‘டைரக்டர் சொல்ற மாதிரி என்னால நடிக்க முடியாது’ – ரித்விகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பரதேசி, மெட்ராஸ், ஒரு நாள் கூத்து உள்ளிட்ட படங்களில் நாயகி இல்லையென்றாலும் நடிப்பால் அனைவரையும் கவர்ந்தவர் ரித்விகா.

தற்போது கபாலி படத்தில் ரஜினியை அப்பா, அப்பா என அழைத்து பாசமழை பொழிந்தவர் இவர்.

இவரின் சமீபத்திய பேட்டியில் தன் சினிமா அனுபவங்கள் குறித்த இவர் கூறியதாவது…

நான் 3ஆம் வகுப்பு படிக்கும்போதே எனக்கு நடிப்பு ஆசை இருந்தது.

எட்டு வயசு இருக்கும்போதே மாறுவேடப் போட்டி, பாட்டுப் போட்டி, நடனப் போட்டி என அனைத்திலும் ஆர்வமாக கலந்துப்பேன்.

ஆர்வம் இருக்கிற துறையில நம்ம திறமையை வெளிப்படுத்தினா நிச்சயம் ஒரு அடையாளம் கிடைக்கும் நான் நம்புறேன்.

காலேஜ் நாட்கள்ல ஷார்ட் பிலிம்ல நடிக்க ப்ரெண்ட்ஸ் கூப்பிடும்போது சந்தோஷமா இருக்கும்.

புரஃபெஷனல் ஆக்டர் மாதிரி நடிக்கிற அப்படின்னு எல்லோரும் சொன்ன பிறகுதான் சினிமாவுக்கு முயற்சி பண்ணினேன்.

அப்போ முதல் படமே பாலா சாரின் பரதேசி படம் அமைஞ்சது.

கபாலியில நடிக்கும்போது ரஜினி சார் “என்னப்பா இந்தப் பொண்ணு நடிப்புல இப்படி பின்னுது” சொன்னாரு.

நான் நடிப்புக்காக ரொம்ப ரிஸ்க் எடுக்க மாட்டேன். டைரக்டர் நடிச்சுக்காட்டி இப்படி செய்யுங்கன்னு சொன்னா என்னால முடியாது.

என்னோட கேரக்டரை நான் தெளிவா புரிஞ்சிப்பேன். அதை மைண்ட்ல ஏத்திப்பேன்.

அப்புறம் டைரக்டர் சொல்றதே கேட்டுட்டு அப்படியே பண்ணிடுவேன்.” என்றார்.

பிறந்தநாளில் தனுஷுக்கு இன்ப அதிர்ச்சியளித்த ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் நேற்று (ஜூலை 28) தனது பிறந்த நாளை கொண்டாடினார்.

இவர் தற்போது நடித்துவரும் வடசென்னை பட குழுவினருடனும் மற்றும் , தனது குடும்பத்தினருடனும் பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடினார்.

இந்நிலையில் தனுஷே எதிர்பாராத வண்ணம் அங்கு வந்த ரஜினிகாந்த், தனுஷிற்கு இன்ப அதிர்ச்சியளித்துள்ளார்.

பிறந்தநாள் காணும் தனுஷுக்கு வாழ்த்து கூறி, ஆசீர்வதித்தார்.

அதன்பின்னர் கிட்டதட்ட சுமார் 3 மணி நேரம் ரஜினி அங்கு இருந்தாராம்.

தனுஷ் பிறந்த நாளுக்கு ரஜினி நேரில் வந்து வாழ்த்துதியது இதுவே முதல் முறை.

இப்புகைப்படங்களை தனுஷ் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும் ரஜினியுடன் வடசென்னை படக்குழுவினர் போட்டோ எடுத்துக் கொண்டனர்.

மீண்டும் இணையும் ‘கபாலி’ கூட்டணி; ரசிகர்கள் ‘மகிழ்ச்சி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சாப்பிடும் சாக்லேட் முதல் பறக்கும் விமானம் வரை எதையும் விட்டு வைக்கவில்லை கபாலி.

எனவே இப்படத்தில் பணியாற்றிய கலைஞர்கள் ரஜினியின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார்கள்.
இந்நிலையில் இப்படத்தின் சக்ஸஸ் ப்ரஸ் மீட் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் தாணு பேசியதாவது…

கபாலி படத்தின் மூலம் அருமையான கலைஞர்கள் கிடைத்தனர். இதுபோன்ற கலைஞர்கள் கிடைத்தால் தயாரிப்பாளர்கள் வாழ முடியும்.

தயாரிப்பாளர்கள் நன்றாக இருந்தால், நிறைய கலைஞர்களுக்கு வாய்ப்பளித்து, வாழ்வளிக்க முடியும்.

எனவே, எனது தயாரிப்பில் மீண்டும் ரஞ்சித்துக்கு வாய்ப்பளிக்கிறேன்” என்றார்.

கபாலிக்காக காத்திருந்த தனுஷ்-சிம்பு படங்கள் ஆகஸ்ட்டில் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பெரும் எதிர்பார்ப்பில் உருவான ரஜினியின் கபாலி, ஒருவழியாக கடந்த ஜுலை 22ஆம் தேதி ரிலீஸ் ஆனது.

அன்றைய தினம் வேறு எந்த படங்களும் தென்னிந்தியாவில் வெளியாகவில்லை.

தற்போது மற்ற படங்கள் ரிலீசுக்கு வரிசை கட்டி நிற்கின்றன.

ஆகஸ்ட்டில் 5ஆம் தேதி ஜீவா, நயன்தாரா நடித்துள்ள திருநாள் வருகிறது.

இதனையடுத்து ஆகஸ்ட் 12இல் தொடரி மற்றும் விஜய்சேதுபதியின் தர்மதுரை ரிலீஸ் ஆகிறது.

இதன்பின்னர், சிம்புவின் அச்சம் என்பது மடமையடா, நயன்தாராவின் செல்வி, விக்ரம்பிரபுவின் வாகா, மோகன்லாலின் நமது, கேஎஸ் ரவிக்குமாரின் முடிஞ்சா இவன புடி, ராஜீமுருகனின் ஜோக்கர், அட்டக்கத்தி தினேஷின் உள்குத்து மற்றும் மீண்டும் ஒரு காதல் கதை ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன.

இதுவரை வந்துள்ள தகவல்களின் படி மொத்தம் ஒரு டஜன் படங்கள் ஆகஸ்ட்டில் வெளியாகவுள்ளதாம்.

கபாலி க்ளைமாக்ஸ்க்கு ரஜினி ஓகே சொல்ல இதான் காரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடித்து வசூலில் சக்கை போடு போடும் கபாலி படத்தின் வெற்றி குறித்து பேச பத்திரிகையாளர்களை சந்தித்தனர் படக்குழுவினர்.

இதற்கான சந்திப்பு, சென்னையிலுள்ள லீ மெரிடியன் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.

இவ்விழாவில் இயக்குனர் ரஞ்சித் பேசியதாவது….

“இந்த கதையில் நடிக்க ஒப்புக்கொண்ட ரஜினி சாருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

க்ளைமாக்ஸ் காட்சிக்கு ரஜினி எடுத்த தைரியமான முடிவே காரணம்.

டைகர் ஹரி துப்பாக்கியால் சுடும் காட்சியை நீக்க முடிவு செய்தோம்.

ஆனால் படம் பார்த்துவிட்டு சென்ற ரஜினி, இரண்டு மணி நேரம் கழித்து போன் செய்து அந்த க்ளைமாக்ஸ் நிச்சயம் இருக்கட்டும்.

அது இல்லையென்றால் வழக்கமான ரஜினி படமாக அது மாறிவிடும்.” என்றார்.

ஆறு நாட்களில் அசர வைக்கும் கபாலி வசூல்; நெருங்குடா… முடியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கபாலி.. பேர கேட்டாலே பாக்ஸ் ஆபிஸே ச்சும்மா அதிருமுல்ல… என்கிற அளவுக்கு வசூல் மழை பொழிந்து வருகிறது.

இப்படம் வெளியாகி ஆறு நாட்களை கடந்துள்ள நிலையில் இப்படத்தின் வசூல் என்ன? என்பதை தயாரிப்பாளர் தாணுவே உறுதி செய்துள்ளார்.

கபாலி படத்தின் சக்ஸஸ் தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர் படக்குழுவினர்.

ரஜினி, ராதிகா ஆப்தே மற்றும் தன்ஷிகா தவிர மற்ற நட்சத்திரங்கள் அனைவரும் அங்கே ஆஜர்.

இப்படம் உலகம் முழுவதும் 6 நாட்களில் ரூ 320 கோடி வரை வசூல் செய்துள்ளதாக இச்சந்திப்பில் அறிவிக்கப்பட்டது.

மேலும் சென்னையில் மட்டும் 7 நாட்களில் ரூ. 7 கோடியை எட்டியுள்ளதாம்.

இப்படத்தின் வசூலை வேறு படங்கள் நெருங்குமா? முடியுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஒருவேளை அடுத்த ரஜினி படம் வரும்போது சாத்தியமாகலாம்.

More Articles
Follows