The 3rd part of spy film Johnny English Strikes Again to hits screen on 28th September

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Seven years after the release of its second instalment, Universal Pictures International India is thrilled to announce the return of the comedy king Rowan Atkinson as the beloved accidental spy, Johnny English in the third instalment of the series titled – Johnny English Strikes Again. Directed by David Kerr, Johnny English Strikes Again stars Rowan Atkinson, Emma Thompson and Olga Kurylenko. The film also marks the comeback of Ben Miller who reprises the role of Bough, English’s sidekick.

The new adventure begins when a cyber-attack reveals the identity of all active undercover agents in Britain, leaving Johnny English as the secret service’s last hope. Called out of retirement, English dives head first into action with the mission to find the mastermind hacker. As a man with few skills and analogue methods, Johnny English must overcome the challenges of modern technology to make this mission a success.

Speaking about the third Johnny English film, Atkinson says, “If you think you can have another go at something, you tend to think ‘Why not have another go?’ as long as you feel mentally and physically capable of doing the job.”

Atkinson also expressed his excitement at the return of his partner Bough, played by Ben Miller and says, “There are very few people I feel more at ease with as a comedy partnership. Tony Robinson, who plays Baldrick in Blackadder, he was definitely one. We connected and I’ve got a very similar relationship with Ben. I think we just play off each other extremely well.”

Johnny English Strikes Again is written by William Davies and is produced by Tim Bevan, Eric Fellner and Chris Clark. The film releases on 28th September across cities in India.

Watch the trailer here:

https://www.youtube.com/watch?v=k0y50Ltlodk

அம்பேத்கர் சொன்ன அந்த தேரை முன்னோக்கி இழுத்து செல்வேன்.. : ரஞ்சித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரித்திருக்கும் முதல் படம் “பரியேறும் பெருமாள்”.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இயக்குநர் ராம், “பரியேறும் பெருமாள்” இயக்குநர் மாரி செல்வராஜ், இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகர் கதிர், நடிகை கயல் ஆனந்தி, நகைச்சுவை நடிகர் யோகிபாபு, லிஜீஸ், ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், எடிட்டர் செல்வா ஆர்.கே., கலை இயக்குநர் ராமு, சண்டைப் பயிற்சியாளர் ஸ்டன்னர் சாம், உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் இயக்குநர் பா.இரஞ்சித் பேசுகையில்…

“ஒரு தத்துவம் என்பது நமக்கு முன்னால் உறுதியாக வாழ்ந்தவர்களில் இருந்தே பிறக்கிறது. அப்படி எனக்கு முன்னோடியாக புரட்சியாளர் அம்பேத்கர் மட்டுமே இருக்கிறார்.

அவருடைய கனவு என்பது மனித சமூகத்தினையுடைய மாண்பை மீட்டெடுப்பதாக மட்டுமே இருந்தது.

எனக்கு அம்பேத்கரின் துயரமான நாட்கள் தான் எப்போதும் நினைவில் இருக்கும். அவர் ஒரு விசயத்தை வேதனையோடு சொன்னார். நான் கஷ்டப்பட்டு ஒருதேரை இழுத்து வந்து ஒரு இடத்தில் நிறுத்தி இருக்கிறேன்.

தயவுசெய்து அதைப் பின்னோக்கி இழுத்து விடாதீர்கள் என்று சொன்னார்.

நிச்சயமாக அந்தத் தேரை நான் முன்னோக்கி இழுத்துச் செல்வேன். அதற்கான ஆரம்பம் தான் இந்தப் “பரியேறும் பெருமாள்” படம்.

எனக்கிருக்கிற வாய்ப்புகளில் தொடர்ந்து மனித சமூகத்திற்கு இடையே உள்ள முரண்களை முரணை உடைக்கிற வேலையை செய்வேன். இதனால் என் மீது வைக்கப்படுகிற விமர்சனங்களையும் தாண்டி, சில வேலைகளை செய்ய வேண்டியிருக்கிறது.

இந்தப் படம் உருவாவதற்கு நிறைய பேர் காரணமாக இருந்திருக்கிறார்கள். அவர்களில் முக்கியமானவர் இயக்குநர் ராம் சார். எனக்கு அவரையும், மாரி செல்வராஜையும் பார்க்கும் போது பொறாமையாக இருக்கும்.

இப்படி ஒரு அப்பா – மகனை இங்கு யாருமே பார்த்திருக்க மாட்டார்கள். காரணம் ராம் சார், மாரி செல்வராஜை கண்டெடுத்து உருவாக்கியது மிகவும் நெகிழ்ச்சியானது.

என்னால் முடிந்தவற்றை இந்த சமூகத்திற்கு செய்ய வேண்டும் என்கிற எண்ணம் சிறு வயது முதலே எனக்குண்டு. அந்த எண்ணம் தான் இப்போதும் என்னை இயக்குகிறது.

சில நேரங்களில் குடும்பம், பொருளாதாரம் குறித்த யோசனை எழுந்தாலும், நம்மைச்சுற்றி இருப்பவர்கள் நமக்கு அளிக்கும் ஆதரவு தான் நம்மை இயங்க வைக்கிறது. நான் போகும் பாதை சரியா என நான் யோசிக்கும் போதெல்லாம், என் மனைவி அனிதா தான் எனக்கு ஊக்கமளிப்பார்.

நாம் எங்கிருந்து வந்தோம் என்று நமக்குத் தெரியும். இப்போதிருப்பது இல்லாமல் போனாலும் ஒன்றும் பிரச்சனை இல்லை. நீ செய்யும் வேலையை நிறுத்தாதே, என தைரியம் கொடுப்பார்.

அவர் கொடுத்த தைரியம் தான் இந்த பரியேறும் பெருமாள் திரைப்படம். கதிர், ஆனந்தி, யோகி பாபு, லிஜீஸ் என படத்தில் பணியாற்றிய அனைவரும் சிறப்பாக பணி புரிந்திருக்கிறார்கள். ஒரு தயாரிப்பாளராக இந்தப் படம் எனக்கு முழு திருப்தியை கொடுத்திருக்கிறது.

யாரையும் எதிர்த்து நின்று பேசுவது என் நோக்கமல்ல, அவர்களது கையைக் கோர்த்து பக்கத்தில் அமர்ந்து உரையாடுவதைத் தான் நான் விரும்புகிறேன். அந்த வேலையை பரியேறும் பெருமாள் நிச்சயமாக செய்யும்.

அந்தளவிற்கு மாரி செல்வராஜ் சமரசமில்லாத ஒரு சினிமாவை உருவாக்கித் தந்திருக்கிறார். சந்தோஷ் நாரயணன் இசை படத்திற்கு மிக முக்கியமான தூணாக அமைந்திருக்கிறது. மொத்தத்தில் எனக்கு பிடித்த, நான் நம்புகிற சினிமாவாக பரியேறும் பெருமாள் வந்திருக்கிறது” என்று உணர்ச்சிகரமாக பேசினார்.

Ranjith angry speech Pariyerum Perumal audio launch

வாங்க ஒரு ரவுண்டு போலாம்; வைஷாலியை மேடையிலேயே அழைத்த ஜான்விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விதார்த், சாந்தினி, ஜான் விஜய், சூப்பர் குட் சுப்ரமணி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் வண்டி.

மலையாள திரையுலகை சேர்ந்த ஹசீர் தயாரித்துள்ள இப்படம் விரைவல் வெளியாகவுள்ளது.

ரஜ்ஜிஸ் பாலா என்பவர் இயக்கியிருக்கிறார்.

இப்படத்தின் பாடல்களை நடிகர் ஜிவி. பிரகாஷ் வெளியிட நேரில் வந்திருந்தார். ட்ரைலரை நடிகர் விஜய்சேதுபதி இணையத்தில் வெளியிட்டார்.

இதன் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ஜான் விஜய் பேசும்போது…

வண்டி படம் நிறைய மைலேஜ் கொடுக்கும். எனக்கு இதில் வித்தியாசமான போலீஸ் வேடம். என்னுடன் நடித்த சுப்ரமணி அருமையாக நடித்துள்ளார்.

என்று படத்தை பற்றி பேசிக் கொண்டிருந்தார். அதன்பின்னர் விழாவை தொகுத்து வழங்கிய வைஷாலியை கலாய்க்க ஆரம்பித்தார்.

உங்க புடவை அழகா இருக்கு. உங்க புன்னகையும். உங்கள பார்த்தா நாக்கு உளறுது. கை கால் எல்லாம் படபடக்குது. உங்க கிட்ட தனியா பேசனும். வாங்க வண்டில ஒர ரவுண்டு போலாம்” என கலகலப்பாக பேசினார்.
இது விழாவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

John Vijay made fun of Anchor Vaishali at Vandi Audio launch

என்னுடன் நடிக்க வரலட்சுமி ஓகே சொன்னது பெரிய விஷயம் : விவேக் ராஜ்கோபால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சத்யராஜ், கிஷோரிடம் நான் நிறையவே கற்றுக் கொண்டேன் என்று ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’ படத்தின் நாயகன் புதுமுக நடிகர்விவேக் ராஜ்கோபால் கூறியிருக்கிறார்.

மணிரத்னம் மற்றும் ஏ.ஆர். முருகதாஸ் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணி புரிந்த சர்ஜுன் KM இயக்கத்தில்அண்மையில் வெளியாகி பரவலான பாராட்டு பெற்ற படம் ‘எச்சரிக்கை`, இதில் தாமஸ் பாத்திரத்தில் வரும் விவேக் ராஜ்கோபாலும் மூத்த நடிகர் கிஷோரும் கதையின் பெரும் பகுதியை ஆக்கிரமித்து இருப்பார்கள்.

விவேக் ஓர் அறிமுக நடிகராக இருந்தாலும் ,அனுபவ நடிகரான கிஷோருடன் ஈடு கொடுத்து நடித்திருப்பார்.

யாரிந்த விவேக் ராஜ்கோபால் ? இவரது முன்கதை என்ன?

” நான் சென்னைதான். ரஜினி சாரின் ஆஸ்ரம் ஸ்கூலில் படித்தேன். கல்லூரிப் படிப்பு லயோலாவில் போனது . சினிமா ஆசை விடாமல் என்னைத் துரத்தியது, . கூத்துப் பட்டறையில் நடிப்புப் பயிற்சி பெற்றேன், எனக்கும் பயிற்சி அளித்தவர் ` ஜோக்கர் ` பட நாயகன் சோமசுந்தரம் .

நல்லதொரு சினிமா வாய்ப்புக்காகச் சில ஆண்டுகள் காத்திருந்தேன் . இந்தப் படம் `எச்சரிக்கை` உருவாக இருப்பது அறிந்து இயக்குநர் சர்ஜுனை விடாமல் துரத்தினேன் . அவர் சொன்னார் நாயகனாக பிரபலமான நடிகரை ஒப்பந்தம் செய்வோம் இல்லா விட்டால் புது முகம்தான் என்றார்,

ஏற்கெனவே பலரையும் ஆடிசன் மூலம் பார்த்து நாலு பேரைத் தேர்ந்தெடுத்து வைத்திருந்தார். ஆனாலும் நான் விடவில்லை. விடாமல் துரத்தினேன். அவர் நடிகர்களைத் தேர்வு செய்யும் போது நானும் கூடவே இருந்தேன். அது கூட எனக்கு ஒரு பாடமாக இருந்தது .இயக்குநரின் எண்ணம் ,எதிர்பார்ப்பு பற்றி அறிய முடிந்தது.

ஒரு கட்டத்தில் அவர் என்னைத் தேர்வு செய்தார். எனக்கு ஆச்சரியம், மகிழ்ச்சி, தன்னம்பிக்கை எல்லாம் வந்தது .ஏனென்றால் உடன் நடிப்பவர்கள் சத்யராஜ், கிஷோர், வரலட்சுமி என்று ஏற்கனவே பிரபலமானவர்கள் இருக்கும் போது இயக்குநர் நான் ஏற்ற தாமஸ் பாத்திரத்துக்கு பிரபலமான ஒரு நடிகரைக் கூட நடிக்க வைத்திருக்க முடியும், இருந்தாலும் எனக்கு வாய்ப்பு கொடுத்தார்.

அவர் என் மேல் வைத்த நம்பிக்கை எனக்கு எப்படியும் நாம் நம்மை நிரூபிக்க வேண்டும் என்கிற உத்வேகத்தைக் கொடுத்தது. இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு தந்த டைரக்டர்.

புரொடியூசர் சுந்தர் அண்ணாமலை சார் இருக்கும் மிகப்பெரிய நன்றி நான் சொல்லியே ஆகணும் என்றவரிடம் படப்பிடிப்பு அனுபவம் பற்றிக் கேட்டால் பரவசமாகிறார்,

“இந்தப் படத்துக்காக சுமார் 25 நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டேன் . சத்யராஜ் சாருடன் நடிக்க வேண்டும். அவர் பெரிய நடிகர் அனுபவசாலி . `பாகுபலி `படம் எல்லாம் வந்து அவரை எங்கோ கொண்டு போய் நிறுத்தியிருந்தது.

அவர் எப்படி நடந்து கொள்வாரோ என்று தயக்கம் , பயம் எனக்குள் இருந்தது, ஆனால் அவர் முதல் சந்திப்பிலேயே சகஜமாகிப்பேசிப்பழகி என்னை ஆச்சரியப்பட வைத்தார் . நான் நடித்ததைப் பார்த்து பரவாயில்லையே பையன் நல்லா பண்றானேன்னு இயக்குநரிடம் கூறினார்.

பிறகு படம் பற்றிப் அவர்பே சும் போது எல்லாம் கூட என்னையும் பற்றிக் பேசுவார். அவர் பெருந்தன்மை ஆச்சரியப்பட வைத்தது. அதே போல கிஷோர் சாரும்.

அவர் எவ்வளவு நல்ல நல்ல பாத்திரங்களில் நடிப்பவர், `ரிச்சி` படத்தில் அவர் ஏற்ற பாத்திரம் எனக்குப் பிடிக்கும். அவருடன் நான் இணைந்து நடிப்பது படம் முழுக்கப் பயணம் செய்வது என்பது எவ்வளவு பெரிய வாய்ப்பு.

அவர் அருகில் நான் இருக்கும் போது எனக்குப் பலம் கிடைத்த உணர் வு ஏற்பட்டது.. அவரிடம் நான் நிறையவே கற்றுக் கொண்டேன். நான் நடிக்கவும் இடம் தந்து ஊக்கப் படுத்தினார்.

அதே போல வரலட்சுமி, சினிமா பின்னணியிலிருந்து வந்தாலும் என்னைப் போன்ற புதுமுக நடிகருக்கு ஜோடியாக நடிக்க ஒப்புக் கொண்டது பெரிய விஷயம்.

அது மட்டுமல்ல தாரை தப்பட்டை படத்தில் சண்டைக்காட்சியில் அவருடைய நடிப்பைப் பார்த்து வியந்திருக்கிறேன். புது நடிகர் என்று பார்க்காமல் என்னுடன் காதல் சண்டை காட்சிகள் நடித்தது மறக்க முடியாத அனுபவம்.

பாடல் காட்சியிலும் அதே போல ஒத்துழைத்து நடித்தார். படம் முடிந்த பின்னும் நட்பு தொடரும் அளவுக்கு திறமையான கண்ணியமான நடிகை . இப்படி ஒரே படத்தின் மூலம் மறக்க முடியாத அனுபவங்கள் ” என்கிறார்,

படம் பார்த்து விட்டுக் கிடைத்த எதிர்வினை எப்படி இருந்தது? “பலரும் என்னைப் பாராட்டி ஊக்கப் படுத்தினார்கள், நான் பிரமிக்கும் ஜாம்பவான்கள் இயக்குநர்கள் கெளதம் மேனன். ஏ.ஆர்.முருகதாஸ் தொடங்கி நடிகர்கள் தனுஷ் , ஜெயம் ரவி, சிம்பு, சித்தார்த் என்று தொடர்ந்து ,
ஹரீஷ் கல்யாண் வரை பலரும் படக் குழுவை வாழ்த்தி ட்விட்டரில் என்னையும் டேக் செய்திருந்தார்கள், அது மறக்க முடியாதது. ” என்கிறார்,

விவேக் ராஜ்கோபால் எப்படிப் பட்ட நடிகராக வர விரும்புகிறார் ?” நான் ஒரு கதாநாயகன் என்கிற பெயரில் வர விரும்பவில்லை, நான் ஒரு நடிகன். நான் ஒரு இயக்குநரின் நடிகன்.இப்படி அறியப்படவே ஆசை.

நல்லதோ கெட்டதோ எப்படிப் பட்ட பாத்திரமும் ஏற்கத் தயார், என்னை விட என் பாத்திரம் பேசப்படட் டும். இதுவே என் விருப்பம் கனவு எல்லாமே.” என்றார்.

Vivek Rajgopal shares his experience with Varalaxmi in Eccharikkai Idhu Manithargal Nadamaadum Idam

மீண்டும் மாமியார்-மருமகன் பற்றிய படம் *களவாணி மாப்பிள்ளை*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நம்ம ஊரு பூவாத்தா, ராக்காயி கோயில், பெரிய கவுண்டர் பொண்ணு, கட்டபொம்மன், நாடோடி மன்னன், மாப்பிள்ளை கவுண்டர் உட்பட 16 சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த ராஜபுஷ்பா பிக்சர்ஸ் பட நிறுவனம் பதினேழு ஆண்டுகளுக்கு பிறகு “களவாணி மாப்பிள்ளை“ படத்தை தயாரிக்கிறார்.

தினேஷ் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக அதிதி மேனன் நடிக்கிறார். மற்றும் ஆனந்த்ராஜ், தேவயாணி, ரேணுகா, மனோபாலா, மகாநதி சங்கர், மொட்டை ராஜேந்திரன், முனீஸ்காந்த், ஜோதி, லல்லு, கிரேன் மனோகர், நாஞ்சில் விஜயன் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – சரவண்ணன் அபிமன்யு /
இசை – என்.ஆர்.ரகுநந்தன்
பாடல்கள் – மோகன்ராஜன், ஏக்நாத் /
கலை – மாயா பாண்டி
எடிட்டிங் – பொன் கதிரேசன் /
நடனம் – தினேஷ்
ஸ்டன்ட் – திலீப்சுப்பராயன்
தயாரிப்பு மேற்பார்வை – சிவசந்திரன் /
நிர்வாக தயாரிப்பு – ஸ்டில்ஸ் ராபர்ட் இணை தயாரிப்பு – திருமூர்த்தி
தயாரிப்பு – ராஜேஸ்வரி மணிவாசகம்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – காந்தி மணிவாசகம்.

படம் பற்றி இயக்குனர் காந்தி மணிவாசகம் அவர்களிடம் கேட்டோம்…

என் அப்பா மணிவாசகம் ஒரு பார்முலா வைத்திருப்பார்..மெலிதான ஒரு கதையில் நிறைய கமர்ஷியல், நிறைய காமெடி வைத்திருப்பார்…அதன் படி அவர் இயக்கிய எல்லா படங்களுமே கமர்சியல் வெற்றி பெற்றது. அதைத் தான் நானும் தொட்டிருக்கிறேன்.

பக்கா பேமிலி சப்ஜெக்டுடன் காமெடியை மிக்ஸ் செய்திருக்கிறேன். வழக்கமாக மாமியார் மருமகள் கதைகள் தான் சினிமாவில் வந்திருக்கிறது. ஜெயித்திருக்கிறது. மாமியார் மருமகன் கதைகள் அத்தி பூத்தாற்போல் வரும். அமோக வெற்றி பெறும். அப்படித் தான் இது உருவாக்கப் பட்டிருக்கிறது.

தினேஷுக்கு மாமியாராக நடிக்க வேண்டும் என்று தேவயானியிடம் கேட்ட போது தயங்கினார்.. முழு கதையையும் கேட்ட உடன் ஓ.கே.சொன்னார்.

அந்தளவுக்கு மாமியார் மருமகள் பிரச்சனையை இதில் கையாண்டிருக்கிறோம். ஜாலியான பொழுது போக்கு படமாக களவாணி மாப்பிள்ளை உருவாகி இருக்கிறது. படம் இம்மாதம் வெளியாகிறது என்றார் இயக்குனர் காந்திமணிவாசகம்.

Kalavani Mappillai movie story about Mother in law and Son in law

எஸ் ஃபோகஸ் நிறுவனம் விநியோகிக்கும் பாதையில் *வண்டி*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் திரை உலகில் அவ்வப்போது சில அற்புதங்கள் நடந்து கொண்டுதான் இருக்கும். கதை அம்சமுள்ள படங்கள் சமீபமாக தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது.

இந்த படங்களின் வரிசையில் அடுத்து வர இருக்கும் படம் தான் “வண்டி”.விதார்த் நடிப்பில், ரூபி பிலிம்ஸ் என்னும் புதிய பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஹஷீர் தயாரிப்பில், புதிய இயக்குநர் ரஜீஸ் பாலா இயக்கும் இந்தப் படத்தின் தமிழ் நாடு திரை அரங்கு உரிமையை பெற்று இருப்பவர் எஸ் focuss நிறுவனத்தின் நிறுவனர் , பிரபல வினியோகஸ்தரும், தயாரிப்பாளருமான எம் சரவணன்.

சென்னை 28 பாகம் 2, பவர் பாண்டி உள்ளிட்ட பல வெற்றி படங்களை வினியோகித்த இவருடைய தயாரிப்பில், ஜி வி பிரகாஷ்-பார்த்திபன் நடிப்பில் உருவான “குப்பத்து ராஜா” வெகு விரைவில் வெளி வர உள்ளது.

“என் நிறுவனத்தின் பிரதான நோக்கமே தரமான படங்களை தொடர்ந்து வெளி இடுவதுதான். “வண்டி” படத்தின் விநியோக உரிமையை பெற்று , படத்தை ரிலீஸ் செய்யும் வேலைகளில் மும்முரமாக உள்ளேன்.

ஒரு தரமான படத்துக்கு உற்ற துணையாக promotions மற்றும் மார்க்கெட்டிங் அமைந்து விட்டால் அந்த படத்தின் வெற்றிக்கு யாரும் தடை விதிக்க முடியாது.

அந்த வகையில் சிறந்த கதை அமைப்பு, காட்சி அமைப்பு, எங்களது நிறுவனத்தின் விளம்பரம் ஆகிய அனைத்தையும் கொண்ட “வண்டி” வெற்றி பாதையில் பயணிக்கும் என உறுதியாக கூறுகிறேன்” என்கிறார் எம் சரவணன்.

Vandi movie release news updates

More Articles
Follows