அண்ணன் வந்தா தமிழ்நாடும் அமெரிக்கா.; ரஜினிக்கு அமெரிக்காவிலிருந்து ஆதரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த சிவாஜி படத்தில் பல்லேக்கா பாடலில் ரஜினி அரசியலுக்கு வந்தா தமிழ்நாடு அமெரிக்கா போல ஆகும் என வரிகள் இருந்தது.

தற்போது ரஜினியின் அரசியல் வருகைக்கு அமெரிக்கா வாழ் தமிழர்களிடம் இருந்து ஆதரவு குரல்கள் வந்துள்ளது.

ரஜினிகாந்த்தின் அரசியல் பிரவேசத்தை அவருடைய அமெரிக்க ரசிகர்கள் வரவேற்று, மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர். ஆயிரம் கரங்கள் கூப்பி அன்புத் தலைவர், மக்கள் தலைவர் ரஜினியை வரவேற்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்கள்

இது குறித்து வட அமெரிக்க தலைவர் ரஜினிகாந்த் பேரவையின் நிர்வாகிகள் டல்லாஸ் இர.தினகர், சிகாகோ ரஜினி ராஜா, ஃப்ரிஸ்கோ அன்புடன் ரவி, வாஷிங்டன் எஸ்.ஸ்ரீனிவாசன், டல்லாஸ் எம்.ஆனந்த், ஃப்ரிஸ்கோ என்.ராம்குமார், இர்விங் கே.ஆர்.கிருஷ்ணகுமார் ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

“அன்புத் தலைவர் ரஜினிகாந்த் அவர்களின் ‘அரசியல் வருகை’ பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. வட அமெரிக்க தலைவர் ரஜினிகாந்த் பேரவை சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளை சமர்ப்பிக்கிறோம்.

ஆயிரம் கரங்கள் கூப்பி அன்புத் தலைவர், மக்கள் தலைவர் ரஜினியை வரவேற்கிறோம்.

இனி, தலைவர் ரஜினியின் ஆட்சியில் அறம் சார்ந்த ஆட்சி நடைபெறும். அரசியல் என்பது ஒரு தொழிலாகி மாறிவிட்ட அவலம் நீங்கும். தூய்மையான எண்ணத்துடன் மக்கள் பணியாற்றுபவர்களுக்கு, உரிய அங்கீகாரத்துடன், தொடர்ந்து பணியாற்ற அரசியல் பதவிகள் உறுதுணையாக அமையும்.

இந்தத் தமிழகம் இழந்து விட்ட பெருந்தலைவர் காமராஜர் காலத்து அரசியல் மாண்புகள் மீண்டும் திரும்பும். தமிழகத்தின் கல்வி, விவசாயம் மற்றும் தொழில் வளர்ச்சி உலகத் தரத்திற்கு மேம்படும்.

தலைவர் ரஜினியின் அரசியல் வழிகாட்டி சிங்கப்பூரின் சிற்பி ‘லீ க்வான் யூ ’ நவீன சிங்கப்பூரை உருவாக்கினார். அதைப் போல், தமிழக மக்களின் பேராதரவுடன், தமிழகத்தை உலகின் முன்மாதிரி மாநிலமாக தலைவர் ரஜினி மாற்றுவார் என்று நம்பிக்கை தெரிவிக்கிறோம்.

பத்தாயிரம் மைல்களுக்கு அப்பால் அந்நிய மண்ணில் வாழ்ந்தாலும் அமெரிக்கத் தமிழர்களின் உயிர்த்துடிப்பு தமிழகத்தில் தான். தமிழ் மொழி, தமிழர்கள், தமிழகம் என்பதையே உயிர்மூச்சாகக் கொண்டு இங்கே வாழ்கிறோம். தமிழகத்தில் ஒரு சிறு அதிர்வு என்றாலும் துடித்துப் போகிறோம். இதையெல்லாம் தலைவர் ரஜினி நன்றாகவே உணர்ந்துள்ளார் என்பதையும் அறிகிறோம்.

தலைவர் ரஜினி ஆட்சியில் தமிழ் மொழி, தமிழர்கள், தமிழகம் ஆகியவற்றின் நலன்கள் முன்னெப்போதையும் விட சிறந்து விளங்கவும், இந்திய இறையாண்மைக்கு உட்பட்ட தமிழர்களுக்கான அனைத்து உரிமைகளையும் மீட்டெடுக்கவும் தலைவர், நாளைய முதல்வர் ரஜினி அவர்கள் தக்க நடவடிக்கைகள் எடுப்பார் என நம்புகிறோம்.

தமிழகத்தில் மீண்டும் பெருந்தலைவர் காமராஜர் காலத்து பொற்காலம் திரும்ப, தலைவர் ரஜினியின் ஆட்சி மலர அனைத்து விதத்திலும் உறுதுணையாக இருப்போம் என்று வட அமெரிக்க தலைவர் ரஜினிகாந்த் பேரவை சார்பில் உறுதி கூறுகிறோம்.

தலைவரின் கொள்கைகளான ‘உண்மை, உழைப்பு, உயர்வு’ என்பதே நமது தாரக மந்திரமாக ஏற்று செயல்படுவோம்.

வாழ்க தமிழ், வெல்க தமிழ்குடி, வருக தலைவர் ரஜினி ஆட்சி!!”

என்று கூறப்பட்டுள்ளது.

இது குறித்து இரா.தினகர் கூறியதாவது,

‘சிஸ்டம் கெட்டுப் போயிருக்குன்னு நீண்ட நாளா சொல்லி வரும் தலைவர், அதை சீர் செய்ய முயற்சிகள் எடுத்தார்.

96ல் மூப்பனாரை முதல்வராக்க காங்கிரஸ் கட்சியுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். முடியாத பட்சத்தில், கலைஞரை முதல்வராக்க முன்னின்றி செயல்பட்டார்.

அடுத்தடுத்த ஆட்சிகளிலும் அவர் நினைத்தது போல், சிஸ்டம் மாறவில்லை. இனி அடுத்தவர்களை நம்பி பலன் இல்லை என்பதால், மக்கள் ஆதரவுடன் அரசியலுக்கு வந்துள்ளார். இதை வட அமெரிக்க ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.

தலைவர் ரஜினியை இந்துத்துவாவுடன் இணைத்து இடது சிந்தனையாளர்கள் தவறாக சித்தரித்து வருகிறார்கள். அனைவருக்கும் பொதுவான ஒருவர் தமிழகத்தில் முதல்வராக வர முடியாது என்ற தவறான கண்ணோட்டத்தில் அப்படிச் சொல்கிறார்கள்.

தலைவர் ரஜினி, தன்னை கடுமையாக எதிர்த்த சீமானிடம் கூட நல்ல திட்டங்களைக் கண்டார். தமிழர்களுக்கும், தமிழ் மொழிக்கும், தமிழகத்திற்கும், மற்ற முதல்வக் காட்டிலும் பல மடங்கு கூடுதலாக நன்மை செய்வார் என்று உறுதியாக நம்பலாம்.

அவர் அனைவருக்கும் பொதுவான முதல்வராக இருப்பார். காமராஜரை பெரியார் ஆதரித்தது போல், இன்று ரஜினிக்கு எதிர்ப்பு தெரிப்பவர்கள் நாளை ஆதரவு தெரிவிக்கும் நிலை வரும்.

தலைவர் மீது அவதூறு பிரச்சாரம் செய்வதை விடுத்து, இணைந்து செயல்பட வாருங்கள், தமிழர் நலன் காப்போம் என்று அழைப்பு விடுக்கிறோம்” – இவ்வாறு தினகர் தெரிவித்தார்.

ரஜினியின் அரசியல் அறிவிப்பால் தமிழகம் மட்டுமல்லாமல், உலகெங்கும் வசிக்கும் ரஜினி ரசிகர்கள் பெரும் உற்சாகம் அடைந்துள்ளார்கள் என தெரிய வந்துள்ளது.

2018 பிப்ரவரியில் அஜித் ரசிகர்களுக்கு ஆர்கே. சுரேஷ் தரும் ட்ரீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜே.கே.பிலிம் புரொடக்‌ஷன் சார்பில் கே.சி.பிரபாத் தயாரிக்கும் படம் ‘பில்லா பாண்டி’.

இதில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் தீவிர அஜித் ரசிகராக நடித்திருக்கிறார்.

‘மேயாதமான்’ இந்துஜா, சாந்தினி கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். இவர்களுடன் கே.சி.பிரபாத், தம்பி ராமையா, சரவண சக்தி, மாரிமுத்து, அமுதவாணன், சங்கிலி முருகன், சௌந்தர் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

வசனம் -எம்.எம்.எஸ். மூர்த்தி,ஒளிப்பதிவு- ஜீவன், இசை-இளையவன், படத்தொகுப்பு-ராஜா முகம்மது, கலை- மேட்டூர் சௌந்தர், நடனம் – கல்யாண், விஜி, சாண்டி, சண்டைப் பயிற்சி-சக்தி சரவணன், தயாரிப்பு-கே.சி.பிரபாத், இயக்கம்- சரவணசக்தி.

இப்படம் அடுத்த பிப்ரவரி மாதம் வெளியாகிறது.

இதில் நாயகன் தீவிர அஜித் ரசிகராக நடிப்பதால் இது அஜித் ரசிகர்களுக்கும் பெரும் விருந்தாக அமையும் என எதிர்பார்க்கலாம்.

விஜய்-முருகதாஸ் கூட்டணியில் இணைந்தார் ஏஆர்.ரஹ்மான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் தன் கேரியரில் 61 படங்களை கடந்து விட்டாலும் ஆஸ்கர் நாயகன் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் உடன் இதுவரை 3 படங்களில் மட்டுமே இணைந்துள்ளார்.

உதயா, அழகிய தமிழ் மகன் மற்றும் மெர்சல் படங்களில் இந்த கூட்டணி இணைந்து பணியாற்றியது.

தற்போது ஏஆர். முருகதாஸ் இயக்கவுள்ள விஜய் 62வது படத்திலும் ஏஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ளாராம்.

ஒளிப்பதிவாளராக கிரிஸ் கங்காதரன் பணியாற்ற படத்தொகுப்பை தேசிய விருது வென்ற ஸ்ரீகர் பிரசாத் மேற்கொள்கிறார்.

முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க யோகி பாபு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கலை பணிகளை சந்தானம் கவனிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

ஜனவரியில் தொடங்கும் இதன் சூட்டிங்கை 6 மாதத்தில் முடித்து 2018 தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

ரஜினி அரசியல் அப்டேட்ஸ்; பொங்கல் தினத்தில் அடுத்த அதிரடி..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேற்று தன் அரசியல் பிரவேசம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார் நடிகர் ரஜினிகாந்த்.

தன்னுடைய அரசியல் பயணம் ஜாதி, மதச்சார்பற்ற ஆன்மிக அரசியலாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது திராவிட அரசியலுக்கு எதிராக இருக்கும் என சிலர் அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சில மணி நேரங்களுக்கு முன் ரஜினிமன்றம் என்ற இணையதளம் மற்றும் மொபைல் ஆப்பை அறிமுகப்படுத்தியுள்ளார்.

அவர் சொன்ன சில நிமிடங்களில் பலரும் அந்த இணையதளத்தை தொடர்பு கொள்ள ரஜினி மன்றம் என்ற இணையதளம் ஹாங்க் ஆகிவிட்டது.

இந்நிலையில் தான் தொடங்கவுள்ள புதிய கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை பொங்கல் தினத்தன்று ரஜினிகாந்த் அறிவிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

ரஜினியின் அரசியல் பயணத்தில் இன்னும் பல அதிரடிகளை விரைவில் எதிர்பார்க்கலாம்.

Rajini may announce his Party Name and Symbol on Pongal 2018

தனுஷின் மாரி2 பட பூஜை முடிந்தது; விரைவில் சூட்டிங் ஆரம்பம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், காஜல் அகர்வால் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான மாரி படம் மாபெரும் வெற்றியடைந்ததையடுத்து அப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

சமீபத்தில் இயக்குனர் பாலாஜி மோகன் மாரி 2 படத்தின் அறிவிப்பு பற்றி அதிகார பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

அதனை தொடர்ந்து அப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்களையும் பாலாஜி மோகன் வெளியிட்டிருந்தார்.

இப்படத்தின் பூஜை டிசம்பர் 14 ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குனர் பாலாஜி மோகன் நடிகர் தனுஷ், கிருஷ்ணா மற்றும் நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் படத்தின் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் மற்றும் எடிட்டர் ஜி.கே. பிரசன்ன்ன ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாரி 2 படத்தின் இரண்டாம் பாகத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

தனுஷ் – யுவன் சங்கர் ராஜா கூட்டணி 10 வருடங்களுக்கு பிறகு அமைவதால் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

மாரி2 படப்பிடிப்பு இம்மாதத்தில் தொடங்க உள்ளது.

Dhanush Maari2 movie pooja and shooting updates

சூர்யாவுடன் நடிக்க அம்மாவிடம் சவால் விட்ட கீர்த்திசுரேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் தற்போது நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். வருகிற பொங்கல் அன்று வெளியாகவுள்ள ஸ்டுடியோ கிரீன் K.E. ஞானவேல் ராஜாவின் “ தானா சேர்ந்த கூட்டம்“ படத்தில் சூர்யாவுக்கு ஜோடி இவர் தான்.

தானா சேர்ந்த கூட்டம் படத்தை பற்றியும் , தன்னுடைய கதாபாத்திரம் மற்றும் தன்னோட நடித்த நடிகர்கள் மற்றும் டெக்னிஷியன்ஸ் பற்றியும் கூறுகிறார் கீர்த்தி சுரேஷ்.

தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நான் பிராமண பெண் வேடத்தில் நடிக்கிறேன். படத்தில் என்னுடைய கதாபாத்திரத்துக்கு பெயரே கிடையாது. நான் ஹுமர் கலந்த சஸ்பன்ஸ் வேடத்தில் நடிக்கிறேன்.

இயக்குநர் விக்னேஷ் சிவன் கதை சொல்லும் போதே எனக்கு கதையும் என்னுடைய கதாபாத்திரமும் மிகவும் பிடித்திருந்தது.

பள்ளி பருவத்திலேயே நான் சூர்யாவின் மிகப்பெரிய ரசிகை. என்னுடைய அம்மா சூர்யாவின் தந்தை நடிகர் சிவகுமாருடன் மூன்று படத்தில் நடித்துள்ளார்.

நான் ஸ்கூல் படிக்கும் போது நான் சிவகுமார் சாரின் மகன் சூர்யாவுடன் ஒரு நாள் கதாநாயகியாக நடிப்பேன் என்று கூறியிருந்தேன். அது இன்று நிஜமாகியுள்ளது எனக்கு மகிழ்ச்சி.

சூர்யா சார் மிகவும் அமைதியானவர். அதிகம் பேசமாட்டார். ஆனால் அவரிடம் நான் சந்தேகம் கேட்கும் போது எனக்கு சொல்லி கொடுத்து உதவுவார்.

செந்தில் சாரோட நடித்தது ஒரு நல்ல அனுபவம். அவர் Teddy Bearரை போல கியூட் ஆனா மனிதர்.

அவரோடு நடித்தது எனக்கு மறக்க முடியாத நல்ல அனுபவம். ரம்யா கிருஷ்ணன் அவர்கள் அம்மாவின் தோழி.

எனக்கு அவங்களை சின்ன வயதிலிருந்தே தெரியும். பாகுபலி வெளியான நேரத்தில் அவங்களோடு நடித்தது எனக்கு சந்தோஷமாக இருந்தது.

இயக்குநர் விக்னேஷ் சிவன் எனக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து தான் வசனத்தை கூறுவார். அதை நாங்கள் அங்கே டெவெலப் செய்து நடிப்போம்.

அப்படி நடிக்கும் போது அது சிறப்பாக இருக்கும். அனிருத் பாடல்கள் சிறப்பாக வந்துள்ளது. 3 பாடல்கள் தற்போது சிங்கிளாக வெளிவந்து மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது சந்தோஷமாகவுள்ளது என்றார் கீர்த்தி சுரேஷ்.

Keethy Suresh shares her experience of acting with Suriya

More Articles
Follows