தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த விழாவில் இந்தப் படத்தில் பாடலை எழுதியுள்ள இயக்குனர் விக்னேஷ் சிவன் கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசும்போது…
” என் வாழ்க்கையில் மிகப்பெரிய மான சந்தர்ப்பங்களை வாய்ப்புகளை நான் அனிருத் மூலமாக தான் பெற்று வருகிறேன்
இன்று ஜூலை 28ஆம் தேதி.. என் அப்பாவின் நினைவு நாள்..
கடந்த 2022 ஜூலை 28ஆம் தேதி ஒலிம்பியாட் செஸ் நிகழ்ச்சி தொடங்கிய நாள். அன்று ரஜினிகாந்த் வந்திருந்தார்.
இன்று ‘ஜெயிலர்’ இசை விழா. இன்றும் தலைவர் என்னோடு இருக்கிறார் என்று எமோஷனலாக பேசினார்.
அதன் பின்னர் அனிருத்தை குறிப்பிட்டு விக்னேஷ் சிவன் பேசும்போது..
“ரஜினி சார் உங்களுக்காக நிறைய சிரமம் எடுத்து பாடல்களை போடுவார் அனிருத்.
உங்களுக்கு ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். ஒருவேளை உங்களுக்கு ஒரு மகன் இருந்தால் அதுதான் அனிருத்.” என்று பேசினார் விக்னேஷ் சிவன்
Director Vignesh Shivan at Jailer Audio Launch
