AAA படத்தில் சிம்புவின் ஜோடி யார்? ஸ்ரேயா-த்ரிஷா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் (AAA) என்ற படத்தில் மூன்று வேடங்களில் நடித்து வருகிறார் சிம்பு.

மூன்று கேரக்டர்களையும் வேறுபடுத்தி காட்ட கடும் உடற்பயிற்சி செய்து தன் உடல் அமைப்பை மாற்றி வருகிறார்.

இதில் ஒரு கேரக்டர் கொஞ்சம் வயதான கேரக்டராம்.

அந்த கேரக்டருக்கு ஜோடியாக நடிக்க த்ரிஷா மற்றும் ஸ்ரேயா ஆகிய இருவரிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்ததாம்.

இந்த கேரக்டர் அம்மா கேரக்டர் என்றும் ஸ்ரேயா ஒப்புக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுவரை சிம்புவும் ஸ்ரேயாவும் இணைந்து நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மஞ்சிமா மோகன் விஷாலுடன் நடிக்கிறாரா? இல்லையா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லிங்குசாமி இயக்கும் சண்டக்கோழி 2 படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது. இதில் விஷால், ராஜ்கிரண் இருவரும் நடிக்கின்றனர்.

நாயகியாக மஞ்சிமா மோகன் நடிக்கிறார் என்ற செய்தி இணையத்தளங்களில் வெளியானது. ஆனால் இந்த செய்தியை மஞ்சிமா மறுத்துள்ளார்.

‘சண்டக்கோழி 2’ படத்தில் நான் நடிக்கிறேனா? என்று என்னிடம் பலர் விசாரித்தனர். ஆனால் இது தொடர்பாக அப்படக்குழுவினர் யாரும் என்னை சந்திக்கவில்லை. அச்செய்தி முற்றிலும் வதந்தியே” என்றும் தெரிவித்துள்ளார்.

கபாலி கிரெடிட் கார்டு… திரையுலகையே ஆச்சரியப்படுத்தும் ரஜினி..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி நடித்துள்ள கபாலி படத்தின் விளம்பரங்கள் மற்றும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இந்திய மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது.

ஏர் ஏசியா விமானங்களில் ரஜினியின் கபாலி படம் டிசைன் செய்யப்பட்டுள்ளது. மேலும் பயணிகளுக்கு சலுகைகளை வழங்கியுள்ளது ஏர் ஏசியா.

இவற்றை தொடர்ந்து மற்ற கார்ப்பரேட் நிறுவனங்களும் கைகோர்த்துள்ளதை பார்த்தோம்.

இந்நிலையில் வாட்ஸ் ஆப் நிறுவனம் ரஜினியின் ‘கபாலி’ உருவத்தை எமோடிக்கானாக (emoticons) வைத்துள்ளதாம்.

இந்தியாவில் தற்போது வாட்ஸ் ஆப்பை பயன்படுத்தாதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் என்ற நிலை உள்ளது.

மேலும் கபாலிக்கு பெருமை சேர்க்கும் விதமாக சிட்டி பேங்க் நிறுவனமும் விளம்பரத்தில் குதித்துள்ளது.

இந்த வங்கி ‘கபாலி’ கிரெடிட் கார்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுவரை எந்த ஒரு படத்திற்கும் இது மாதிரியான விளம்பரங்கள் இல்லை என்பதால் அனைவரும் ரஜினியின் புகழை இன்னும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

‘நேற்று நடிப்பு; இன்று வீல் சேர்…’ ரசிகர்களை பெருமைப்படுத்திய ஆத்ரேயா..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஓரிரு படங்கள் ஓடவில்லை என்றால் தங்கள் அடுத்த படத்தில் தங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் நடிகர்கள் உள்ளனர்.

இந்த சூழ்நிலை நடிகர் சூர்யாவுக்கும் ஏற்பட்டது.

அதன்படி 24 படத்தில் 3 கெட்டப்புகளில் நடித்து தனது ரசிகர்களை பெருமைப்படுத்தினர்.

அதிலும் ஆத்ரேயா என்ற கேரக்டரில் வீல்சேரில் அமர்ந்து கொண்டே வில்லத்தனத்தை காட்டியிருப்பார்.

இந்த வீல் சேர், இப்படத்திற்காக பிரத்யேமாக வடிவமைக்கப்பட்டு, பெரும் தொகைக்கு வாங்கப்பட்டது.

இந்நிலையில் வருகிற ஜீலை 10ஆம் தேதி இந்த வீல்சேர் சண்டிகார் மாநிலத்தில் உள்ள The Spinal Foundation என்ற அமைப்பிற்கு வழங்கப்பட இருக்கிறது.

அங்குள்ள மாற்றுத் திறனாளி ஒருவர் இந்த வீல்சேரை பயன்படுத்துவாராம்.

இத்தகவலை அந்த அமைப்பு தங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு சூர்யாவுக்கு நன்றியை தெரிவித்துள்ளது.

இதனையறிந்த சூர்யா ரசிகர்கள் மேலும் பெருமையடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

‘தெறி’யில் நைனிகா… ‘விஜய் 60’-இல் நடிக்கும் குழந்தை யார்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இளைஞர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் விஜய்யை பிடிக்கும்.

எனவே குட்டீஸ் ரசிகர்களை கவர அவர்களுக்கான விஷயங்களை தன் படங்களில் அதிகம் வைத்து வருகிறார் விஜய்.

புலி படத்தில் குள்ள மனிதர்கள் மற்றும் கிராபிக்ஸ் காட்சிகளை இடம் பெற செய்திருந்தார்.

தெறியில் மீனாவின் மகள் நைனிகாவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

எனவே தற்போது பரதன் இயக்கத்தில் நடித்து வரும் விஜய் 60 படத்திலும் ஒரு 6 வயது குழந்தை நடித்து வருகிறாராம்.

மோனிகா சிவா என்ற இந்த குழந்தை சங்கு சக்கரம், கட்டப்பாவை காணோம் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினியின் வருகைக்காக வழக்கை தள்ளி வைத்த நீதிமன்றம்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்தின் படங்கள் ரிலீஸ் ஆகும்போது அவரது கட் அவுட்டை அலங்கரித்து, கற்பூரம் ஏற்றி பாலாபிஷேகம் செய்து கடவுளுக்கு இணையாக ரசிகர்கள் வழிபட்டு வருகின்றனர்.

பாலாபிஷேகம் செய்வதால் பால் அதிகளவில் வீணாக்கப்படுவதாக கூறி பெங்களூரைவைச் சேர்ந்த மணிவண்ணன் என்பவர் குடிமையியல் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு, இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யுமாறு ரஜினிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

ரஜினி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்ததாவது…

“ரஜினிகாந்த் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருவதால் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும்.

ரஜினிகாந்த் வந்ததும் பதில் மனு தாக்கல் செய்கிறோம்” என்று கூறினார்.

எனவே, இவ்வழக்கை ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

More Articles
Follows