தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
அவரே பாடல் எழுதி ஒளிப்பதிவு செய்து இசையமைத்து தயாரித்து இப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார்.
அதன்பிறகு படம் எதையும் இயக்காத டி.ஆர்., கடந்த ஆண்டு வெளியான விஜய்சேதுபதியின் ‘கவண்’ படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது ஒரு படத்தை இயக்கி, நடிக்க இருக்கிறார் டி.ராஜேந்தர்.
லேடி டானாக நமிதா இந்தப் படத்தில் நடிக்கிறார்.
ராதாரவி, இளவரசன், விடிவி கணேஷ், வெண்ணிற ஆடை மூர்த்தி, பாண்டு, ரோபோ சங்கர், மதன்பாப் என ஏகப்பட்ட பேர் நடிக்கும் இந்தப் படத்தில், முக்கிய வேடத்தில் டி.ஆரும் நடிக்கிறார்.
வழக்கம்போல கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, ஒளிப்பதிவு, இயக்கம் என அனைத்தையும் டி.ராஜேந்தரே செய்கிறார்.
சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரிக்கும் இந்தப் படம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகிறது.
