‘மாஸ்டர்’ வரும் வரை மௌனவிரதம்?; நிர்வாகிகளை சந்திக்காத விஜய்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தன் மகனும் நடிகருமான விஜய் பெயரில் உள்ள அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்தார் எஸ்.ஏ.சந்திரசேகர்,

ஆனால் அதற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என விஜய் மறுத்து அறிக்கை வெளியிட்டார். அதற்கு அடுத்த நாளே விஜய்யின் அம்மா ஷோபா தானும் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இது விஜய் ரசிகர்களிடையே பெரும் சர்ச்சையை உருவாக்கியது.

இதனையடுத்து மக்கள் இயக்க நிர்வாகிகள் விஜய் சந்திக்க அவரின் பனையூர் இல்லத்திற்கு சென்றுள்ளனர்.

ஆனால் மதியம் வரையும் விஜய் வரவே இல்லையாம்.

இதனையடுத்து வந்தவர்களுக்கு விருந்து உபசரிப்பு மட்டும் நடந்ததாம்.

தற்போதுள்ள சூழ்நிலையில் என்ன பேசினாலும் அது அரசியலாக பார்க்கப்படும். மேலும் மாஸ்டர் படம் திரைக்கு வரவேண்டும்.

இப்போது எது பேசினாலும் அது பிரச்சினையில் முடிய வாய்ப்புள்ளதாக மௌனமாக இருக்க முடிவு செய்துவிட்டாராம் இந்த மாஸ்டர்.

Thalapathy Vijay meets the district secretaries of his fan club

வெப் சீரிஸ் காப்பி..? சோத்துல விஷம் வச்சிருக்கலாமே.? கமல்-லோகேஷை கிண்டலடிக்கும் நெட்டிசன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலகநாயகன் கமல்ஹாசனின் 232வது படமாக ‘விக்ரம்’ படம் உருவாகவுள்ளது. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க அனிருத் இசையமைக்கிறார்.

கமல் பிறந்தநாளான நவம்பர் 7ல் இப்பட டைட்டில் டீசர் வெளியானது.

இதுவரை எவரும் செய்யாத வகையில் படத்தின் டைட்டிலையே ஒரு 2 நிமிட டீசராக வெளியிட்டு இருந்தனர்.

ஆனால் இதையும் சிலர் கிண்டலடித்து மீம்ஸ் வெளியிட்டு வருகின்றனர்.

இது ‘நார்கோஸ் மெக்சிகோ சீசன் 2’ வெப் சீரிஸ் டீசரின் காப்பி என தெரிய வந்துள்ளது.

மேலும் இந்த டீசரில் பல விதமான துப்பாக்கிகளை ஒளித்து வைப்பார் கமல். அதன்பின்னர் அவரின் எதிரிகளுக்கு விருந்து சாப்பாடு படைப்பார்.

இதனையடுத்து சாப்பிட தயாரான நிலையில் திடீரென கோடாரியை எடுத்து எதிரி மீது வீசுவார்.

இவ்ளோ செய்ற நீங்க.. சோத்துல விஷம் வச்சிருக்களாமே எனவும் மீம்ஸ் கிரியேட் செய்து கிண்டலடித்து வருகின்றனர்.

Netizens slams Kamal Haasan’s Vikram title teaser

போலி சாமியாரை விரட்ட பக்தனுடன் கை கோர்க்கும் அம்மன்..; ‘மூக்குத்தி அம்மன்’ ஒன்லைன்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நயன்தாரா நடிப்பில் ஆர்ஜே. பாலாஜி இயக்கி நடித்துள்ள மூக்குத்தி அம்மன் படம் நவ.,14ந் தேதி ஓடிடி தளத்தில் ரீலீசாகிறது.

இப்படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர் நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார்.

இந்த நிலையில் மூக்குத்தி அம்மன் படத்தின் கதை இது தான் என ஒரு தகவல் உலா வருகிறது.

அந்த கதையின் ஒன்லைன் பார்ப்போம்…

நாட்டில் தற்போது போலி சாமியார்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதை வைத்து அரசியலும் நடக்கிறது. இதனை கண்டிக்கும் அம்மன் அவரின் பக்தன் ஆர்ஜே பாலாஜியுடன் இணைந்து மேற்கொள்ளும் நடவடிக்கைகளே படத்தின் கதையாம்.

அப்பா மவுலி, அம்மா ஊர்வசி, தங்கை ஸ்மிருதி வெங்கட் மற்றும் இரு தங்கைகள் என வாழ்கிறார் ஆர்ஜே. பாலாஜி. யாருக்கும் திருமணமாகவில்லை.

சரியான வருமானமின்றி குடும்பம் தவிக்கிறது.

தங்களின் குல தெய்வமான அம்மனையை அனைவரும் நம்பியுள்ளனர்.

ஒரு கட்டத்தில் அவர்களின் வேண்டுதலை நிறைவேற்ற தோன்றுகிறார் அம்மன்.

அதன்பின்னர் போலி சாமியார்களின் அட்டகாசத்தையும் காண்கிறார்.

தன் பக்தனுடன் இணைந்து போலி சாமியார்களை அட்டகாசத்தை நிறுத்துகிறாராம் அம்மன்.

இன்னும் ஓரிரு தினங்களில் இந்த படத்தை ஓடிடியில் பார்ப்போம்.

Mookuthi Amman story revealed ?

தீபாவளி ரிலீஸ்.: மகேஷ்பாபு சந்தானம் சந்தோஷ் படங்கள் கன்பார்ஃம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா ஊரடங்கால் கிட்டத்தட்ட 8 மாதங்கள் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டு கிடந்தன.

இதனையடுத்து நவம்பர் 10ஆம் தேதி இன்று முதல் தியேட்டர்களை திறந்து கொள்ளலாம் என தமிழக அரசு உத்தரவிட்டது.

ஆனால் புதிய திரைப்படங்கள் வெளியிடுவது தொடர்பான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

வி.பி.எஃப். கட்டணத்தை ரத்து செய்யாவிட்டால் புதிய படங்களை வெளியிட மாட்டோம் என்று தயாரிப்பாளா்கள் அறிவித்தனர்.

இதனால் புதிய பட வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டது.

இந்த நிலையில் விபிஎஃப் கட்டணத்தை நவம்பர் வரை தள்ளுபடி செய்கிறோம் என டிஜிட்டல் புரொஜக்சன் நிறுவனங்கள் அறிவித்தன.

இதனால் தயாரிப்பாளர்களும் படத்தை ரிலீஸ் செய்ய முன்வந்துள்ளனர்.

அதன்படி இதுவரை 3 படங்கள் தங்கள் ரிலீசை உறுதி செய்துள்ளன.

ஆர். கண்ணன் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள படம் – பிஸ்கோத்.

தாரா அலிஷா பெர்ரி, ஸ்வாதி முப்லா, ஆடுகளம் நரேன், செளகார் ஜானகி போன்றோர் நடித்துள்ளார்கள்.

இருட்டு அறையில் முரட்டு குத்து, கஜினிகாந்த் ஆகிய படங்களை இயக்கிய சந்தோஷ் தற்போது தானே நாயகனாகி இரண்டாம் குத்து என்கிற படத்தை இயக்கியுள்ளார்.

மகேஷ் பாபு, ராஷ்மிகா இணைந்துள்ள சரிலேரு நீக்கெவரு என்ற தெலுங்குப் படத்தின் தமிழ் டப்பிங் ’இவனுக்கு சரியான ஆள் இல்லை’ என்ற பெயரில் வெளியாகவுள்ளது.

இவையில்லாமல் சத்யராஜ் & சசிகுமார் நடித்துள்ள எம்.ஜி.ஆர். மகன், ஜீவா & அருள்நிதி நடித்துள்ள களத்தில் சந்திப்போம் உள்ளிட்ட மற்ற படங்களும் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவை குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

Mahesh babu and Santhanam movies confirmed for this diwali

சன் டிவியில் தீபாவளிக்கு ரிலீசாகும் படத்திற்கு தடை கேட்டு வழக்கு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரதமர் மோடி அறிவித்த பணமதிப்பிழப்பு குறித்த படம் மாயா பஜார் 2016.

கன்னடத்தில் வெளியான இந்த படத்தில் ராஜ்.பி.ஷெட்டி, வஷிஸ்டா சிம்ஹா, பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடித்திருந்தனர்.

ராதாகிருஷ்ண ரெட்டி இயக்க அஸ்வினி புனித் ராஜ்குமார் தயாரித்திருந்தார்.

இந்த பட தமிழ் ரீமேக் உரிமையை வாங்கிய சுந்தர்.சி ‘நாங்க ரொம்ப பிஸி’ என தலைப்பு வைத்து படத்தை உருவாக்கியுள்ளனர்.

வீராப்பு, தில்லு முல்லு படங்களை இயக்கிய பத்ரி இந்த படத்தை இயக்கியுள்ளார்.

பிரசன்னா, ஷாம், அஸ்வின், யோகி பாபு, ஷ்ருதி மராத்தே உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சத்யா இசையமைத்துள்ளார்.

வருகிற நவம்பர் 14ல் காலை 11 மணிக்கு தீபாவளியன்று சன் டிவியில் நேரடியாக ரிலீசாகிறது.

இந்த நிலையில் இப்படத்தின் தலைப்பு மீது வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு…

சினிமா தயாரிப்பாளர் விஜயா பாவண்ணன் இயக்குனர் பாவண்ணன் அவருடைய புதிய படத் தலைப்பு நான் ரொம்ப பிஸியாக இருக்கிறேன் என்கிற படத்தின் தலைப்பு 2016 பதிவு செய்திருந்தாராம்.

படம் தயாரான நிலையில் கொரானோ காரணமாக படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை என கூறப்படுகிறது.

தற்போது குஷ்பு சுந்தர் சி அவர்கள் எங்கள் படத்தலைப்பை திருடி ‘நாங்க ரொம்ப பிஸி’ என்று மாற்றி படத்தை தயாரித்து வருகிற தீபாவளி பண்டிகைக்கு வெளியிடவுள்ளார்.

அதனை தொடர்ந்து பாவண்ணன் 14வது மாநகர உரிமையாளர் நீதி மன்றத்தில் பட தலைப்பை தடை செய்ய வழக்கு தொடர்ந்து உள்ளனர்.

இதனையடுத்து தயாரிப்பாளர்கள் குஷ்பு மற்றும் சுந்தர் சி. ஆகியோர் நாளை நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Case filed against Naanga Romba Busy team

ரஜினி பற்றி அப்படி பேசியிருக்க கூடாது..; ஆர்ஜே பாலாஜியின் அந்தர் பல்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆர்ஜே. பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் வருகிற நவம்பர் 14-ம் தேதி தீபாவளி தினத்தில் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

இப்பட புரமோஷன் பணிகளில் ஒரு பகுதியாக ஆர்.ஜே.பாலாஜி ட்விட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது ரசிகர் ஒருவர் நடிகர் ரஜினிகாந்த் குறித்து கேள்வி எழுப்பினார்.

அதற்கு ஆர்ஜே பாலாஜி அளித்துள்ள பதிலில்… ‘நான் சூப்பர் ஸ்டாரோட ரொம்ப ரொம்ப பெரிய ரசிகன். சின்ன வயதில் நான் பள்ளியில் படிக்கும் போது என் தாத்தா ‘ரஜினி ஒரு நல்ல மனிதர்’ என்று சொன்னார்.

அது அப்படியே என் மனதில் ஆழமாக பதிந்து விட்டது.

ரஜினி ஒரு அற்புதமான மனிதர். ஒரு சூப்பர்மேன். ‘தளபதி’ முதல் ‘தர்பார்’ வரை அவரை பற்றி நிறைய மெமரிஸ் இருக்கு.

சில வருடங்களுக்கு முன்னர் அவர் அரசியலுக்கு வருவது குறித்து பேட்டி கொடுத்திருந்தேன். அந்த பேட்டியை நான் பின்னர் பார்க்கும்போது கஷ்டமாக இருந்தது.

நான் அப்போது அப்படி பேசியிருக்க கூடாது.

அவர் நன்றாக வாழ வேண்டும். அவர் நினைக்கும் எல்லா காரியமும் கைகூட வேண்டுமென நான் கடவுளை வேண்டிக் கொள்கிறேன்’ என ஆர்ஜே பாலாஜி கேள்விக்கு பதிலளித்து வீடியோவாக பதிவிட்டுள்ளார்.

I should not spoken like that about Super Star Rajinikanth

More Articles
Follows