விஜய் பிறந்தநாளில் தளபதி 63 படத்தின் மெகா ட்ரீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்களின் படங்கள் உருவாகும்போது, அவர்கள் பட சம்பந்தப்பட்ட பர்ஸ்ட் லுக், டீசர், ஆடியோ லான்ச் ஆகியவைகளை நடிகர்களின் பிறந்தநாளில் வெளியிடுவதை திரையுலகினர் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

ரசிகர்களை கவனத்தில் கொண்டு அவர்களை கவர இதுபோன்ற யுக்திகளை கையாண்டு வருகின்றனர்.

இதுபோல் ‘தளபதி 63’ பட பர்ஸ்ட் லுக்கை விஜய்யின் பிறந்தநாளில் ஜூன் 22 ஆம் தேதி வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு முன் விஜய்யின் ‘மெர்சல்’ மற்றும் ‘சர்கார்’ ஆகிய பட பர்ஸ்ட் லுக்கை விஜய்யின் பிறந்தநாளில் வெளியிட்டனர்.

அட்லி இயக்கும் தளபதி 63 படத்தில் நயன்தாரா, விவேக், யோகிபாபு, ஆனந்த்ராஜ், உள்ளிட்டோர் நடிக்க, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

மெர்சல், சர்கார் படங்களை தொடர்ந்து இப்படத்துக்கும் ஏஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

Thalapathy 63 first look launch on Vijay Birth day

இந்தியன் 2 படத்தில் கமலுடன் இணையும் சித்தார்த் & அபிஷேக்பச்சன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைகா தயாரிப்பில் ஷங்கர் இயக்க, கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படம் சூட்டிங் கடந்த 18ஆம் தேதி தொடங்கியது.

தற்போது கமல் வயதான தோற்றத்தில் நடிக்கும் காட்சிகளை படமாக்கி வருகிறார்களாம்.

சென்னையில் சில காட்சிகளை முடித்துவிட்டு வெளிநாடு செல்கின்றனர். அங்கு 2 மாதங்கள் தொடர்ச்சியாக 8 நாடுகளில் படப்பிடிப்பை நடத்த உள்ளனர்.

இந்த படத்தில் நாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.

இந்நிலையில் சிம்பு நடிக்கவிருந்த கேரக்டரில் சித்தார்த் நடிப்பதாக தகவல்கள் வந்துள்ளன. அவருக்கு தான் காஜல் ஜோடி என கூறப்படுகிறது.

இவர்களுடன் முக்கிய கேரக்டரில் வில்லனாக அபிஷேக்பச்சன் நடிக்கிறாராம்.

இந்த கேரக்டரில் அஜய் தேவ்கன், பின்னர் அக்‌ஷய்குமாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள் மறுக்கவே அபிஷேக்பச்சன் நடிக்கிறாராம்.

Siddharth and Abhishek Bachchan To Star in Kamals Indian 2

தனுஷை பாராட்டியதால் குத்து ரம்யாவை வச்சு செய்யும் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்து, வெளியான மாரி 2.

இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் இப்பட பாடல் ரவுடி பேபி பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

யு-டியூப்பில் மட்டும் 10 கோடி பேர் அந்தப்பாடலை பார்த்துள்ளனர்.

இதற்கு தன் பாராட்டுகளையும் தெரிவித்து இருந்தார் நடிகை ரம்யா.

இவர் தனுசுடன் பொல்லாதவன் படத்தில் நடித்திருந்தார்.

தற்போது சினிமாவை விட அரசியலில் ஆர்வம் காட்டி கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார்.

அவர் தனுஷை பாராட்டியதால், கர்நாடக ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கன்னடத்தில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கும் கேஜிஎப், பயில்வான் போன்ற படங்களை பாராட்டாமல் தமிழ் நடிகரின் படத்தை பாராட்டுவது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும் பார்லிமென்ட் தேர்தலில் இவர் கர்நாடகாவில் போட்டியிடாமல் தமிழ்நாட்டில் போய் போட்டியிடட்டும் என்றும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

நடிகர்கள் சொந்த குரலில் பாடி நடிக்க வேண்டும்.. ஆஸ்கர் நாயகன் ஆசை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘தி வாய்ஸ்’ என்ற டிவி இசை நிகழ்ச்சியில் நடுவராகப் பங்கேற்க உள்ளார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.

இளம் பாடகர்களுக்கான குரல் திறன்போட்டியாக நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியானது ஒரு சர்வதேச நிகழ்ச்சியாக ஒளிபரப்பாக உள்ளது.

இது தொடர்பாf ஏஆர் ரஹ்மான் பேசும்போது…

”சினிமாவில் தங்களுக்கான பாடல்களை நடிகர்களே பாடுவது நடைமுறையில் இருக்கும் ஒன்றுதான்.

அதற்கு அவர்கள் முறையான பயிற்சி எடுக்க வேண்டும். இன்றைய நாட்களில், நடிகர்கள் மிகவும் பரபரப்பான ஷெட்யூல்களில் பிஸியாக நடிக்கிறார்கள். எனவே அவர்கள் பாடல் பாட முக்கியத்துவம் கொடுப்பதில்லை” என தெரிவித்துள்ளார்.

2020ஆம் ஆண்டுக்குள் செஞ்சுரி அடிக்கும் ஜிவி. பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இசையமைப்பாளராக பிஸியாக இருந்த போதிலும் நடிகராகவும் படு பிஸியாக காணப்படுகிறார் ஜி.வி.பிரகாஷ்.

இவரது நடிப்பில் வருடத்திற்கு குறைந்தது 3 அல்லது 4 படங்களாவது வெளியாகிறது.

இந்த 2019ஆம் ஆண்டின் முதல் படமாக ராஜீவ் மேனன் இயக்கியுள்ள ‘சர்வம் தாளமயம்’ படம் வெளியாகவுள்ளது.

ஏஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இது ‘சிந்து பைரவி’, ‘சலங்கை ஒலி’ போல இசைச் சித்திரமாக உருவாகி இருக்கிறதாம்.

இந்த படத்திலும் பீட்டர் என்ற கேரக்டரில் விஜய் ரசிகனாக நடித்துள்ளார் ஜிவி. பிரகாஷ்.

இவர் நாயகனாக நடிக்கத் தொடங்கிய பின் இதுவரை 20 படங்களில் நடித்துவிட்டாராம். இசையமைப்பாளராக 70 படங்களை முடித்துள்ளார்.

ஆக இதுவரை 90 படங்கள் முடிந்துள்ளன.

2019-ல் கிட்டத்தட்ட 10 படங்களை ஒப்புக் கொண்டுள்ளார். அவையும் இந்தாண்டு வந்துவிடும் எனத் தெரிகிறது.

எனவே 2020 ஆண்டில் 100 சதம் (செஞ்சுரி) அடிப்பார் என எதிர்பார்க்கலாம்.

காஞ்சனா ரீமேக்: ரஜினி வில்லன் அக்‌ஷய்குமாரை இயக்கும் லாரன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பேய் படங்களில் பல வகை வந்தாலும் அனைவராலும் மறக்க முடியாத படம் காஞ்சனா.

இப்படத்தை இயக்கி நடித்திருந்தார் ராகவா லாரன்ஸ். இதில் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் இப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யவுள்ளார் லாரன்ஸ்.

லாரன்ஸ் கேரக்டரில் அக்‌ஷய்குமார் நடிக்கிறார். இவர் ரஜினியின் 2.0 படத்தில் வில்லன் வேடத்தில் நடித்திருந்தார்.

சரத்குமார் வேடத்தில் நடிக்க நடிகர் தேர்வு நடைபெற்று வருகிறது.

முதன் முதலாக ஹிந்திப் படத்தை இயக்குவதன் மூலம் பாலிவுட் செல்கிறார் லாரன்ஸ்.

ஏப்ரல் மாதம் படப்பிடிப்பை துவங்கவுள்ளனர்.

Lawrance going to direct Akshay Kumar for Kanchana Hindi remake

More Articles
Follows