நடிகர் நடிகைகளின் 50% சம்பளத்தை குறைக்க தயாரிப்பாளர்கள் முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா லாக் டவுனால் 100 நாட்களுக்கும் மேலாக சினிமா தியேட்டர்கள் மற்றும் சினிமா சூட்டிங்குகள் நிறுத்தப்பட்டுள்ளன.

தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு சினிமா இறுதிகட்டப் பணிகள் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புக்கு அனுமதி கிடைத்துள்ளது.

இதன் பணிகள் இன்று ஜூலை 8 முதல் தொடங்கியுள்ளன.

திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் வெளியீட்டுக்கு தயாராகவுள்ள படங்கள் எதுவும் வெளியாகவில்லை.

(ஒரு சில தயாரிப்பாளர்கள் மட்டும் ஆன்லைனில் படத்தை வெளிட்டு வருகின்றனர்.)

இதனால் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் ஆகியோர் கடும் நஷ்டத்தில் உள்ளனர்.

இது தொடர்பாக தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் ஆகியோரது ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

இதனையடுத்து தயாரிப்பாளர்கள் மட்டும் ஆன்லைனில் ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளனர்.

இதில் தயாரிப்பாளர்கள் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா, கலைப்புலி தாணு, சத்யஜோதி தியாகராஜன், எஸ்.ஆர்.பிரபு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இவர்கள் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வெவ்வேறு அணியில் போட்டியிட்டாலும் இதில் ஒற்றுமையாக கலந்துக் கொண்டனர்.

ஊரடங்கினால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பை சரி செய்ய ஆலோசித்துள்ளனர்.

அப்போது நடிகர்கள், நடிகைகள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவருடைய சம்பளத்திலும் 50% வரை குறைப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது-

சம்பளம் அதிகம் வாங்கும் நடிகர்களின் சம்பளத்தில் அதிகப்படியான சதவீதத்தையும், குறைவான சம்பளம் வாங்கும் நடிகர்களின் சம்பளத்தில் குறைவான சதவீதத்தையும் குறைக்கலாம் எனவும் தெரிய வந்துள்ளது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக, இதர சங்கங்களுடன் பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும் என சொல்லப்படுகிறது.

‘முருங்கைகாய் சிப்ஸ்’ போட சாந்தனுவுடன் இணைந்த அதுல்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய்யுடன் நடிகர் ஷாந்தனு மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.

மேலும் சாந்தனு கைவசம் தற்போது ராவணக்கோட்டம் படம் உள்ளது.

இந்த படம் கொரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கபட்டுள்ளது.

இப் படங்களை அடுத்து அறிமுக இயக்குநர் ஸ்ரீஜர் இயக்கத்தில் அதுல்யாவுடன் இணைந்து நடிக்கிறார்.

இவர்களுடன் மனோபாலா, ஆனந்த்ராஜ், மயில்சாமி, யோகி பாபு உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

இந்தப் படத்துக்கு முருங்கைகாய் சிப்ஸ் என்று டைட்டில் வைக்கப்பட்டு ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

இந்த படத்தின் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகருக்கு இன்று பிறந்தநாள் என்பதால் அதை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

ரவீந்தர் சந்திரசேகர், சிவசுப்பிரமணியன், சரவணபிரியன் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் இசையமைப்பாளராக தரண், ஒளிப்பதிவாளராக ரமேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் பணிபுரிய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

சூர்யா பட போஸ்டரை காப்பியடித்த ‘துக்ளக் தர்பார்’ படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் துக்ளக் தர்பார்.

முக்கியமான கேரக்டரில் இயக்கநரும் நடிகருமான பார்த்திபன் இணைந்துள்ளார்.

இவர்களுடன் அதிதி ராவ், மஞ்சிமா மோகன், கருணாகரன், பக்ஸ் பெருமாள், ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இதன் படப்பிடிப்பு சுமார் 50% முடிவுற்றுள்ளது. இதர படப்பிடிப்பு கொரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் தொடங்கவுள்ளது.

மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு, கோவிந்த் வசந்தா இசை என பிரம்மாண்ட கூட்டணியுடன் இந்தப் படம் தயாராகிறது.

இந்தப் படத்தை ‘மாஸ்டர்’ படத்தின் இணை தயாரிப்பாளரும், ‘கோப்ரா’, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘சீயான் 60’ உள்ளிட்ட படங்களைப் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் செவன் ஸ்கிரீன் ஸ்டுயோஸ்  லலித் குமார் ‘துக்ளக் தர்பார்’ படத்தையும் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார்.

முழு நீள அரசியல் நையாண்டி திரைப்படமாக உருவாகி இருக்கிறது.

இந்த நிலையில் இப்பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஓரிரு நிமிடங்களுக்கு முன் வெளியிட்டுள்ளது படக்குழு.

இதன் போஸ்டர் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் பட போஸ்டரை போல் உள்ளது. (படம் பார்க்க)

Vijay Sethupathis Tughlaq Durbar first look copied from Suriyas TSK

ஆன்லைன் ரிலீஸ்..: தயாரிப்பாளருக்காக ரசிகர்களை ஏமாற்றும் தனுஷ்.?.. விஜய்-சூர்யா போல இவர் இல்லையே..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் ஊரடங்கால் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன.

சினிமா சூட்டிங்கும் 4 மாதங்களாக நடைபெறவில்லை.

எனவே ரீலீசுக்கு தயாரான திரைப்படங்களை ஆன்லைனில் வெளியிட தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் Y Not Studios தயாரிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளிவர காத்திருக்கும் படம் ‘ஜகமே தந்திரம்’.

கொரோனா காரணமாக இப்படத்தின் ரீலீஸ் தள்ளிப்போய் வுள்ளது.

இதனால் இப்பட குழுவினரிடம் பிரபல OTT தளமான நெட்பிளிக்ஸ் அணுகி இப்படத்தை ஒரு பெரிய தொகைக்கு கேட்டு உள்ளனர்.

தயாரிப்பாளர்களுக்கு OTT யில் லாபம் வருகிறது என்றால் எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை எனக்கு தயாரிப்பாளர்களின் லாபம் தான் முக்கியம், என தனுஷ் சொல்லி விட்டாராம்.

எனவே விரைவில் ஆன்லைனில் வெளியீடு குறித்த அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கலாம்.

தனுஷ் பட ரிலீசை தியேட்டரில் கொண்டாடலாம் என காத்திருந்த ரசிகர்களுக்கு இது ஏமாற்றத்தை அளிக்கும் என தெரிகிறது.

இதுபோல் விஜய்யின் மாஸ்டர்… சூர்யாவின் சூர்ரைப் போற்று படங்களையும் ஆன்லைனில் வெளியிட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.

ஆனால் நடிகர்கள் விஜய் & சூர்யா தங்கள் ரசிகர்களின் தியேட்டர் கொண்டாடத்திற்காக சம்மதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஊரே அடங்கி நிக்கும் எங்க ‘கருப்பன்’ போனா.. சூரியின் ஜல்லிக்கட்டு காளை இவன்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் நாட்டில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் சிறிது காலம் சென்னையிலிருந்த நடிகர் சூரி பின்பு தனது சொந்த ஊரான மதுரைக்கு அருகில் உள்ள ராஜாக்கூர் என்ற கிராமித்திற்கு சென்று அங்கு தன் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுகின்றார்.

சென்னையில் இருந்த போது தனது குழந்தைகளுடன் கொரோனா விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு பலரது பாராட்டை பெற்றார். தற்போது ராஜாக்கூரில் வளர்க்கும் “கரூப்பன்” என்ற காளையுடன் இருக்கும் படங்களை “ஊரடங்குக்கு நடுவுல, ஊரே அடங்கி நிக்கும் – எங்க “கருப்பன்” நடந்து போனா!!” என்ற வாசகத்துடன் தனது வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

“கருப்பன் காளை இது வரை 40க்கும் மேற்ப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொண்டுள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டியின் போது வீரர்கள் இது வரையில் கருப்பன் காளையை எவரும் பிடித்ததில்லை, ஏன் தொட்டதுகூட இல்லை. பங்கெற்ற அனைத்து போட்டிகளிலும் பல பரிசுகளை வென்றுள்ளது எங்கள் “கருப்பன்”.

வென்ற பரிசுகளை எங்கள் கருப்பன் காளையை பராமரிப்பவர்களுக்கும், ஊர் மக்கள் வீட்டில் எதேனும் காதுகுத்து அல்லது திருமண விழா போன்ற விசேஷங்கள் நடக்கையில் அவர்களுக்கும் கருப்பன் காளை சார்பாக அளித்து விடுவோம். தற்போது எங்கள் கருப்பன் காளையை எனது தம்பி வினோத் பரமாரித்து வருகிறார்” என்றார் நடிகர் சூரி

விஜயகாந்துக்கு முதன்முதலில் மன்றம் அமைத்த நடிகர் முன்னாள் MLA ஆர். சுந்தர்ராஜன் மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜயகாந்தின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரும் மதுரை மத்திய தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான, ஆர். சுந்தர்ராஜன் உடல்நலக்குறைவால் காலமானார்.

தேமுதிக பொருளாளராகவும் இவர் இருந்துள்ளவர்.

கேப்டன் விஜயகாந்துடன் சிறு வயது முதலே நண்பராக இருந்தவர்.

மதுரையில் நடிகர் விஜயகாந்த் நற்பணி மன்றம் முதன்முதலில் அமைத்தவர் இவர் தான்.

விஜயகாந்துடன் ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் தேமுதிக சார்பில் 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மதுரை மத்திய தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, சட்டமன்ற உறுப்பினர் ஆனவர்.

2011 ம் ஆண்டு தேமுதிக, அதிமுக உடன் கூட்டணி அமைந்து 30 இடங்களுக்கும் மேல் வெற்றி பெற்றது என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

ஒரு முறை சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் அப்போதைய எதிர்க் கட்சித்தலைவர் விஜயகாந்த்க்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அந்த சமயத்தில் தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் அதிமுகவில் இணைந்தனர்.

அவர்களில் ஆர் சுந்தர்ராஜனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows