பாலிவுட் படத்திற்காக நடந்த மிகப்பெரிய ஆடீசனில் தேர்வான வேதிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பரதேசியில் அதர்வா முரளியை மிரட்டியும் விரட்டியும் காதலித்து அங்கம்மாவாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் வேதிகா. தமிழிலிருந்து பாலிவுட் போய் சாதித்த கதாநாயகிகளின் பட்டியலில் அவருக்கும் ஓரிடம் முன் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாபநாசம் படமெடுத்த ஜித்து ஜோசப் இந்தியில் களமிரங்கும் கிரைம் திரில்லர் படத்தில் வேதிகா நடிக்கிறார். 2012 ல் வெளிவந்த ” த பாடி ” என்ற ஸ்பானிஷ் படத்தின் ரீமேக்காக இந்த படம் உருவாகிறது.

இம்ரான்ஹாஸ்மி கதாநாயகனாகவும் முக்கிய வேடத்தில் ரிஷி கபூரும் நடிக்கும் இந்த படத்தில், காலகண்டி பட நடிகை ஷோபிதா துலிபாலா மற்றொரு முக்கிய வேடத்திற்கு ஒப்பந்தமாகி உள்ளார்.

தமிழ் மலையாளம் கன்னடம் தெலுங்கு படங்களில் நடித்துள்ள வேதிகாவுக்கு 2013 ல் வெளிவந்த பாலாவின் பரதேசி படம் நல்ல புகழை தேடிதந்தது.

பாலிவுட் படவாய்ப்பு குறித்து கேட்டபோது, இந்தி பட உலகில் நுழைவதற்கு நல்ல வாய்ப்பை எதிர்பார்திருந்தேன், இப்பொழுது இந்த வாய்ப்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி என்றார் வேதிகா.

வேதிகா தேர்வு செய்யப்பட்டது குறித்து, நாடு முழுவதும் நடத்திய தேடுதல் வேட்டையில் பல ஆடிஷன்களுக்கு பிறகு தங்களிடம் வேதிகா சிக்கியதாக கூறுகிறார் இயக்குனர் ஜித்து ஜோசப்.

அப்பாவித்தனம் கலந்த இளம் கல்லூரி மாணவி கதாபாத்திரம் அவருக்கு அழகாக பொருந்துகிறது என்றும் இம்ரான்- வேதிகா ஜோடி ரசிகர்களை கவர்ந்திழுக்கும் என்றும் இயக்குனர் கூறுகிறார்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு இம்மாதம் மும்பையில் தொடங்கியது, அடுத்த கட்ட படப்பிடிப்பு மொரீஷியசில் விரைவில் தொடங்கவுள்ளது.

இளையராஜா பிறந்தநாளுக்கு தமிழில் வாழ்த்தினார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை படைத்த இளையராஜா இன்று ஜூன் 2 தனது 75வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

பல திரையுலக பிரபலங்களும் அவரை வாழ்த்தி வருகின்றனர்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில் தமிழில் வாழ்த்தியுள்ளார்.

“இந்தியாவின் இன்னிசைத் துடிப்பைத் தீர்மானிக்கும், ஒப்பற்ற கலைஞர் ,இசை மாமேதை, தன்னேரில்லா இளையராஜாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

இவ்வாண்டுத் தொடக்கத்தில்,அன்னாருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கியதை யான் பெற்ற பெரும்பேறாகக் கருதுகிறேன் – குடியரசுத் தலைவர் கோவிந்த்.” என அவர் தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி என மூன்று மொழியிலும் பதிவிட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் இளையராஜாவுக்கு தான் வழங்கிய பத்ம விபூஷண் விருது கொடுக்கப்பட்ட புகைப்படத்தையும் ஜனாதிபதி இணைத்து பதிவிட்டுள்ளார்

தனது பிறந்தநாளையொட்டி ரசிகர்களுடன் போட்டோ எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார் இளையராஜா.

அதன்படி இந்தாண்டும் தமிழ்நாடு முழுவதிலிருந்து ஏராளமான ரசிகர்கள் இளையராஜாவிற்கு நேரில் வாழ்த்து சொல்லி அவருடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர்.

சென்னை, வடபழனியில் உள்ள இளையராஜாவின் ஸ்டுடியோவில் இந்த சந்திப்பு நடந்தது.

ஒரு கணக்கு தொடங்கட்டா சார்..? ரஜினி பிரச்சினையால் ட்விட்டரில் விஜய்சேதுபதி!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு சமூக விரோதிகள் தான் காரணம் என தூத்துக்குடி சென்று வந்த ரஜினிகாந்த் கூறியிருந்தார்.

இந்த கருத்துக்கு நடிகர்கள் சீமான், சரத்குமார் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் ரஜினிக்கு ஆதரவாக விஜய்சேதுபதி பெயரில் ட்விட்டரில் கருத்துக்கள் பதிவானது.

இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அந்த கணக்கு தன்னுடையது இல்லை என மறுப்பு தெரிவித்துள்ளார்.

உடனே விஜய்சேதுபதி தன்னுடைய பெயரில் ஒரு ஒரிஜனல் கணக்கை ட்விட்டரில் தொடங்கிவிட்டார்.

ஆகஸ்ட்டில் அடுத்த ஆட்டத்தை ஆரம்பிக்கும் கமல்ஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல் தயாரித்து இயக்கி நடித்துள்ள விஸ்வரூபம்-2 படம் விரைவில் ரிலீஸாகவுள்ளது.

இப்படம் வெளியாவதற்குள் கமல் அரசியல் களத்தில் இறங்கிவிட்டார்.

மக்கள் நீதி மய்யம் என்ற தன் கட்சிப் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்.

இதனிடையில் ஷங்கர் இயக்கவுள்ள இந்தியன் 2 படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் கமல்.

இப்படத்திற்கு முன்பே சபாஷ் நாயுடு என்ற படத்தை இயக்கி வந்தார் கமல்.

இப்படத்தில் ரம்யாகிருஷ்ணன், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடிக்க, இளையராஜா இசையமைக்கிறார்.

2016ல் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெற்று வந்த நிலையில், கமலுக்கு காலில் அடிப்பட்டதால் கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில், ஆகஸ்டு மாதம் முதல் சபாஷ் நாயுடு சூட்டிங்கை துவங்க இருக்கிறாராம் கமல்ஹாசன்.

யார் நீங்க.? ரஜினிக்கு இது அதிர்ஷ்ட சொல்…; ஆதாரம் சொல்லும் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூற ரஜினிகாந்த் தூத்துக்குடி சென்றிருந்தார்.

அப்போது சிகிக்சை பெற்று வந்த ஒரு இளைஞர்.. யார் நீங்க.? இப்போது ஏன் வந்தீர்கள்? என்ற தொனியில் ரஜினியைப் பார்த்து கேட்டார்.

ரஜினியை பார்த்து இப்படி ஒருவர் கேட்டுவிட்டார் என ட்ரோல் செய்து இந்த வார்த்தையை உலகளவில் டிரெண்ட் செய்துவிட்டார்கள்.

அதன்பின்னர்… 100 நாட்கள் நாங்கள் போராடிக் கொண்டிருந்தபோது நீங்கள் வந்திருந்தால் எங்கள் போராட்டம் அடுத்த வெற்றி கட்டத்திற்கு சென்றிருக்குமே என்ற தொனியில்தான் நான் அந்த கேள்வியை கேட்டேன்.

ஆனால் மீடியாக்கள் அவர்களின் விளம்பரத்திற்காக அந்த வார்த்தையை பிரச்சினையாக்கி விட்டார்கள் என தெரிவித்து ஒரு வீடியோ பதிவிட்டார்.

அதுவும் தற்போது வைரலாகி வருகிறது.

இந்நிலையில் ரஜினி ரசிகர்கள் அந்த யார் நீங்க? என்ற வார்த்தைக்கு விளக்கம் கொடுத்து வருகின்றனர்.

1975ஆம் ஆண்டில் கே. பாலசந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் படத்தில் ரஜினிகாந்த் அறிமுகமானார்.

படத்தில் ரஜினியின் அறிமுக காட்சியில் ரஜினியைப் பார்த்து யார் நீங்க? என கமல் கேட்பார்.

நான் பைரவி புருசன் என்பார் ரஜினிகாந்த்.

அந்த வார்த்தை அந்த காட்சி மிகப் பாப்புலர் ஆனது. அதன்பின்னர் ரஜினிகாந்த் சினிமாவி முன்னேறி இன்று யாரும் அசைக்க முடியாத சூப்பர ஸ்டாராக விளங்கி வருகிறார்.

தற்போது ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கவுள்ளார். அதன் முதற்கட்டமாகத்தான் அவர் தூத்துக்குடி சென்று மக்களை சந்தித்தார்.

அப்போது அந்த இளைஞர் அவரைப் பார்த்து யார் நீங்க? என்று கேட்டார். இனி தலைவர் ரஜினிக்கு அரசியலிலும் வளர்ச்சிதான்.

அந்த அதிர்ச்சி சொல் அல்ல. ரஜினிக்கு அதிர்ஷ்ட சொல் என் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

மகேஷ்பாபு மஞ்ரேக்கர் படத்தில் கேங்ஸ்டராக நடிக்கும் ஸ்ருதிஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

புகழ் பெற்ற இயக்குனர் மகேஷ்பாபு மஞ்ரேக்கர் கேங்ஸ்டரை மையமாக கொண்ட புதிய படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் வித்யாசமான கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

வித்யுத் ஜமால் நாயகனாக நடிக்கிறார். பீரியட் பிலிமாக உருவாகி வரும் இந்த படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.

இதன் முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் சமீபத்தில் நடந்து முடிந்தது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கோவாவில் விரைவில் தொடங்க உள்ளது.

இதற்காக தனது குழுவை கோவாவிற்கு இடம்பெயர்த்துள்ளார் இயக்குனர். இதில் இரண்டாம்கட்ட படப்பிடிப்பில் ஸ்ருதிஹாசன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படவுள்ளன.

பொதுவாக இயக்குனர் மகேஷ்பாபு மஞ்ரேக்கரின் படத்தில் நடிக்கும் அனைவருக்கும் சமமான வாய்ப்புகளும் அவர்களின் தனித்தன்மையை வெளிப்படுத்தும் விதமாக கதாபாத்திரங்களும் அமைந்திருக்கும். இதனால் இந்த படத்துக்கு கூடுதல் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

ஸ்ருதிஹாசனின் கேரக்டர் குறித்து பேசிய இயக்குனர், அவருடைய கதாபாத்திரம் மற்ற கதாபாத்திரங்களின் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார்.

தற்போது, அவர் லண்டனில் சர்வதேச இசை கோர்ப்பு சம்மந்தப்பட்ட பணிகளை முடித்துவிட்டு இந்தியா திரும்பியதும் படப்பிடிப்பு தொடங்கும் என்றார்.

இந்த படப்பிடித்தின் படப்பிடிப்பை முடித்தக் கையோடு தனது தந்தை கமல்ஹாசன் இயக்கும் சபாஷ் நாயுடு படத்தில் நடிக்கவிருக்கிறார் ஸ்ருதிஹாசன்.

Shruti resumes shoot for Mahesh Manjrekars next gangster drama in Goa

More Articles
Follows