3வது முறையாக விஜய்யுடன் இணையும் படத்தை தொடங்கினார் அட்லி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெறி மற்றும் மெர்சல் படங்களுக்கு பிறகு நடிகர் விஜய்யுடன் 3 -வது முறையாக கூட்டணி அமைத்திருக்கிறார் அட்லி.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன் வெளியானது.

இந்நிலையில் படப்பூஜையுடன் இதன் சூட்டிங்கை துவங்கியுள்ளனர்.

தற்காலிகமாக இதற்கு தளபதி 63 என்று பெயரிட்டுள்ளனர்.

விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

பாடலாசிரியர் விவேக் பாடல் எழுதுகிறார்.

மெர்சல் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த ஜி.கே.விஷ்ணு இந்தப் படத்துக்கும் ஒளிப்பதிவு செய்கிறார்.

ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து 2019-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியிட உள்ளனர்.

நட்பின் நம்பிக்கை துரோகத்தை சொல்லும் ‘காதல் முன்னேற்ற கழகம்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ப்ளு ஹில்ஸ் புரொடக்ஷன் மலர்க்கொடி முருகன், தயாரிக்கும் படம் ‘காதல் முன்னேற்ற கழகம்.’

இந்தப் படத்தில் இயக்குநரும், நடிகருமான பாண்டியராஜனின் மகன் ப்ரித்விராஜன் கதாநாயகனாக நடித்துள்ளார். நாயகியாக சாந்தினி நடிக்கிறார்.

மற்றும் சிங்கம் புலி, கஞ்சா கருப்பு, கிஷோர்குமார், ‘நாதஸ்வரம்’ முனிஸ்ராஜா, அமீர் ஹலோ கந்தசாமி ஆகியோரும் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சிவசேனாதிபதி நடித்திருக்கிறார்.

படம் பற்றி இயக்குநர் மாணிக் சத்யா பேசும்போது, “இந்தப் படம் 1985களில் நடக்கின்ற கதை. கதாநாயகன் நடிகர் கார்த்திக்கின் தீவிர ரசிகர்.

அவரைப் போலவே முடியை வளர்த்துக் கொண்டு ரசிகர் மன்றம் அது ,இது என்று வேலைக்கு போகாமல் அலைந்து கொண்டிருப்பவர். சாந்தினி டீச்சராக இருப்பவர்.

துரோகத்தில் மிக கொடூரமான துரோகமாக கருதப்படுவது நம்பிக்கை துரோகம் தான்..

அதிலும் நட்புக்குள் நடக்கும் நம்பிக்கை துரோகம் மிக மிக கொடூரமானது… அதைத் தான் இதில் சொல்லி இருக்கிறோம். யதார்த்தமான கதையாக படம் வந்திருக்கிறது.

கிராமப்புற வாழ்வியலை பதிவிட்டிருக்கிறோம்.. படத்தை பார்த்த பாண்டியராஜன் சார் பாராட்டியதுடன் 15 நிமிட கிளைமாக்ஸ் காட்சிகள் நெருப்பு மாதிரி இருக்கிறது என்றார்.

சிவசேனாதிபதி படத்தின் கதைக்கு முதுகெலும்பாய் ட்விஸ்ட் கேரக்டராக ஜொலிக்கிறார். நட்பை வலுவாக சொல்லி இருக்கிறோம்.

படப்பிடிப்பு சென்னை, ஊட்டி, கடலூர் மாவட்டம், திட்டக்குடி, விருத்தாசலம், பெரம்பலூர் போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.

படம் விரைவில் திரைக்கு வர உள்ளது என்றார். இயக்குனர் மாணிக் சத்யா.

ஒளிப்பதிவு – ஹாரிஸ் கிருஷ்ணன்
இசை – பி.சி.சிவன்
பாடல்கள் – யுகபாரதி, மோகன்ராஜ், உமாசுப்ரமணியம், மாணிக்சத்யா
எடிட்டிங் – சுரேஷ் அர்ஸ்
நடனம் – அசோக்ராஜா
சண்டை பயிற்சி – அம்ரீன் பக்கர்
கலை – பிரகதீஸ்வரன்
தயாரிப்பு நிர்வாகம் – முத்தையா, விஜயகுமார்.
தயாரிப்பு – மலர்க்கொடி முருகன்.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – மாணிக் சத்யா.

Director Maanik Sathya talks about Kadhal Munnetra Kazhagam

சில வி‌ஷயங்கள் அதுவாக நடந்தது..; தனுஷுடன் இணைவது குறித்து ஜிவி. பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சில ஆண்டுகளுக்கு முன் மயக்கம் என்ன படத்தின் போது ஏற்பட்ட சிறிய மனகசப்பால் தனுஷ் – ஜி.வி.பிரகாஷ் கூட்டணி உடைந்தது.

அதன் பின்னர் தனுஷ் படங்களுக்கு அனிருத் இசையமைக்க, அதன் பின்னர் ஷான் ரோல்டன் இசையமைத்திருந்தார்.

இந்நிலையில் ஜிவி. பிரகாஷ் நடிக்கும் ஜெயில் படத்தில் தனுஷ் ஒரு பாடலை பாடினார். இதன் முமூலம் இந்த கூட்டணி மீண்டும் தொடங்கியது.

இந்நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் `அசுரன்’ படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளார் என்ற தகவல்கள் வெளியானது.

தற்போது ஜி.வி.பிரகாஷ் அவர்களும் அதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

ஆடுகளம் படத்துக்கு பின் வெற்றிமாறன், தனுஷ், நான் மூவரும் இணைகிறோம். மிக சுவாரசியமான படமாக இருக்கும். சில வி‌ஷயங்கள் அதுவாக நடந்தது. மகிழ்ச்சி. என தெரிவித்துள்ளார் ஜிவி. பிரகாஷ்.

GV Prakash talks about joining with Dhanush in Asuran

பேட்ட வேலன் கொடுத்த அட்வைஸ்..; வில்லன் ஜித்து எடுத்த முடிவு!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ‘பேட்ட’ படத்தில் ரஜினிகாந்த் உடன் விஜய்சேதுபதியும் நடித்திருந்தார்.

இதில் பேட்ட வேலன் என்ற கேரக்டரில் ரஜினியும் ஜித்து கேரக்டரில் விஜய்சேதுபதியும் நடித்திருந்தனர்.

இப்பட சூட்டிங் சமயத்தில் விஜய்சேதுபதியின் நடிப்பை பார்த்த ரஜினி அவரை மகா நடிகன் என்று பாராட்டினார்.

அத்துடன் சில அட்வைசும் கொடுத்திருக்கிறாராம் ரஜினி.

”சூப்பரா நடிக்கிறீங்க.; நிறைய படங்கள் நடிங்க. இப்போ தான் நடிக்க முடியும். நல்ல படங்கள் கொடுங்க.

படங்கள் தயாரிக்க வயது இருக்கு. அப்புறமா தயாரிக்கலாம்” என்று கூறினாராம் ரஜினி.

‘ஆரஞ்சு மிட்டாய்’, ‘மேற்கு தொடர்ச்சி மலை’, ‘ஜூங்கா’ ஆகிய படங்களைத் தயாரித்திருந்தார் விஜய்சேதுபதி.

இதற்கு அடுத்து எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் அவர் நடிக்கவுள்ள ஒரு படத்தை விஜய்சேதுபதி தயாரிப்பதாக இருந்ததாம்.

ஆனால் ரஜினி கொடுத்த அட்வைசால் அந்தப்பட தயாரிப்பை கைவிட்டு விட்டாராம் இந்த ஜித்து.

Super Star Rajinikanth advice to Makkal Selvan Vijay Sethupathi

ஜிவி பிரகாஷ்-ரைசா இணையும் படத்திற்கு டைட்டில் தேடும் படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விநியோக துறையில் தனக்கென்று ஒரு தனி இடத்தை இயன்ற ஆரா சினிமாஸ் தயாரிப்பு துறையிலும் தங்களது ஆளுமையை வெளிப்படுத்த வீரா நடிப்பில் “அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா”, மற்றும் அதர்வா -ஹன்சிகா இணையாக நடிப்பில் சாம் ஆண்டன் இயக்கத்தில்.”100″ என்றப் படங்களை தயாரித்து வருகிறது.

மிகவும் எதிர்பார்க்க படும்”100″ திரைப் படம் மார்ச் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கபடுகிறது.

இந்த வருடம் நல்ல கதை அம்சமுள்ள படங்கள் சிலவற்றை தொடர்ந்து தயாரிக்க வேண்டும் என்கிற முனைப்போடு இருக்கும் ஆரா சினிமாஸ் அந்த முயற்சிக்கு முன்னோடியாக ஜி வி பிரகாஷ்=ரைசா வில்சன் இணையாக நடிக்க, அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கும் ஒரு horror fantsy படத்தை சென்னையில் உள்ள ஒரு கோவிலில் பூஜையோடு துவங்கி உள்ளனர்.

குறும்படங்கள் மூலமாக திரை உலக வட்டாரத்தில் பிரசித்தி பெற்ற இயக்குனர் கமல் பிரகாஷ், அவர் இயக்கி உள்ள விளம்பர படங்கள் மூலமாக சில விருதுகளையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

டிக் டிக் டிக், மிருதன், கொடி ஆகிய படங்களின் மூலம் சிறந்த ஒளிப்பதிவாளர் என்று பெயர் வாங்கிய எஸ் வெங்கடேஷ் இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் ஆவார்.

“தீரன் அதிகாரம் ஒன்று” படத்தின் மூலம் சிறந்த பட தொகுப்பாளர் என்று பெயர் வாங்கிய சிவா இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் ஆவார்.

கமலநாதன் கலை அமைப்பில், டான் அசோக் சண்டை காட்சிகளை இயக்க, கதாநாயகன், இசை அமைப்பாளர் என்று இரட்டை பொறுப்புகளை ஏற்கிறார் ஜி வி பிரகாஷ் குமார்.

” கதாநாயகன் ஜி வி பிரகாஷ் சாருக்கும், தயாரிப்பாளர் “ஆரா பிலிம்ஸ்” மகேஷ் கோவிந்தராஜன் சாருக்கும் , அவர்கள் என் மேல் வைத்த நம்பிக்கைக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

“பியார் பிரேமா காதல்” படம் மூலம் தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாகவே மாறி போன ரைசா இந்த படத்தின் கதையை கேட்ட மாத்திரத்தில் உற்சாகத்தில் துள்ளி குதித்தார்.

திறமையான, அருமையான நடிக நடிகையர், தொழில் நுட்ப கலைஞர்கள் என என் திரை பயணம் ஆசிர்வாதத்துடன் துவங்குகிறது.

படத்துக்கான தோதான டைட்டிலை தேடிக் கொண்டு இருக்கிறோம் . விரைவில் படப்பிடிப்பை துவங்க உள்ளோம் ” என்கிறார் இயக்குநர் கமல் பிரகாஷ்.

What will be the title for GV Prakash and Raiza wilsons new project

விஜய் ஆண்டனியின் புதிய படத்தில் 9 மாணவிகளுக்கு வாய்ப்பளித்த இளையராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இசைஞானி இளையராஜாவின் 75 பிறந்த நாளை எல்லா கல்லூரிகளிலும் விழாவாக கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

சமீபத்தில் ராணி மேரிக் கல்லூரியிலும்,எத்திராஜ் கல்லூரியிலும் நடை பெற்ற விழாவில் பல மாணவிகள் பாடி இளையராஜாவை அசத்தி விட்டார்கள்.

பாடி அசத்திய அந்த மாணவிகள் மேடையிலேயே ஒரு வேண்டுகோளையும் வைத்தார்கள்.

“நாங்கள் சினிமாவில் பாட முடியுமா” என்று அந்த வேண்டுகோள்களை ஏற்று கொண்ட இளையராஜா சில மாணவிகளை அழைத்து தனது ரெகார்டிங் ஸ்டூடியோவில் பாட வைத்து அதில் 9 மாணவிகளை தேர்வு செய்ததுடன் விரைவில் அவர்களுக்கு பாட வாய்ப்பளிப்பதாகவும் உறுதி அளித்தார்.

அதன்படி SNS மூவிஸ் கெளசல்யா ராணி தயாரிக்க விஜய் ஆண்டனி நடிக்க பாபு யோகேஸ்வரன் இயக்கும் தமிழரசன் படத்தில் அந்த ஒன்பது மாணவிகளையும் பாட வைத்து பாடகிகளாக அறிமுகப்படுத்தி உள்ளார்.

Ilayaraaja introduced 9 College Students as Singers in Thamilarasan movie

More Articles
Follows