விஜய்சேதுபதியின் சீதக்காதி படத்தலைப்புக்கு சிக்கல்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய்சேதுபதி நடிப்பில் 25-வது படமாக உருவாகி வருகிறது’சீதக்காதி’.

பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படதை தயாரித்து வருகிறது.

இப்படம் மேடைக் கலைஞர் ஒருவரின் வாழ்க்கைப் பயணமாக இக்கதை அமைந்திருக்கும் எனச் சொல்லப்பட்டது.

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ பட இயக்குநர் பாலாஜி தரணிதரன் இப்படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தில் இயக்குநர் மகேந்திரன், அர்ச்சனா, மெளலி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்கள்.

இதன் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு இதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.

இந்நிலையில் இப்பட தலைப்பு குறித்து சேதுபதி-சீதக்காதி உறவின்முறை சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அஜ்மல் தீன் கூறியதாவது:

”ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் 17-ம் நூற்றாண்டில் வாழ்ந்த வணிகர் சேகு அப்துல் காதர் என்பவரின் பெயர்தான் சீதக்காதியாய் மருவியது.

ராமநாதபுரத்தை ஆண்ட மன்னன் கிழவன் சேதுபதி, சீதக்காதிக்கு விஜயரகுநாத என்ற பட்டத்தையும், மன்னார் வளைகுடா, பாக்ஜலசந்தி கடற்கரைகளில் முத்து குளிப்பதற்கான வரி வசூலிக்கும் அதிகாரத்தையும் வழங்கியதோடு மட்டுமின்றி தனது ஆலோசகராகவும் பணியமர்த்திக் கொண்டார்.

உமறுப் புலவர் சீறாப்புராணத்தை இயற்றுவதற்கும் நிதி அளித்தவர் சீதக்காதி,.

கர்ணனைப் போல கொடுத்துக் கொடுத்துச் சிவந்த கரங்களுக்குச் சொந்தக்காரர் சீதக்காதி என்று சைவப் புலவர் பொற்களந்தை படிக்காசுத் தம்பிரான் பாடியுள்ளார்.

சீதக்காதி என்றால் தமிழர்கள் அனைவருக்கும் நினைவிற்கு வருவது வள்ளல் சீதக்காதிதான்.

வள்ளல் சீதக்காதியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தாமல் காட்சிகளை அமைக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார் அஜ்மல் தீன்.

வெற்றிமாறன்-சமுத்திரக்கனி கூட்டணியில் ஜவுளித்துறை கதை படமாகிறது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜவுளித்துறையை சார்ந்து தறியில் நடக்கும் அவலநிலையை மையமாக ‘தறி’ என்ற நாவலை பாரதிநாதன் என்பவர் எழுதியிருந்தார்.

இந்நிலையில் இதை மையப்படுத்தை ஒரு திரைப்படம் உருவாகிறது.

‘உதயம் NH4’, ‘புகழ்’ ஆகிய படங்களை இயக்கிய மணிமாறன் ‘சங்கத் தலைவன்’ என்ற பெயரில் உருவாகவுள்ள படத்தை இயக்குகிறார்.

வெற்றிமாறனின் ‘கிராஸ்ரூட் பிலிம் நிறுவனம்’ தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜனவரி 22-ம் தேதி தொடங்குகிறது.

சமுத்திரக்கனி, கருணாஸ், ஆகியோர் இதில் நடிக்கவுள்ளனர்.

மேலும் அறம் படத்தில் நடித்த சுனுலட்சுமி மற்றும் விஜய் TV தொகுப்பாளினி ரம்யா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இம்மாதம் 22 ந்தேதி இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்குகிறது.

விஜய் படத்திற்கு 100 படகுகளை வைத்து படமாக்கிய முருகதாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மெர்சல் படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கிறார்.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப்பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான், நாயகியாக கீர்த்தி சுரேஷ், ஒளிப்பதிவாளராக க்ரிஷ் கங்காதரன் மற்றும் எடிட்டராக ஸ்ரீகர் பிரசாத் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஜனவரி 19-ம் தேதி அன்று எளிமையான பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு விட்டது.

தற்போது ஈசிஆரில் 100 படகுகளைக் கொண்டு சில காட்சிகளை படமாக்கியுள்ளனர்.

விரைவில் இப்படக்குழு மும்பை பறக்கவுள்ளதாம்.

இப்படத்தின் வசனங்களை ஜெயமோகன் எழுதியுள்ளார்.

இவர் ‘அங்காடித் தெரு’, ‘நீர்ப்பறவை’, ‘2.0’ உள்ளிட்ட படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி-வைரமுத்து கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்த இளையராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இசையமைப்பாளர் இளையராஜா நேற்றுமுன்தினம் திருமலையில் ஏழுமலையானை தரிசனம் செய்தார்.

அங்கிருந்த தேவஸ்தான அதிகாரிகள், தீர்த்த பிரசாதங்கள் வழங்கி இளையராஜாவை கவுரவித்தனர்.

இதனை தொடர்ந்து அவர் கோயிலை விட்டு வெளியே வந்தபோது அவரிடம் ரஜினி அரசியல், ஆண்டாள் குறித்த கவிஞர் வைரமுத்துவின் சர்ச்சை பேச்சு ஆகியவை குறித்து செய்திகாளர்கள் கேள்வி கேட்டனர்.

ஆனால் அவர் எந்த கேள்விக்கும் பதில் அளிக்காமல் அங்கிருந்து சென்று விட்டார்.

ரஜினிக்கு அரசியல் செட்டாகாது; காலா பட கலைஞர் நானா படேகர் பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஞ்சித் இயக்கத்தில் தனுஷ் தயாரித்து வரும் காலா படத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.

இப்படத்தின் டப்பிங் பணிகளில் ரஜினிகாந்த் கலந்துக கொண்டதை பார்த்தோம்.

இந்நிலையில் காலா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நானா படேகர் அவர்கள் ரஜினியின் அரசியல் வருகை பற்றி கூறியுள்ளதாவது…

நம் நாட்டில் இன்றைய ஜனநாயகம் மோசமாக உள்ளது.

தற்போது ரஜினி அரசியலுக்கு வருகிற்றார். அவர் மிகவும் எளிமையான நல்ல மனிதர். அவருக்கு அரசியல் செட் ஆகாது” என தெரிவித்துள்ளார்.

மு.களஞ்சியத்தின் முந்திரிக்காடு படத்தில் முக்கிய வேடத்தில் சீமான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழர் நலம் கலை பண்பாட்டு இயக்கம் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு

இப்படத்திற்கு முந்திரிக்காடு“ என பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தில் இயக்குனர் சீமான் போலீஸ் அதிகாரியாக கதையின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

நாயகனாக புகழ் என்பவர் அறிமுகமாகிறார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான C.மகேந்திரனின் மகன். கதாநாயகியாக சுபபிரியா நடிக்கிறார். மற்றும் ஜெயராவ், சோமு, சக்திவேல், ஆம்பல்திரு, கலைசேகரன் , பாவாலட்சுமணன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – G.A. சிவசுந்தர்

இசை – A.K. பிரியன். ( இவர் A.R.ரகுமானின் இசைப்பள்ளி மாணவர் 17 வயது கொண்ட இளைஞர் )

பாடல்கள் – கவிபாஸ்கர் / எடிட்டிங் – எல்.வி.கே.தாஸ்

கலை – மயில்கிருஷ்ணன் / ஸ்டன்ட் – லீ.முருகன்

தயாரிப்பு மேற்பார்வை – டி.ஜி. ராமகிருஷ்ணன்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் – மு.களஞ்சியம்.

படம் பற்றி இயக்குனர் பேசியதாவது…

முந்திரிக்காட்டு மக்களின் வாழ்கை யதார்த்தத்தை இதில் பிரதிபலித்திருக்கிறோம். விலையுயர்ந்த பொருளாக மாறிப்போன முந்திரியின் விளை நிலங்களில் சிந்தும் ஏழ்மையின் வியர்வை துளி எப்படிப்பட்டது என்பதை இதில் பதிவு செய்கிறோம்.

இந்த படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் வெளியிட்டார். படத்தின் இயக்குனர் மு.களஞ்சியம், படத்தின் நாயகன் புகழ், நாயகி சுபபிரியா, இசையமைப்பாளர் A.K. பிரியன், ஒளிப்பதிவாளர் G.A. சிவசுந்தர், நடிகர் கலைசேகரன் ஆகியோர் உடன் இருந்தனர். படம் விரைவில் வெளியாக உள்ளது.

More Articles
Follows