ரஜினியை சந்தித்த தளபதி 64 பட டைரக்டர்.; இதான் காரணமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாநகரம், கைதி உள்ளிட்ட படங்ஙகளை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ். இந்த இரு படங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

தற்போது விஜய் & விஜய்சேதுதி இணைந்து நடித்து வரும் தளபதி 64 படத்தை இயக்கி வருகிறார்.

இதன் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அடுத்தக்கட்ட படப்பிடிப்பு கர்நாடாகாவில் துவங்கவுள்ளது.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.

அப்போது கைதி படத்தை ரஜினி பாராட்டினாராம்.

இருந்த போதிலும் ரஜினி படத்தை லோகேஷ் இயக்க வாய்ப்புள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகிறது.

Thalapathy 64 director Lokesh Kanagaraj met Rajini in Poes Garden

அனுதாபத்துல செய்யாதீங்க.. பிடிச்சா செய்யுங்க..; திருமூர்த்தி பற்றி இமான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘விஸ்வாசம்’ படத்தில் இடம்பெற்ற ‘கண்ணான கண்ணே’ பாடலை முன்பு பார்வையற்ற இளைஞரான திருமூர்த்தி அருமையாக பாடியிருந்தார்.

இது இணையத்தில் வைரலாக அந்த பாடலுக்கு இசையமைத்த இமானும் பார்த்துள்ளார்.

எனவே தனது இசையில் பாட திருமூர்த்தியை தேர்ந்தெடுத்து ஜீவா நடித்து வரும் ‘சீறு’ படத்தில் ஒரு பாடலை பாட வைத்துவிட்டார்.

‘செவ்வந்தியே…’ என தொடங்கும் அந்த பாடல் வெளியாக அனைவரையும் கவர்ந்துள்ளது.

இந்த நிலையில் இந்த பாடல் குறித்து இமான் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

உண்மையிலேயே இந்த பாடல் பிடிச்சிருந்தால், இவரின் குரல் பிடிச்சிருந்தால் ஷேர் பண்ணுங்க. அனுதாபத்தால் ஷேர் செய்ய வேண்டாம்.

இந்தப் பாடல் வெற்றி மூலம்தான் அவருக்கு நல்ல நல்ல வாய்ப்புகள் வரும். அப்போதுதான் மற்ற இசையமைப்பாளர்களும் இவரைப் பாட வைப்பார்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Dont spread Seeru movie Sevandhiyae song by sympathy says Imman

https://twitter.com/immancomposer/status/1201486294783647744

தமிழ் சினிமா ரசிகர்களை பந்தாடும் பிகில்.. பப்பி.. ஜடா.. சாம்பியன்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு படம் ஹிட்டானால் அந்த கதையை போல பல படங்கள் அடுத்தடுத்து வெளியாகும்.

தமிழ் சினிமாவில் 1990களில் காதலை விதவிதமாக சொன்னார்கள்.

பார்க்காமல் காதல், டெலிபோன் காதல், கடித காதல், கண்களாலே காதல், ஊமை காதல் என நிறைய படங்கள் வந்தன.

அதாவது காதல் கோட்டை, சொல்லாமலே, காதலுக்கு மரியாதை, நினைவிருக்கும் வரை, காலமெல்லாம் காதல் வாழ்க, லவ் டுடே என பல படங்கள் வந்தன.

அதுபோல் டான் கதைகள், பேய் படங்கள், காமெடி படங்கள், அடல்டி ஒன்லி படங்கள், கபடி விளையாட்டு, கிரிக்கெட் இப்படி தமிழ் சினிமாவில் நிறைய சீசன் உள்ளது.

தற்போது புட்பால் சீசன் உருவாகியுள்ளது.

விஜய்யின் பிகில் படத்தில் பெண்கள் புட்பாலை மையப்படுத்தியிருந்தனர்.

அண்மையில் வெளியான பப்பி படத்திலும் இதுபோன்ற புட்பால் காட்சிகள் இருந்தன.

விரைவில் வெளியாகவுள்ள ஜடா மற்றும் சாம்பியன் படங்களிலும் புட்பால் விளையாட்டே கதையின் மையக்கருவாக உள்ளது.

டிசம்பர் 6ல் ஜடாவும் 13ல் சாம்பியன் படமும் வெளியாகவுள்ளது.

இதில் பிகில் மற்றும் ஜடா என 2 படத்திலும் கதிர் புட்பால் ப்ளேயராகவே வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்தடுத்து புட்பால் கதைகள் வந்தால் ரசிகர்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்களோ?

ஒரே போல கதையாக இல்லாமல் வித்தியாசமாக அமைந்தால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்.

Recent Tamil movies based on Foot Ball game

‘தீர்ப்புகள் விற்கப்படும்’ படத்தின் டப்பிங்கில் சத்யராஜ் செய்த சாதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சத்யராஜ் நடிக்கும் “தீர்ப்புகள் விற்கப்படும்’ படம் துவங்கப்பட்ட நாளிலிருந்தே பல்வேறு பலமான அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்ப்படவுலகில் முதல் முறையாக சத்யராஜ் நடித்த அதிரடி ஆக்ஷன் சண்டைக் காட்சிகளில் விசேட கேமராக்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. தற்போது இப்படத்தின் டப்பிங் பணிகளும் நிறைவடைந்திருக்கின்றன. இதிலும் ஒரு சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. சத்யராஜ் தான் நடித்த காட்சிகள் அனைத்திற்கும் சேர்ந்தாற்போல் பனிரெண்டு மணி நேரம் பேசி டப்பிங் பணிகளை முடித்திருக்கிறார். இது குறித்து இயக்குநர் தீரன் கூறியதாவது…

“சத்யராஜூடன் இணைந்து பணியாற்றியது எனக்கு சினிமா மீது தீர்க்க முடியாத வேட்கையை ஏற்படுத்தியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பிட்ட அந்த கதாபாத்திரத்தை வடிவமைத்ததுமே அதற்கு சத்யராஜ்தான் மிகப் பொருத்தமாக இருப்பார் என்ற முடிவுக்கு நான் வந்தேன். ஆனால் அவருடன் பணியாற்றி முடித்ததும் அவரது கடின உழைப்புக்கும், அர்பணிப்பு மிக்க நடிப்புக்கும் நான் தீவிர ரசிகனாகி விட்டேன். இதற்குக் காரணம் சினிமா மீது அவர் கொண்ட பேரார்வமும், தொழில் பக்தியும் மட்டுமல்ல, கலையையும் நடிப்பையும் அவர் உணர்வுபூர்வமாக பின்பற்றும் முறையும்தான். நட்சத்திரம் என்பதையும் தொழில் நெறிமுறைகளையும் தாண்டி, அவர் மிகச் சிறந்த மனிதராக படப்பிப்பு அரங்கில் இருக்கும் ஒவ்வொருவரையம் கவர்ந்திழுக்கிறார். அவரது அர்பணிப்பு மிக்க நடிப்பு ‘தீர்ப்புகள் விற்கப்படும்’ படத்தின் மிகப் பெரிய பலமாக, படத்தைத் தாங்கி நிற்கும் தூணாகத் திகழும் என்பதில் ஐயமில்லை. படத்தின் டப்பிங் பணிகளையும் முழுமையாக முடித்து விட்டோம். சத்யராஜ் சார் தனது டப்பிங் பணிகளை பனிரெண்டு மணி நேரத்தில் முடித்து எங்களை ஆச்சரியப்படுத்தியிருக்கிறார். படம் முழு வடிவம் பெற்றிருக்கும் விதம் குறித்து நாங்கள் மிகவும் மகிழச்சியோடு இருக்கிறோம். வெகு விரைவில் டீஸர் வெளியிடும் தேதியை அறிவிக்க இருக்கிறோம் என்றார்.

மயிர் கூச்செரியச் செய்யும் சத்யராஜின் சண்டைக் காட்சிகள் நிரம்பிய, ரசிகர்களை இருக்கையின் நுனிக்கே இழுத்து வரச் செய்யும் விறுவிறுப்பான ஆக்ஷன் திரில்லர் வகைப் படம் தீர்ப்புகள் திருத்தப்படலாம். ஹனி பீ கிரியேஷன்ஸ் நிறுவனத்துக்காக சஞ்சீவ் மீரா சாஹிப் ராவுத்தர் தயாரித்திருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் தீரன் இயக்கியிருக்கிறார். எஸ்.என்.பிரசாத் இசையமைத்திருக்கும் இப்படத்துக்கு ‘கருடவேகா’ அஞ்சி ஒளிப்பதிவு செய்ய, தினேஷ் சுப்பராயன் சண்டைக் காட்சிகளை அமைத்திருக்கிறார். நெளஃபல் அப்துல்லா படத்தொகுப்பை செய்திருக்கிறார்.

2 கைகளை இழந்த மாற்றுத் திறனாளியை மகிழ்வித்த ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கேரளாவில் மழை வெள்ளத்தின் போது தான் சேமித்த தொகையை நிவாரண நிதியாக கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் வழங்கியவர் மாற்றுத் திறனாளி இளைஞர் பிரணவ்.

இவருக்கு 2 கைகள் இல்லை என்றாலும் தான் கால்களாலேயே சாப்பிடுவது, வண்டி ஓட்டுவது, ஓவியம் வரைவது, செல்போனில் செல்வி எடுப்பது என அனைத்தையும் செய்து வருகிறார்.

இவருக்கு நடிகர் ரஜினிகாந்தை சந்திக்க விருப்பம் என ஒரு முறை தெரிவித்திருந்தார்.

தற்போது இதனை அறிந்த ரஜினிகாந்த் அவரை அழைத்துள்ளார்.

சந்திப்பின் போது, பிரணவின் காலை, தனது கைகளால் குலுக்கி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் பிரணவ் தான் வரைந்த ரஜினி படத்தை அவருக்கு பரிசாக அளித்துள்ளார்.

பின்னர் தன் கால்களால் பிரணவ் ரஜினியுடன் செல்பி எடுத்து கொண்டார்.

எவ்வளவு பெரிய மனிதர். ஆனால் இத்தனை எளிமையாக இருக்க முடியுமா? என ரஜினி பற்றி நெகிழ்ந்து வருகிறார் பிரணவ்.

ஹீரோ சிவகார்த்திகேயன் அடுத்து டாக்டராகிறார்; அனிருத் இசை!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நயன்தாரா, யோகிபாபு நடித்து சூப்பர் ஹிட்டான கோலமாவு கோகிலா படத்தை இயக்கியவர் நெல்சன் திலீப்குமார்.

இவர் அடுத்து இயக்கவுள்ள படத்தை சிவகார்த்திகேயன் நடித்து தயாரிக்கிறார்.

இந்த படத்திற்கு டாக்டர் என தலைப்பு வைத்துள்ளனர்.

அனிருத் இசையமைக்க, கேஜேஆர். ஸ்டூடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.

டாக்டர் படத்தலைப்புடன் சேர்த்து மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

இதன் சூட்டிங்கை வருகிற வரும் 6ம் தேதி தொடங்கவுள்ளனர்.

இதன் மூலம் தெலுங்கு நடிகை ப்ரியங்கா மோகன் கோலிவுட்டில் அறிமுகமாகிறார்.

இவர்களுடன் யோகிபாபு, டோனி, வினய் மற்றும் அர்ச்சனா ஆகியோர் நடிக்கவுள்ளனர்.

கேஜேஆர் நிறுவனம் தயாரித்துள்ள சிவகார்த்திகேயனின் ஹீரோ படம் இந்த மாதம் 20ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Sivakarthikeyan and Priyanka Mohan team up for Doctor

More Articles
Follows