மாநாடு படத்தில் சிம்பு ரசிகர்களுக்கு வெங்கட் பிரபு மெசேஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று சிம்புவின் புதிய படமான மாநாடு பட டைட்டில் லுக் வெளியானது.

இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்க, வெங்கட் பிரபு இயக்குகிறார்.

இப்படத்தை அடுத்த 2019ஆம் ஆண்டு வெளியிட உள்ளனர்.

இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டரில் கீழே உள்ள வாசகம் இடம் பெற்றுள்ளது.

தனியாக நின்றாலும், நியாயத்தின் பக்கம் துணையாக நிற்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Venkat Prabu convey message to Simbu fans in Maanaadu poster

இது ரசிகர்களுக்கான மெசேஜ் / அட்வைஸ் ஆக இருக்குமா?

புது ரூட்டில் பயணத்தைத் தொடங்கும் அஜித்-சிம்பு-தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு படத்தின் சூட்டிங் தொடங்கி அது பாதியை கடந்து செல்லும் போதுதான் அப்படத்தின் தலைப்பையே அறிவிக்கிறார்கள் தமிழ் திரையுலகினர்.

இதையே ஒரு டிரெண்டாக வைத்து கொண்டாடியும் வருகின்றனர்.

விஜய்யின் சர்கார், சூர்யாவின் என்ஜிகே, சிவகார்த்திகேயனின் சீமராஜா உள்ளிட்ட பல படங்கள் இந்த வரிசையில் தான் வந்தன.

ஆனால் இதில் இருந்து மாறுபட்டு ரஜினி தன் காலா படத்தலைப்பை அறிவித்தே பின்பே தன் பட சூட்டிங்கை தொடங்கினார்.

ஆனால் தற்போது கார்த்திக் சுப்பராஜ் படத்தின் தலைப்பை அவர் அறிவிக்கவில்லை என்பது வேறுக்கதை. இதன் சூட்டிங் நடந்து வருகிறது.

அதுபோல் சபாஷ் நாயுடு படத்தலைப்பை அறிவித்துவிட்டே தன் பட சூட்டிங்கை தொடங்கினார் கமல்ஹாசன்.

இந்நிலையில் அஜித் தன் விஸ்வாசம் படத்தலைப்பை அறிவித்து விட்டுதான் சூட்டிங்கை தொடங்கினார்.

அதுபோல் சிம்பு தன் மாநாடு படத்தை இன்று அறிவித்துவிட்டார். விரைவில் இதன் சூட்டிங் தொடங்கவுள்ளது.

அதுபோல் தனுஷ் அவர்களும் தன் மாரி 2, வடசென்னை படத்தலைப்புகளை அறிவித்துவிட்டே தன் பட சூட்டிங்கை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித். சிம்பு, தனுஷ் ஆகியோர் புது ரூட்டில் பயணிக்கத் தொடங்கியுள்ளனர் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

Ajith Simbu and Dhanush starting their movie shoot in different style

கண்ணா 1 பத்தாது; 2 வேணும்.. காவலர்களுக்கு ரஜினி வேண்டுகோள்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி தன் அரசியல் பிரவேசத்தை அறிவித்தார் ரஜினிகாந்த்.

தற்போது 6 மாதங்கள் ஆகிவிட்டாலும் அவர் இதுவரை கட்சி தொடங்கவில்லை.

ஆனால் அரசியல் கட்சிக்கு தேவையான அனைத்து வேலைகளையும் அவர் தீவிரமாக பார்த்து வருவதாக கூறப்படுகிறது.

கட்சிக்கு வலுவான கட்டமைப்பு வேண்டும் என்பதற்காக தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி உறுப்பினர் சேர்க்கையை தொடங்கினார்.

கடந்த ஜனவரி முதல் ரஜினி மக்கள் மன்றத்தில் உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது.

தற்போது வரை ஒரு கோடியே 20 லட்சம் உறுப்பினர்கள் கட்சியில் இணைந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இதனால் ரஜினி தரப்பு மிகுந்த உற்சாகமடைந்துள்ளதாம்.

மேலும் உறுப்பினர் சேர்க்கைகளை அதிகரித்து இரண்டு கோடியாக உயர்த்திட மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு ரஜினி வேண்டுகோள் வைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

தலைவரின் கட்டளையை காவலர்கள் நிச்சயம் நிறைவேற்றுவார்கள் தானே

Rajini request his fans to add 2 crore members in Rajini Makkal Mandram

இன்று 2 அதிரடி; அப்பா டிஆருக்கு காதல்; மகன் எஸ்டிஆருக்கு அரசியல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று ஜீலை 10ஆம் தேதி நடிகரும் இயக்குனருமான டி.ராஜேந்தர் தன் புதிய படத்தை அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

நமீதான் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ள இந்த படத்திற்கு இன்றையக் காதல் டா என தலைப்பிட்டுள்ளார்.

வழக்கம் போல அவரே அந்த படத்தின் அனைத்தை வேலைகளையும் செய்கிறார்.

இப்படம் முழுக்க காதல் திரைப்படமாக உருவாகவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதே நாளில் அவரின் மகன் சிம்பு நடிக்கவுள்ள மாநாடு என்ற படத்தின் டைட்டில் லுக் வெளியானது.

இப்படம் முழுக்க முழுக்க அரசியல் படமாக உருவாகவுள்ளது.

இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்க, வெங்கட் பிரபு இயக்குகிறார்.

அப்பாவுக்கு இந்த வயதிலும் காதல் படம். மகனுக்கு இந்த வயதிலேயே அரசியல் படம்.. அசத்துங்க… மக்களே…

Today 10th July T Rajendar and STR announced 2 movie titles

திருப்பூர் சுப்ரமணியம் தலைமையில் புதிய தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் தியேட்டர் உரிமையாளர்களுக்கு என்று தனி சங்கம் உள்ளது.

அண்ணாமலை அவர்கள் தலைமையிலான நிர்வாகிகள் அந்த சங்கத்தை நிர்வகித்து வந்தனர்.

புதிய நிர்வாகிகளை தேர்தல் வைத்து தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என நிர்வாகிகள் சிலர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இதற்கு உடன்படாத சில விநியோகஸ்தர்கள் தனியாக பிரிந்து புதிய சங்கத்தை உருவாக்க நினைத்தனர்.

அதன்படி புதிய தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவராக திருப்பூர் சுப்ரமணியமும், துணை தலைவராக சரஸ்வதி முத்தனனும், பொதுச் செயலாளராக பன்னீர் செல்வமும், செயலாளராக சேலம் இளங்கோவும், கூடுதல் செயலாளராக ராம்நாட் தினேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வாகி உள்ளனர்.

இவர்கள் புதிய சங்கத்தை உருவாக்கியுள்ளனர்.

வழக்கை லதா ரஜினி எதிர்கொள்ள வேண்டும் என கோர்ட்டு உத்தரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினி நடித்த அனிமேஷன் படம் கோச்சடையான்.

இப்படத்தை ரஜினிகாந்த் குடும்பமே தயாரித்து இருந்தது.

இதை தயாரித்தது தொடர்பாக மீடியா ஒன் குளோபல் நிறுவனத்திற்கு ஆட்பீரோ என்ற நிறுவனம் கடன் அளித்திருந்தது.

இந்தக் கடனுக்கு லதா ரஜினிகாந்த் உத்தரவாதம் அளித்திருந்தார்.

அந்தக் கடனை திருப்பிச் செலுத்தாதால் ஆட்பீரோ நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

பல ஆண்டுகளாக நடந்து வரும் இந்த வழக்கு, இப்போது சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது.

ஜூலை 10-ம் தேதிக்குள் லதா ரஜினிகாந்த் ரூ.6.23 கோடி பணத்தை செலுத்த வேண்டும், இல்லாவிட்டால் நடவடிக்கை பாயும் என நீதிமன்றம் எச்சரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கு இன்று (ஜூலை 10) மீண்டும் விசாரணைக்கு வந்தது. லதா ரஜினிகாந்த் பணத்தை திருப்பி செலுத்தவில்லை. இதனால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது.

இந்த விவகாரத்தில் லதா ரஜினிகாந்த் மீதான எப்.ஐ.ஆரை ரத்து செய்யவும் சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளதோடு, பெங்களூருவில் பதிவு செய்யப்பட்ட வழக்கை லதா ரஜினிகாந்த் எதிர்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது.

More Articles
Follows