நடிகர் அஜித்துடன் இணைந்த உதயநிதி ஸ்டாலின்; ரசிகர்கள் உற்சாகம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் விநியோக வியாபாரத்தில் முன்னணி நிறுவனம் ரெட் ஜெயன்ட்.

இதன் நிறுவனர் நடிகரும் எம்எல்ஏ-வுமான உதயநிதி ஸ்டாலின் என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

இந்த நிலையில் அஜித்தின் ‘துணிவு’ பட தமிழ்நாடு வெளியிட்டு உரிமையை இந்த நிறுவனம் பெற்றுள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘துணிவு’ திரைப்படம் 2023 பொங்கல் தினத்தில் வெளியாகிறது.

வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியார் நடித்துள்ளார்.

போனி கபூர் தயாரிக்க நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இதன் டிவி உரிமையை கலைஞர் டிவி பெற்றுள்ளது. ஓடிடி டிஜிட்டல் உரிமையை நெட் ப்ளிக்‌ஸ் பெற்றுள்ளது.

‘வலிமை’ பட தோல்விக்கு பிறகு ‘துணிவு’ படம் வருவதால் அஜித் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

சமூக ஊடகங்களைப் பற்றி மனம் திறந்த சன்யா மல்ஹோத்ரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்றைய காலகட்டத்தில், பிரபலங்கள் தங்கள் ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பதை சமூக ஊடகங்கள் எளிதாக்கியுள்ளன. சமீபத்திய ஊடக உரையாடலில், நடிகை சன்யா மல்ஹோத்ரா தனது தனியுரிமையின் மீது கட்டுப்பாட்டை வைத்திருப்பதால், அவரது சமூக ஊடக இருப்பு உண்மையில் அவரது வாழ்க்கை முறையை பாதிக்காது என்று பகிர்ந்து கொண்டார்.

“இன்றைய நாளில் மக்கள் தனியுரிமையைப் பெறும்போது நான் அதை விரும்புகிறேன், அது கட்டுப்படுத்தக்கூடியது. . திறமை மற்றும் கடின உழைப்புக்கு எந்த ஆதரவும் இல்லை என பதிவிட்டுள்ளார்.

விஜய் – லோகேஷ் படத்தில் இரண்டு பிக் பாஸ் போட்டியாளர்கள்..!?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வம்சி இயக்கத்தில் உருவாகும் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்தப் படத்தை தில் ராஜூ தயாரிக்க தமன் இசையமைத்து வருகிறார்.

இந்த படம் பொங்கலுக்கு ஓரிரு தினங்களுக்கு முன்னரே ஜனவரி 11ம் வெளியாகும் என கூறப்படுகிறது.

அடுத்ததாக, விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படம் ‘தளபதி 67’. விரைவில் இப்படத்தின் அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

மேலும், இப்படத்தில் ‘பிக் பாஸ் 5யின்’ டைட்டில் வின்னர் ராஜு மற்றும் ‘பிக் பாஸ் 6’ மைனா நந்தினி இருவரும் நடிகையுள்ளார்கள்.

raju and myna nandhini joining vijay’s thalapathy67

BREAKING என்னிடம் நடிப்பை கற்றுக் கொள்ள வேண்டாம்..; ‘செம்பி’ இசை விழாவில் கமல் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபு சாலமன் இயக்கத்தில் கோவை சரளா 70 வயது கேரக்டரில் நடித்துள்ள திரைப்படம் ‘செம்பி’.

1980களில் கொடைக்கானலில் இருந்து 20 பயணிகளுடன் திண்டுக்கல் வரை செல்லும் பேருந்து ஒன்றில், வழியில் நடக்கும் சம்பவங்களே இப்பட கதைக்களம்.

இந்த பேருந்தில் பயணிக்கும் சிறுமி ஒருவரின் பெயரே ‘செம்பி’. அவினாசியைச் சேர்ந்த 10 வயதான நிலா என்ற சிறுமி, செம்பி ஆக நடித்துள்ளார்.

‘குக் வித் கோமாளி’ புகழ் அஸ்வின் குமார் மற்றும் தம்பி ராமையா முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர்.

‘கொக்கி’ பட ஒளிப்பதிவாளர் ஜீவன் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். முதன்முறையாக இசையமைப்பாளர் நிவாஸ் பிரசன்னாவுடன் கூட்டணி அமைத்துள்ளார் பிரபு சாலமன்.

இந்த படத்தை ட்ரைண்ட் ஆர்ட்ஸ் ரவி தயாரித்துள்ளார்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படக்குழுவினருடன் கமல்ஹாசன், பாக்யராஜ், ஆர்வி. உதயகுமார், நாஞ்சில் சம்பத், பழ. கருப்பையா, ஐசரி கணேஷ் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.

இந்த விழாவில் கமல்ஹாசன் பேசியதாவது…

“சினிமாவில் என்னை விட திறமையானவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போய் இருக்கிறார்கள். அவர்கள் என் பொறாமையால் சென்றார்களா? என கண்ணாடியில் பார்ப்பேன். ரசனையால் தான் அது நடக்காமல் போகிறது.

ஒரு காடு உருவாக நான்தான் காரணம் என பறவைக்கு தெரியாது. அந்த காரணத்தினால்தான் நான் இங்கு வந்தேன். எனக்கு பிடித்தவர்கள் பலர் இந்த மேடையில் இருக்கிறார்கள்.

நடிப்பை என்னிடம் கற்றுக் கொள்ள சொன்னார்கள். அது வேண்டாம். என்னைவிட நிறைய திறமைசாலிகள் சினிமாவில் உள்ளனர். நிறைய டப்பிங் கலைஞர்களை பார்த்திருக்கிறேன். அவர்களிடம் கூட அப்படி ஒரு நடிப்பு திறமை இருக்கு.

45 வருடம் கழித்தும் 16 வயதினிலே படத்தை பேசுகிறோம். அதான் பெரிய படம். பிரம்மாண்ட படம் எடுத்தும் அந்த படம் பேர் கூட நினைவில்லை என்றால் அது சின்ன படம் தான் ஒரு படத்தின் வெற்றி தான் அது பெரிய படம் என்பதை தீர்மானிக்கிறது”

இவ்வாறு கமல்ஹாசன் மேடையில் பேசினார்.

மேலும் கோவை சரளாவை பற்றி பேசும்போது சரளா பாப்பா சரளா பாப்பா என்று அழைத்தே பேசினார்.

JUST IN சிவாஜியையே ஃபீல் பண்ண வச்சவரு கமல்.. – ஆர்வி. உதயகுமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபு சாலமன் இயக்கத்தில் கோவை சரளா 70 வயது கேரக்டரில் நடித்துள்ள திரைப்படம் ‘செம்பி’.

1980களில் கொடைக்கானலில் இருந்து 20 பயணிகளுடன் திண்டுக்கல் வரை செல்லும் பேருந்து ஒன்றில், வழியில் நடக்கும் சம்பவங்களே இப்பட கதைக்களம்.

இந்த பேருந்தில் பயணிக்கும் சிறுமி ஒருவரின் பெயரே ‘செம்பி’. அவினாசியைச் சேர்ந்த 10 வயதான நிலா என்ற சிறுமி, செம்பி ஆக நடித்துள்ளார்.

‘குக் வித் கோமாளி’ புகழ் அஸ்வின் குமார் மற்றும் தம்பி ராமையா முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர்.

‘கொக்கி’ பட ஒளிப்பதிவாளர் ஜீவன் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். முதன்முறையாக இசையமைப்பாளர் நிவாஸ் பிரசன்னாவுடன் கூட்டணி அமைத்துள்ளார் பிரபு சாலமன்.

இந்த படத்தை ட்ரைண்ட் ஆர்ட்ஸ் ரவி தயாரித்துள்ளார்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படக்குழுவினருடன் கமல்ஹாசன், பாக்யராஜ், ஆர்வி. உதயகுமார், கே.எஸ். ரவிகுமார், நாஞ்சில் சம்பத், பழ. கருப்பையா, ஐசரி கணேஷ் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.

ஆர்வி. உதயகுமார் பேசியதாவது…

நான் சிவாஜி அவர்களுக்கு ஒரு கதை வைத்திருந்தேன். மிலிட்டரியில் 2 கால்களை இழந்த ஒருவர் தன் மகனுக்காக வாழ்கிறார்.

ஒரு கட்டத்தில் மகனுக்கு பிரச்சினை வருகிறது. அந்த பிரச்சனையை மகனை வைத்தே வில்லனை பழிவாங்குகிறார்.

இந்த கதை சிவாஜிக்கு பிடித்தது. அப்போது கமல் பற்றி பேசினோம். அப்போது கமல் நடிப்பை புகழ்ந்து தள்ளினார்.

என்னய்யா கமல் இப்படி நடிக்கிறான்.”

என மேடையில் பேசி ‘செம்பி’ படக்குழுவை வாழ்த்தினார் ஆர்வி. உதயகுமார்.

கூத்தடிப்பது பிடிக்கல.; பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க கண்டிசன் போடும் மன்சூர் அலிகான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர் மன்சூர் அலிகான்.

இவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி பேசியதாவது…

“பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் கலந்துக் கொள்ள மாட்டேன். அப்படி கலந்துக் கொள்வதாக இருந்தால், ‘நான் தான் பிக்பாஸாக இருப்பேன்’ என நடிகர் மன்சூர் அலிகான் அறிவித்துள்ளார்!

மேலும்… “பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூத்தடிப்பது தனக்கு பிடிக்கவில்லை என்றும், தான் நிகழ்ச்சியில் பங்கேற்பதாக இருந்தால், ‘விவசாயத்திற்கு முக்கியத்துவம்’ கொடுக்கும் நிகழ்ச்சியாக, தான் பிக்பாஸாக இருந்து நடத்துவேன் என்றும் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.

More Articles
Follows