தென்னிந்தியாவில் முதன்முறையாக யுனிசெப்பின் நல்லெண்ண தூதரானார் த்ரிஷா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

யுனிசெஃப் அமைப்பு இந்தாண்டிற்கான உலக குழந்தைகள் தின (நவ.20) தலைப்பாக “குழந்தைகள் கையகப்படுத்துதல்” (Children Take Over) என்பதை தேர்வு செய்தது.

அதை பிரபலப்படுத்தும் விதத்திலும், அந்த அமைப்பின் நல்லெண்ண தூதராக த்ரிஷாவை நியமிக்கவும் யுனிசெஃப் அமைப்பு சென்னையில் குழந்தைகளுடன் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிகழ்ச்சியை யுனிசெஃப் அமைப்பின் தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களுக்கான தலைவர் ஜோப் சகாரியா, யுனிசெஃப் அமைப்பின் நல்லெண்ண தூதுவராக பொறுப்பேற்ற நடிகை த்ரிஷா, தமிழ்நாடு குழந்தை உரிமை அமைப்பின் தலைவர் நிர்மலா மற்றும் யுனிசெஃப் அதிகாரி சுகதா ராய் தொடங்கிவைத்து சிறப்புரையாற்றினர்.

யுனிசெஃப் அமைப்பின் தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களுக்கான தலைவர் ஜோப் சகாரியா அளித்த பேட்டியில், “இப்போதுள்ள குழந்தைகளுக்கு அறிவுரை கூறுவதை விட, அவர்களிடம் நாம் கற்றுக்கொள்ள நிறைய உள்ளன.

அதனால்தான், இந்தாண்டு தலைப்பை “குழந்தைகள் கையகப்படுத்துதல்” என்று வைத்துள்ளோம். இன்று (நவ.20) டெல்லியில் உள்ள யுனிசெஃப் மையத்தை குழந்தைகள் நடத்தப் போகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில், நடிகை த்ரிஷாவை யுனிசெஃப் அமைப்பின் நல்லெண்ண தூதுவராக அறிவிக்கவுள்ளோம். தென் இந்தியாவில் இதுவரை யுனிசெஃப் யாரையும் நியமித்தது கிடையாது. இதுவே முதல் முறை.” என்று அவர் கூறினார்.

குழந்தைகளின் கைதட்டலுக்கு இடையில் நடிகை த்ரிஷா பேசியதாவது…

“உரிமை என்பது ஒவ்வொரு குழந்தைக்கும் கிடைக்க வேண்டியது. நாம் அனைவரும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் அனைத்து கொடுமைகளுக்கும் குரல் கொடுக்கவேண்டும்.

நான் இது குறித்த விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்த விரும்புகிறேன். திறந்த இடத்தில் மலம் கழித்தல், ஊட்டச்சத்து குறைபாடு இவை அனைத்தும் இல்லாத நாட்டை நாம் உருவாக்க வேண்டும்.

பெண் குழந்தைகளுக்கு படிப்பு மிக அவசியம், அவர்கள் படிப்பதனால் நாடு முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும்” என்று பேசினார்.

பின் த்ரிஷா குழந்தைகளிடம் உரையாடினார். யுனிசெஃப் அமைப்பின் தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களுக்கான தலைவர் ஜோப் சகாரியா, த்ரிஷாவிற்கு நினைவுப் பரிசு அளித்தார்.

நிகழ்ச்சியின் இறுதியில் குழந்தைகளுடன் த்ரிஷா புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

Trisha to be UNICEF celebrity advocate for child rights

பத்மாவதி பட சர்ச்சை; தீபிகா படுகோனுக்கு கமல்ஹாசன் ஆதரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராஜஸ்தான் மாநிலம் சித்தூர்கரை ஆண்ட ராணி பத்மினி வாழ்க்கையை மையமாக வைத்து இந்தியில் உருவாகியுள்ள பத்மாவதி திரைப்படத்தை டிசம்பர் 1-ந் தேதி ரிலீஸ் செய்யவிருந்தனர்.

இப்படம் வெளியாவதற்கு முன்பே ராணி பத்மினியின் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டு உள்ளது என்று பா.ஜனதா, ராஜபுத்ர சேனா, கர்னி சேனா அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்படத்தில் ராணி பத்மினி வேடத்தில் நடித்த நடிகை தீபிகா படுகோனே மூக்கை அறுப்போம் என்றும், அவரது தலையையோ அல்லது படத்தின் டைரக்டர் சஞ்சய் லீலா பன்சாலி தலையையோ கொண்டு வருபவர்களுக்கு ரூ.5 கோடி பரிசு வழங்கப்படும் என்றும் போராட்டக்காரர்கள் அறிவித்து வருகின்றனர்.

இதனால் இந்தி திரையுலகமே பரபரப்பாக காணப்படுகிறது.

இதனையடுத்து தீபிகா படுகோனேவுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ‘பத்மாவதி’ படத்திற்கு கமல் ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து கமல் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது…

“எனக்கு தீபிகாவின் தலை வேண்டும் என்கிறார்கள். அவரது உடலைவிட தலைக்கு அதிக மதிப்பளியுங்கள். அதைவிடவும் அதிகமாக அவரது சுதந்திரத்தை மதியுங்கள். தீபிகாவின் சுதந்திரத்தை அவருக்கு மறுக்காதீர்கள்.

எனது திரைப்படங்களை பல சமுதாயத்தினர் எதிர்த்துள்ளனர். எந்த ஒரு விவாதத்திலும் தீவிரவாதம் ஏற்புடையதல்ல.

புத்தியுள்ள இந்திய தேசமே.. விழித்தெழு. இது சிந்தனைக்கான தருணம். நாம் பலமுறை சொல்லிவிட்டோம். கேளாய்.. இந்திய தாயே” இவ்வாறு கமல் பதிவிட்டுள்ளார்.

இதுபோன்ற மிரட்டல் பிரச்சினைகளால் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இப்படத்தின் ரிலீசை மறுதேதி அறிவிக்காமல் தள்ளி வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Want Deepika Padukones Head Saved Says Kamalhaasan

I wantMs.Deepika’s head.. saved. Respect it more than her body.Even more her freedom. Do not deny her that.Many communities have apposed my films.Extremism in any debate is deplorable. Wake up cerebral India.Time to think. We’ve said enough. Listen Ma Bharat
— Kamal Haasan (@ikamalhaasan)

வேலைக்காரன் படத்தை வாங்கிய மெர்சல் புரொடியூசர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத்பாசில், சினேகா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் வேலைக்காரன்.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை 24ஏஎம் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

வருகிற டிசம்பர் 22ஆம் தேதி இப்படத்தை வெளியிடவுள்ளதால் தற்போது பட விநியோகத்தை மும்முரமாக தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் இதன் செங்கல்பட்டு ஏரியா உரிமையை மெர்சல் படத்தை தயாரித்த ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மற்ற ஏரியாக்களை வாங்கிய நிறுவனங்கள்…

#Velaikkaran TN Our Distributors…
1. Chennai city – 24am studios through SPI cinemas
2. Chengalpet – sri thenandal films
3. Cbe – Kanthaswamy arts centre
4. 23MR – Sushma cine arts
5. TT – Boss films international
6. Salem – Five star picture
7. North n South – S picture
8. TK – Zion films

ஆடியோ மற்றும் டிவி உரிமை

9. Audio – Sony music
10. Satellite – Vijay TV

Mersal producer Sri Thenandal films bought Chengalpet rights of Velaikkaran

ராகவேந்திர ஆலயத்தில் ரஜினியிடம் மடாதிபதி வைத்த கோரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஆன்மிக ஈடுபாடு நாம் அறிந்த ஒன்றுதான்.

இந்நிலையில் இன்று காலை ஆந்திராவில் உள்ள மந்த்ராலயம் சென்று வந்துள்ளார் ரஜினி.

இந்த மந்த்ராலயம் ஆந்திர, கர்னூலில் உள்ள துங்கபத்ரா ஆற்றங்கரையில் உள்ளது.

மந்த்ராலயம் சென்ற ரஜினி, அங்குள்ள ராகவேந்திரரை வழிபட்டார்.

ரஜினியின் திடீர் வருகையை முன்னிட்டு அவருக்கான விசேஷ அர்ச்சனைகள் செய்யப்பட்டுள்ளது.

அதன்பின்னர் அங்குள்ள மடாதிபதியிடம் ஆசி பெற்றுள்ளார் ரஜினி.

அந்த வீடியோ தற்போது இணையங்களில் வெளியாகியுள்ளது.

அதில் மடாதிபதி ரஜினியிடம், நீங்கள் இங்கு வந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். பணி நிமித்தமாக அவசரமாக எங்காவது செல்கிறீர்களா?

ஏனென்றால், இங்கு செய்யப்படும் நற்பணிகளையும், சம்ஸ்கிருத பள்ளி, கோசாலை, பாடசாலை ஆகியவற்றை நீங்கள் பார்வையிட வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளார்.

அதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், அவசரம் எல்லாம் இல்லை. நான் மற்றொரு இடத்துக்கு போக வேண்டும்.

இங்கே பொதுமக்கள் கூடுவதற்குள் நான் வெளியே செல்ல வேண்டும்” என்று தெரிவித்துள்ளார் ரஜினி.

Rajini has visited Manthralayam today at Andhra Pradesh

மெர்சல் படத்தில் நீங்க நடிச்சிருந்தா..? விஜயகாந்த் என்ன சொல்கிறார்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மெர்சல் படத்தில் விஜய் பேசிய ஜிஎஸ்டி வசனங்கள் ஏற்படுத்திய பரபரப்பு நாம் அறிந்த ஒன்றுதான்.

இதற்கு பாஜக. எதிர்ப்பு தெரிவிக்க படம் வசூல் சாதனை புரிய தொடங்கியது.

இந்நிலையில் மெர்சல் படம் குறித்து நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் தற்போது கூறியுள்ளதாவது…

மெர்சல் படத்தில் நீங்கள் நடித்திருந்தால் எழுந்த பிரச்சனைகளை எப்படி சந்தித்தித்து இருப்பீர்கள்? என நிருபர்கள் கேட்டுள்ளனர்.

நான் நடித்திருந்தால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் ரிலீஸ் ஆகும், அப்படி ரிலீஸ் ஆகவில்லை என்றால் போராட்டத்தில் ஈடுபடுவேன்.

மெர்சல் படத்தை இப்போது வரை பார்க்கவில்லை அதனால் அதை பற்றி பேச முடியாது. பார்த்தால் படத்தை பற்றி பேசலாம்.

முதலில் என்னுடைய படத்தையே அவ்வளவாக பார்க்க மாட்டேன், நீங்கள் மற்றவர்கள் படத்தை பற்றி கேட்கிறீர்கள்” எனவும் பதிலளித்தார் விஜயகாந்த்.

ரஜினியின் இரண்டு சாதனைகளை அடித்து நொறுக்கிய விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மாஸ் இந்தியா அறிந்த ஒன்றுதான்.

அவரது படங்கள் படைக்கும் வசூல் சாதனைகளை அவ்வளவு எளிதாக யாராலும் முறியடித்து விடமுடியாது.

ஆனால் அண்மையில் கபாலி பட டீசர் படைத்த சாதனையை விஜய்யின் மெர்சல் டீசர் முறியடித்த்து.

அதாவது… கபாலி டீசர் இதுவரை 34,582,207 பார்வைகளைப் பெற்றிருந்தது. மெர்சல் டீசர் 34,605,562 பார்வையாளர்களை பெற்று முறியடித்துவிட்டது.

தற்போது மற்றொரு சாதனையையும் மெர்சல் நிகழ்த்தியுள்ளது.

இது வரை யு-டியூபில் தமிழ் படங்களில் Lyrics வரிகள் வீடியோவில் கபாலியின் நெருப்புடா பாடல் தான் 30 மில்லியன் பார்வையாளர்களை கொண்டு முதலிடத்தில் இருந்தது.

தற்போது மெர்சல் படத்தின் ஆளப்போறான் தமிழன் Lyrics வரிகள் கொண்ட வீடியோ 33 மில்லியன் பார்வையாளர்களை கொண்டு சாதனை நிகழ்த்தியுள்ளது.

Vijays Mersal movie beat Rajinis Kabali movie two records

More Articles
Follows