எஸ் ஃபோகஸ் நிறுவனம் விநியோகிக்கும் பாதையில் *வண்டி*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் திரை உலகில் அவ்வப்போது சில அற்புதங்கள் நடந்து கொண்டுதான் இருக்கும். கதை அம்சமுள்ள படங்கள் சமீபமாக தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது.

இந்த படங்களின் வரிசையில் அடுத்து வர இருக்கும் படம் தான் “வண்டி”.விதார்த் நடிப்பில், ரூபி பிலிம்ஸ் என்னும் புதிய பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஹஷீர் தயாரிப்பில், புதிய இயக்குநர் ரஜீஸ் பாலா இயக்கும் இந்தப் படத்தின் தமிழ் நாடு திரை அரங்கு உரிமையை பெற்று இருப்பவர் எஸ் focuss நிறுவனத்தின் நிறுவனர் , பிரபல வினியோகஸ்தரும், தயாரிப்பாளருமான எம் சரவணன்.

சென்னை 28 பாகம் 2, பவர் பாண்டி உள்ளிட்ட பல வெற்றி படங்களை வினியோகித்த இவருடைய தயாரிப்பில், ஜி வி பிரகாஷ்-பார்த்திபன் நடிப்பில் உருவான “குப்பத்து ராஜா” வெகு விரைவில் வெளி வர உள்ளது.

“என் நிறுவனத்தின் பிரதான நோக்கமே தரமான படங்களை தொடர்ந்து வெளி இடுவதுதான். “வண்டி” படத்தின் விநியோக உரிமையை பெற்று , படத்தை ரிலீஸ் செய்யும் வேலைகளில் மும்முரமாக உள்ளேன்.

ஒரு தரமான படத்துக்கு உற்ற துணையாக promotions மற்றும் மார்க்கெட்டிங் அமைந்து விட்டால் அந்த படத்தின் வெற்றிக்கு யாரும் தடை விதிக்க முடியாது.

அந்த வகையில் சிறந்த கதை அமைப்பு, காட்சி அமைப்பு, எங்களது நிறுவனத்தின் விளம்பரம் ஆகிய அனைத்தையும் கொண்ட “வண்டி” வெற்றி பாதையில் பயணிக்கும் என உறுதியாக கூறுகிறேன்” என்கிறார் எம் சரவணன்.

Vandi movie release news updates

ரஜினியின் *பேட்ட* எப்போ ரிலீஸ்..?; கார்த்திக் சுப்பராஜ் விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சன் பிக்சர்ஸ், ரஜினி, கார்த்திக் சுப்பராஜ் மற்றும் அனிருத் ஆகியோரது கூட்டணியில் உருவாகியுள்ள படம் பேட்ட.

இப்படத்தின் மோசன் போஸ்டர் வெளியானதை அடுத்து ரஜினி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

இப்படத்தின் டைட்டில் மற்றும் மோசன் போஸ்டர் வெளியானதை அடுத்து தன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார் டைரக்டர் கார்த்திக் சுப்பராஜ்.

சூப்பர்ஸ்டார் ரஜினியின் *பேட்ட* படைத்த முதல் சாதனை

அதில்… ‘இந்த நாள் என் வாழ்க்கையில் முக்கியமான நாள். நான் சின்ன வயதில் இருந்து ரஜினியின் ரசிகன் நான்.
அவரைப் பார்த்துதான் வளர்ந்தேன். நான் சினிமாவில் வருவதற்கு மிக முக்கிய காரணமே ரஜினி சார்தான்.
அவரை வைத்து இயக்குவது என்னுடைய கனவு. அது நிறைவேறி இருக்கிறது.

இதன் படப்பிடிப்பு கடந்த 3 மாதமாக சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. தன்னுடைய ஸ்டைலில் கலக்கி வருகிறார். ரசிகர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.

ரஜினியின் *பேட்ட* மோசன் போஸ்டர் சொல்லும் சீக்ரெட்ஸ்

தற்போதும் சூட்டிங் நடந்து வருகிறது. சீக்கிரமே படத்தை முடித்து, சீக்கிரமே தியேட்டருக்கு கொண்டு வருவோம். ரசிகர்கள் அனைவரும் ரஜினி படத்தை கொண்டாடுவோம்’ என பேசியுள்ளார்.

Director Karthik Subbaraj clarifies about Rajinis Petta release

*இமைக்கா நொடிகள்* ரிலீஸாக உதவிய 2 பேருக்கு படக்குழுவினர் நன்றி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு படம் சாதாரணமாக அடையும் மிகப்பெரிய வெற்றியை விட, தடைகளை தாண்டி அடையும் ஒவ்வொரு வெற்றியும் சரித்திரத்தில் இடம் பிடிக்கும்.

அப்படி பல தடைகளை தாண்டி ஆகஸ்ட் 30ஆம் தேதி ரிலீஸ் ஆகி, ரசிகர்கள் ஆதரவோடு மிக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது நயன்தாரா, அதர்வா, அனுராக் காஷ்யப், ராஷி கண்ணா நடித்துள்ள இமைக்கா நொடிகள்.

ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்க, அஜய் ஞானமுத்து இயக்கியிருக்கும் இந்த படத்தை மிக பிரமாண்டமாக தயாரித்திருந்தார் கேமியோ ஃபிலிம்ஸ் சி.ஜே.ஜெயக்குமார்.

இந்த வெற்றியை கொடுத்த ரசிகர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இந்த சந்திப்பில் படக்குழுவினர் கலந்து கொண்டு நன்றி தெரிவித்து பேசினர்.

பல பிரச்சினைகளை தாண்டி முதல் நாள் இரவுக் காட்சியில் தான் படம் ரிலீஸ் ஆனது. முதல் வாரத்தில் நல்ல வரவேற்புடன் 16 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது, மேலும் 360 திரையரங்குகளில் 2வது வாரம் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறது.

இதற்கு முன்பு இரண்டு சின்ன பட்ஜெட் படங்கள் தயாரித்திருக்கிறேன், இந்த கதையை கேட்டவுடனே பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரிக்க முடிவு செய்தேன். ரசிகர்கள் மீது நம்பிக்கை வைத்து என் சக்தியையும் மீறி, கடன் வாங்கி தான் இந்த படத்தை தயாரித்தேன்.

ரிலீஸ் நேரத்தில் எனக்கு எல்லா வகைகளிலும் மிகவும் உதவிகரமாக இருந்தார் அன்புச்செழியன். அபிராமி ராமநாதன் பக்கபலமாக இருந்ததோடு சென்னை ஏரியாவில் படத்தையும் ரிலீஸ் செய்து கொடுத்தார்.

எல்லோரும் கேட்கும் ஒரே கேள்வி எப்படி அனுராக் காஷ்யாப்பை தேர்ந்தெடுத்து நடிக்க வைத்தீர்கள். அப்படி எல்லா திரையரங்குகளிலும் ரசிகர்கள் அந்த ‘ருத்ரா’ கதாபாத்திரத்தை கொண்டாடி விட்டார்கள்.

குறைந்த காலத்திலேயே பின்னணி இசையில் மிகச்சிறப்பான பங்களிப்பை கொடுத்தார். நயன்தாரா, அதர்வா, ராஷி கண்ணா ஆகியோர் மல்டி ஸ்டாரர் படம் என்பதையும் தாண்டி கதை பிடித்து போனதால் எந்த ஈகோவும் இல்லாமல் நடித்து கொடுத்தனர்.

அஜய் ஞானமுத்து அடுத்து இதை விட பெரிய, நல்ல படத்தை தருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார் தயாரிப்பாளர் சி.ஜே.ஜெயக்குமார்.

மின்னலே படத்தின் போது தியேட்டரில் ரசிகர்கள் ஓ மாமா பாடலுக்கு டான்ஸ் ஆடியதை பார்த்தேன். அதன் பிறகு இந்த படத்தில் எல்லோரையும், ஸ்கிரீன் அருகில் போய் ஆட வைத்திருக்கிறார் ஹிப் ஹாப் ஆதி என்றார் நடிகர் ரமேஷ் திலக்.

இந்த படத்துக்கு எல்லா இடங்களிலும் ரிபீட் ஆடியன்ஸ் வந்து கொண்டிருக்கிறார்கள். படத்துக்கு எல்லா இடங்களிலும் பாராட்டுக்கள் வந்து கொண்டிருக்கின்றன.

ஆங்காங்கே ஒரு சில குறைகளை சுட்டிக் காட்டியிருக்கிறார்கள், அதை அடுத்தடுத்த படங்களில் திருத்திக் கொள்ள கிடைத்த வாய்ப்பாக கருதிக் கொள்கிறோம் என்றார் வசனகர்த்தா பட்டுக்கோட்டை பிரபாகர்

கடைசி நிமிடம் வரை பட ரிலீஸில் பல பிரச்சினைகள் தொடர்ந்தன. ரிலீஸில் உதவிய அன்புச்செழியன் மற்றும் அபிராமி ராமனாதன் சாருக்கும் நன்றி. அவர்கள் இல்லையென்றால் இந்த சந்திப்பு நடந்திருக்காது, மொத்த குழுவின் உழைப்புக்கும் கிடைத்த வெற்றியாக இதை கருதுகிறேன் என்றார் ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர்.

இது ஒரு கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி. இந்த காலத்தில் எப்படிப்பட்ட ஒரு படமும் இரண்டு வாரங்கள் தான் ஓட முடியும். அதை புரிந்து கொண்டு இயக்குனர்கள் நல்ல திட்டமிடலோடு, சொன்ன பட்ஜெட்டில் படத்தை முடித்துக் கொடுக்க வேண்டும். அது தான் எல்லோருக்கும் பயன் தரும் என்றார் கோபுரம் ஃபிலிம்ஸ் அன்புச்செழியன்.

படம் எடுத்துக் கொண்டிருக்கும்போதே படத்தின் உரிமையை எனக்கு கொடுத்து விட்டார் தயாரிப்பாளர் ஜெயக்குமார். அவர் மனதில் என்ன நினைக்கிறார் என்பதை கண்டுபிடிக்கவே முடியாது.

ரிலீஸ் அன்று வந்து எனக்கு ரிலீஸ் செய்ய உதவி தேவை என்றார். நான் ஒரு வியாபாரி, எல்லா வியாபார வாய்ப்புகளையும் கணித்து அவர் கேட்டதை செய்தேன். என்னுடைய அதிர்ஷ்டம் படம் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது, 100 நாட்கள் ஓடணும் என்று ஆசைப்படுகிறேன் என்றார் அபிராமி ராமனாதன்.

படித்த, எல்லாம் கற்ற, சினிமா மீது காதல் கொண்ட ஒரு தயாரிப்பாளர் தான் ஜெயக்குமார். அவர் இப்படி ஒரு படத்தை எடுத்ததில் வியப்பேதும் இல்லை.

ஒரு கதையை எப்படி சொல்வது என்பதை முதல் படமான டிமாண்டி காலனி படத்திலேயே நிரூபித்தவர் அஜய் ஞானமுத்து.

இமைக்கா நொடிகள் மூலம் அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு தயாராகி விட்டார் என்பது புரிகிறது. இன்றைக்கு இந்தியாவில் அனுராக் காஷ்யப்பை பார்த்து பிரமிக்காத ஒரு படைப்பாளியே இருக்க முடியாது. எனக்கு நடிக்க தெரியாது என்று முதலில் சொல்லியிருக்கிறார்.

முதன்முறையாக நான் படத்தை பார்த்தபோது, அவரை பார்த்து வியந்து போனேன். அதர்வா தென்னிந்திய சினிமாவில் முக்கிய இடத்தை பிடிப்பார் என்றார் இயக்குனர் மகிழ் திருமேனி.

நானும், அதர்வாவும் நீண்ட காத்திருத்தலுக்கு பிறகு இந்த படத்தை வெற்றிகரமாக முடித்து விட்டோம்.

ருத்ரா கதாபாத்திரத்தை பற்றி பேசும்போது பெரிய நடிகர்கள் யாரையாவது நடிக்க வைக்கலாமா என்ற பேச்சு எழுந்தது. ஆனால் அவர்கள் சாயல் படத்தில் வந்து விடுமே என்று பயந்தேன், அதனால் தான் அனுராக் சாரை நடிக்க வைக்க முயற்சி செய்தேன்.

பார்த்தவர்கள் அனைவரும் பாராட்டும்போது தான் என் முடிவு பற்றி மகிழ்ச்சியாக இருக்கிறது. அவருக்கு டப்பிங் பேச வைக்க மகிழ்திருமேனி சாரை கேட்டோம்.

12 நாட்கள் மிகவும் பொறுமையாக டப்பிங் பேசிக் கொடுத்தார். நயன்தாரா ஆரம்பத்தில் இருந்து இன்று வரை எனக்கு பெரும் ஆதரவாக இருந்து வருகிறார்.

கதை எழுதும்போதே விஜய் சேதுபதி சார் தான் நடிக்கணும் என விரும்பினேன். அவர் திரையில் தோன்றும்போதே விசில் பறக்கிறது. நாளைய இயக்குனர் நாட்களில் அபிராமி ராமனாதன் சார் என் குறும்படத்தை பாராட்டி சினிமாவில் சீக்கிரமாக படம் இயக்க சொன்னார். இன்று அவர் இந்த படத்தில் பங்கு பெற்றிருப்பது எனக்கு மகிழ்ச்சி என்றார் இயக்குனர் அஜய் ஞானமுத்து.

ருத்ராவுக்கு கிடைக்கும் பாராட்டுக்கள் அனைத்தும் இயக்குனர் அஜய்க்கு தான் போய் சேர வேண்டும். அஜய் என்னை எமோஷனலாக அணுகினார். படத்தில் நடிக்க வந்த பிறகு பல நேரங்களில் ஷுட்டிங் நடக்க முடியாமல் தள்ளிப்போனது.

2 ஆண்டுகளாக இந்த படம் தயாரிப்பில் இருந்தது, அந்த நேரத்தில் கிடைத்த இடைவெளியில் நான் 2 படங்கள், 1 வெப் சீரீஸ் இயக்கி விட்டு வந்தேன். அஜய் இன்னும் பெரிய உயரத்தை அடைவார்.

மகிழ் திருமேனி சார் தான் ருத்ராவுக்கு உயிர் கொடுத்திருக்கிறார். சினிமா நன்றாக இருக்க, அபிராமி ராமனாதன் சார் மாதிரி பலர் சினிமாவில் இருக்க வேண்டும் என்றார் அனுராக் காஷ்யப்.

படம் வெற்றி பெற்றவுடன் எப்படி இது ஆரம்பமானது என்பதை தான் நான் நினைத்துக் கொண்டிருந்தேன். என் வாழ்வில் இமைக்கா நொடிகள் ஒரு சாப்டர். என் வாழ்வின் ஐந்து ஆண்டுகள் எடுத்துக் கொண்டது.
அஜய் என்ன பண்ணனும் என்பதில் தெளிவாக இருந்தார். படம் பிரமாண்டமாக இருக்கும் என்று சொன்னவுடன் தயாரிப்பாளரும் உற்சாகத்துடன் வந்தார்.

அனுராக் காஷ்யாப் சார் தான் ருத்ராவாக நடிக்கிறார் என்று தெரிந்தவுடன் எனக்குள் ஆர்வம் அதிகமானது. இந்திய சினிமாவின் மிக முக்கியமான ஒரு இயக்குனர்.

அவருக்கு தமிழ் சினிமாவிலும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகியிருப்பது மகிழ்ச்சி. இந்த படத்துக்கு ஆதரவாக இருந்த அன்புச்செழியன், அபிராமி ராமநாதன் சாருக்கும் நன்றி என்றார் நடிகர் அதர்வா முரளி.

இந்த சந்திப்பில் இணை தயாரிப்பாளர் விஜய், நடன இயக்குனர் சதீஷ், ஆடை வடிவமைப்பாளர் பூர்த்தி பிரவீன், பேபி மானஸ்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Imaikka Nodigal team thanks to Abirami Ramanathan and Gopuram Films Anbu

*ஜாக்* படத்திற்காக நாயுடன் நடிக்கும் அசோக் செல்வன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முன்பெல்லாம் விலங்குகளை வைத்து மிகக்குறைந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட படங்கள் வசூலை வாரிக்குவித்தன.

சமீப காலங்களில் பல்வேறு காரணங்களால் குறைந்திருந்த இந்த போக்கு, தற்போது மீண்டும் வந்திருக்கிறது. விலங்குகள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் படங்கள் மிகப்பெரிய வசூலை ஈட்டித் தருகின்றன.

இதனை தொடர்ந்து பல இயக்குனர்கள் இந்த ஜானரில் படங்கள் இயக்க துவங்கியிருக்கிறார்கள்.

திருடன் போலீஸ், ஒரு நாள் கூத்து, புரூஸ்லீ, சர்வர் சுந்தரம், ஆகிய படங்களை தொடர்ந்து துல்கர் சல்மான் நடிக்கும் ‘வான்’ படத்தை தயாரிக்கும் கெனன்யா ஃபிலிம்ஸ் அடுத்து ஒரு நாயை மையமாக வைத்து ஒரு படத்தை தயாரிக்கிறது.

புரூஸ்லீ படத்தை இயக்கிய பிரஷாந்த் பாண்டிராஜ் இந்த படத்தை இயக்குகிறார். ‘ஜாக்’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடிக்கிறார்.

இது குறித்து தயாரிப்பாளர் செல்வக்குமார் கூறும்போது, “இது ராணுவ நடவடிக்கைகளை மையப்படுத்திய படம். எங்கள் நிறுவனத்தில் அனைத்து விதமான படங்களையும் எடுப்பது என்பதில் நான் உறுதியாக இருந்திருக்கிறேன்.

இதுவரை விலங்குகளை வைத்து எந்த படத்தையும் நாங்கள் எடுத்ததில்லை. இந்த கதையை பிரஷாந்த் என்னிடம் சொன்னபோது, இந்த படம் தேசிய அளவில் கவனம் பெறும் என உணர்ந்து மகிழ்ச்சி அடைந்தேன்.

அசோக் செல்வன் எந்த வகை படமாக இருந்தாலும் எளிதாக பொருந்தி விடுகிறார். ராணுவ வீரருக்குண்டான உடல் அமைப்பும் அவருக்கு இருக்கிறது. கோகுல் பினாய் (ஒளிப்பதிவு), ஜஸ்டின் பிரபாகர் (இசை), திலீப் சுப்பராயன் (சண்டைப்பயிற்சி), பாபா பாஸ்கர் (நடனம்) என படத்தின் மதிப்பை கூட்டும் வகையில் மிக திறமையான கலைஞர்களை படத்துக்கு ஒப்பந்தம் செய்திருக்கிறோம்.

கோடை விடுமுறைக்கு படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்” என்றார்.

படத்தின் இயக்குனர் பிரஷாந்த் பாண்டிராஜ் கூறும்போது…

“ஜாக் என்ற தலைப்புக்கு சர்வதேச கவனத்தை ஈர்க்கும் வாய்ப்பு உள்ளது. இந்த கதையை சில காலம் முன்பே எழுதி விட்டேன். இது ராணுவத்துக்கு பயிற்சி கொடுக்கப்பட்ட ஒரு நாயை பற்றிய கதை என்பதால் கதைக்கு நிறைய ஆராய்ச்சி தேவைப்பட்டது.

வெறும் நாயை வைத்து எடுக்கப்படும் பொழுதுபோக்கு படம் இல்லை, படத்தின் ஆதாரமே எமோஷன் தான். போர்க்காட்சிகளில் நாயகனுக்கும், நாய்க்கும் இடையே உள்ள பிணைப்பு தான் படத்தின் ஒரு முக்கிய ஹைலைட்.

அசோக் செல்வன் இந்த படத்துக்கு பிறகு நல்ல உயரத்துக்கு போவார், நாயகி தேர்வு நடந்து வருகிறது. நல்ல தயாரிப்பாளர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இந்த படத்தின் பெரிய பலம். அக்டோபர் மாதம் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது” என்றார்.

Prasanth Pandiaraja and Ashok Selvan teams up for Jack movie

3 மொழிகளில் உருவாகும் பிரம்மாண்ட படத்தில் *பாகுபலி* பிரபாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாகுபலி, பாகுபலி 2 பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு நடிகர் பிரபாஸ் மிகுந்த எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ள “சாஹூ” படத்தில் நடித்து வருகிறார்.

பிரம்மாண்டமாக உருவாகிவரும் சாஹூ படத்திற்கு பிறகு நடிகர் பிரபாஸ் இயக்குனர் K.K.ராதா கிருஷ்ணா குமார் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கின்றார்.

தமிழ், ஹிந்தி, தெலுங்கு என முன்று மொழிகளில் மிகுந்த பொருட்செலவில பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தின் கதாநாயகியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கின்றார்.

கோபி கிருஷ்ணா மூவிஸ் உடன் இணைந்து UV கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் துவக்க காட்சி படமாக்கப்பட்டது.

ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா, இசையமைப்பாளராக அமித் திரிவேதி, படத்தொகுப்பாளராக ஸ்ரீகர் பிரசாத், புரொடக்ஷன் டிசைனராக ரவீந்தர் என பல பிரபலங்கள் இப்படத்தில் பணியாற்றுகின்றனர்.

விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பை பல பிரபலமான சர்வதேச இடங்களில் படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

தனது தனித்துவமான நடிப்பால் அனைத்து மொழி ரசிகர்களையும் கவர்ந்து உச்ச நட்சத்திரமாக வளர்ந்துள்ள நடிகர் பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கமலின் சிகப்பு ரோஜாக்கள் பாணியில் வில்லனாக ஜித்தன் ரமேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜித்தன், மதுரைவீரன், புலி வருது, நீ வேணும்டா செல்லம் உட்பட பல படங்களில் நாயகனாக நடித்தவர் ஜித்தன் ரமேஷ்.

நீண்ட நாட்கள் படங்களில் நடிக்காமல் பட தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு இருந்த அவர் மீண்டும் நடிக்க வருகிறார். அதுவும் பக்கா வில்லனாக நடிக்கிறார்.

இவர் வில்லனாக நடிக்கவுள்ள படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை.

கதாநாயகனாக சாய் நடிக்க கதாநாயகியாக வங்காளத்தை சேர்ந்த ஈனா என்ற புதுமுகம் நடிக்கிறார்.

சென்னையில் தி பார்க் ஹோட்டலில் பாடல் காட்சியுடன் படப்பிடிப்பு துவங்கியது. ஜித்தன் ரமேஷுடன் ஏராளமான அழகிகள் ஆடிப் பாடுவது மாதிரியான பாடல் நடன இயக்குனர் பிரேம் ரக்‌ஷித் நடன அமைப்பில் படமாக்கப்பட்டது.

கதாநாயகன் நடித்து இன்று ஏன் வில்லன்? என ஜித்தன் ரமேஷிடம் கேட்டோம்…

படம் திரைக்கு வந்தவுடன் இந்த கேள்வி வராது சில மாதங்கள் நடிக்காமல் ஒதுங்கி இருந்தேன் இயக்குனர் கேரக்டரை சொன்னவுடன் இந்த காரக்டரை விடக் கூடாது என்று முடிவெடுத்து ஓ.கே சொன்னேன்.

சிகப்பு ரோஜாக்கள் படத்தில் கமல் ஹீரோவா வில்லனா ?

அது மாதிரி தான் என் காரக்டரை சொல்லனும்னா “ஹை வோல்டேஜ் வில்லன்” என்று சொல்லலாம் என்றார் ஜித்தன் ரமேஷ்.

ஒளிப்பதிவு – ரவி
இசை – ஆனந்த்
எடிட்டிங் – ஹரி
நடனம் – பிரேம் ரக்‌ஷித்
சண்டை பயிற்சி – டிராகன் பிரகாஷ்
தயாரிப்பு மேற்பார்வை – R.ரமேஷ்,ராம்பிரபு
எழுதி இயக்குபவர் – வம்சி கிருஷ்ணா மல்லா.
தயாரிப்பு – ரவி செளத்ரி, நாகார்ஜுனா

Hero Jithan Ramesh turns as Villain in untitled movie

More Articles
Follows