பாலா இயக்கிய ‘வர்மா’ படம் ஆன்லைன் ரிலீஸ்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2017-ம் ஆண்டு தெலுங்கில் வெளியாகி சக்கைபோடு போட்ட படம்

தெலுங்கில் ரிலீசாகி சூப்பர் ஹிட்டடித்த படம் அர்ஜுன் ரெட்டி.

விஜய் தேவரகொண்டா நடித்த அந்தப் படம் தமிழில் ‘வர்மா’ எனும் பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.

தமிழில் பாலா இயக்க விக்ரமின் மகன் துருவ் அறிமுகமாகி நடித்தார்.

இந்தப் படத்தை இ4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்தது. இப்பட டீசர் வெளியாகி ஹிட்டானது. படமும் வெளியீட்டுக்கு தயார் நிலையில் இருந்தது.

இந்த நிலையில் படம் கைவிடப்பட்டுவிட்டதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிக்கை வெளியிட்டது.

இதன் பின்னர் ‘ஆதித்யா வர்மா’ என்ற டைட்டிலில் அர்ஜுன் ரெட்டி படத்தில் பணியாற்றிய இயக்குநர் கிரிசய்யா இயக்கத்தில் மீண்டும் புதிதாக படம் உருவானது.

இந்த நிலையில் தற்போது பாலா இயக்கிய ‘வர்மா’ படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியானது.

அமேசான் ப்ரைம் வீடியோவில் நவம்பர் 13-ம் தேதி ரிலீஸ் எனவும் கூறப்பட்டது.

ஆனால் இத்தகவல் முற்றிலும் பொய்யானது என தற்போது தயாரிப்பாளர் தரப்பில் தெரிய வந்துள்ளது.

பவன் கல்யாண் பிறந்தநாள் கொண்டாட்டம்.: இரு வேறு விபத்துகளில் ரசிகர்கள் 8 பேர் மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் பவன் கல்யாண்.

இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பி.

கடந்த 2008-ம் ஆண்டு பிரஜா ராஜ்யம் என்ற கட்சியை இவரது அண்ணன் சிரஞ்சீவி தொடங்கியபோது அதன் இளைஞரணியான யுவ ராஜ்யத்தின் தலைவராக இருந்தார்.

இதன் பின்னர், சிரஞ்சீவி தனது கட்சியைக் காங்கிரஸ் கட்சியோடு இணைத்து கொண்டதால், இதில் உடன்பாடு இல்லாமல் கட்சியிலிருந்து வெளியேறினார் பவன் கல்யாண்.

கடந்த 2014-ல் ஜன சேனா எனும் கட்சியைத் தொடங்கினார்.

2017-ல் முழுநேர அரசியலில் இறங்கப்போவதாக அறிவித்தார்.

எனவே படங்களில் நடிப்பதை கொஞ்சம் கொஞ்சமாக தவிர்த்தார்.

ஆனால், அரசியல் களம் மற்றும் தேர்தல் முடிவுகள் பவனுக்கு சாதகமாக அமையவில்லை.

எனவே அரசியல் ஆர்வத்தை குறைத்து மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கினார் .

இன்று பவன் கல்யாண் தனது 49ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இதனை முன்னிட்டு பவன் கல்யாணை சந்திக்க காரில் 5 ரசிகர்கள் முழுகு என்ற இடத்தை நோக்கி சென்றனர்.

அப்போது பசர்கொண்டா அஅருகே எதிரே வந்த லாரி இவர்களின் கார் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் மேகலா ராஜேஷ், சபீர், மெடிச்சாந்து, ரோஹித், பவன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதேபோல் மற்றொரு விபத்தும் பவன் கல்யாண் ரசிகர்களுக்கு நடந்துள்ளது.

நேற்று இரவு சித்தூர் மாவட்டத்தில் பவன் கல்யாணை வாழ்த்தி பேனர் வைத்த போது, மின்சாரம் தாக்கி சேகர், அருணாச்சலம் & ராஜேந்திரன் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர்.

இச்சம்பவத்தில் உயிரிழந்த மூவருக்கும் தலா ரூ. 2 லட்சம் உதவித் தொகை அளித்துள்ளார் பவன் கல்யாண். மேலும் தெலுங்கு நடிகர் ராம் சரண் ரூ.2.5 லட்சம் உதவித் தொகை வழங்குவதாக அறிவித்துள்ளார்.

மேலும் 2 பேர் சித்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

ஆக பவன் கல்யாணின் பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பான விபத்துகளில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்திற்குள் அரசு தனியார் பேருந்து & ரயில் சேவைக்கு தமிழக அரசு அனுமதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க போடப்பட்ட ஊரடங்கால் கடந்த 6 மாதங்களாக போக்குவரத்து சேவை தமிழகத்தில் நிறுத்தப்பட்டது.

நேற்று முதல் மாவட்டத்திற்குள் போக்குவரத்துக்கு அரசு அனுமதியளித்து இருந்தது.

இந்த நிலையில், வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் திங்கள் கிழமையிலிருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் தமிழகத்திற்குள் செயல்பட அனுமதியளிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

இந்துடன் பயணியர் ரயில் சேவைக்கும் தமிழகத்திற்குள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்மை Vs தீமை..; கமல் & ரஜினியின் ரீல் மகளின் அடுத்த படம் ‘வி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமலின் மகளாக பாபநாசம் & ரஜினியின் மகளாக தர்பார் ஆகிய படங்களில் நடித்தவர் நிவேதா தாமஸ். அவரின் அடுத்த பட தகவல்கள் இதோ…

அமேசான் ப்ரைம் வீடியோவின் சமீபத்திய தெலுங்கு த்ரில்லர் திரைப்படமான ‘வி’, ட்ரெய்லர் வெளியான தினத்திலிருந்தே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே உருவாக்கியுள்ளது.

தனித்துவமிக்க இந்த ட்ரெய்லரில் நானி, சுதீர் பாபு மற்றும் பல நட்சத்திரங்களின் தாக்கமுள்ள நடிப்பு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்தப் படத்தின் இயக்குநர் மோகன கிருஷ்ணா, அற்புதமான நடிகர் நடிகையர் பட்டாளத்தைப் வைத்து, அவர்களிடமிருந்து மிகச் சிறந்த நடிப்பைப் பெற்று, அற்புதமான படைப்பைத் தந்துள்ளார்.

நடிகர்களின் சிறப்பைத் தாண்டி, தாய்லாந்தில் நடந்த அயல் நாட்டுப் படப்பிடிப்போடு சேர்த்து இந்தியாவின் ஐந்து மாநிலங்களில் படம்பிடிக்கப்பட்டிருக்கும் திரைப்படம் என்கிற சிறப்பம்சம் பெற்றுள்ள திரைப்படம் இது.

‘வி’ திரைப்படத்தை ரசிகர்களுக்கு இன்னும் சுவாரசியமானதாக, பொழுதுபோக்குத் தரும் படைப்பாக மாற்ற பல விஷயங்கள் நுணுக்கமாக செதுக்கப்பட்டுள்ளன

ரசிகர்களுக்கு ஒரு இனிமையான அனுபவமாக இந்தப் படத்தை மாற்ற காட்சி ரீதியாக ஒரு நிலையான அனுபவத்தைத் தர தாங்கள் முயற்சித்திருப்பதாக இயக்குநர் மோகன கிருஷ்ணா கூறியுள்ளார்.

“பல்வேறு மாநிலங்களில் எடுக்கப்படும் திரைப்படங்களில் வழக்கமாக காட்சி ரீதியாக, வண்ணங்களில் வேறுபாடு இருக்கும்.

ஆனால் எங்கள் நோக்கமே வண்ணங்களில் அப்படி வேறுபாடு இல்லாமல் நிலையான ஒரு காட்சி அனுபவத்தைத் தருவது தான்.

இரவோ, பகலோ, காட்சிகளின் வண்ணங்கள், அதன் தன்மை நிலையாக இருக்க வேண்டும் என்றே நினைத்தேன். எனவே அதற்காக உடை அலங்காரம், தயாரிப்பு வடிவமைப்பு ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தினோம்.

எந்த மாதிரியான உடைகளை, நிறங்களை பயன்படுத்தக் கூடாது என்பதில் கவனமாக இருந்தோம். ஏனென்றால் உடைகள் அந்தந்த இடங்களுக்கு ஏற்றார் போலவும் இருக்க வேண்டும்.

கோவா முழுக்க வெப்பமான இடம். மும்பை ஈரப்பதமும், வெப்பமும் நிறைந்த இடம், தாய்லாந்து வெப்ப மண்டலப் பகுதி, மணாலி அதிகக் குளிரான பகுதி. இவ்வளவு இடங்களில், வெவ்வேறு தட்பவெப்ப நிலையில் படம்பிடிக்கப் பட்டாலும் ரசிகர்களுக்கு சீரான ஒரு காட்சி அனுபவத்தை தர வேண்டும் என விரும்பினோம்.

எல்லா தோற்றங்களையும் ஒரே மாதிரியான தன்மைக்குள் கொண்டு வருவது எங்களுக்கு சவாலாக இருந்தது. அதே நேரத்தில் நாங்கள் நினைத்த தன்மை கதைக்கும் ஒரு தனித்துவத்தைக் கொடுத்தது. ஒரு நீண்ட காலகட்டத்தில் நடக்கும் கதை இது.

ரசிகர்கள் ஒரு நாவலைப் படித்ததைப் போல, அந்தந்த இடங்களை நேரடியாக பார்த்ததைப் போல உணர வேண்டும் என்று விரும்பினேன். பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடத்தியதால் அது சாத்தியமானது” என்கிறார் மோகன கிருஷ்ணா.

நன்மைக்கும் தீமைக்கும் இடையேயான போராட்டமே ‘வி’ என்கிற சீட்டு நுனிக்கே ரசிகர்களை அழைத்து வரும் த்ரில்லர்.

காதல் த்ரில்லர் திரைப்படமான இதில், ஒரு காவல்துறை அதிகாரி, க்ரைம் எழுத்தாளர் ஒருவரைக் காதலிக்கிறார். எல்லாம் நல்லபடியாக சென்று கொண்டிருக்கும் வேளையில் ஒரு கொலைகாரன், அந்தக் காவல்துறை அதிகாரிக்கு புதிர் போட்டு அதற்கு பதிலளிக்கச் சொல்லி சவால் விடுகிறான். முதல் முறையாக நானி வில்லனாக நடிக்கும் இந்தப் படத்தில், அவரது வில்லத்தனத்தைப் பார்க்க பார்வையாளர்கள் ஆவலுடன் உள்ளனர்.

நிவேதா தாமஸ், அதிதி ராவ் ஹைதரி, ஜகபதி பாபு, வெண்ணெலா கிஷோர், நாசர் உள்ளிட்டோரும் ‘வி’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

செப்டம்பர் 5 முதல் அமேசான் ப்ரைம் தளத்தில் ‘வி’ ஸ்ட்ரீம் செய்யப்படும் .

ரஜினி படங்களால் மன அழுத்தம் குறையும்.; என்னை அவர் காரில் டிராப் செய்கிறேன் என்றார்.. – ஜவஹல் ஸ்ரீநாத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் அவர்கள் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார்.

அவர் இந்திய அணி முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜவஹல் ஸ்ரீநாத்தை தன் சேனலுக்காக அண்மையில் பேட்டி எடுத்தார்.

அப்போது ஜவஹல் ஸ்ரீநாத்திடம் தங்களுக்குப் பிடித்த 3 நடிகர்கள் யார்?என்ற கேள்வியை கேட்டார்.

அமிதாப், ஷாரூக் & ரஜினி என்றார்.

“நீங்கள் மன அழுத்தத்துடன் இருந்தால் ரஜினிகாந்த் படங்களை பாருங்கள்.

அவர் தன் படங்களில் அடிமட்டத்திலிருந்து வாழ்க்கையில் உயர்வதாக காட்சி இருக்கும். திரையில் அவரது ஆளுமை. ஒருவித ஈர்ப்பு. அதனால் அவரை எனக்கு மிகவும் பிடிக்கும்.

ஓரிரு முறை அவரை சந்தித்துள்ளேன்.

பெங்களூரு விமான நிலையத்தில் சந்தித்த போது. தனது காரில் ஏறும்படி சொன்னார்.

நான் எங்கு போக வேண்டுமோ அங்கு இறக்கி விடுகிறேன் என்றார். அவரது கனிவு அது.”

இவ்வாறு தெரிவித்துள்ளார் ஜவஹல் ஸ்ரீநாத்.

BREAKING பப்ஜி கட் கட் பைடு உள்ளிட்ட 118 சீன மொபைல் ஆப்களுக்கு மத்திய அரசு தடை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டிக்டாக், ஷேர் சாட், ஹலோ ஆப் உள்ளிட்ட 54 செயலிகளுக்கு கடந்த ஜூன் மாதம் மத்திய அரசு தடைவிதித்தது என்பதை நாம் அறிவோம்.

அதுபோல் பப்ஜி வீடியோ கேம் குறித்தும் அடிக்கடி புகார்கள் எழுந்தன.

பப்ஜி விளையாட்டுவதால் இளைஞர்கள் மனஅழுத்ததுக்கு ஆளாகி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பப்ஜி மொபைல் கேம், கட் கட், பைடு, ரைஸ் ஆப் கிங்டம்ஸ் உள்ளிட்ட மேலும் 118 சீன செயலிகளை தடை விதித்து மத்திய அரசு இன்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த தடை உத்தரவு பிறபிக்கப்படுவதாக மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

More Articles
Follows