத்தில் தானே மிக்ஸி, கிரைண்டர் காட்சிகளை நீக்க சொன்னீர்கள். இப்போது நாங்கள் எங்கள் கேக்கில் வைத்துள்ளோம். இதை உங்களால் என்ன செய்ய முடியும்? என்று விஜய் தரப்பு கேட்கிறதா?

மீண்டும் ரியல் தமிழக சர்காரை வம்பிழுக்கிறதா இந்த ரீல் சர்கார்..? என்பதுதான் தெரியவில்லை.

Sarkar team celebrated success party with Mixie and Grinder

நவ. 16ல் *திமிரு புடிச்சவன்* வருவான்.; பாத்திமா விஜய்ஆண்டனி விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தீபாவளி தினத்தில் சர்கார் திரைப்படத்துடன் விஜய் ஆண்டனி நடித்த திமிரு புடிச்சவன் படமும் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்தனர்.

ஆனால் தமிழத்தில் உள்ள 1100 தியேட்டர்களில் 800க்கும் மேற்ப்ட்ட தியேட்டர்களை சர்கார் ஆக்ரமித்தது. எனவே அன்றைய தினத்தில் திமிரு புடிச்சவன் வெளியாகவில்லை.

இதனிடையில் நவம்பர் 16ஆம் தேதி உத்தரவு மகாராஜா, செய், காற்றின்மொழி, சித்திரம் பேசுதடி2 ஆகிய படங்கள் வெளியாகும் என தயாரிப்பாளர் சங்கம் கடிதம் படி அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து திமிரு புடிச்சவன் படத்தை நவம்பர் 16ல் வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கு மற்ற படக்குழுவினர் எதிர்ப்பு தெரிவிக்க கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டது.

அப்போது மேற்கண்ட 4 படங்கள் மட்டுமே 16ம் தேதி வெளிவரும் என்று தயாரிப்பாளர் சங்கம் அறிவித்தது.
இந்நிலையில் திமிரு புடிச்சவன் படத்தின் தயாரிப்பாளரும், விஜய் ஆண்டனியின் மனைவியுமான பாத்திமா விஜய் ஆண்டனி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

தமிழகம் முழுவதும் 800 திரையரங்குகளில் ‘சர்கார்’ திரைப்படம் திரையிடப்பட்டதால், எங்களுக்கு தியேட்டர் கிடைக்கவில்லை.

விநியோகஸ்தர்கள் ரிலீஸ் தேதியை தவறவிட்டது அதிர்ச்சியாக இருந்தது. படத்தை தயாரிப்பாளர்கள் சங்கம் உறுதியளித்தாலும், திரையரங்குகள் முறைப்படுத்துவதில் சிக்கல் இருக்கும் போது திரையரங்குகளை எப்படிப் பெறுவது?

இந்தக் கடினமான நேரத்தில் தயாரிப்பாளர்கள் சங்கம் எங்களுக்கு ஆதரவு அளிக்க கேட்டிருக்கிறோம். அவர்கள் எங்களுடன் இருப்பதால், அவர்கள் நிர்வாகிகள் குழு என்பதால், அவர்கள் சொல்வதைக் கேட்கிறோம்.

தற்போது ‘சித்தரம் பேசுதடி 2’ திரைப்படம் திரையிடும் தேதியை வாபஸ் பெற்று இருக்கிறது. ஆதலால், கடந்த கூட்டத்தில் பேசப்பட்டது போல் 16-ம் தேதியைப் பெற எங்களுக்குத் தகுதி உண்டு.” என பாத்திமா விஜய் ஆண்டனி விளக்கம் அளித்துள்ளார்.

Fathima Vijay Antony clarifies Thimiru Pudichavan release issue

பத்த வச்சார் ரஜினி; விஜய்யால் வில்லங்கமானது; பாமக கோரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

புகை பிடித்தல் பெருங்குற்றம். உடல் நலத்திற்கு தீங்கானது என நொடிக்கு ஒரு முறை சொன்னாலும் சிகரெட் பிடிப்பவர்களை திருத்தவே முடியாது.

அதுவும் இன்றைய இளைஞர்கள் 18 வயதிற்கு முன்பே இதற்கு அடிமையாகிவிடுகிறார்கள்.

அதற்கு ஒரு சிலர் கூறும் காரணம் சினிமாவில் எங்கள் ஹீரோ புகைப்பிடிக்கிறார் என்பதுதான்.

நடிகர் ரஜினியால் இந்த பழக்கம் அதிகம் பேரிடம் உள்ளது என்று ஒரு சர்வே ரிப்போர்ட் சொல்ல பாமக. கட்சியினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் ரஜினி புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

இதனால் ரஜினி அண்மைக்காலமாக புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதில்லை.

ரஜினிக்கு அடுத்த இடத்தில் உள்ள நடிகர் விஜய்யோ புகைப்பிடிக்கும் காட்சிகளில் அதிகம் நடித்து வருகிறார். அண்மையில் வெளியான சர்கார் படத்தில் இதுபோன்ற நிறைய காட்சிகள் இருந்தன.

இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் நடிகர் சங்கத் தலைவர் நாசருக்கு ஒரு கடிதம் மூலம் கோரிக்கை வைத்துள்ளார்.

அதில்… பொதுநலன் கருதி திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளுக்கு நடிகர் சங்கம் தடை விதிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

PMK Ramadoss request Nadigar Sangam to ban Smoking scenes in movies

More Articles
Follows