2020 ஜனவரி 24 முதல் உலகமெங்கும் உதயநிதி ஸ்டாலினின் “சைக்கோ” !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன், அதிதி ராவ் ஹைதாரி நடிப்பில் “சைக்கோ” படம் இந்தாண்டின் மிகப்பெரும் எதிர்பார்ப்புக்குரிய படமாக உருவாகியுள்ளது. சென்சார் ஃபோர்ட் “சைக்கோ” படத்தலைப்புக்கு முழு அனுமதி வழங்கியதில் உற்சாகத்தில் இருக்கும் படக்குழுவிற்கு
மேலும் சந்தோஷத்தை அளித்துள்ளார் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம். உலகெங்கும் 2020 ஜனவரி 24 முதல் “சைக்கோ” படம் வெளியாவதாக அறிவித்துள்ளார்.

Double Meaning Production சார்பில் “சைக்கோ” படத்தை தயாரிக்கும் அருண்மொழி மாணிக்கம் கூறியதாவது….

இந்த மிக குறுகிய சினிமா பயணத்தில் நான் சில படங்களுக்கு தயாரிப்பாளராக இருந்துள்ளேன். ஆனால் “சைக்கோ” திரைப்படம் எனக்கு கிடைத்த பரிசாகவே நினைக்கிறேன். ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை இது ஒரு அற்புதமாகவே நிலைத்திருக்கிறது.
இயக்குநர் மிஷ்கினின் திறமையான எழுத்து மற்றும் மேதமையான இயக்கம், வெகு திறமையான நடிகர்களான உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன், அதிதி ராவ் ஹைதாரி ஆகியோரின் வித்தியாசமான அவதாரம் என இப்படத்தின் அனைத்து அம்சங்களும் படத்தின்பால் பெரும் எதிர்ப்பார்பையும் நம்பிக்கையையும் உருவாக்கியிருக்கிறது. நான் இந்நேரத்தில் எங்களது கடின உழைப்பு மற்றும் படத்தின் உண்மையான கருத்தாக்கத்தை புரிந்துகொண்டு எங்களது சைக்கோ டைட்டிலை அனுமதித்ததற்கு CBFC சென்சார் ஃபோர்ட் உறுப்பினர்களுக்கு எனது மிகப்பெரும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தற்போது “சைக்கோ” படத்தினை இந்திய முழுதும் பன்மொழிகளில் வெளியிட திட்டமிட்டு வருகிறோம். இப்படம் உருவாக்கப்பட்டிருக்கும் விதமும் படத்தின் நேர்த்தியும் மொழிகடந்து உலகமுழுதும் அனைத்து ரசிகர்களையுமே ஆச்சர்யபடுத்தும். வரும் 2020 ஜனவரி 24 ஆம் தேதி உலகமெங்கும் மிகப்பிரமாண்டமாக வெளியிட திட்டமிட்டிருக்கிறோம். இது Double Meaning Production நிறுவனத்தின் முதல் மிகப்பெரிய வெளியீடாக இருக்கும்.

ஒரு பார்வையாளனாக “சைக்கோ” படத்தை பார்த்த பொழுது எனக்கு ஒரு மாபெரும் அனுபவத்தை அளித்தது இந்தத்திரைப்படம். ரசிகர்களை இப்படம் பல அடுக்குகளுக்கு இழுத்து சென்று, இருக்கை நுனியில் அமர்த்தி வைக்கும் திரில் பயண்மாக இருக்கும். அதே நேரத்தில் இயக்குநர் மிஷ்கின் முத்திரையான உணர்வுகளை ஆட்கொள்ளும் திரை அனுபவமும் இப்படத்தில் இருக்கும். இசைஞானி இளையாராஜாவின் உயிர் உருக்கும் இசையில் இத்திரைப்படம் பார்க்கும் பார்வையாளர்கள் அனைவருக்கும் ஒரு மாறுபட்ட திரைஅனுபவமாக இருக்கும்.

இயக்குனர் சிகரம் கே.பாலசந்தருக்கு ரசிகர் மன்றம் உருவானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய சினிமாவில் உச்சத்தை தொட்டு இருக்கும் ரஜினிகாந்த் அவர்களை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் கே. பாலசந்தர் என்பது நம் எல்லாருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

அவர்தான் சிவாஜி ராவ்க்கு ரஜினிகாந்த் என்ற பெயரை வைத்தார் என்பதும் பலருக்கும் நினைவிருக்கும்.

ரஜினி இல்லாமல் பலரின் சினிமா வாழ்க்கைக்கு விதை போட்டவரே இவர்தான். கமலின் சினிமா வாழ்விலும் கே. பாலசந்தரின் பங்கு மிகப்பெரியது.

பிரகாஷ்ராஜ், விவேக் உள்ளிட்ட பலரையும் இவர்தான் சினிமாவில் அறிமுகப்படுத்தினார்.

தமிழ் சினிமாவில் காலத்தால் அழிக்க முடியாத பல தரமான படங்களை கொடுத்துள்ளார் இயக்குனர் சிகரம் கே.பி.

இவர் மறைந்து கிட்டதட்ட 5 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் இவரால் கவரப்பட்ட ரசிகர்கள் இவருக்கு ரசிகர் மன்றம் ஆரம்பித்துள்ளனர்.

வருகிற டிசம்பர் 23ஆம் தேதி கே. பாலசந்தரின் 5ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை குமாரராஜா முத்தையா ஹாலில் ரசிகர் மன்றத்தை ஆரம்பிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.

Fans Association for Late Director K Balachander

BREAKING ஒற்றுமை வேண்டும்; வன்முறை வேதனை அளிக்கிறது.. – ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

குடியுரிமை சட்ட மசோதாவிற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் உருவாகியுள்ளன.

குறிப்பாக அஸாம், மிசோரம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் கலவரங்கள் வெடித்துள்ளன.

கேரளா அரசு இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆனால் தமிழகத்தில் பாஜக, அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் இதனை ஆதரித்துள்ளன.

குடியுரிமை சட்ட மசோதாவைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய நள்ளிரவே, மசோதாவுக்கு ஒப்புதல் கிடைத்தது. குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது.

இதனால் நாடு முழுவதிலும் பல்வேறு கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

முக்கியமாக டில்லியில் ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தில் பெரும்பாலான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீஸ் அவர்கள் மீது தடியடி நடத்தினர்.

பல மாணவர்கள் காயம் அடைந்தனர். இதனையடுத்து மற்ற மாநிலங்களில் உள்ள மாணவர்களும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இந்த நிலையில் இதுபற்றி தர்பார் டிரைலர் விழாவில் கருத்து தெரிவிக்காத ரஜினி இப்போது இதுபற்றி பேசியுள்ளார்.

அதில்…

எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு காண் வன்முறையோ, கலவரமோ ஒரு வழியாகி விடக் கூடாது. தேசப் பாதுகாப்பும், நாட்டு நலனையும் மனதில் கொண்டு இந்திய மக்கள் எல்லோரும் ஒற்றுமையோடும் விழிப்புடனும் இருக்க வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன்.

இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் வன்முறை எனக்கு வேதனை அளிக்கிறது” எனப் பதிவிட்டுள்ளார்.

Rajini request the people to stand united and spread awareness

வலிமை படத்தில் அஜித்துக்கு வில்லனாக தெலுங்கு நடிகர்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்த போனி கபூர் & படத்தை இயக்கிய வினோத் ஆகியோருடன் வலிமை படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளார் அஜித்.

இந்த படத்தின் நாயகி யார்? என்பதே பெரும் கேள்வியாக உள்ளது.

இலியானா நாயகியாக நடிக்கிறார் என ஒரு பக்கம் கூறப்பட்டாலும், மற்றொரு புறம் யாமி நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தெலுங்கு சினிமாவின் இளம் நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடிக்கிறார் என சொல்லப்படுகிறது.

இவர் தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ‘ஆர்எக்ஸ் 100’ மற்றும் கேங்ஸ்டர் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

Kartikeya to act as a villain for Ajith Valimai

‘பேட்ட’ கெட் அப்பில் தனுஷ்; ஜோடியாக 2 ஹீரோயின்கள் நடிக்கின்றனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி நடித்த பேட்ட படத்தை இயக்கியவர் கார்த்திக் சுப்பராஜ்.

இப்படத்தை அடுத்து நிமிஷா என்ற மலையாள நடிகை நடிக்கும் அல்லி என்ற படத்தை தயாரித்து வருகிறார்.

இவையில்லாமல் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஒரு படத்தையும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ஒரு படத்தையும் தயாரித்து வருகிறார்.

இதே சமயத்தில் தனுஷ் நடித்து வரும் படத்தையும் இயக்கி வருகிறார்.

இதன் சூட்டிங் தற்போது தமிழ்நாட்டில் நடக்கிறது.

‛பேட்ட படத்தில் ப்ளாஷ்பேக்கில் முறுக்கு மீசை ரஜினி வருவார்.

தற்போது அதே போல தனுஷ் முறுக்கு மீசையுடன் இவரின் படத்தில் நடித்து வருகிறார். சுருளி என்ற கேரக்டரில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நாயகியாக நடித்து வரும் நிலையில் மற்றொரு நாயகியாக சஞ்சனா நடராஜன் நடித்து வருகிறார்.

இவர் ‛நோட்டா, கேம் ஓவர் படங்களில் நடித்திருந்தார்.

தனுஷ் – சஞ்சனா இருவருக்கும் நடைபெறும் திருமண விழாவுக்கான போஸ்டர் ஒன்று தற்போது லீக்காகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது மதுரை பின்னணியில் கொண்ட கதையாகும். 2014ல் நடப்பது போல் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.

Sanchana Natarajan to play Dhanushs pair in Karthik Subbaraj movie

ரஜினி கமல் விக்ரம் பற்றி ‘தபங்3’ மீட்டிங்கில் சல்மான்கான் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டான்ஸ் மாஸ்டர் நடிகர் பிரபுதேவா இயக்கத்தில் சல்மான்கான், சோனாக்ஷி சின்ஹா, கிச்சா சுதீப் நடித்துள்ள படம் ‛தபங் 3′ நாளை உலகமெங்கும் வெளியாகிறது.

இப்படத்தை சல்மான்கான் தயாரித்துள்ளார்.

இப்பட புரமோசனுக்காக சென்னை வந்த சல்மான்கான் நிருபர்களிடம் சில கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது அவர் பேசியதாவது…

எப்போதும் தென்னிந்திய படங்களை ரீ-மேக் செய்வதில் எனக்கு அதிக ப்ரியம் உண்டு. விக்ரம் நடித்த ‛சேது’ படத்தை ரீமேக் செய்து நடித்தேன்.

வாண்டட் படத்தின் ஷூட்டிங்க்கு சென்னை வந்திருந்தேன். நடிகராக ஆவதற்கு முன்பே ஒரு விளம்பரபடத்திற்காக சென்னை வந்துள்ளேன்.

பிரபுதேவா ஒர்க்கிங் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும். என்னை நன்றாக ஆட வைப்பார், காமெடி செய்ய வைப்பார்.

அதனால்தான் தபங் 3ஐ அவரை இயக்கச் சொன்னேன். அவருடன் அடுத்த படமும் செய்கிறேன்.

தமிழகத்தை சேர்ந்தவர்கள் தான் இந்த படத்தில் நிறைய வேலைகள் செய்துள்ளனர்.

இப்போது நிறைய தமிழ் படங்கள் முக்கியமாக ரஜினி கமல் விக்ரம் படங்கள் பாலிவுட்டில் வெற்றி பெறுகிறது.

பாகுபலி, எந்திரன் படங்களை நாங்க ரசித்தோம். அதுபோல தபங் உள்ளிட்ட எங்களது படங்களையும் நீங்க ரசிக்கனும். அதனை வெற்றி பெற வைக்க வேண்டும்”. என சல்மான்கான் பேசினார்.

Salman Khan talks about Rajini Kamal Vikram in Dabangg 3 meet

More Articles
Follows