புதுப்படங்கள் ரிலீஸ் இல்லை; விஷாலின் முடிவுக்கு தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் ஆதரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் Local Body Entertainment Tax ( LBET) யை எதிர்த்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் எடுத்துள்ள முடிவுக்கு தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும், தங்களது முழுமையான ஆதரவை தெரிவித்துள்ளது.

தயாரிப்பாளர்களின் நலனுக்காக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தோடு இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறது என்பதை தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் கோடாலி வெங்கடேஷ்வர ராவ் தெரிவித்துள்ளார்.

1.) Local Body Entertainment Taxயை GST மேல் திணிக்கக் கூடாது.
2.) வெவ்வேறு மொழி படங்களுக்கு வெவ்வேறு ரேட் இருக்கக்கூடாது. என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ள இந்த விஷயத்துக்கு தங்களுடைய ஆதரவை இந்திய தயாரிப்பாளர் கில்ட் தெரிவித்துள்ளது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வருகிற அக்டோபர் 3 – 2017 அன்று முதல் அமலுக்கு வரும் என்று அறிவித்திருந்த வேலை நிறுத்தத்துக்கு இந்திய தயாரிப்பாளர் கில்ட் ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்த இரட்டை வரி, சினிமாவை ரசிக்க திரையரங்குக்கு வரும் இம்மாநில மக்களுக்கு மிகப்பெரிய பளுவாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் எடுத்துள்ள இந்த நடவடிக்கைக்கு ஒப்புதலும் வழங்கி உள்ளது.

ஆதரவு அளித்த இந்திய தயாரிப்பாளர் கில்டுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் எப்போதும் ஹிந்தி மற்றும் ஹாலிவுட் தயாரிப்பாளர்களின் பிரதிநிதியாக இருந்து அவர்களுக்காக குரல் கொடுத்து வரும் ஒரே அமைப்பு இந்திய தயாரிப்பாளர் கில்ட்.

அவர்களோடு எப்போதும் இணைந்து செயல்படுவதில் மகிழ்ச்சி என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் தெரிவித்துள்ளார்.

Telugu Producer Council supports Vishal in LBET issue against TN Government

படிக்க வசதியில்லாத சுகன்யாவை கல்லூரிக்கு அனுப்பிய ஜிவி பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் சமூக சேவை பணிகளில் அதிகம் ஈடுபாடு கொண்டவர்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தை மாணவர்கள் நடத்திய போது அவர்களுடன் கலந்துக் கொண்டவர்.

மேலும் நெடுவாசல் போராட்டத்திலும் திரையுலகின் சார்பாக முதல் ஆளாக கலந்து கொண்டார் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் தற்கொலை செய்துக் கொண்ட மாணவி அனிதா மரணத்திற்கு முதல் ஆளாக நேரில் சென்று அனிதா தந்தைக்கு ஆறுதல் கூறியிருந்தார் என்பதும் தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்நிலையில் இரண்டு வருட மருத்துவ படிப்பை மேற்கொண்ட மாணவி சுகன்யா படிக்க போதிய வசதியில்லாத காரணத்தால் கல்லூரிக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தார்.

இந்த செய்தி ஓரிரு நாட்களாகவே பல நாளிதழ்களில் வெளியானது.

இதனையறிந்த ஜிவி. பிரகாஷ் அந்த ஏழை மாணவியின் படிப்பிற்கு தேவையான மொத்த தொகையையும் ஏற்றுக்கொண்டார்.

GV Prakash helps Medical student Suganya with financial support

ஜீவா-நிக்கி இணைந்துள்ள கீ பட டீசரை வெளியிடும் வெங்கட்பிரபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

செல்வராகவனின் உதவி இயக்குநர் காலீஸ் இயக்கியுள்ள படம் கீ.

சிம்புவின் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்‘ படத்தை தயாரித்த குளோபல் இன்போடெய்ன்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.

இதில் ஜீவா, நிக்கி கல்ராணி. அணைகா சோடி, R.J. பாலாஜி, பத்மசூர்யா, ராஜேந்திர பிரசாத், சுஹாசினி, மனோ பாலா, மீரா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

விஷால் சந்திரசேகர் இப்படத்திற்கு இசையைமத்தார்.

இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சிம்பு வெளியிட்டார்.

தற்போது கீ பட டீசரை இன்று அக். 7ஆம் தேதி 7.20 மணிக்கு வெங்கட்பிரபு வெளியிட உள்ளார்.

Venkat Prabhu will reveal Kee movie teaser

அஜித்-விஜய்சேதுபதி படத்தயாரிப்பாளர் ஐஸ்வர்யா பாடகியானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

“என்னை அறிந்தால்” “வேதாளம்” மற்றும் சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிகொண்டுக்யிருக்கும் “கருப்பன்” ஆகிய திரைப்படங்களின் இளம் வெற்றி தயாரிப்பாளர் “ஐஸ்வர்யா”.

இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்கள் தயாரித்து வருகிறார். “ஐஸ்வர்யா” இன்று நில்க்ரிஸ் ட்ரீம் என்டேர்டைன்மெண்ட் தயாரிக்கும் “கூத்தன்” என்ற திரைப்படத்தில் பாலாஜி இசையில் இரண்டு பாடல் பாடியுள்ளார்.

இது குறித்து அந்த குழுவிடம் கேட்ட பொது. படத்தில் மொத்தம் நான்கு பாடல்கள்.இதில் பிரபல நடிகை “ரம்யா நம்பீசன்” ஒரு குத்து பாடல் பாடியது நீங்கள் அறிந்ததே.

“ஐஸ்வர்யா” அவர்கள் கர்னாடிக் கிளாசிக்கல் மற்றும் வெஸ்டர்ன் ஸ்டைல் டூயட் பாடி அசத்தியிருக்கிறார்.

முதலில் ஒரு பாடல் பாட வேண்டும் என்று தான் நாங்கள் அழைத்தோம் ஆனால் அவர் அந்த பாடல் பாடிய விதம் குரலின் இனிமை, மெட்டை கற்பூரம் போல் பற்றி கொள்ளும் தன்மை இந்த திரைபடத்தின் தயாரிப்பாளர் நில்க்ரிஸ் முருகனுக்கும் இசை அமைப்பாளருக்கும் மிகவும் பிடித்துப்போனது.

மற்றோரு பாடலையும் சேர்த்து இவரே பாடட்டும் என்று முடிவு செய்தனர்.

“கூத்தன்” திரைப்படம் இயக்குனர் “எ.ல்.வெங்கி” இயக்கி புதுமுக நடிகர் “ராஜ்குமார்” நடிப்பில் “நில்க்ரிஸ் முருகன்” தயாரிப்பில் நவம்பர் மாதம் வெளிவர இருக்கிறது.

ஐஸ்வர்யா சமீபத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் “Oxygen” என்ற தெலுங்கு படத்தில் இரண்டு பாடல்கள் பாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vedhalam Karuppam movie producer Aishwarya became Play back singer

டோனி ரசிகர் விக்ரம் பிரபு-ரஜினி ரசிகை நிக்கி கல்ராணி கலக்கும் பக்கா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அதிபர் படத்தை தயாரித்த பென் கண்ஸ்டோரிடியம் பட நிறுவன தயாரிப்பாளர் T.சிவகுமார் அடுத்து மிகப் பிரமாண்டமாகத் தயாரிக்கும் படம் “பக்கா“

விக்ரம்பிரபு கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக நிக்கிகல்ராணி, பிந்துமாதவி இருவரும் நடிக்கிறார்கள்.

இவர்களுடன் சூரி, சதீஷ், ஆனந்த்ராஜ், நிழல்கள் ரவி, சிங்கமுத்து, சிங்கம் புலி, ரவிமரியா, வையாபுரி, இமான் அண்ணாச்சி, ஜெயமணி, கிருஷ்ணமூர்த்தி முத்துகாளை, சிசர்மனோகர், சுஜாதா, நாட்டாமை ராணி, சாய்தீனா ஆகியோர் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் தயாரிப்பாளர் T.சிவகுமார் நடிக்கிறார்.

இப்படம் குறித்து விக்ரம்பிரபு கூறியதாவது…

திருவிழாக்களில் பொம்மை கடை நடத்தும் டோனிகுமார் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்.

கிரிக்கெட் ரசிகரான நான் டோனி பெயரில் ரசிகர் மன்றம் நடத்தும் அளவுக்கு கிரிக்கெட் வெறியன்.

ரஜினி காந்த் பெயரில் ரசிகர் மன்றம் நடத்தும் ரஜினி வெறியர் ரஜினி ராதா ( நிக்கி கல்ராணி) கிராமத்து பெரிய மனிதர் மகள் நதியா(பிந்து மாதவி) இப்படி மூன்று பேருக்கும் இடையே நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்கள் தான் கலகலப்பான பக்கா படம்.

நம்மால் மறக்கப் பட்டு வரும் கிராமத்து வாழ்க்கையை பதிவு செய்யும் படமாக பக்கா இருக்கும்.

இது வரை நான் ஏற்காத யதார்த்தமான கதாபாத்திரம் எனக்கு புதிய பரினாமத்தை வெளிக் கொண்டு வரும் படமாக அமையும்.

கமர்ஷியல் காமெடி கலாட்டா படமாக இது இருக்கும் என்றார் விக்ரம்பிரபு.

படப்பிடிப்பு முழுவதும் சென்னை, பாண்டி, குற்றாலம், ஹைதராபாத் போன்ற இடங்களில் நடை பெற்றிருக்கிறது.

தயாரிப்பாளர் T.சிவகுமார் பேசியதாவது…

நாங்கள் தயாரித்த அதிபர் படம் நல்ல படம் என்ற பெயரை பெற்றுத் தந்தது.

பக்கா படம் நல்ல கமர்ஷியல் வெற்றிப் படமாக வரும் என்று உறுதியாக நம்புகிறேன்.

இந்தப் படத்தில் நான் ஒரு நல்ல வேடத்திலும் நடித்திருக்கிறேன். இந்த படத்தை தொடந்து “ தர்மன் “ என்ற படத்தை தயாரிக்க உள்ளோம். நடிகர் நடிகை மற்றும் கலைஞர்கள் பற்றி விரைவில் அறிவிக்கிறோம் என்றார் T.சிவகுமார்.

Nikki Galrani as die hard fan of Rajinikanth in Pakka movie

நடிகர் ஜெய் தலைமறைவு; 2 நாட்களில் கைது செய்ய கோர்ட் ஆர்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த செப்டம்பர் மாதம் 21-ம் தேதி நடிகர் ஜெய், இரவு பார்ட்டியை முடித்துவிட்டு போதையில் காரை ஓட்டி வந்துள்ளார்.

அப்போது அந்த கார் அடையாறு மேம்பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இதுசம்பந்தமாக அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் ஜெய் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்தனர்.

அதாவது காரை வேகமாக ஓட்டுதல், குடித்து விட்டு வாகனம் ஓட்டுதல், லைசன்ஸ் இல்லாமல் கார் ஓட்டிய ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இதன் பின்னர் கைது செய்யப்பட்ட ஜெய் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இது தொடர்பாக தொடர்ந்த வழக்கில் நடிகர் ஜெய் இன்று ஆஜராக வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டு இருந்தது.

ஆனால் அவர் ,இன்று ஆஜராகவில்லை.

அவர் தலைமறைவாகிவிட்டதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்த 2 நாட்களுக்குள் நடிகர் ஜெய்யை கைது செய்து ஆஜர்படுத்த சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் இது தொடர்பான வழக்கு அக்டோபர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

Actor Jai must be arrested within two days Court Order

More Articles
Follows