ரஜினி-ஷங்கர் கூட்டணியில் இணையும் வடிவேலு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காமெடி புயலாக வீசிய வடிவேலு, சில ஆண்டுகளாக நடிக்காமல் இருந்தார்.

இதனிடையில் ரஜினியின் லிங்கா படத்தில் நடிக்க வாய்ப்பும் வந்தும் மறுத்தார்.

தற்போது விஷாலின் கத்தி சண்டை படம் மூலம் ரீஎண்ட்ரீ கொடுத்துள்ளார்.

இந்நிலையில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துக் கொண்டிருக்கும் 2.0 படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க வடிவேலு ஒப்புக் கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

‘தல-தளபதி’யை தொடர்ந்து சிம்புவின் நியூ இயர் ட்ரீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2017 புத்தாண்டை முன்னிட்டு அஜித், விஜய் ஆகியோரின் படங்களை சில திரையரங்குகளில் திரையிட உள்ளனர்.

இதனால் புதிய வருடம் பிறக்கும் அன்றே தங்கள் அபிமான நடிகரின் படங்களை பார்க்க உள்ள சந்தோஷத்தில் இருக்கின்றனர் ரசிகர்கள்.

இவர்களைத் தொடர்ந்து தன் ரசிகர்களுக்கு நியூ இயர் அன்று விருந்து வைக்க உள்ளார் சிம்பு.

சிம்பு நடித்துள்ள “அன்பானவன் அசராதவன் அடங்காதவன்” என்ற படத்தில் உள்ள ட்ரெண்ட் பாட்டை அன்று வெளியிட இருக்கிறார்களாம்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

நாயகிகளாக ஸ்ரேயா, தமன்னா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்த 2016ஆம் ஆண்டு பிறந்த தினம் அன்று தள்ளிப்போகாதே என்ற பாடலை வெளியிட்டார் சிம்பு என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

ஜல்லிக்கட்டு ட்வீட்டால் ரசிகர்கள் கோபம்… ஆர்யா இது தேவையா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் கட்டுக் கோப்பான உடலை வைத்திருக்கும் ஆர்யாவுக்கு இளம் ரசிகைகள் அதிகம்.

இவர் தற்போது கடம்பன் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவருடைய ட்விட்டர் பக்கத்தில் ‘ஜல்லிக்கட்டு என்றால் என்ன?’ என கேட்டு இருந்தார்.

  • இது தெரியாமலா? தமிழ்நாட்டில் இருக்கிறாய்?
  • தமிழர்களின் வீர விளையாட்டை அசிங்கப்படுத்தி விட்டாயே.. கேரளாவுக்கு ஓடு
  • நடிகைகளுடன் டூயட் பாடும் உனக்கு ஜல்லிக்கட்டை பற்றி என்ன தெரியும்?

என்று பல கேள்விகளை சரமாரியாக கேட்டிருந்தனர்.

அதன்பின்னர் அந்த ட்வீட்டை நீக்கி விட்டார் ஆர்யா.

இந்நிலையில், ‘நான் ஜல்லிக்கட்டிற்கு எதிரானவன் இல்லை. ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறேன்.

ஆனால் என்னுடைய ட்வீட்டை வேறு திசைக்கு கொண்டு சென்று விட்டனர்” என தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

எதற்கு ஜல்லிக்கட்டை பற்றி பேசனும். ஆர்யா இது தேவையா? என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

Arya into trouble because of Jallikattu tweet

மனைவி, குழந்தைகளுக்காக அஜித் எடுத்த முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவா இயக்கும் தல 57 படத்தில் நடித்துவருகிறார் அஜித்.

இதன் சூட்டிங் பல்கேரியா நாட்டில் நடந்துவருகிறது.

இந்நிலையில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் திருநாளை கொண்டாட அஜித் சென்னை திரும்பியுள்ளார்.

அஜித்துடன் பட இயக்குனர் சிவாவும் திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதன்பின்னர் ஜனவரியில் இதன் படப்பிடிப்பு இந்தியாவிலேயே துவங்கப்பட உள்ளதாம்.

இதுவரை 85% சூட்டிங் முடிவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எம்ஜிஆர் நினைவுநாளுக்கும் விஜய்சேதுபதிக்கும் என்ன சம்பந்தம்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மக்கள் திலகம் எம்ஜிஆர் மறைந்து இன்றோடு (டிசம்பர் 24) 29 வருடங்கள் ஆகிவிட்டது.

இதே போன்று விஜய்சேதுபதி நடிக்கத் தொடங்கி இன்றோடு ஆறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

ஹீரோவாக அவர் நடித்த தென்மேற்கு பருவக்காற்று இதே நாளில் கடந்த 2010ஆம் வெளியானது.

எனவே விஜய்சேதுபதி ரசிகர்கள் 6வது ஆண்டு விழாவை கொண்டாடி வருகின்றனர்.

இப்படம் சிறந்த நடிகை, சிறந்த பாடல் ஆசிரியர், சிறந்த படம் உள்ளிட்ட மூன்று தேசிய விருதுகளை குவித்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Fans celebrate 6 years of hero Vijay Sethupathi  on December 24

தமிழகத்திற்கும் தாய்லாந்திற்கும் தலைவர் தரும் விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிக்கும் சரி ரசிகர்களுக்கும் சரி மறக்க முடியாத படம் பாட்ஷா.

இப்படத்தை எத்தனை முறை டிவியில் ஒளிப்பரப்பினாலும் அன்றைய டிஆர்பி ரேட் எகிறும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தை டிஜிட்டலுக்கு மாற்றி 5.1 ஒலி வடிவத்துடன் உருவாக்கியுள்ளனர்.

அண்மையில் இந்த ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

இதனைத் தொடர்ந்து ஜனவரியில் வெளியிடவுள்ளனர்.

மேலும் ஜப்பானிய மொழி உள்ளிட்ட சில மொழிகளிலும் இதனை வெளியிட வேலைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இவையில்லாமல் ரஜினியின் மற்றொரு சூப்பர் ஹிட்டான கபாலி படத்தை தாய் என்ற மொழியில் டப் செய்து, தாய்லாந்து நாட்டில் ஜனவரியில் ரிலீஸ் செய்யவிருக்கிறார்களாம்.

More Articles
Follows